Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ithuve Iruthi Aagattum...!
Ithuve Iruthi Aagattum...!
Ithuve Iruthi Aagattum...!
Ebook133 pages51 minutes

Ithuve Iruthi Aagattum...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இதுவரையில் எந்த எழுத்தாளரும் தொட்டிராத, மார்ச்சுவரியில் அறுத்துப் போட்ட பிணத்தைத் தைக்கும் ஒரு மனிதனைக் கதைப் பாத்திரமாக கொண்டு இந்த நாவலைப் படைத்துள்ளார் கதாசிரியர்.

தாயில்லாத தனது ஒரே மகன் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார் அருணகிரி மார்ச்சுவரிப் பணியாளர். ஆனால் மகனோ. மிகவும் மோசமானவனாகத் திரிகிறான். அனைத்துக் கெட்ட வழக்கங்களுக்கும் அவன் அதிபதி. அது தெரிந்திருந்தும் அவனைக் கண்டிக்க இயலாமல் உள்ளுக்குள் புழுங்கியே வாழ்கிறார் அருணகிரி. மார்ச்சுவரியில், ஒவ்வொரு முறை சவங்களைத் தைக்கும் போது, யாரென்றே தெரியாத, இறந்து போன அந்த ஜீவனுக்காக வாய் விட்டு அழுதபடியே தைப்பார் அவர்.

ஊரில், சிறுமியைச் சீரழித்த குற்றத்திற்காக ஒருவனை போலீஸ் என்கௌண்டர் செய்கிறது. மார்ச்சுவரியில் தன் மகனின் சவத்தைக் கண்டு அருணகிரி அதிர்ச்சியில் என்ன செய்தார்...? கதறினாரா...?

இறுதி அத்தியாயத்தில், அருணகிரி செய்த ஒரு காரியம் வாசிக்கும் அனைத்து மனங்களையும் நெகிழச் செய்து, கண்ணீர் சிந்த வைக்கும்.

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580130004832
Ithuve Iruthi Aagattum...!

Read more from Mukil Dinakaran

Related to Ithuve Iruthi Aagattum...!

Related ebooks

Reviews for Ithuve Iruthi Aagattum...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ithuve Iruthi Aagattum...! - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    இதுவே இறுதியாகட்டும்...!

    Ithuve Iruthi Aagattum…!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் – 7

    அத்தியாயம் – 8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் – 10

    அத்தியாயம் – 11

    அத்தியாயம் – 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 14

    அத்தியாயம் – 15

    அத்தியாயம் – 16

    அத்தியாயம் – 17

    அத்தியாயம் – 18

    அத்தியாயம் – 19

    அத்தியாயம் – 20

    அத்தியாயம் – 21

    அத்தியாயம் – 22

    அத்தியாயம் – 1

    அந்த அரசு மருத்துவமனை மதிய நேரத்திலும் பரபரப்பாய் காணப்பட்டது. அடித்துக் கொண்டிருந்த சுரீர் வெயிலுக்கு யாரும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. எல்லோரும் ஏதோ நிலவொளியில் உலவுவது போல் அந்த வெயிலிலும் நடமாடிக் கொண்டிருந்தனர். அந்த ஏரியா காற்றில் மருந்து வாடை நிரந்தரமாய்க் கலந்திருக்க, அதனூடே லேசாய் ரத்தக் கவுச்சி வாடை இருப்பதை ஒரு சிலர் மட்டுமே உணர்ந்து முகத்தைச் சுளித்துக் கொண்டு உலவினர். மருத்துவமனையின் சீனியரோ சீனியர் டாக்டரிலிருந்து அடிமட்ட சிப்பந்தி வரை கல்லா கட்ட ஆரம்பித்திருந்தனர். ஆட்டோக்காரர்கள் எதிர்ப்படும் எல்லோரிடத்திலும், ஆட்டோவா சார்? என்று எந்திரத்தனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தனர்.

    யாரோ ஒரு கட்சித் தொண்டன் சாலை விபத்தில் ஏகமாய் அடிபட்டு வந்திருக்க, மருத்துவமனைக்கு உள்ளே இருக்கும் எல்லா மரத்தினடியிலும் கரை வேட்டிக்காரர்கள் நிறைந்திருந்தனர்.

