Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வெல்வெட் குற்றம்
வெல்வெட் குற்றம்
வெல்வெட் குற்றம்
Ebook124 pages30 minutes

வெல்வெட் குற்றம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மீனம்பாக்கம் ஏர்போர்ட்.
 வெளிச்சத்தில் அவிழ்ந்து கொண்டிருந்த விடியல் வேளை. பயணிகள் லெளஞ்ச் பூராவும் இரைந்து கிடைக்க கபேடேரியாவுக்குப் பக்கமாய் நின்று பளபளப்பான டிஸ்போஸல் டம்ளரில் காபியைத் துளித்துளியாய் சுவைத்துக் கொண்டிருந்தாள் சங்கமா.
 21 வயதும் ஐந்தரையடி உயரமும் ஐம்பது கே.ஜி. எடையும் கொண்ட சங்கமா அந்த நாவல்பழ நிற சுடிதார்க்கு அமர்க்களமாய் பொருந்தியிருந்தாள். அதிர்ஷ்டம் செய்த வேனிடி பேக் ஒன்று அவளுடைய இடுப்பின் வளைவை உரசிக் கொண்டிருந்தது.
 காபியைக் குடித்து முடித்து டிஸ்போஸல் டம்ளரை சேதப்படுத்தி வேஸ்ட் பின்னுக்குள் போட்ட விநாடி அவளுடைய முதுகை ஒரு கை மெதுவாய்த் தொட்டது.
 திரும்பியவள் மலர்ந்தாள்.
 "ஏய்... கீதா... நீயா...?"நானே... நானே!" அந்த கீதா தன் தலையை அழகாய் ஒரு பக்கம் சாய்த்து சிரித்தாள். நெருக்கமாய் கோர்த்த மல்லிகைச் சரம் போன்ற பல்வரிசை, லேசான பௌடர் பூச்சில் முகம் மினுமினுத்தது.
 "என்னடி... ஏர்போர்ட் பக்கம்...?" சங்கமா கேட்க கீதா மறுபடியும் மல்லிகைச்சரத்தைக் காட்டினாள்.
 "நான் கேட்க வேண்டிய கேள்வி இது! இது என்னோட ராஜ்யம்..."
 "கீதா... நீ என்ன சொல்றே...?"
 "நாம காலேஜ்ல படிக்கிறப்போ லெக்சரர் ஒருநாள் வகுப்புல உங்களோட எதிர்கால லட்சியம் என்னான்னு கேட்டார். நான் என்ன பதில் சொன்னேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா...?"
 "இருக்கு..."
 "என்ன சொன்னேன்...?"
 "ஏர் ஹோஸ்டஸ் ஆகணும்ன்னு சொன்னே!"
 "இப்போ ஆயிட்டேன்... வாரத்துல மூணு நாள் ஃப்ளைட்ல லண்டன், சிட்னின்னு பறந்துட்டிருக்கேன்."
 சங்கமா கீதாவின் கன்னத்தைத் தட்டினாள். "கேட்கவே சந்தோஷமாயிருக்கு. காலேஜ் டேஸ்ல பார்த்ததை விட நீ இப்போ அழகாயிருக்கே. ஸீம் ஸ் டு பி வெரி ஸ்லிம்."
 "உடம்பை ஸ்லிம்மா வெச்சுக்கலைன்னா நிர்வாகம் மொதல்ல நோட்டீஸ் கொடுப்பாங்க. அப்புறம் ஒரு நல்ல நாள் பார்த்து வீட்டுக்கு அனுப்பி வெச்சுடுவாங்க... அது இருக்கட்டும், இவ்வளவு காலையில் எதுக்காக ஏர்போர்ட் வந்திருக்கே? ஏதாவது வெளிநாடு பயணமா...?"
 "இல்லை... லண்டனிலிருந்து வர்ற ஒருத்தரை ரிஸீவ் பண்றதுக்காக வந்திருக்கேன்..."
 "யாரு...?" கண்ணைச் சிமிட்டினாள் கீதா. "உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறவரா?"
 "சேச்சே..."
 "பின்னே...?"
 "இவர் ஒரு டாக்டர். பேர் ராபின்ஸ்... ப்ளாஸ்டிக் சர்ஜரியில் 'நெம்பர் ஒன்' டாக்டர்."ஈஸிட்...? அவ்வளவு பெரிய டாக்டரை நீ எதுக்காக ரிஸீவ் பண்றே? வீட்ல யாருக்காவது ஏதாவது ஹெல்த் ப்ராப்ளமா...?"
 "ஆமா" என்று சொன்ன சங்கமாவின் முகம் லேசாய் வாடியது. தொடர்ந்து சொன்னாள்.
 "என்னோட அப்பாவுக்கு போன மாசம் எங்க கெமிக்கல ஃபேக்டரியில் ஒரு மோசமான ஆக்ஸிடெண்ட். ஆசிட் மேனுஃபாக்சரிங் செக்ஷனில் ஆசிட் க்வாலிட்டியை டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டிருக்கும்போது ஆசிட் முகத்துல பட்டு ஒரு பகுதியே சிதைஞ்சு போச்சு. அந்த நேரம் அவர் கண்ணாடி போட்டிருந்ததால ஆசிட் கண்ணுல படாமே பார்வை பறிபோகாமே தப்பிச்சுது."
 "காட் ஈஸ் க்ரேட்..."
 "அப்பாவோட முகத்தைப் பழைய நிலைமைக்கு கொண்டு வரணும்ன்னா ஜெனிடிக்-கம்-ப்ளாஸ்டிக் சர்ஜரி தேவைன்னு இங்கேயிருக்கிற டாக்டர்ஸ் சொன்னாங்க. அந்த ஜெனிடிக்-கம்-ப்ளாஸ்டிக் சர்ஜரி இந்தியாவுக்கு இன்னமும் வரலை. இந்த வகை சர்ஜரியில் டாக்டர் ராபின்ஸ் 'நெம்பர் ஒன்'னு கேள்விப்பட்டோம். காண்டாக்ட் பண்ணிப் பேசினோம். வந்து ட்ரீட்மெண்ட் எடுக்க ஒத்துக்கிட்டார்."
 "ட்ரீட்மெண்ட் ரொம்பவும் காஸ்ட்லியா இருக்கும் போலிருக்கே...?"
 "காஸ்ட்லிதான்... ரூபாய் பத்து லட்சம் வரைக்கும் செலவாகலாம். அப்பாவுக்கு இந்த ட்ரீட்மெண்டில் அவ்வளவா ஈடுபாடு கிடையாது. அம்மாதான் விடலை. பணம் சம்பாதிக்கிறது எதுக்காக...? இது மாதிரியான பிரச்சினைகள் வரும்போது செலவு செய்யத்தான். ட்ரீட்மெண்ட் எடுத்தேயாகணும்ன்னு சொல்லிட்டாங்க..."
 ஒலி பெருக்கியில் விமானத்தின் வருகை குறித்த அறிவிப்பு கேட்டது. சங்கமா அந்த அறிவிப்பை செவிமடுத்துவிட்டுச் சொன்னாள்.
 "இந்த ஃப்ளைட்லதான் வர்றார்..."
 "ஃப்ளைட் எப்படியும் லேண்டாக ஒரு அரைமணி நேரம் ஆகும். வா உள்ள போய் உக்காரலாம்?"
 இருவரும் மெல்ல நடந்து லாபிக்கு வந்தார்கள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 2, 2024
ISBN9798224441693
வெல்வெட் குற்றம்

