Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbe Aaruyire
Anbe Aaruyire
Anbe Aaruyire
Ebook105 pages59 minutes

Anbe Aaruyire

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By R.Sumathi
Languageதமிழ்
Release dateMay 7, 2019
ISBN9781043466466
Anbe Aaruyire

Read more from R.Sumathi

Related authors

Related to Anbe Aaruyire

Related ebooks

Related categories

Reviews for Anbe Aaruyire

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbe Aaruyire - R.Sumathi

    15

    1

    ஆதித்யன் அன்றைக்கு வீட்டிலிருந்தான் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள்.

    ஓய்வு என்பது உழைக்காமல் படுத்திருப்பதல்ல. செய்த வேலையைச் சற்றே ஒதுக்கி விட்டு இன்னொரு வேலையில் ஈடுபடுவதே இனிமையான ஓய்வு. அப்படிப்பட்ட ஓய்வு மனிதனை அமைதிப்படுத்துவதோடு அபாரமானதொரு சக்தியைத் தருகிறது. மறுபடி அதிக உற்சாகத்தோடு கடமையில் ஈடுபட உதவுகிறது. மாற்றம் என்பதுதான் மகத்தான ஓய்வு. ஞாயிற்றுக்கிழமையிலும் ஆதித்யன் வழக்கம் போல்தான் எழுவான். அம்மாவிற்கு மணக்க மணக்க காபியை கொடுத்து எழுப்புவான். சேர்ந்து அமர்ந்து செய்திகளை வாசிப்பான். அம்மா இட்லி ஊற்றும்போது அவன் மிக்சியில் சட்னியைச் சுற்றுவான். தட்டு வைத்து அம்மாவிற்குப் பார்த்துப் பார்த்துப் பரிமாறுவான். காலை வேலைகள் முடிந்துவிட்டிருந்தன.

    அம்மா, கூடத்தில் காலை நீட்டிப் போட்டுக் கொண்டு மதிய சமையலுக்காகக் காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தாள். ஆதித்யன் அம்மாவின் அறையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான். அம்மா பாவம்! நாளெல்லாம் உழைக்கிறாள். மருத்துவமனையில் உழைத்து விட்டு வந்து வீட்டிலும் அலுப்பில்லாமல் வேலை செய்கிறாள். அக்கடாவென ஒரு பொழுது படுக்க மாட்டாள். சற்றே ஓய்வு கிடைத்தாலும் புதுவிதமாக என்ன சமையல் செய்து மகனுக்குக் கொடுக்கலாம் என்ற தேடலில் ஈடுபடுவாள். அந்த பெரிய வீட்டில் அம்மாவும் அவனும்தான்.

    அம்மாவின் உழைப்பில் உருவான வீடு அது. அம்மாவின் பெயரை முகப்பில் பொறிக்க வேண்டும் என்பது அவனுடைய பிடிவாதம். ‘காயசண்டிகை இல்லம்’ எனப் பொறித்தான். அம்மா வாயில் விரல் பதித்து முத்து மூக்குத்தி மின்ன வெட்கப்பட்டாள்.

    என்னடாயிது? வாசல்ல பளிச்சுன்னு என் பேரைப் போட்டுக்கிட்டு...

    இருக்கட்டும்மா. நிராதரவா தெருவில விடப்பட்ட நீ இன்னைக்கு சொந்தமா இடம் வாங்கி வீடு கட்டியிருக்கிறது சாதனை இல்லையாம்மா? பெண்ணால முடியாதது எதுவும் இல்லைன்னு நிரூபிச்சிருக்கியேம்மா... இந்த வீட்டைப் பார்க்கும் போது நீ கம்பீரமா தைரியமா நிமிர்ந்து நின்னு சிரிக்கிற மாதிரியிருக்கு...

    இப்படி அம்மாவை அவன் பாராட்டினாலும் அவ்வளவு பெரிய வீட்டை அவசியம் கட்ட வேண்டுமா என்று நினைப்பான்.

    அம்மா... இருக்கறது நாம ரெண்டு பேர். சினிமா தியேட்டர் மாதிரி அவ்வளவு பெரிய வீடு எதுக்கு? என்பான்.

    போடா மக்குப் பையா... இப்ப நாம ரெண்டு பேரு நாளைக்கு? உனக்குக் கல்யாணம் பண்ணினா இந்த வீடு முழுக்க பேரக் குழந்தைங்க விளையாடாதா? நான்தான் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு பெத்துட்டேன். ஆனா நீ நிறைய பெத்துக்கணும்... சொல்லிவிட்டு அந்தக் காட்சியைக் கற்பனையில் கண்டுகளிப்பவளைப் போல கண்மூடிச் சிரிப்பாள்.

    ‘அம்மா, அப்பாவோட நீ சேர்ந்து வாழ்ந்திருந்தா அந்தப் பாவி உன்னை விட்டு ஓடாம இருந்திருந்தா எனக்கும் தங்கையோ, தம்பியோ இருந்திருப்பார்களே...’ நினைத்துக் கொள்வான். அம்மாவே அவனுக்குச் சகலமும்.

