Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thedi Vantha Nila...!
Thedi Vantha Nila...!
Thedi Vantha Nila...!
Ebook146 pages1 hour

Thedi Vantha Nila...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெற்றோர் முடிவு செய்த உறவுமுறை திருமணம். அதை முற்றிலுமாக மறுக்கும் கதாநாயகன். அவனுடைய மனநிலையை மாற்ற பல விதங்களிலும் முயற்சி செய்யும் பெற்றோர்கள். இதற்கிடையில் அவன் சந்திக்கும் பற்பல பிரச்சினைகள் இறுதியில் அவனை தேடி வரும் கதாநாயகி யார்? நிலாவின் நிலவொளியில் வாசிக்கலாமா...

Languageதமிழ்
Release dateFeb 7, 2022
ISBN6580129508081
Thedi Vantha Nila...!

Read more from Daisy Maran

Related to Thedi Vantha Nila...!

Related ebooks

Reviews for Thedi Vantha Nila...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thedi Vantha Nila...! - Daisy Maran

    https://www.pustaka.co.in

    தேடி வந்த நிலா...!

    Thedi Vantha Nila...!

    Author:

    டெய்சி மாறன்

    Daisy Maran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/daisy-maran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 1௦

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 1

    பசுமையான மரங்கள் அடர்ந்திருந்த விலாசமான தோட்டத்திற்கு நடுவில் இருந்தது அந்த பாழடைந்த பங்களா. கட்டிடத்தின் பழமையும், சுவர்களின் காரை பெயர்ந்த நிலையும் அதனுடைய பாழடைந்த தன்மையை பறைசாற்றியது. அறைகள் முழுவதும் பரவிக்கிடந்த ஒட்டடையும் தூசியும் இடையிடையே சிலந்தி வலைப்பின்னல்களும் வெகு காலமாக அங்கு யாரும் குடியிருக்கவில்லை, பலவருடங்களாக பயன்பாடற்று கிடக்கிறது என்பதை உணர்த்தியது. அந்த ஊர் மக்களைப் பொறுத்தவரைக்கும் அந்த பங்களா ஒரு பேய் பங்களா அப்படித்தான் அடையாளப்படுத்தப்பட்டு பல வருடங்களாக மக்கள் அந்த பங்களாவை பீதியோடு கடந்து சென்றிருக்கிறார்கள். மீறி உள்ளே சென்றால் ரெத்தம் கக்கி செத்து விடுவார்கள் என்று ஊரிலுள்ள சில பெருசுகள் புரளிகளை உலாவ விட்டுக்கொண்டிருந்தனர்.

    அந்த பங்களாவை சுற்றி கண்ணுக்கெட்டிய தூரம் வரை முட்புதர்கள் மண்டிக்கிடக்க, தோட்டத்தின் நுழைவாயிலில் இரண்டாள் உயரத்தில் துருவேறிய இரும்பு கேட்டும் அதில் இரண்டு கிலோ எடையில் நிறமாறிய திண்டுக்கல் பித்தளை பூட்டு ஒன்றும் தொங்கிக்கொண்டிருந்தது. பங்களாவுக்கு இடது புறத்தில் இருபதடி தூரத்தில் ஒரு சிறு குடிசை. குடிசை மேல்பக்கம் முழுவதும் தென்னங்கீற்றால் கூரை வேயப்பட்டிருந்தது. பழுப்பேறி நிறம் மங்கிப்போன மூங்கில் படல்தான் அந்த குடிசைக்கு ஆதாரமான கதவு. சுற்றிலும் தார்ப்பாயால் சுவர். அந்த குடிசையில் தோட்டக்காரன் வேலன் தனியாக வசித்து வந்தான். பகலெல்லாம் தோட்டத்தை சுற்றி வரும் வேலன் இரவு நேரங்களில் மொடா குடிகாரனாக மாறிவிடுவான். கேட்டால் நடுசாமத்தில் தோட்டத்துக்குள் யாரோ நடமாடுவதுப்போல் தோன்றுகிறது அதனால் ஒத்தையில் படுக்க பயமாக இருக்கிறது என்று காரணம் சொல்வான்.

    கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக இதை காரணம் காட்டிதான் குடியை பழகி இருந்தான் வேலன். அங்கே இருக்கும் மரங்களின் பலன்களை விற்றுத்தான் அவன் ஜீவனை ஓட்டிக்கொண்டிருந்தான். என்றுமே இருண்டு கிடக்கும் பங்களா வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே ஒளியில் நிறைந்திருக்கும். அன்று அகல் விளக்கில் நல்ல எண்ணெய் விட்டு தீபம் ஏற்றி பங்களாவை சுற்றி வைத்திருப்பான் வேலன். அதுவும் கார்த்திகை தீபத்தன்று ஒரு நாள் மட்டுமே. அப்படி கார்த்திகை தீபத்திலே ஒளி ஏற்றுவதற்கு வலுவான ஒரு காரணமும் உண்டு. அது என்ன என்பது அந்த ஊரிலிருக்கும் ஒரு சிலரை தவிர மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இதற்கிடையில் தான் அந்த பங்களாவையும் அதை சுற்றி இருக்கும் தோப்பையும் விலைக்கு வாங்க வெளிநாட்டிலிருந்து வந்து இறங்கினான் வசந்தபாலன்.

    அந்த ஊரில் பெரும்புள்ளி மட்டுமல்லாமல் பெரும் பணக்காரருமான சண்முகநாதனின் ஒரே மகன்தான் வசந்தபாலன். மகனை ஊட்டியில் உள்ள ஒரு கான்வென்டில் படிக்கவைத்து மேற்படிபிற்கு வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்தார் சண்முகநாதன். வசந்த பாலனோ படிப்பு முடிந்து அங்கேயே வேலையும் தேடிக்கொண்டான். தாய் தகப்பனை பார்ப்பதற்கு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை சொந்த ஊருக்கு வந்துப்போவதை வழக்கமாக்கி கொண்டான்.

    என்னடா வசந்த் போன எடத்துல ஒரு வெள்ளைக்காரியை கல்யாணம் கட்டி கூட்டிட்டு வருவேன்னு பார்த்தா மூட்டை முடிச்சியை கட்டிக்கிட்டு தனியாளா இந்த பட்டிக்காட்டுகே திரும்ப வந்து நிக்குறே... நண்பர்கள் கேலி பேசியப்போதும் சரி, ஏம்பா வசந்து...நீ படிச்ச படிப்புக்கு இந்த ஊரு ஒன்னும் வேலைக்கு ஆகாது. எத்தனை லட்சம் வேணுனாலும் கொடுக்குறேன் மெட்ராசுல ஒரு பிசினஸ்சை ஆரமிப்பா... அதுதான் உனக்கு செட்டாகும். என்று அவன் அப்பா சண்முகநாதன் சொன்னப்போதும் ‘சரி...’ என்று தலையாட்டி சிரித்து மழுப்பினானே தவிர அதற்குரிய பதிலை தரவில்லை.

    மகன் ஏதோ பெரிய திட்டத்தோடு வந்திருக்கிறான் என்று அவன் தாய் லஷ்மி மட்டும் நன்றாகவே புரிந்துக்கொண்டாள். மனதில் உள்ளதை கேட்கவும் செய்தாள்.

    அம்மா...ஆயிரந்தான் இருந்தாலும் சொந்த மண்ணுல வாழுற சந்தோஷம் வெளிநாட்டுல வராதும்மா, அப்பாவுக்குதான் புரியல உங்களுக்குமா புரியல...? இப்படி பேசி தன் தாயின் வாயை அடைத்துவிட்டான்.

    அடுத்த நாள் வசந்தபாலன் தன் சிறு வயது நண்பன் தாமுவோடு சேர்ந்து அந்த ஊரை சுற்றி வந்தான். இரண்டு நாள் தேடுதலுக்கு பிறகு அவன் நினைத்தது நடந்தது என்றே சொல்லலாம்.

    இன்று அது சம்பந்தமாக அப்பாவிடம் பேசி விட வேண்டும் என்ற முடிவோடு கன்மாயிக்கு சென்றிருந்த அப்பாவின் வரவுக்காக காத்திருந்தான்.

    வாசலில் சண்முகநாதனின் புல்லட் வரும் ஓசை கேட்டது. தான் அவரிடம் பேசப்போகும் விஷயத்தை ஒரு முறைக்கு இருமுறை ஒத்திகை பார்த்துக்கொண்டான். அதற்குள் அவர் கைகால்கள் கழுவிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார். மகன் ஹாலில் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு எதிரில் வந்து அமர்ந்தார்.

    என்னப்பா வசந்த் ஏதோ பலத்த யோசனையில் இருக்கிற மாதிரி தெரியுது? மகனை பார்த்து புருவத்தை உயர்த்தியப்படி கேட்டார்.

