Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அகல்யாவின் ஆகாயம்
அகல்யாவின் ஆகாயம்
அகல்யாவின் ஆகாயம்
Ebook130 pages30 minutes

அகல்யாவின் ஆகாயம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வேகமாய் போய்க் கொண்டிருந்த அந்தவேன் - சட்டென்று வேகம் குறைந்து கோணல் மாணலாய் ஓடி அந்த புளிய மரத்துக்குக் கீழே போய் நின்றது. நேரம் காலை பதினோரு மணி.
 வேனுக்குள் இருந்த பத்து பெண்களும் அதிர்ச்சியாய் கிடந்தார்கள். அகல்யா கேட்டாள்.
 "ட்ரைவர் என்னாச்சு...?"
 "பேக் டயர் பஞ்சராயிருச்சும்மா..."
 "ஸ்டெப்னி இருக்கில்ல..."
 "இருக்கம்மா..."
 "மாட்டு..."
 எல்லோரும் கீழே இறங்கினார்கள்.
 அகல்யா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சொன்னாள்.
 "நல்லவேளை. ஏதோ கிராமத்துக்குப் பக்கத்துலதான் வண்டி பஞ்சராயிருக்கு..."
 "என்ன கிராமம்ன்னு தெரியலையே..."
 "ஒரே பனைமரமா இருக்கு..."
 "அதோ அந்த கோவணம் கட்டிகிட்டு வர்ற ஆளை விசாரி"
 "இந்தாப்பா. இங்கே... வா..."
 அவன் வந்தான். தோளில் மண் வெட்டியை சாய்த்து கையில் கடப்பாறையை வைத்திருந்தான்"என்னாங்கோ..."
 "இது என்ன கிராமம்..."
 "கோவனாண்டி புதூர்ங்க..." எல்லோரும் சிரித்தார்கள்.
 அகல்யா முணுமுணுத்தாள்.
 "ஊரோட பேர்க்கு ஏத்த மாதிரியே... ஆள் டிபிகல் எக்ஸாம்பிளா இருக்கான்..."
 "கோட்டூர் இங்கிருந்து இன்னும் எவ்வளவு தூரம். இருக்கு?"
 "அது கிடக்குங்க... இருபது கல்லு..."
 வேன் ட்ரைவர் ஸ்டெப்னி டயரோடு - அகல்யாவை நெருங்கினான்.
 "அம்மா..."
 "என்ன...?"
 "ஸ்டெப்னியில் காத்து கம்மியா இருக்கு... இப்படியே இதை மாட்டிகிட்டு போனா... ரெண்டு கிலோ மீட்டர் போறதுக்குள்ளே பஞ்சராயிடும்..."
 "ஏம்பா இதையெல்லாம் முன்னாடியே பார்த்துக்க வேணாமா? இப்ப வந்து ஒவ்வொண்ணா சொல்லிட்டிருக்கியே...?"
 "நா... என்னம்மா பண்ணட்டும்...? காத்து இருக்கும்ன்னு நினைச்சேன்..."
 "சரி... இப்ப என்ன பண்ணப்போறே...?"
 "கிராமத்துக்குள்ளார போய்... ஸ்டெப்னிக்கு காத்தடிச்சுட்டு வரணும்..."
 கோவணம் கட்டிய ஆள் குறுக்கிட்டுச் சொன்னான்.
 "இந்த மாதிரியான பெரிய டயர்க்கெல்லாம் காத்தடிக்க... சொக்கம்பாளையத்துக்கு போகணும்ங்க..."
 "அது எங்க இருக்கு...?""இங்கிருந்து அஞ்சு கல்லு தொலவு போகணும்..."
 "சரியா போச்சு..."
 "அந்த சொக்கம்பாளையத்துக்கு போக பஸ் ஏதாவது இருக்கா...?"
 "மூணு மணி நேரத்துக்கு ஒரு பஸ் இருக்குங்க..."
 "கிழிஞ்சு போச்சு."
 அகல்யா தலையில் கை வைத்துக் கொண்டு - ரோட்டோரத்தில் இருந்த மைல்கல்லின் மேல் உட்கார்ந்தாள்.
 டிரைவர் பின் தலையைச் சொரிந்தான்.
 "இப்ப என்னங்கம்மா பண்றது...?"
 "என்னைக் கேட்டா...? ஸ்டெப்னியோட ரோட்டோரமா போய் நில்லு... ஏதாவது லாரி கீரி வந்தா... அதுல ஏறி சொக்கம்பாளையத்துக்கு போய் காத்தை பிடிச்சுட்டு வா... நீ வர்ற வரைக்கும் நாங்க இப்படி புளிய மரத்து நிழல்ல உட்கார்ந்துட்டிருக்கோம்."
 டிரைவர் ஸ்டெப்னியை உருட்டிக் கொண்டு - ரோட்டோரத்திற்கு போக - அகல்யா தன்னருகில் இருந்த பெண்ணைப் பார்த்து சொன்னாள்.
 "அந்த ஜமுக்காளத்தை கொண்டாந்து விரி கிரிஜா. அப்படியே ட்ரான்ஸிஸ்டர்... சீட்டுக்கட்டு எல்லாத்தையும் கொண்டாந்துடு... நாம் இங்கிருந்து கிளம்ப எப்படியும் ரெண்டு மணி நேரமாயிடும்..."
 கிரிஜா போய் கொண்டு வந்தாள். கூடவே தோளில் காமிரா.
 "அது எதுக்கடி...?"
 "அந்த ஆளை போட்டோ எடுக்கத்தான்..." கோவணம் கட்டிய ஆளைக் காட்டினாள் கிரிஜா

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 8, 2024
ISBN9798224522194
அகல்யாவின் ஆகாயம்

Read more from Rajeshkumar

Related to அகல்யாவின் ஆகாயம்

Related ebooks

Related categories

Reviews for அகல்யாவின் ஆகாயம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அகல்யாவின் ஆகாயம் - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    ஆல்பர்ட் நெஞ்சில் சிலுவைக் குறியிட்டுக் கொண்டு தன் சுழல் நாற்காலியில் சாய்ந்ததும் - இண்டர்காம் கூப்பிட்டது. ரிஸீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தான்.