    அம்மா, அப்பா எல்லாமும் அவள்தான். அப்பாவின் முகம் கூட அவனுக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.

    அப்பாவைப் பற்றிக்கேட்ட ஒரு சில தருணங்களில் அம்மாவின் முகம், ஆயிரம் சுருக்கங்களை உருவாக்கிக் கொண்டதை உணர நேர்ந்தபோது அப்பாவைப் பற்றிய எண்ணங்களை முழுவதுமாக உதறிவிட்டான்.

    அம்மா அவனை இடுப்பில் சுமந்த காலத்திலிருந்து எவ்வளவு சிரமப்பட்டாள். தன்னந்தனியாக கஷ்டப்பட்டாள் என்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறான்.

    அம்மாவைக் காலம் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.

    அம்மாவிற்குச் சென்னையில் புகழ் பெற்ற மகப்பேறு மருத்துவர் ஜோதியிடம் நர்சாக வேலை. பம்பரமாகச் சுழலும் வேலை. சிக்கன வாழ்க்கையில் மகனைச் சிறப்பாக உயர்த்த வேண்டுமென்ற லட்சியம். இப்போது அவனுக்கு அரசு வங்கியில் காசாளராக வேலை.

    அச்சு... அச்சு... பரண்மேல் கிடந்த பொருட்களை ஒழுங்குபடுத்தித் தேவையில்லாத புத்தகங்களையும் காகிதங்களையும் உயரே தூக்கிப்போட்டுக் கொண்டிருந்த ஆதித்யன் தூசுகளின் தாக்குதலில் தும்மினான்.

    அம்மா கூடத்திலிருந்து குரல் கொடுத்தாள்.

    ஆதி... என்னடா பண்றே?

    ஒண்ணுமில்லைம்மா... உன் அறையைச் சுத்தம் பண்றேன்.

    அம்மா எழுந்தே வந்துவிட்டாள்.

    கதவின் இருபக்கமும் கைகளைப் பதித்துக் கடிந்து கொண்டாள்.

    என்னடா வேலை பண்றே? இப்ப சுத்தம் பண்றதுக்கு என்ன அவசரம்? ஒரு நாள் லீவுன்னா படுத்துத் தூங்கி ஓய்வெடுப்பியா? அதை விட்டுட்டு இப்படி தூசு தட்டிக்கிட்டு...

    அம்மா... உன்னோட அறையை, எவ்வளவு அழகா ஒழுங்குபடுத்தி இருக்கேன் பாரும்மா... உன் சேலையை எல்லாம் எவ்வளவு அழகாக மடிச்சுக் கொடியில போட்டிருக்கேன் பார். அம்மா... உன்னோட சிவகாமி சபதம். பார்த்திபன் கனவு எல்லாம் என் தயவால தப்பிச்சது. இல்லாட்டி கரப்பான் பூச்சிக்கு இரையாகியிருக்கும். எல்லாத்தையும் தட்டி அழகா அடுக்கி வச்சிருக்கேன். தேவையில்லாததை எல்லாம் தூக்கி மேலே போட்டிருக்கேன்...

    சரி...சரி... உன் உதவிக்கு என் மனமார்ந்த நன்றி. முதல்ல கீழே இறங்கு. கையைக் காலை முறிச்சுக்காதே...

    முறிஞ்சா என்னம்மா? நர்ஸ் நீ கட்டுப்போட்டு ஆத்திடப்போறே? சிரித்தான்.

    போடா... ஆயிரம்பேருக்கு வைத்தியம் பார்த்தாலும் பெத்த புள்ளைக்கு ஒண்ணுன்னா என்னால தாங்க முடியுமாடா? உன்னை எப்படியெல்லாம் பாதுகாத்து வளர்த்தேன்னு எனக்குத்தாண்டா தெரியும்...

    சரி...சரி... நான் கீழே இறங்கணும். அவ்வளவு தானே... இறங்கிடறேன்.

    கையை எடுத்து விட்டு அவன் இறங்க முற்பட்ட போது அந்தக் காகித அடுக்கு சரிந்து அவன் தலையிலேயே கொட்டியது.

    தரையிறங்கிய அவனைச் சுற்றிப் புத்தகங்களும் செய்தித் தாள்களும் இறைந்து கிடக்க, பரவிய தூசியில் அவன் பலமாகத் தும்ம, அம்மா விழுந்து விழுந்து சிரித்தாள்.

    "தேவையாடா இது...? எல்லாத்தையும் அடுக்கி வை... நீ வேலைமெனக்கட்டு அடுக்கி வச்சதோட, பழசும் சேர்ந்து விழுந்திருக்கு. எல்லாத்தையும் எடுத்து

    Enjoying the preview?
    Page 1 of 1