Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வாழ்க்கை அழகானது!
வாழ்க்கை அழகானது!
வாழ்க்கை அழகானது!
Ebook105 pages34 minutes

வாழ்க்கை அழகானது!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"என்ன சுகாந்தினி இன்னைக்கு பிரியாணி வாசனை ஊரை கூட்டுது. என்ன ஸ்பெஷல், யாராவது கெஸ்ட் வர்றாங்களா"
 ஆபீஸிற்கு போக கிளம்பி வாசலுக்கு வந்த குமார், தன்னை பின் தொடர்ந்து வரும் சுகந்தியை பார்க்கிறான்.
 "ம்... ஆமாம்... என்ன பிரெண்ட் மேகலா வர்றா. அவளுக்காகதான் ரெடி பண்றேன். நீங்க கிளம்புங்க. உங்களுக்கு நைட் சாப்பாடு பிரியாணிதான்"
 "ஓ. உன் குளோஸ் பிரெண்ட் மேகலாவா... ஸ்கூல் டீச்சர். வரட்டும்... வரட்டும்... போன தடவை வந்தபோது பார்த்தேன். தைரியமான பொண்ணு. இப்படி தனி மனுஷியாக வாழவும் மனதில் திடம் வேணும்."
 "ஆமாங்க... தங்கச்சி கல்யாணம் முடிச்சா அவ அம்மாவும் அதுக்காகவே காத்திருந்தது போல இறந்து போனாங்க. தம்பி ஹைதராபாத்தில். தனக்குன்னு குடும்ப வாழ்க்கை வேண்டாம்ங்கிற உறுதியோடு இருக்கா."
 "அந்த ஆக்ஸிடெண்ட் பத்தி சொன்னியே... அதனாலதானே!"
 "அப்படியொரு சம்பவம் மட்டும் மேகலா வாழ்க்கையில் நடக்கலைன்னா... இத்தனை நேரம் அவ வாழ்க்கை பூத்து குலுங்கும் சோலைவனமாக இருந்திருக்கும்."
 மனதில் பல நினைவுகள் வட்டமிடுகின்றது.
 "சரி யாருக்கு என்ன தலையெழுத்தோ அதுபடிதானே நடக்கும்"
 "உன் பிரெண்ட் வரப்போற ஜோரில் வருணுக்கு மதியம் லஞ்ச் அனுப்ப மறந்துடாதே. வேலைக்காரிகிட்டே கொடுத்தனுப்பு"
 "ரொம்பதான் கொழுப்பு. பெத்த பிள்ளையை மறப்பேனா... நீங்க கிளம்புங்க"
 புன்னகைத்தபடி... காரை ஸ்டார்ட் செய்கிறான் குமார்."இரண்டு பேரும் சென்னையில்தான் இருக்கோம்னு பேரு, பார்த்து நாலுமாசமாச்சு"
 மேகலாவின் தோளில் அன்போடு கைபோடுகிறாள்.
 "குட்டி வருண் எங்கே ஸ்கூல் போயாச்சா?"
 "ஆமாம். சாயிந்திரம் வந்துடுவான். வந்து உட்காரு மேகலா. கொஞ்சம் ஜில்லுன்னு மோர் தரட்டுமா"
 "வேண்டாம் சுகா. இன்னும் கொஞ்ச நேரத்தில் சாப்பிடலாம். அப்புறம் சொல்லு லைப் எப்படி போகுது?" சோபாவில் அவளருகில் உட்கார்ந்தவள்,
 "அதை நான் கேட்கணும். நீ எப்படியிருக்கே மேகலா"
 "ம்... நல்லாவே இருக்கேன்."
 "இது உன் மனசிலிருந்து வர்ற வார்த்தைகளா... இல்லை உதட்டில் உதிக்கிறதா"
