Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbulla Maanvizhiye
Anbulla Maanvizhiye
Anbulla Maanvizhiye
Ebook82 pages49 minutes

Anbulla Maanvizhiye

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateFeb 17, 2019
ISBN9781043466428
Anbulla Maanvizhiye

Read more from Geetharani

Related to Anbulla Maanvizhiye

Related ebooks

Related categories

Reviews for Anbulla Maanvizhiye

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbulla Maanvizhiye - Geetharani

    12

    1

    "அன்புள்ள மான்விழியே...

    ஆசையில் ஓர் கடிதம்... நான்

    எழுதுவதென்ன வென்றால்...

    உயிர்க் காதலில் ஓர் கவிதை!"

    தோட்ட லயங்கள் ஊடே நீண்டு சென்ற செம்மண் சாலையில் நடந்து கொண்டிருந்த நந்தபாலன் வரிசை லயங்களில் ஒன்றிலிருந்து கேட்ட இந்தப் பாடலால், அப்படியே நின்று விட்டான்.

    பாட்டின் இனிமையில் நின்றானா? இல்லை, அதை விடவும் உள் அர்த்தம் இருக்கிறது!

    போன வாரம் மீனாட்சிக்குத் தன் இதயத்தின் காதல் எழுச்சியை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு கடிதம் எழுதி, மீனாட்சியின் தோழியும் இவனிடமும் நெருங்கிப் பழகிவரும் தோட்டத்து மலாய்ப் பெண்ணுமான அமீனாவிடம் கொடுத்துச் சேர்க்கச் சொல்லியிருந்தான்.

    சரி! கடிதம் வாங்கியவள் ஏன் பதில் தரவில்லை? ஏன் பார்க்கவும் முடியவில்லை? வேலைக்குப் போகும் வழியில் சந்திக்கலாம் என்று ஐந்தரை மணிக்கே தொழிற்சாலைப் பக்கம் தவம் கிடந்து பார்த்து விட்டான்.

    அவர்கள் வீட்டு வழியாகப் பலமுறை வேலையாகப் போவது போல நடந்து பார்த்து விட்டான்.

    சேதியும் தெரியவில்லை; நாதியும் இல்லை! திருவள்ளுவர் வாசக சாலையாக விளங்கிய தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் ஒரு பகுதியில் சில இளைஞர்களும் இளம் பெண்களும் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தனர். ஆனால், ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் பேச்சில் தங்களை மறந்திருந்தனர் என்றுதான் சொல்லவேண்டும்.

    நந்தபாலனைப் பார்த்ததும் முனியாண்டி அவனை நெருங்கி வந்தான்.

    முனியாண்டி! இந்த மாசம் சந்தா கொடுத்தவங்களுக்கு எல்லாம் ரசீது எழுதிட்டியா? என்று கேட்டான் நந்தபாலன்.

    ஆமாம்! அதுதான் பெரிய வேலை! நான் அதைவிட முக்கியமான விஷயத்தைச் சொல்ல வந்தா...! என்று சலித்துக் கொண்டான் முனியாண்டி.

    என்ன, சொல்லு...! என்று நந்தபாலன் சாதாரணமாகக் கேட்டான்.

    இந்த ஞாயித்துக்கிழமை நம்ம தோட்டத்து ரோஜாக்கள் காஜாங் போறாங்க தெரியுமா? முனியாண்டி கேட்டுவிட்டு, கண்களைச் சிமிட்டிக் குறும்பாகப் பார்த்தான்.

    யாரு... மீனா கூடவா! என்றான் ஆவலாக நந்தபாலன்.

    சரியான இடியட்ரா நீ! மீனாட்சி போகலேன்னா எதுக்கு உன்கிட்டச் சொல்ல வர்றேன்! சமயம் கிடைத்தது என்று நந்தபாலனை முட்டாள் என்று சொல்லி வைத்தான் முனியாண்டி.

    காதல் வேகத்தில் அவை எல்லாம் நந்தபாலன் காதில் ஏறவில்லை.

