Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kathi Kappal
Kathi Kappal
Kathi Kappal
Ebook252 pages1 hour

Kathi Kappal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என் இனிய வாசகர்களே! வணக்கம்,
பட்டுக்கோட்டை பிரபாகருக்கு நாளும் வாசகர்கள் பெருகி வருகிறார்கள். அவரும் வாசகர்களின் ரசனைக் கேற்ப விதவிதமாய் எழுதுகிறார். இதற்கு அடிப்படை காரணம் ஒன்று உண்டு, அந்த உண்மையை அவரே விளக்குகிறார்.
“ஒரு சமயம் நான் நண்பர்களுடன் திருநெல்வேலியிலிருக்கும் நெல்லையப்பர் கோயிலை சுற்றிப் பார்க்கச் சென்றேன் அந்த கோயிலை சுற்றி காண்பிப்பதற்கென அங்கே ஒரு ‘கெய்டு’ இருந்தான். அவனது உடையும், உடலும் அவன் ஒரு சரியான ஏழை என்பதற்கு சாட்சி சொல்லின. எங்களுக்கு அவன் ஓவ்வொரு இடமாக சுற்றி காண்பித்துக் கொண்டு வரும் பொழுது... எங்கிருந்தோ ஒரு சின்னச்சிறுமி ஓடி வந்தாள். வந்து “அப்பா.... அப்பா பத்து காசு கொடு ஐஸ் வாங்கணும். அம்மா பணம் கேட்டு சொல்லி அனுப்பிச்சாங்க.” என்றாள் பரபரப்பாக உடனே அவன்...
“சரிசரி! நீ போ இதோ வர்றேன்” என்று அவளை விரட்டி விட்டு தொடர்ந்து எங்களுக்கு உதவி செய்தான். ‘சே பத்து பைசா கூட இல்லாம இருக்கிறானே பாவம்’, என்று பரிதாபப்பட்டேன். சிறிது நேரத்திற்குள் மீண்டும் மீண்டும் அந்தச் சிறுமி ஓடி வந்து அம்மா பணம் கேட்பதாகச் சொன்னாள். அவனும் மறுபடி மறுபடி கத்தினான்.
கடைசியில் எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்த பிறகு, நாங்கள் விடைபெறும் சமயத்தில் அவனிடம் இரண்டு ரூபாயை எடுத்து நீட்டினேன். அவன் பணத்தை வாங்கும் சமயம் பார்த்து ஓடோடி வந்த அந்த சிறுமி... “அப்பா அப்பா... அம்மா பணம் கேட்டாங்க” என்றதும் அவளை எரித்து விடுவதைப் போல முறைத்து விட்டு “இதோ, வர்றேன்னு போய் சொல்லு” என்று அலட்சியமாக சொல்லியவன், அந்த சிறுமி வேதனையுடன் நடந்து போகும் திசைக்கு நேர் எதிராக நடந்து அருகில் இருந்த ஒரு லாட்டரி சீட்டுக்கடையில் இரண்டு ரூபாயையும் கொடுத்து இரண்டு சீட்டுகளை வாங்கி பைக்குள் திணித்துக் கொண்டிருந்தான். அந்த காட்சியை பார்த்த நிமிஷத்தில் மனசில் எனக்கு ‘பகீர்’ என்று தீ பரவியது. அந்த நிகழ்ச்சியை வைத்து தான் உடனே ‘இந்தியனாய் இரு. இந்தியாவை வாங்கு’ என்ற கதையை எழுதினேன். பெரும்பாலும் எனக்கு உண்மை சம்பவங்களை வைத்து கதை எழுதுவது தான் பிடிக்கும்.” என்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர். அவர் எழுத்தின் உண்மை ரகசியம் புரிகிறதல்லவா உங்களுக்கு.
Languageதமிழ்
Release dateJun 19, 2020
ISBN6580100905460
Kathi Kappal

Read more from Pattukottai Prabakar

Related to Kathi Kappal

Related ebooks

Related categories

Reviews for Kathi Kappal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kathi Kappal - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    கத்திக் கப்பல்

    Kathi Kappal

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    முன்னுரை

    என் இனிய வாசகர்களே! வணக்கம்,

    பட்டுக்கோட்டை பிரபாகருக்கு நாளும் வாசகர்கள் பெருகி வருகிறார்கள். அவரும் வாசகர்களின் ரசனைக் கேற்ப விதவிதமாய் எழுதுகிறார். இதற்கு அடிப்படை காரணம் ஒன்று உண்டு, அந்த உண்மையை அவரே விளக்குகிறார்.