 சிநேகிதியை ஆழ்ந்து பார்க்கிறாள்.
 "பிளீஸ் மறக்க நினைக்கிற விஷயங்களை ஞாபகப்படுத்தாதே சுகா"
 "எப்படி, எப்படி மேலகா உன்னால எல்லாத்தையும் சகஜமாக ஏத்துக்க முடியுது. நீ எடுத்த முடிவை நிச்சயம் என்னால எடுத்திருக்கவே முடியாது."
 "சரி. விடு... உன் ஹஸ்பெண்ட் எப்படியிருக்காரு? அதைபத்தி பேச வேண்டாம்னு நினைக்கிறே".
 "உன் மனசு வருத்தப்படும்னா... நான் பேசலை மேகலா உன் தம்பி எப்படியிருக்கான்?"
 "தம்பியை பத்தி கேட்டே... என் தங்கை நிகிலாவை பத்தி கேட்லை"
 "அவளுக்கென்ன... திவாகருடன் சந்தோஷமாக கோயமுத்தூரில் குடித்தனம் நடத்திட்டிருக்கா. அப்படிதானே?"
 "ஆமாம். என் தங்கை அதிர்ஷ்டசாலி சுகா. அவளது கணவன் படித்தவன், அறிவாளி, அழகன், கைநிறைய சம்பாதிப்பவன், சாப்ட்வேர் என்ஜினீயர். பெத்தவங்களை சிறுவயதிலேயே இழந்ததால், கட்டினவளை அன்பாக பார்க்கிற மனசு. அக்கா! திவாருடன் நான் சந்தோஷமா இருக்கேன்னு அவ சொன்னதை கேட்க, எனக்கு எவ்வளவு நிம்மதியாக இருந்தது தெரியுமா?""உன் வாழ்க்கையை பத்தி யோசிக்கவே மாட்டியா மேகலா?"
 "இனி எனக்குன்னு எதுவும் கிடையாது சுகா. என் தம்பி, தங்கையோட சந்தோஷம்தான் எனக்கு மகிழ்ச்சி"
 "குழந்தை பெத்துக்கதான் தகுதியில்லாம போச்சே தவிர இல்லறத்தில் வாழவே தகுதியில்லாதவள்னு சொல்லையே. உன்னை ஏத்துக்க தயாராக இருந்த..."
 "வேண்டாம் சுகா."
 அவள் பேச்சை பாதியில் இடைமறிக்கிறாள்.
 "அது முடிஞ்சு போன கதை. என் காதல் உனக்கும், எனக்கும் மட்டுமே தெரிந்த விஷயம். அது அப்படியே மறைஞ்சு போகட்டும்.
 பிளீஸ் எந்த காரணம் கொண்டும், யார்கிட்டேயும் அதை வெளிப்படுத்தாதே சுகா."
 கெஞ்சுதலாக கைகளை பிடிக்கும் சிநேகிதியை மனம் கலங்க பார்க்கிறாள்.
 திவாகர் கண்ணாடி முன் நின்றான்.
 சுருண்ட கேசத்தை படிய வாரினான்.
 பின்புறமாக அவனை கட்டியணைத்தாள் நிகிலா.
 "நீங்க எவ்வளவு அழகு. உங்களைத் தானே ரசிக்கீறீங்க."
 "நான் என்ன பெண்ணா... என்னை நானே ரசிக்கிறதுக்கு. நீங்கதான் கண்ணாடி முன்னால ஒரு மணி நேரம் நின்று... திரும்பி, திரும்பி பார்த்து ரசிப்பீங்க."
 "கிண்டலை பாரு."
 சிரித்தவள், அவன் தோளில் மாலையாக தொங்கினாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223356424
வாழ்க்கை அழகானது!