    அது வந்துப்பா உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். நான் சொல்ல போற விஷயத்தை கேளுங்க ஒருவேளை உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா அந்த விஷயத்தை விட்டுடுறேன்...என்று பெரிய பிடிகையோடு ஆரம்பித்தான் வசந்தபாலன்

    சொல்லுப்பா என்ன விஷயன்னு சொல்லு...? மகன் சொல்ல போகிற விஷயத்தை கேட்க தயாரானார் சண்முகநாதன்.

    இருவருக்கும் கை முறுக்கும் காபியையும் எடுத்துட்டு வந்து வைத்தார் அந்த வீட்டு சமையல்காரர் தவசுபிள்ளை.

    அது வந்துப்பா...நம்ம ஊர்ல இருக்கிற நிறைய பேரு வெளியூருக்கு போயிட்டாங்கள். இன்னமும் போய்க்கிட்டு தான் இருக்காங்க குறிப்பாக இளைஞர்கள் எல்லாம் படிப்பு முடிச்ச உடனே சென்னைக்கும் மற்ற ஊர்களுக்கும் போய் செட்டில் ஆயிடுறாங்கள் அதுக்கு என்ன காரணம்னு யோசிச்சு பார்த்திருக்கீங்களா? என்று கேட்டான் வசந்த். மகனின் கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் காபியை எடுத்து மகனிடம் கொடுத்தவர்,

    பெருசா காரணமெல்லாம் இல்ல வசந்த்..இங்க இருக்குற மக்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி தான் இருக்கிறாங்க.., விவசாயம் பண்ண உடம்பு வளையாதவங்க பட்டணத்துக்கு வேலை தேடி போயிடுறாங்க, என்னை மாதிரி ஊர விட்டு போகாத சில மனுஷங்க இங்கேயும் இருக்கத்தானே செய்யிறாங்க...

    அதுக்கு ரெண்டு காரணம் இருக்குப்பா ஒன்னு இந்த ஊர்ல சரியான கல்வி கிடைக்கல, இரண்டாவது தொழிற்சாலைகளோ மக்களுக்கு வேலைவாய்ப்பு தரக்கூடிய எந்த நிறுவனங்களோ பெரிய அளவில் இங்க இல்லை...அப்போ மக்கள் வருமானத்துக்கு எங்கே போவாங்கள்?

    நீ சொல்றது சரிதான் ஆனா நீயும் நானும் நினைச்சு என்ன பண்ண முடியும்? ஏதோ நம்மால முடிஞ்சது பத்து இருபது பேருக்கு உதவி செய்யலாம். அப்பா தாத்தா காலத்துல இருந்து இதுவரை செய்துகிட்டுதான் இருக்குறோம். உதவிக்கும் ஒரு எல்லை இருக்கு இல்லையா? ஊர்ல இருக்கிற மொத்த பேருக்கும் நாம உதவி செய்ய முடியுமா?

    "முடியும்பா..பணத்தை கொடுத்து உழைப்பை முடக்கி சோம்பேறியா ஆக்குவதைவிட, அவர்களுக்கு வேலைகொடுத்து உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை கொடுத்தால் அவர்கள் ஏன் வெளியிடங்களுக்கு வேலை தேடி போகப்போறாங்க? அது உடனே நடக்கலன்னாலும் கொஞ்சம் கொஞ்சமா நடக்க வைக்கணும். அதற்கு நாமதான் முயற்சியில் இறங்கனும். இப்ப நடக்கலன்னாலும் ஒருசில வருடங்களுக்கு பிறகு இந்த ஊரு தொழிலில் வருமானம் ஈட்டக்கூடிய ஊரா மாறும். மாற்ற முடியும் நாம போட்ட முதலையும் எடுத்திடலாம். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. அதுக்கு முதல் முயற்சியா நம்ம மேனேஜ்மென்ட் பள்ளியை அதாவது தாத்தா கட்டின பள்ளிக்கூடம் இப்போ நடுநிலைப்பள்ளியா தானே இருக்கு அதை உயர்நிலை பள்ளியா மாத்தணும். அதுக்கு இன்னும் கொஞ்சம் இடம் தேவை. பள்ளிகூடத்தை ஒட்டி இருக்குற இடத்தையும் சேர்த்து வாங்கினாத்தான் பள்ளிகூடத்தை விரிவாக்க முடியும். இரண்டாவது ஊர் எல்லையில் ஒரு ஃபேக்டரி கட்டணும் பெரியவங்களுக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1