    ஒரு சமயம் நான் நண்பர்களுடன் திருநெல்வேலியிலிருக்கும் நெல்லையப்பர் கோயிலை சுற்றிப் பார்க்கச் சென்றேன் அந்த கோயிலை சுற்றி காண்பிப்பதற்கென அங்கே ஒரு ‘கெய்டு’ இருந்தான். அவனது உடையும், உடலும் அவன் ஒரு சரியான ஏழை என்பதற்கு சாட்சி சொல்லின. எங்களுக்கு அவன் ஓவ்வொரு இடமாக சுற்றி காண்பித்துக் கொண்டு வரும் பொழுது... எங்கிருந்தோ ஒரு சின்னச்சிறுமி ஓடி வந்தாள். வந்து அப்பா.... அப்பா பத்து காசு கொடு ஐஸ் வாங்கணும். அம்மா பணம் கேட்டு சொல்லி அனுப்பிச்சாங்க." என்றாள் பரபரப்பாக உடனே அவன்...

    சரிசரி! நீ போ இதோ வர்றேன் என்று அவளை விரட்டி விட்டு தொடர்ந்து எங்களுக்கு உதவி செய்தான். ‘சே பத்து பைசா கூட இல்லாம இருக்கிறானே பாவம்’, என்று பரிதாபப்பட்டேன். சிறிது நேரத்திற்குள் மீண்டும் மீண்டும் அந்தச் சிறுமி ஓடி வந்து அம்மா பணம் கேட்பதாகச் சொன்னாள். அவனும் மறுபடி மறுபடி கத்தினான்.

    கடைசியில் எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்த பிறகு, நாங்கள் விடைபெறும் சமயத்தில் அவனிடம் இரண்டு ரூபாயை எடுத்து நீட்டினேன். அவன் பணத்தை வாங்கும் சமயம் பார்த்து ஓடோடி வந்த அந்த சிறுமி... அப்பா அப்பா... அம்மா பணம் கேட்டாங்க என்றதும் அவளை எரித்து விடுவதைப் போல முறைத்து விட்டு இதோ, வர்றேன்னு போய் சொல்லு என்று அலட்சியமாக சொல்லியவன், அந்த சிறுமி வேதனையுடன் நடந்து போகும் திசைக்கு நேர் எதிராக நடந்து அருகில் இருந்த ஒரு லாட்டரி சீட்டுக்கடையில் இரண்டு ரூபாயையும் கொடுத்து இரண்டு சீட்டுகளை வாங்கி பைக்குள் திணித்துக் கொண்டிருந்தான். அந்த காட்சியை பார்த்த நிமிஷத்தில் மனசில் எனக்கு ‘பகீர்’ என்று தீ பரவியது. அந்த நிகழ்ச்சியை வைத்து தான் உடனே ‘இந்தியனாய் இரு. இந்தியாவை வாங்கு’ என்ற கதையை எழுதினேன். பெரும்பாலும் எனக்கு உண்மை சம்பவங்களை வைத்து கதை எழுதுவது தான் பிடிக்கும்." என்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர். அவர் எழுத்தின் உண்மை ரகசியம் புரிகிறதல்லவா உங்களுக்கு.

    உங்கள் அன்பன்

    புத்தகப் பித்தன்

    ***

    1

    திருச்சி நகரத்தின் இதயப் பகுதியான மலைக் கோட்டையின் அடிவாரத்தில், பரபரப்பான வியாபாரத் தெருக்களில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த அந்த தெருவில், வீடுகள் ஒன்றையொன்று நெருக்கியடித்துக் கொண்டு இருந்தன. இரண்டு ஆட்டோக்கள் அருகருகில் செல்ல சிரமப்படும் சாலையின் இரண்டு விளிம்புகளிலும் சர்வ நேரமும் சளசளவென்று சாக்கடை நீர் ஓடிக் கொண்டிருக்க...