Read more from Parimala Rajendran

Related to வாழ்க்கை அழகானது!

Related ebooks

Related categories

Reviews for வாழ்க்கை அழகானது!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வாழ்க்கை அழகானது! - Parimala Rajendran

    1

    வயது முப்பதை தொடும் பருவம். மேகலாவின் உடலைமப்பு அவள் வயதை இன்னும் குறைத்து காட்டியது.

    கண்களில் தெரியும் தீட்சண்யம் என்னால் எதையும் சமாளிக்க முடியும் என்பதை சொல்லியது.

    தான் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது, தன் வாழ்க்கையில் நிகழ்ந்து விட்டதை நினைத்து... மனதின் சோகத்தை மறைத்து, இதழ்களில் லேசாக புன்னகையை படரவிட்டாள்.

    பிரச்சனைகள் வரும்போது, சோர்ந்து விடாமல், ஈரத்தை உறிஞ்சும் பஞ்சு போல, அதை மனதிலேயே இருத்தி கவலைப்படாமல், கண்ணாடியில் விழுந்த நீர்துளிகளை போல ஏற்றுக்கொண்டு, துடைத்தெறிந்து விட்டால், கண்ணாடியை போல மனமும் பளிச்சென்று ஆகிவிடும்.

    தன் மாணவிகளுக்கு பாடம் நடத்தும்போது சொன்னது, தனக்கும் பொருத்தமானதுதான் என்று நினைத்தவள், அன்று நடத்த வேண்டிய பாடத்தை குறிப்பெடுத்துக்கொண்டு புத்தகத்தை மூடினாள்.

    ஹையர் செகண்டரி ஸ்கூலில் பிளஸ் டூ படிக்கும் மாணவிகளின் தமிழ் ஆசிரியர் மேகலா.

    சிறு வயதிலேயே தந்தை இறந்துவிட, அம்மாவின் அரவணைப்பில் மேகலா, அவள் தங்கை நிகிலா, தம்பி கவுதம் வளர்ந்தார்கள். தம்பி படிப்பை முடித்து, ஹைதராபாத்தில் சிவில் என்ஜினீயராக பணியாற்ற, அம்மா நோயாளியாகி படுக்கையில் விழ, மேகலாவுக்கு ஏற்பட்ட ஆக்ஸிடெண்ட் அவள் வாழ்க்கையையே புரட்டி போட்டது. தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு, மனவலிமைதான் மருந்து என்பதை உணர்ந்து, மனதை திடப்படுத்தினாள்.

    தன் மகளின் நிலையை நினைத்து உருகி, அம்மாவின் உடல் நிலை மோசமாக, அம்மாவுக்காக... அவளின் திருப்திக்காக தங்கையின் கல்யாணத்தையாவது அவள் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்து, நிகிலாவின் கல்யாணத்தை நடத்தினாள் மேகலா.

    நிகிலாவின் கல்யாணத்தையாவது பார்க்க முடிந்ததே என்ற திருப்தியில், அம்மா போய் சேர, இதோ மேகலா மட்டும் தனிமையில் தன் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தாள்.

    மேகலா உங்களுக்கு ஏற்பட்ட ஆக்ஸிடெண்ட் நீங்க ஸ்கூட்டரில் போகும் போது, முன்னால் போன லாரியில் ஏற்றிபோன கம்பி நழுவி, உங்க அடிவயிற்றை கிழித்ததில், உங்க கர்ப்பப்பையை எடுக்க வேண்டியதாயிருச்சு. இதனால் தாம்பத்ய வாழ்க்கைக்கு பிரச்சனை இல்லை என்றாலும் நீங்க தாயாகும் தகுதியை இழந்துட்டீங்க மேலகா

    டாக்டர் அன்று வருத்தத்துடன் சொன்னது பேரிடியாய் அவளை தாக்கினாலும், ஏற்றுக்கொண்டாள்.

    வாழ்க்கை என்பது இது தானே. அடுத்த நிமிடம் நமக்கு என்ன நடக்கும் என்று தெரியாமல் தானே, கற்பனை செய்கிறோம்... கவலைப்படுகிறோம்.

    மனசுக்குள் தென்றலாய் சாமரம் வீசிக்கொண்டிருந்த காதலின் நினைவுகள்... கண்ணாடி சிதறலாய் நொறுங்கி போனது.

    அம்மா, வேண்டாம்மா... தாய்மை அடைய முடியாத நான், மண வாழ்க்கைக்கு ஏற்றவள் இல்லை. நிகிலாவுக்கு கல்யாணம் செய்வோம்

    அம்மாவை சமாதானப்படுத்தினாள்.

    காய்கறி கூடையுடன் உள்ளே நுழைந்தாள் பங்கஜம்.