    ஞாயித்துக் கிழமை காலையிலா... சாயந்திரமா? எனப் பரபரப்படைந்தான் நந்தபாலன்.

    எதுக்குப்பா இப்படிப் பதற்றப்படுறே? என்று நந்தபாலன் மனத்தை மேலும் பதற்றமடையச் செய்யும் வகையில் விஷயத்தை ஆறப் போட்டான் முனியாண்டி.

    உனக்குத் தெரியாதா? அன்னைக்கு செட்ஜிலி தோட்டத்துலே பந்து விளையாட்டுப் போட்டி இருக்கேப்பா என்றான் நந்தபாலன் சற்றுக் கவலை அடைந்து.

    அது சாயந்திரமில்லே...! ரோஜாக்கள் பயணம் காலையிலேப்பா! என்று சொல்லிச் சிரித்தான் முனியாண்டி.

    சரி, அப்போ உன்னோட ‘ஹோண்டா கப் மோட்டார் சைக்கிளோட காலையிலே வீட்டுக்கு வந்துடு! என்று உள்ளத்தின் உற்சாகத்தைக் கட்டுப்படுத்தியவாறே சொன்னான் நந்தபாலன்.

    மோட்டார் சைக்கிள் சரி! ‘பிளாஞ்சா யாரு! நீ தானே...! என்று காரியத்தில் உறுதியாகக் கேட்டான் முனியாண்டி.

    இந்த முறை மீ கோரிங்... ரோஜா எல்லாம் முடியாது! காஜாங் சாத்தேதான்! என்று மறுபடியும் வலியுறுத்தினான். முனியாண்டிக்கு எந்த நேரம் எப்படி... எதைச் சாதித்துக் கொள்வது என்று நன்றாகத் தெரியும்!

    சரிப்பா! சரியான சந்தர்ப்பவாதியில்லே நீ! என்று நந்தபாலன் சொல்ல... என்னப்பா, மணிதான் ஒன்பது ஆகப்போகுதே! வாசக சாலை சாத்த வேண்டாம்! என்று முனியாண்டி கேட்க, அப்போதுதான் நந்தபாலனும் கவனித்தான்

    வாசக சாலையில் இருந்த கூட்டம் எப்போதோ போய்விட்டிருந்ததை. ‘சரி! கதவைச் சாத்து!’ என்றபடி கிளம்ப ஆயத்தமானான் நந்தபாலன்.

    2

    அடுத்த ஞாயிற்றுக்கிழமை, காஜாங் நகர் கடுமையத்தில் இருந்த காஜாங் பஜார், சென்டோல்விற்கும் கடையில் நந்தபாலன், முனியாண்டி, மீனா, அமீனா இன்னும் வள்ளி, கமலா, முனியம்மா என பிராங் பெசார் தோட்டத்துக் கூட்டம் மொய்த்திருந்தது.

    எப்போதும் இந்த மாதிரிச் சமயங்களில் நந்தபாலனின் பேச்சும் அதனூடே இழையோடும் நடிப்பும் நகைச்சுவையும் அன்று இடம் பெறவில்லை.

    அடிக்கடி சென்ற வார இரவு நடந்த அடிதடியால் கத்தி வெட்டுச் சம்பவத்தால் தனக்கு நேர்ந்திருக்கும் இக்கட்டை எண்ணிப் பயந்தான்.

    அதை எப்படி மறந்தாலும், அடிக்கடி நினைவுக்கு வந்து அந்த நிலைமை அவனுக்குக் கலவரத்தை ஏற்படுத்திற்று.

    தோட்டத்தில் காவலராக வேலை பார்த்த ஐயப்பன் மிடுக்கானவர். கண்டிப்பானவர். கட்டுச் செட்டாகக் குடும்பம் நடத்திக் கொஞ்சம் பணமும் அஞ்சலகச் சேமிப்பில்

    Enjoying the preview?
    Page 1 of 1