    வாசலில் நீல நிறம் அடித்த சின்ன மரக் கதவைக் கொண்ட அந்த சிறிய வீட்டின் உச்சந்தலையில் பரவி யிருந்த ஓடுகளின் இடைவெளி வழியாக சன்னமாகப் புகை கசிந்து கொண்டிருந்தது.

    அந்த மரக் கதவிற்கும் உள் வாசலுக்கும் நடுவில் பதினைந்தடிக்கு ஒல்லியான சிமெண்டு பாதை. அதன் இரண்டு பக்கங்களிலும் பூச்செடிகளும், காய்கறிச் செடிகளும் மண்டியிருக்க, நந்தியாவட்டை மரத்தில் கட்டிப் போடப்பட்டிருந்த கறுப்பு நாய் நிழலில் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தது.

    சற்றுத் தள்ளி நின்றிருந்தது பெண்களுக்கென்று பிரத்யேகமாக உள்ள, குறுக்குக் கம்பி இல்லாத சைக்கிள். முன் கதவைத் திறந்துகொண்டு நடைக்கு வந்து, அந்த சைக்கிளின் மணியை தயிர் கூடைக்காரி அடித்தபோது...

    வாசலின் இரட்டைக் கதவுகளில் ஒன்றைத் திறந்தாள் பாமா. ஈரமான கூந்தலின் நுனியில் முடித்திருந்தாள். மொட மொடப்பான பருத்தி சேலை கட்டியிருந்தாள்.

    பாத்திரத்தில் தயிர் வாங்கிக்கொண்டு, கதவைச் சாத்திவிட்டு வீட்டுக்குள் வந்தாள். சதுரமான முன் கூடத்தில், சுவரில் மாட்டியிருந்த கண்ணாடிக்கு முன் நின்று, பற்களால் சீப்பைக் கடித்துக்கொண்டு கூந்தலைப் பின்னிக் கொண்டிருந்த ராணியிடம் வந்தாள்.

    ராணி, இன்றைக்கு சமையல் செய்ய வேண்டியது உன் முறைதானே?

    ஏய்... ஏய்... பிளீஸ்டி! நான் தான் சொன்னேனே. இன்றைக்கு மட்டும் அலுவலகத்துக்கு சீக்கிரம் போக வேண்டியிருக்கு. நீ சமைச்சிடேன்.

    நம்மால முடியாதுப்பா. இன்றைக்கு நான் பத்து டாக்டர்களைப் பார்த்தாகணும். சீக்கிரமே புறப் படணும்.

    சும்மா அலட்டிக்காதே பாமா. உன்னோட மருந்து கம்பெனியும் பெரிய கம்பெனி. நீயும் கொத்தித்தின்னுடலாம் போல இருக்கே! எந்த டாக்டராவது உன்னை காக்க வச்சிருக்காரா, சொல்லு? எங்க மருந்தை ஆதரிங்கன்னு ஒரே வரி சொல்லிவிட்டு, நீ ஒரு சிரிப்பு சிரிச்சுட்டால் போதும் என்னைச் சொல்லு... நாள் முழுக்க, விரல் தேய டைப் அடிக்க வேண்டியிருக்கு.

    சும்மா தொணதொணன்னு பேசாதே! என்னால் சமைக்க முடியாதுன்னா முடியாது. எங்கே கவிதா? அவளை சமைக்கச் சொல்லு.

    வீட்டின் பின்புறம் குளியலறையில் இருந்து துண்டு மட்டும் கட்டிக்கொண்டு வெளிப்பட்டு கூடத்திற்கு வந்த கவிதா, கண்ணாடி அணிந்திருந்தாள்.

    ஹேர்ப்பின் செருகிக் கொண்ட ராணி, கவிதா, இன்றைக்கு நான் சீக்கிரம் போகணும். நீ சமைச்சிடறியா? பிளீஸ்...

    இவ்வளவுதானா? செஞ்சிட்டால் போச்சு. இன்றைக்கு மத்தியானத்துக்கு மேல நான் காலேஜ் போனால் - போதும். காலைல எனக்கு வகுப்பு இல்லை. கொஞ்சம் பரிட்சை பேப்பர்கள் திருத்த வேண்டியிருக்கு நீ போ. நான் சமைச்சிடறேன்.