    தங்கச்சி, என்ன யோசனை? வேலைக்கு கிளம்பலையா... முல்லைசரம் வாங்கிட்டு வரச்சொன்னியே... இந்தாம்மா அம்மா... படத்துக்கு போடு அவளிடம் கொடுத்தாள்.

    பங்கஜம்மா... இன்னைக்கு எனக்கு மதியம் சாப்பாடு கட்ட வேண்டாம். வெளியே போக வேண்டிய வேலை இருக்கு. வழியில் பார்த்துக்கிறேன்.

    சரிம்மா... அப்படின்னா... ராத்திரிக்கு சப்பாத்தி குருமா செய்திடட்டுமா

    சரி, நீங்க ஏதாவது மதியம் சமைச்சு சாப்பிடுங்க

    இல்லை... காலை டிபனுக்காக செய்த இட்லி இருக்கும் அதையே சாப்பிட்டுக்கிறேன். வேலைக்காரின்னு பாக்காம என்னை பெத்த தாயை போல கவனிச்சுக்கிற. உன் அன்பு மட்டும் எனக்கு போதும்... இந்த வீட்டிலேயே காலமெல்லாம் கிடந்துடுவேன்.

    எனக்கு மட்டும் யார் இருக்காங்க? என் அருகில் இருந்து அன்பும், அக்கறையுமாக கவனிக்கிற உங்களை என் அம்மாவாதான் பார்க்கிறேன்.

    சொன்னபடி அவள் கொடுத்த முல்லை சரத்தை அம்மாவின் படத்திற்கு போடுகிறாள் மேகலா. மதியம் ஸ்கூலில் லீவ் சொல்லியாகி விட்டது. தன் நெருங்கிய சிநேகிதி சுகாந்தினியை போய்ப் பார்க்கவேண்டும். மனதில் நினைத்தவளாக குளியலறை நோக்கி செல்கிறாள்.

    2

    "என்ன சுகாந்தினி இன்னைக்கு பிரியாணி வாசனை ஊரை கூட்டுது. என்ன ஸ்பெஷல், யாராவது கெஸ்ட் வர்றாங்களா"

    ஆபீஸிற்கு போக கிளம்பி வாசலுக்கு வந்த குமார், தன்னை பின் தொடர்ந்து வரும் சுகந்தியை பார்க்கிறான்.

    ம்... ஆமாம்... என்ன பிரெண்ட் மேகலா வர்றா. அவளுக்காகதான் ரெடி பண்றேன். நீங்க கிளம்புங்க. உங்களுக்கு நைட் சாப்பாடு பிரியாணிதான்

    ஓ. உன் குளோஸ் பிரெண்ட் மேகலாவா... ஸ்கூல் டீச்சர். வரட்டும்... வரட்டும்... போன தடவை வந்தபோது பார்த்தேன். தைரியமான பொண்ணு. இப்படி தனி மனுஷியாக வாழவும் மனதில் திடம் வேணும்.

    ஆமாங்க... தங்கச்சி கல்யாணம் முடிச்சா அவ அம்மாவும் அதுக்காகவே காத்திருந்தது போல இறந்து போனாங்க. தம்பி ஹைதராபாத்தில். தனக்குன்னு குடும்ப வாழ்க்கை வேண்டாம்ங்கிற உறுதியோடு இருக்கா.

    அந்த ஆக்ஸிடெண்ட் பத்தி சொன்னியே... அதனாலதானே!

    அப்படியொரு சம்பவம் மட்டும் மேகலா வாழ்க்கையில் நடக்கலைன்னா... இத்தனை நேரம் அவ வாழ்க்கை பூத்து குலுங்கும் சோலைவனமாக இருந்திருக்கும்.

    மனதில் பல நினைவுகள் வட்டமிடுகின்றது.

    சரி யாருக்கு என்ன தலையெழுத்தோ அதுபடிதானே நடக்கும்

    "உன் பிரெண்ட் வரப்போற ஜோரில் வருணுக்கு மதியம்

    Enjoying the preview?
    Page 1 of 1