Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vidumurai Vibareetham
Vidumurai Vibareetham
Vidumurai Vibareetham
Ebook125 pages1 hour

Vidumurai Vibareetham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஓவியர் சிற்றரசுவின் மகன் இளங்கோவன் இவன் தந்தை இறந்த பிறகு குடும்ப வறுமை காரணமாக சக்கரவர்த்திக்கு தன் தந்தை வரைந்த ஓவியத்தை அடகுவைத்து வேலைக்குச் சேர்ந்தான்; பரத் - சுசிலாவின் உதவியுடன் சிற்றரசுவின் ஓவியத்தை சக்கரவர்த்தி மீட்டெடுத்து இளங்கோவனிடம் ஒப்படைத்தானா? அப்படி என்ன அந்த ஓவியத்தின் சிறப்பு? வாங்க வாசிக்கலாம்...

Languageதமிழ்
Release dateFeb 26, 2022
ISBN6580100908047
Vidumurai Vibareetham

Read more from Pattukottai Prabakar

Related to Vidumurai Vibareetham

Related ebooks

Reviews for Vidumurai Vibareetham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vidumurai Vibareetham - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    விடுமுறை விபரீதம்

    Vidumurai Vibareetham

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    சென்ற வருடத்தில் ஒரே ஒரு எழுத்து கொண்ட, உஷ்ண மாதத்தில் அனல் காற்று வீச... முக்கிய நாளிதழின் முதல் பக்கத்தில் 105 டிகிரி வெயிலில் சில முதியவர்கள் மோட்சம் அடைய... ரெஃப்ரிஜிரேட்டர், ஏர்கண்டிஷனர் விற்பனைக் கோடுகள் மலையேறிக்கொண்டிருந்த ஒரு காலச் சதுரத்தில்...

    இளங்கோவன் வாடகைக்கு எடுத்திருந்த டை கட்டிக்கொண்டு, நேர்முகத் தேர்வில் பவ்யமாய் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.

    உங்க பேரு? உலகத்திலேயே மிக ஸில்லியான கேள்வியில் ஆரம்பித்தான், இரட்டை டியூப்லைட்டின் வெளிச்சத்தைத் தன் முன் மண்டையில் பிரதிபலித்துக்கொண்டிருந்த மேனேஜர் - கையில் விண்ணப்ப பாரத்தை வைத்துக்கொண்டு.

    சி. இளங்கோவன் தாடி வைத்திருந்தான்.

    அப்பா பேரு?

    சிற்றரசு கண்கள் இடுங்கியிருந்தன.

    பி.ஏ. என்ன சப்ஜெக்ட்?

    சரித்திரம் பாதி காதுகளை மூடிய தலைமுடி.

    இந்த வேலைல மாசத்துக்கு பதினஞ்சி நாள் வெளியூர்கள் போய்ட்டுவர வேண்டியிருக்கும்.

    எனக்கு பயணத்தில் வாந்தி வராது சார்.

    பணம் புழங்கற வேலை.

    நாணயமானவன் சார் நான்.

    என்ன எதிர்பார்க்கிறீங்க?

    வேலை.

    நான் சம்பளத்தைக் கேட்டேன்.

    மூவாயிரம்

    இரண்டாயிரம்தான் நாங்க நிர்ணயிச்சிருக்கோம்.

    பரவால்லை சார்.

    பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் கட்ட முடியுமா உங்களால்?

    வசதி இல்லை சார்

    இல்லைன்னா யாராச்சும் ஒரு முக்கிய புள்ளி பத்தாயிரத்துக்கு கம்பெனி பேருக்கு ஸ்டாம்ப் பேப்பர்ல பாண்டு எழுதி தருவாங்களா?

    அவ்வளவு தூரம் உதவற முக்கிய புள்ளிங்க யாரையும் எனக்குத் தெரியாது சார். நாலு வருஷமா வேலைக்காக அலையறேன் சார். அப்பா இறந்து ரெண்டு வருஷமாச்சி சார். வீட்ல வயசான அம்மா இருக்காங்க சார். அண்ணன் கல்யாணம் பண்ணிக்கிட்டு மாமனார் வீட்டோட போய்ட்டான் சார். ரொம்ப கஷ்டப்படறோம் சார். ரொம்ப நொந்து போயிருக்கேன் சார். சம்பளம் ஆயிரத்து ஐநூறு கொடுத்தாக்கூட போதும் சார், நான் நேர்மையா, நாணயமா நடந்துப்பேன் சார். என்னை நம்புங்க, கொஞ்சம் இரக்கப்படுங்க சார்

    துளிர்த்த கண்ணீரை முழுக்கை சட்டையின் கைமுனையில் துடைத்துக்கொண்டான்.

    தம்பி, நான் இங்கே மேனேஜர், ஆறாயிரத்து சொச்சம் சம்பளம் வாங்கறேன். அடுத்த தெருவில் ஒரு வாடகை சைக்கிள் என்னை நம்பித் தருவானா, சொல்லுங்க. மொத்தம் பதினஞ்சு பேரை தேர்ந்தெடுக்கறேன். எல்லார்கிட்டேயும் டெபாசிட் இல்லைன்னா பாண்ட் வாங்கச் சொல்லி எனக்கு உத்தரவு. உங்களுக்கு ஒரே ஒரு சலுகை நான் தரமுடியும். மத்தவங்களுக்கு நாலு நாள் டைம் தரப்போறேன். உங்களுக்கு ஒரு வாரம் டைம் தர்றேன். பணம் இல்லைன்னா பாண்டுக்கு ஏற்பாடு பண்ண முயற்சி பண்ணுங்க.