    அருகில் இருந்த அறைக்குள் நுழைய இருந்த கவிதாவை நிறுத்தி, அவள் கன்னத்தில் கிள்ளி, நன்றி தலைவியே என்ற ராணி, மின் விசிறிக்கு அடியில் கூந்தலை உலர்த்திக் கொண்டிருந்த பாமாவிடம், ராட்சசி! என்றாள்.

    என்ன சொன்னே? என்று பாமா சிக்கெடுக்கும் சீப்பை அவள் மேல் எரிய, ராணி நகர்ந்து கொண்டு செருப்பணிந்து கொண்டாள். ஆணியில் தொங்கின கைப்பையை எடுத்துக்கொண்டு இன்னொரு அறைக்குள் சென்றாள்.

    பாமா, இந்த புத்தகம் எடுத்துக்கறேன். உனது மேசையில் இருந்து என்றாள்.

    ஏய்... ஏய்... வச்சிடு. இன்றைக்கு அதை திருப்பிக் கொடுத்தாகணும். வாடகை புத்தகம். ஆமாம். நீ வேலை செய்யப் போறியா, கதை படிக்கப் போறியா?

    ராணி வெளியே குடையுடன் வந்து, சரி வச்சிட்டேனம்மா, என்ன கேட்டே? வேலையா? கதை போரடிக்கிறப்பல்லாம் வேலை செய்வேன் பாமா.

    உனக்கு சம்பளம் கொடுக்கறாங்களே, அவங்களைச் சொல்லணும்.

    மத்தியானம் வந்து பேசிக்கிறேன் உன்னை. இப்போ நேரமில்லை என்று ராணி வீட்டை விட்டு வெளியேற...

    ஏய்... ராணி! பிரா பட்டை வெளியே தெரியுது என்று கத்தினாள் பாமா.

    அவசரமாக தோள் பட்டையில் சரி செய்துகொண்ட ராணி திரும்பி புன்னகைத்து விட்டு, கையசைத்துவிட்டு, மரக் கதவைத் திறந்துகொண்டு சாலையில் இறங்கினாள்.

    சேலையின் கொசுவத்தை வயிற்றுக்குள் செருகிக் கொண்டே அறையை விட்டு வெளிப்பட்ட கவிதா, நான் பின்னி விடட்டுமா பாமா? என்று வந்து, எண்ணெய் தேய்க்கலையா இன்னும்? என்றாள்.

    எண்ணெய் வேணாம். அப்படியே லூசா ரெட்டைப் பின்னலா போட்டுடு என்று கவிதா பக்கம் தலையைக் காட்டிக்கொண்டு நின்றாள் பாமா.

    உங்கப்பா இன்றைக்கு தானே ஊர்லேர்ந்து வர்றதா சொன்னே?

    இன்றைக்கு இல்லை. நாளைக்கு. எதுக்கு வர்றார்னு தெரியாதா, உனக்கு? வேலைக்குப் போறதை விட்டுடும் பார். எப்ப கல்யாணம் பண்ணிக்கிறேம்பார்.

    பண்ணிக்கோயேன்.

    போடி! இப்ப இருக்கிற சுதந்திரம் கல்யாணத் துக்கப்புறம் கிடைக்குமா? நீயே சொல்லு. படிச்ச படிப்புக்கு கிராமத்திலே உக்காந்து நெல் மூட்டை எண்ணிக்கிட்டு, பால் கணக்கு எழுதிக்கிட்டு இருக்க முடியுமா? மனசுக்குப் பிடிச்ச வேலை. என் விருப்பம்போல வெளியில் போறேன். வர்றேன். இந்த நிம்மதி கல்யாணத்தினால் கிடைச்சுடும்னு எனக்கு நம்பிக்கை இல்லை, கவிதா.

    அதுக்காக கல்யாணமே பண்ணிக்காம இருக்கப் போறியா?