    அவசர சிகிச்சைப் பிரிவில் அட்மிட் ஆகியிருந்த அந்த நபரை தன் செல்வாக்கின் மூலம் உள்ளே சென்று பார்த்து விட்டு வெளியே வந்த கட்சியின் மாவட்டத் தலைவரை தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு விசாரித்தனர்.

    நிலைமை கொஞ்சம் கிரிட்டிக்கலாய்த்தான் இருக்கும் போலிருக்கு...! டாக்டர்களும் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது!ன்னு கையை விரிச்சிட்டாங்க...! நாம் எல்லோரும் அந்த தோழருக்காக பிரார்த்திப்போம்...! என்றபடி தலைவர் நகர,

    பார்ப்பதற்கு பரதேசி போலிருந்த ஒரு பெரியவர் எங்கிருந்தோ ஓடி வந்து, அந்த தலைவரின் கையைப் பற்றிக் கொண்டு கதற, நெற்றியைச் சுருக்கிக் கொண்டு எல்லோரையும் பார்த்தார் தலைவர்.

    தலைவரே... உள்ளே அடிபட்டுக் கிடக்கற நம்ம சாரங்கனோட அப்பா என்று யாரோ எடுத்துக் கொடுக்க,

    சட்டென்று அந்தப் பெரியவரை இறுக்கி அணைத்துக் கொண்டு, கவலைப்படாதீங்க பெரியவரே... உங்க மகனுக்கு ஒண்ணும் ஆகாது...! ஆண்டவன் நல்லவங்களைக் கை விட மாட்டேன் என்றார்.

    அய்யா... என் மொத்தக் குடும்பமும் அவனை மட்டும்தான் நம்பி இருக்கு...! அவனுக்கு ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடுச்சுன்னா நானும் என் மனைவியும்... எங்களோட ரெண்டு பொட்டைப் புள்ளைகளும் அனாதைகளாகி நடுத் தெருவுக்கு வந்திடுவோம் அய்யா அழுது கொண்டே சொன்னார் பெரியவர்.

    அய்யய்ய... அப்படியெல்லாம் எதுவும் ஆகாது...! நான் கட்சியின் மேலிடத்துக்குப் பேசியிருக்கேன்...! மருத்துவச் செலவுக்கு நிதி உதவி குடுக்கச் சொல்லிக் கேட்டிருக்கேன்...! கண்டிப்பா வந்திடும்... பயப்படாதீங்க! என்று ஒரு அக்மார்க் பொய்யை அழகாய்ச் சொன்னார் தலைவர்.

    அனால் அவரது அந்தப் பொய்யை அப்படியே நம்பிய தொண்டர் கூட்டம், ஹோ... வென்று கத்தி தங்கள் நன்றியை வெளிப்படுத்தியது.

    தன்னுடன் எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும் கைத்தடி போன்றவனை அருகில் அழைத்து, என்னோட அடுத்த புரோக்ராம் என்ன? என்று கேட்ட தலைவர், அவன் பதில் சொல்ல வாயெடுக்கும் முன், தானே முந்திக் கொண்டு, ஓ... ஏழைக் குழந்தைகளுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி இருக்கல்ல? என்றார்.

    அந்தக் கைத்தடி ஆமாம் என்று சொல்லவும் முடியாமல், இல்லை என்று சொல்லவும் இயலாமல், தெரியாது என்று சொல்லவும் தெரியாமல், திணற,

    அப்ப... நான் அங்க போய் அந்த நிகழ்ச்சியைச் சீக்கிரம் முடிச்சிட்டு உடனே புறப்பட்டு இங்க வந்திடறேன்...! அது வரைக்கும் நீங்கெல்லாம் இங்கியே இருந்து நம்ம தம்பியைக் கவனிச்சுக்கங்க...! என்று சொல்லி விட்டுக் கிளம்பிய தலைவரை அந்த சாரங்கனின் தந்தை பரிதாபமாய்ப் பார்க்க, அய்யா... உங்க மகனை இந்த நிலையில் விட்டுட்டுப் போக எனக்கு மனசே இல்லை... ஆனா அங்க நூற்றுக்கணக்கான பள்ளிக் குழந்தைகள் காத்திட்டிருக்காங்க...! நான் போகலைன்னா... அந்த ஃபங்ஷனே கேன்சல் ஆகி... அந்தக் குழந்தைகள் ஏமாந்து போயிடுவாங்க...! அதான்... உருக்கமாய்ச் சொன்னார் தலைவர்.