    இல்லை சார்... நான்... வந்து...

    நீங்க போகலாம்.

    இளங்கோவன் பஸ் ஸ்டாப்பில் டீசல் மற்றும் சார்மினார் புகை நடுவில் சிந்தித்தான். கடற்கரையில் கன்னத்தில் கை தாங்கி தூரத்து சில்-ஹவுட் படகுகளைப் பார்த்துக்கொண்டு கவலைப்பட்டான். பின்னிரவில் தனிமை சாலையில் அனாதையாய் நடந்துகொண்டு யோசித்தான். கட்டிலில் குப்புறப்படுத்து தலையணையை ஈரம் செய்துகொண்டு புகைப்பட அப்பாவை வெறித்தான்.

    பிள்ளைக்கு பத்தாயிரம் சேர்த்து வைத்தீர்களா அப்பா? பெரிய புடலங்காய் லட்சியம்! ‘கலைத்திறன் சரஸ்வதியின் வரம். அதை சமர்ப்பணத்திற்குத்தான் பயன்படுத்துவேன். காசுக்காக மாட்டேன்.’ உருப்பட்டீர்களா அப்பா? பதினைந்து நாட்கள் மெனெக்கெட்டு சித்திரம் வரைந்து டெல்லி போட்டிக்கு அனுப்பி, மூன்றாவது பரிசு பெற்றதை இந்தியன் எக்ஸ்பிரசின் எட்டாவது பக்கத்தில் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டீர்கள். சட்டை பாக்கெட் நிரம்பியதா? ‘பத்திரிகை ஆபீசுக்குப் போய் வரைஞ்சா காசு கொடுப்பாங்கப்பா’ அந்த யோசனைக்கே சீற்றம்.

    ‘போடா, எனக்குத் தெரியும். பெரிசா சொல்ல வந்துட்டான். கண்ட கண்டபடி வரையச் சொல்வான். என்னால முடியாது.’

    ஹிந்தி வாத்தியாராய் பிரசார சபா நடத்தின பள்ளியில் வேலை பார்த்துக்கொண்டு வந்த ஆயிரத்து சொச்சம் எந்த மூலைக்கு?

    இறந்துபோன நீங்கள் விட்டுச்சென்றது என்னப்பா? ஊர் முழுக்க கடன், உங்கள் ஓவிய உபகரணங்கள், உங்கள் ஓவிய சேகரிப்புகள்... வேறென்ன?

    இளங்கோ மனதில் சின்ன மின்னல்.

    உறங்கிக்கொண்டிருந்த அம்மாவை நடுராத்திரியில் எழுப்பினான்.

    ஏம்மா, அப்பா சேர்த்து வச்சிருந்த பழைய ஓவியங்களை எல்லாம் வித்தா கொஞ்சம் பணம் கிடைக்காது?

    அப்பாவை ஞாபகப்படுத்திக்கிட்டிருக்கிறதே அதுதாம்ப்பா.

    உடனே செண்ட்டிமெண்ட்! சும்மா இரும்மா நீ.

    உடனே ஸ்டூல் போட்டு ஏறி நீளமான அப்பாவின் மரப் பெட்டியை பரணில் இருந்து இறக்கி தூசு தட்டினான். திறந்தான். காலண்டர் போல சுருட்டல்களாக பதினைந்து இருபது ஓவியங்கள். சில புத்தகங்கள். சில ஓவியங்களின் ஓரங்களில் செல்லரிக்கத் துவங்கியிருந்தன.

    உருப்படியாய் இருந்தவற்றைத் தனியாகத் திரட்டினான். யார் யாரோ வரைந்த பழங்காலத்து ஓவியங்கள்! ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்தான். சிலவற்றில் பின்புறம் ‘சிற்றரசுக்கு அன்புடன்’ என்று ஆங்கிலத்தில் கையெழுத்துக்கள் இருந்தன.

    கலையைத் துரத்தின அப்பாவே, கொஞ்சம் காசையும் துரத்தியிருக்கலாம். சம்பாதிக்கும் விஷயத்தில் ஏமாந்த ஆசாமியாக இருந்துவிட்டீர்களே...

    இதையெல்லாம் விக்கத்தான் போறியா இளங்கோ?

    கண்ணீர் ஏந்திய அம்மாவின் விழிகளைத் தயக்கமாகப் பார்த்தான்.

    என்னைப் பொறுத்தவரை இவை குப்பை. உயிரற்றவை. அம்மாவைப் பொறுத்தவரை தன் கணவர் ஆசையாய் விரும்பிச் சேகரித்தவை என்கிற ஒரே காரணத்தால் இவை மரியாதைக்குரியவை. உயிரோட்டமுள்ளவை.

    எனக்கு வேற வழியில்லைம்மா.

    மறுநாள் பங்களாக்கள் உள்ள ஏரியாக்களுக்குச் சென்றான். வாட்ச்மேனே பேசித் துரத்தினான். இவன் அபயக் குரலைக் கேட்க எவருக்கும் நேரமில்லை.

    சார், சார் இதெல்லாம் ரொம்ப பழைய ஓவியங்கள் சார். பிரேம் செஞ்சி மாட்டினா ஹாலே கெட்டப்பா இருக்கும். இப்போ இந்த மாதிரி கிடைக்கவே கிடைக்காது சார். இது மாதிரி இப்போ யாரையாச்சும் வரையச்சொல்லுங்க பார்க்கலாம்.

    Enjoying the preview?
    Page 1 of 1