    அப்படிச் சொன்னேனா நான்? இந்த சுதந்திர வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் அனுபவிக்கிறேனே... இது லேசா அலுப்பு தட்டறப்போ, கல்யாணத்தை சிந்திக்கிறேனே...

    வித்தியாசமானப் பொண்ணுடி நீ. ஊர்ல என்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கு. நான் வேலை செய்தால்தான், அங்கே அடுப்பும் புகையும். வேற வழியில்லாமல் நான் வேலைக்குப் போறேன். ‘உன் குடும்பப் பாரத்தை நான் சுமக்கறேன், என்னை கட்டிக்கிறியா?’னு எவனாச்சும் கேட்டால், உடனே சரின்னுடுவேன். நீ என்னடான்னா ஊர்ல வயல், தென்னந்தோப்பு, வீடுன்னு சொத்து வச்சிக்கிட்டு, சுதந்திரமா இருக்கணும்னு வேலைக்குப் போறே. இதான் சமுதாய முரண்பாடு என்கிறது.

    உடனே வாத்தியார் புத்தி வந்து ஒரு கட்டுரையே படிச்சிடுவியே... போதும், விடு. நுனி வரைக்கும் பின்னாதே. அப்போ நீ சமைச்சிடறே.

    பாமா தன்னுடைய அறைக்குள் சென்று லேசாக உதட்டில் சாயம் பூசிக்கொண்டாள். கண்ணின் இமைகளின் முடிகளுக்கும் மை - போட்டுக் கொண்டாள். மருந்துகளின் மாதிரிகளும், விபர அட்டைகளும் அடங்கிய தோளில் மாட்டும் பையை எடுத்துக்கொண்டு, திருப்பி தரவேண்டிய அந்த கதைப் புத்தகத்தையும் நினைவாக எடுத்துக்கொண்டாள். கைக்கெடிகாரம் எடுத்து கட்டிக் கொண்டாள்.

    கவிதா, நான் வர்றேன்.

    பாமா சைக்கிளின் பூட்டைத் திறக்க கட்டிப் போட்டிருந்த நாய் அந்த சத்தத்தில் சிலிர்ப்புடன் எழுந்துகொண்டது.

    கவிதா, பழைய சாதத்தை ராஜாவுக்குப் போட்டுடு என்று உள்புறம் கத்திவிட்டு ராஜாவின் முகத்தை ஒருமுறை தடவிவிட்டு, சைக்கிளை சாலையில் இறக்கினாள். குளிர் கண்ணாடியை அணிந்துகொண்டு, சீராக ஓட்டத் தொடங்கினாள்.

    தில்லை நகர் வந்து அந்த மருந்துக் கடையின் முன் நிறுத்தி, இறங்கினாள்.

    வாங்கம்மா.

    என்ன சார், டாக்டர் பாலசுந்தரம் எங்க கம்பெனி மருந்து எழுதறாரா?

    ஒரே ஒரு சீட்டு தான் வந்திச்சி. அப்புறம் எழுதலைம்மா.

    ஏற்கனவே ஆதரிச்சிக்கிட்டிருக்கிற ஒரு கம்பெனியை மாத்தி நம்ம கம்பெனி மருந்தை எழுத வைக்கிறது பெரிய வேலை. நான் தினம் பார்த்து சொல்லிக்கிட்டு தான் இருக்கேன். சரி, நான் போய் சொல்லிட்டுப் போறேன். நம்ம கம்பெனி மருந்தெல்லாம் இருப்பு இருக்குதில்லே?

    நிறைய இருக்கும்மா.

    பாமா அங்கிருந்து புறப்பட்டு அடுத்த குறுக்கு சந்தில் டாக்டர் பாலசுந்தரம் ஆஸ்பத்திரிக்கு வந்தாள். டாக்டரைப் பார்க்க நிறைய கூட்டம் இருந்தது. வெளியே இருந்த உதவியாளரிடம் விலாச அட்டை கொடுத் தனுப்பி, காத்திருந்து பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு அழைக்கப்பட்டதும், டாக்டரைச் சந்தித்தாள்.

    காலை வணக்கம் டாக்டர். எங்க கம்பெனியை மறந்துட்டீங்க டாக்டர்.

    மறக்கலைம்மா. உட்காருங்க.