Read more from Rajeshkumar

Related to வெல்வெட் குற்றம்

Related ebooks

Related categories

Reviews for வெல்வெட் குற்றம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வெல்வெட் குற்றம் - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    கேள்வி : மோனலிஸா ஓவியம் வரைந்து முடிக்க எத்தனை வருட காலமாயிற்று...?

    பதில் : ஆறு வருடம். (ஒரு பெண்ணை சிரிக்க வைப்பது இவ்வளவு கஷ்டமா?)

    உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் பேசிவிட்டு வெளியே வந்த மாவட்ட கலெக்டர் பங்கஜாட்சனை வெளிவராந்தாவில் காத்திருந்த பத்திரிகை நிருபர்களும் சூழ்ந்து கொண்டார்கள்.

    ஸார்... கூட்டத்துல என்ன முடிவு எடுத்தீங்க...?

    இரண்டு முக்கியமான முடிவுகள்

    சொல்லுங்கள் ஸார்...

    இந்தியாவில் நடக்கிற எல்லா நாச காரியங்களுக்கும் காரணகர்த்தாவான மொஹிந்தர்கான் இப்போது வட்டப்பாறை காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பது ஊர்ஜிதமாகிவிட்டது. அவனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்தேயாக வேண்டும் என்று மாநில அரசும் மத்திய அரசும் கட்டளையிட்டுவிட்டது. எல்லா உயர் போலீஸ் அதிகாரிகளையும் கலந்து பேசியதில் இரண்டு முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன...

    என்ன முடிவுகள் ஸார்...?