    பரவாயில்லைங்க தலைவரே... நீங்க போயிட்டு வாங்க... நாங்க பார்த்துக்கறோம்

    அப்போது தலைவரின் மொபைல் ஒலிக்க, எடுத்துப் பார்த்தார். மகளிரணித் தலைவி மல்லிகா லைனில் இருந்தாள். ம்ம்... சொல்லுங்க என்றார் இணைப்பிற்குள் புகுந்து.

    நான் ஹோட்டல் ரிசப்ஷன்ல எத்தனை நேரமா வெய்ட் பண்றது...? நீங்க வர்றீங்களா... இல்லை நான் கிளம்பட்டுமா? மல்லிகா கொதித்தாள்.

    இதோ இப்பக் கிளம்பிட்டேன்! என்று சொல்லி விட்டு இணைப்பத் துண்டித்தவர், அந்த ஸ்கூலிலிருந்துதான் கூப்பிடுகிறார்கள்... குழந்தைகள் வெய்ட் பண்ணிட்டிருக்காங்களாம் சொல்லி விட்டு வேக வேகமாய் காரை நோக்கி ஓடினார்.

    அவர் பின்னாடியே நாய்க்குட்டியைப் போல் ஓடினான் அந்தக் கைத்தடி.

    கார்க்கதவைத் திறந்தவர், திடீரென ஞாபகம் வந்தது போல், சீனியர் தொண்டன் ஒருவனை அருகில் அழைத்து, பக்கத்துல ஏதாவது கடையிருந்தா போய் கருப்பு ரிப்பன் வாங்கி... துண்டு துண்டா கட் பண்ணித் தயாராய் வைங்க...! பொசுக்குன்னு ஏதாவது ஆயிடுச்சுன்னா... எல்லோரும் சட்டையில் குத்திக்க வேணுமல்லவா? என்றார்.

    சரிங்க தலைவரே! என்றான் அந்த அடிமை.

    அதே மாதிரி... கட்சிப் பேர் போட்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் அடிக்கக் குடுத்திடுங்க சொல்லியவாறே காரில் ஏறிப் பறந்தார் மாவட்டத் தலைவர்.

    தீர்க்கதரிசியான அந்த மாவட்டத் தலைவர் சொன்னது போலவே, அடுத்த அரை மணி நேரத்தில் அந்த அமங்கலச் செய்தி ஆஸ்பத்திரி வளாகம் எங்கும் எதிரொலித்தது.

    சாரங்கன் இறந்திட்டாரு

    தியாகச் செம்மல் சாரங்கன் வாழ்க

    கட்சிக்காக உயிர் நீத்த மாவீரன் சாரங்கன் வாழ்க

    கோஷங்கள் ஒலிக்க, தலையில் கையை வைத்துக் கொண்டு மரத்தடிக்குச் சென்று தனியாக அமர்ந்து குமுறினர் சாரங்கன் குடும்பத்தினர்.

    இன்னொரு புறம் அவன் தங்கைகள் இரண்டும் தாயைக் கட்டிக் கொண்டு கதறின. அய்யோ... அண்ணா... எங்களை விட்டுட்டுப் போயிட்டியே... அண்ணா

    பாவி மக்கா... இந்த ரெண்டையும் கரை சேர்க்க உன்னைத்தாண்டா நம்பியிருந்தேன்... இப்படி எங்களை நட்டாத்துல தவிக்க விட்டுட்டுப் போயிட்டியேடா...! சாரங்கா... தாயானவள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதாள்.

    என்னப்பா தலைவர் வருவாரா? தொண்டனொருவன் சந்தேகமாய்க் கேட்க,

    அவர் எங்கே வரப் போறார்...? ஒரு சம்பிரதாயத்துக்காக... வந்து... தலையைக் காட்டிட்டுப் போயிட்டார்... அவ்வளவுதான்

    இல்ல... இங்கிருக்கறவங்க... நாளைக்குத்தான் போஸ்ட்மார்ட்டம் பண்ண முடியும்!னு சொல்றாங்க...! இன்னிக்கே பண்ணனும்னா... ஆயிரக்கணக்குல செலவாகும்!"கறாங்க... அதான்

    Enjoying the preview?
    Page 1 of 1