    வயிற்றுப் புண்ணுக்கு புதுசா ஒரு மருந்து எங்க கம்பெனில அறிமுகப் படுத்தியிருக்கோம். இதோ பாருங்க.

    பாமா சரளமான ஆங்கிலத்தில் அந்த மருந்தின் சிறப்புகளைப் பற்றிச் சொல்லி, மருந்தின் இலவச மாதிரிகள் நான்கைக் கொடுத்து, அன்பளிப்பாக கம்பெனி பெயர் பொறித்த பேனாவையும், கொடுத்து விட்டு...

    உங்களை மாதிரி முன்னணி டாக்டர்கள் ஆதரிச்சா தான் நாங்க வளர முடியும். மனசு வைங்க. அடுத்த வாரம் மறுபடி வந்து பார்க்கறேன் என்று புன்னகைத்து, கைகூப்பி எழுந்துகொண்டாள்.

    ஆறு டாக்டர்களைப் பார்த்து முடித்த பின்னர், கைக்கெடிகாரம் பார்த்து, உணவு நேரமாகி விட்டதை உணர்ந்து, வீட்டை நோக்கி சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தாள்.

    சிங்காரத் தோப்பின் அடைசலான வாகனப் போக்குவரத்தில் வழி சரியாவதற்காகக் காலை ஊன்றியபோது, அருகில்‘முருகன் வாடகை நூல் நிலையம்’ என்ற போர்டைப் பார்த்ததும், திருப்பித் தரவேண்டிய புத்தகம் நினைவு வந்து, வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே வந்தாள்.

    சின்ன அறையின் மூன்று சுவர்களிலும் வரிசை வரிசையாய் புத்தகங்களைச் சுமந்த மர ராக்குகள். நான்கைந்து பேர் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருக்க... சிறிய மேசை போட்டு அமர்ந்திருந்த கடையின் நிர்வாக இளைஞன் கண்ணன் இவளைப் பார்த்ததும். பலமுறை பார்த்த அறிமுகத்தில் புன்னகைத்து, வாங்க மேடம் என்றான்.

    பாமாவும் சிரித்து விட்டு, போங்க சார். இந்த கதை நல்லா இருக்கும்னு சொல்லிக் கொடுத்தீங்க. படிக்கவே முடியலை. அவ்வளவு போர் என்று பைக்குள் இருந்து எடுத்து அவன் மேசையில் வைத்தாள்.

    ரசனைகள் மாறாதா மேடம்? எனக்குப் பிடிச்சது இது. உங்களுக்கும் பிடிக்கும்னு நினைச்சிக் கொடுத்தேன், இதே ஆசிரியர் எழுதின‘மாறுவது மனம்’படிச்சிருக்கீங்களா?

    இல்லை சார்.

    இன்றைக்குத்தான் வந்தது. நீங்க வந்தா தரணும்னு ராக்கையிலே கூட வைக்காமல் தனியா எடுத்து வச்சிருக்கேன். இது நிச்சயம் பிடிக்கும் உங்களுக்கு. படிச்சிட்டு சொல்லுங்க.

    பார்ப்போமே. இதுவும் போரா இருந்தா... அப்புறம் நீங்க தர்ற எதையும் நம்பி வாங்க மாட்டேன். நானாகத்தான் எடுத்துக்குவேன். வர்றேன்.

    பாமா கடையை விட்டு வெளியேறி பைக்குள் அந்த புத்தகத்தை வைக்க முயன்ற போது... அதற்குள்ளிருந்து ஒரு துண்டுக் காகிதம் நழுவி கீழே விழுந்தது.

    குனிந்து அதைக் கையில் எடுத்துப் பார்த்த பாமா திடுக்கிட்டாள். அதில்...

    ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று எழுதி இருந்தது.

    பாமாவின் முகம் உடன் கோபத்தில் சிவந்து, ஆத்திரம் அதிகமாகி, வேகமாக உள்ளே நுழைந்து... கண்ணனை அடைந்து -

    ராஸ்கல்! என்னடா நினைச்சிக்கிட்டிருக்கே? பொறுக்கி! என்று அவன் சட்டையை

    Enjoying the preview?
    Page 1 of 1