    மொஹிந்தர்கானை பிடிப்பது என்பது காட்டுப் பகுதியில் அவ்வளவு சுலபம் கிடையாது. காட்டுப் பகுதிகளில் வாழும் ஆதிவாசிகளில்ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு காட்டுப் பகுதியின் ஒவ்வொரு மில்லி மீட்டரும் தெரியும். அவர்களுக்குத் தெரியாமல் அந்தக் காட்டுப் பகுதியில் யாரும் இருந்துவிட முடியாது.

    அவர்களின் உதவியோடு மொஹிந்தர்கானைக் கண்டுபிடித்துவிட முடியும் என்று நினைக்கிறீர்களா ஸார்...?

    ஒருநம்பிக்கைதான்...

    "சரி... இரண்டாவது முடிவு...?'

    மொஹிந்தர்கானின் தலைக்கு ஒரு கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்திருக்கிறோம். அவனை உயிரோடோ அல்லது பிணமாகவோ யார் கொண்டு வந்து ஒப்படைத்தாலும் சரி கோடி ரூபாய் பணமும் அரசு வேலையும் கிடைக்கும். அவனைப் பிடித்துக் கொடுப்பவர்கள் பெயர் மற்றும் அவரைப் பற்றிய விபரங்கள் ரகசியமாய் பாதுகாத்து வைக்கப்படும்...

    பத்திரிகை நிருபர்களில் ஒருவர் முண்டியடித்துக் கொண்டு முன்னால் வந்தார்.

    "ஸார்... நான் ஒரு கேள்வியைக் கேட்டா நீங்க தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே...?'

    கலெக்டர் பங்கஜாட்சன் சிரித்தார்.

    ப்ரஸ் ரிப்போர்ட்டர்ஸ் நீங்க எந்தக் கேள்வியையும் தாராளமா கேட்கலாம்...

    ராணுவத் துணைப்படையிலிருந்து ரெண்டாயிரம் பேர் நவீன ஆயுதங்களோடும், நவீன கருவிகளோடும் வட்டப்பாறை காட்டுப் பகுதிக்குள்ளே நுழைஞ்சு சல்லடை போட்டுத் தேடியும் கிடைக்காத மொஹிந்தர்கானை ஆதிவாசி இளைஞர்களால் பிடிக்க முடியுமா...?

    ஆதிவாசிகளின் தேடுதல் முறை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ராணுவத்தின் பார்வைக்கு கிடைக்காத காட்டுப் பகுதிகள் இவர்களின் பார்வைக்கு கிடைக்கும்.

    "மொஹிந்தர்கானின் தலைக்கு ஒரு கோடி ரூபாயும் அரசு வேலையும் என்பது அதிகம் போல் தெரிகிறதே?'

    மிக மிக அதிகம்தான்... வேறு வழியில்லை. மொஹிந்தர்கான் கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாத ஒரு பயங்கரவாதி. கடந்த பத்து வருட காலத்தில் அவன் செய்த கொலைகள் 134. இதில் உயர் அரசு அதிகாரிகள் எட்டு பேர். சென்ற வருடம் கொல்கத்தாவில் நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தில் முன்னூறு பேர்களுக்கு மேல் இறந்து போனதுக்கு இவன்தான் காரணம். இவன் கள்ளக் கடத்தல் செய்த வகையில் இரண்டாயிரம் கோடி ரூபாய் வரைக்கும் நம் நாட்டுக்கு இழப்பு. போதை மருந்துகளும், ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்துகளும் இந்தியாவில் பெருகக் காரணமே இந்த மொஹிந்தர்கான்தான். இவன் ஒரு விஷச்செடி. இந்த விஷச் செடியைப் பிடுங்கி எரிக்காவிட்டால் இதன் விதைகள் நாடு பூராவும் பரவிவிடும்.

    இந்த இரண்டு முக்கியமான முடிவுகள் எப்போதிருந்து அமலுக்கு வருகின்றன...?

    உடனே அமலுக்கு வந்துவிட்டன. நாளைக்கு எல்லா பத்திரிகைகளிலும் டி.வி. சானல்களிலும் இதைப்பற்றி விரிவாக விளம்பரப் படுத்தப்படும்.

    மொஹிந்தர்கானை பிடிக்கவே முடியாது என்று முன்னாள் டி.ஜி.பி. பொன்னம்பலம் கூறியிருக்கிறார். இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன...?

    கலெக்டர் பங்கஜாட்சன் சிரித்தார். "சென்ற வருடம்

    Enjoying the preview?
    Page 1 of 1