    எஸ்...

    குட்மார்னிங் ஸார் நான் பி.ஆர்.ஓ. பேசறேன்...

    என்ன...?

    ஜெகன் இன்னிக்கு வேலைக்கு வந்திருக்கான் ஸார். அவன் வேலைக்கு வந்தா உடனடியா இன்ஃ பார்ம் பண்ணச் சொல்லியிருந்தீங்க...

    நீங்க அவனை ஏதும் பேசலையே...?

    இல்ல... ஸார்...

    சரி என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க... - ஆல்பர்ட் ரிஸீவரை கவிழ்த்துப் போட்டுவிட்டு - மேஜையின் இடதுபக்க ஓரமாய் அருகில் வைத்திருந்த ஃபைல்களில் ஒன்றை எடுத்து பிரித்தார். இரண்டு பக்கங்களை புரட்டி கையெழுத்து போட்டிருந்தபோது அறைக்கதவு தட்டப்பட்டது.

    டொக்... டொக்...

    எஸ்... கம்... இன்...

    அந்த இளைஞர் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான். இருபத்தைந்து வயது இருக்கலாம். லேசாய் முரட்டு முகம். மேலுதட்டிலும் தாடையிலும் ஒரு வார ரோமம். சிகரெட் புகையில் ஸ்நானம் செய்து செய்து - கரு ஊதா நிறத்தில் நிகோடின் உறைந்துவிட்ட உதடுகள். சிவப்பு கலந்த கண்கள். பொம்மை போட்ட முழங்கை பனியனும் - கறுப்பு பேண்ட்டும் - தடித்த மணிக்கட்டில் செம்பு வளையம் மாட்டியிருந்தான்.

    வணக்கம் ஸார்... கூப்பிட்டீங்களாம்... பி.ஆர்.ஓ. சொன்னாரு... ஆல்பர்ட் அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு - கேட்டார்.

    யூனிஃபார்ம் ஏன் போட்டுகிட்டு வரலை...? ஃபாக்டரிக்கு வரும்போது யூனிஃபார்ம் போட்டுகிட்டுதான் வரணும்ங்கிற ரூல் இருக்கு தெரியுமா...?

    தெரியும் ஸார்...

    பின்னே ஏன் போட்டுகிட்டு வரலை...?

    போட்டுகிட்டுதான் ஸார் வந்தேன்... வந்த வழியில மாட்டு வண்டிக்காரன் ஒருத்தன் என் சைக்கிள் மேல மோதிட்டான்... ரோட்ல தேங்கியிருந்த மழைத் தண்ணியில விழுந்து... போட்டிருந்த யூனிஃபார்ம் நாசமாயிடுச்சு ஸார்... உடனே வீட்டுக்கு போய் மாத்திட்டு வந்தேன்...

    கம்பெனி உனக்கு ரெண்டு செட் யூனிஃபார்ம் குடுத்திருக்கில்ல?

    ஆமா...

    இன்னொரு 'செட்'டை போட்டுட்டு வரலாமே...?

    அது கிழிஞ்சு போச்சு ஸார்...

    அவன் பொய் சொல்கிறான் என்பதை புரிந்துக் கொண்டவர் சில விநாடிகள் அவனை உற்றுப் பார்த்து விட்டு கேட்டார்.

    சரி... ரெண்டு நாளா... ஏன் வேலைக்கு வரலை...?

    லீவு லெட்டர் குடுத்துட்டு தானே போனேன்...?

    எதுக்காக லீவு... போட்டே...?

    திருச்சூர்ல என் ஃப்ரண்ட் ஒருத்தன் செத்துட்டான்... சின்ன வயசிலிருந்தே ஸ்நேகிதம். அதான் போயிட்டு வந்தேன்...

    அந்த ஃப்ரண்ட்டோட பேரென்ன...?

    நாராயணன்...

    சரி இந்த லெட்டரைப் படி... தன் மேஜையின் இழுப்பறையை திறந்து - உள்ளேயிருந்த இன்லேண்ட் கவர் ஒன்றை எடுத்து நீட்டினார். ஜெகன் அதை வாங்கிப் பிரித்தான். உள்ளேயிருந்த வாசகங்களில் பார்வை பரபரவென்று அலைந்தது.

    மதிப்பிற்குரிய ஃபேக்டரி மேனேஜர் ஆல்பர்ட் அவர்களுக்கு

    - வணக்கம். இப்பவும் உங்கள் ஃபாக்டரியில் 'போர். மென்' வேலை பார்க்கும் ஜெகனைப் பற்றி உங்களுக்கு சில தகவல்களை சொல்ல விரும்புகிறோம். நாங்கள் வசிக்கும் குடித்தனப் பகுதியான முத்தப்பா காலனியில் - ஜெகன் பெண்களை வைத்து விபச்சார விடுதி நடத்தி வருகிறார். நல்ல குடும்பங்கள் வாழ்க்கை நடத்தும் அந்த பகுதியில் - விபச்சார விடுதி இருப்பதால் எங்கள் வீட்டுப் பெண்கள் - இருட்டியதும் தெருவில் நடமாட முடியவில்லை. இதைப் பற்றி

    Enjoying the preview?
    Page 1 of 1