Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Solladi Sivasakthi
Solladi Sivasakthi
Solladi Sivasakthi
Ebook409 pages6 hours

Solladi Sivasakthi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண்களின் பல்வேறு நிலையினைப் பல்வேறு நாவல்களில் படம்பிடித்து காட்டியுள்ளார். பிரதானமாய் சேலம் மாவட்ட கிராமங்களில் நடைபெறும் "பெண் சிசு கொலையினைப்" பின்னணியாய் கொண்டு பல்வேறு நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் புனைந்துள்ளார்.

இவர் கணவர் மின்வாாரியத்தில் பொறியாளராகப் பணிபுரிந்த காரணத்தால் இவருக்கு அந்த அனுபவங்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது, மனம் நெருட காலவோட்டத்தில் அதை நாவலாக்கினார்.

இவரது பல நாவல்கள் கல்லூரிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பல மாணவ மாணவிகள் இவரின் நாவல்களை "எம்ஃபில்" படிப்பில் ஆய்வு செய்கின்றனர்.

Languageதமிழ்
Release dateFeb 9, 2017
ISBN6580114201831
Solladi Sivasakthi

Read more from Hamsa Dhanagopal

Related to Solladi Sivasakthi

Related ebooks

Reviews for Solladi Sivasakthi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Solladi Sivasakthi - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    சொல்லடி சிவசக்தி

    Solladi Sivasakthi

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For other books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    சொல்லடி சிவசக்தி

    1

    மனிதனும் அவனுடைய செயல்களும் வெவ் வேறானவை. நற்செயலைப் பாராட்ட வேண்டும். தீய செயலைக் கண்டிக்க வேண்டும். செயலைச் செய்யும் மனிதர் நல்லவராயினும் தீயவராயினும் செயலின் தன்மைக்கு ஏற்றவாறு மரியாதைக்கும் பரிதாபத்திற்கும் உரியவராகிறார்.

    - மகாத்மா காந்தி

    *

    சாலையெங்கும் ஒளி வெள்ளம். இந்த ஒளிக்கெல்லாம் பிடிபடாமல் மூலை முடுக்குகளில் இருள் உருகி ஒட்டிக்கொண்டிருக்கிறது.

    ஒட்டம் ஓட வேண்டும் என்று கால்கள் துடிக்கின்றன. இந்த ஒளிச் சிதறல்களைப் பாதையெங்கும் வீசியெறியும் பெரிய கண்ணாடி, ஷோ ரூம்பகளைக் கடந்து ஓட முடியுமா?

    இருப்பினும் மூச்சு வேகமாக, மார்பு துடிக்க, ஓட்டமும் நடையுமாக நடக்கின்றேன். இதயம் தடக் தடக்கென ரகசியம் பேசுகிறது.

    சில்லென்ற ஐப்பசி குளிரிலும் முகத்தில் முத்து முத்தாக வியர்வை, துடைக்க நேரமின்றி வேக நடை போடுகிறேன். திரும்பினால்…. பின்புறம் அந்த முகம் நசுங்கிய பெரிய கார் என்னைத் துரத்தி வருகிறது.

    பெரிய ராட்சசனைப் போல என் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்க ஆசைப்படும் பேயைப் போல… ஒ சென்னை மாநகரமே. இந்த பெண்னை இந்த பேதையைக் காப்பாற்ற உனக்கு மனமில்லையா. அரை மணியாக இந்தக் கண்ணாமூச்சி ஒட்டம்.

    இந்த மனித இயந்திரத்திற்கும் அந்த இரும்பு இதயத்திற்கும். அதன் இரும்பு இதயத்தில் பெரிய கருப்பு கண்ணாடியைப் போட்டுக்கொண்டு நவ நாகரிக கோலத்தில் சிகரெட் புகைய அலட்சியமாக கார் ஸ்டியரிங்கை ஒடித்து ஒரே சீரான ஓட்டத்தில் என்னுடன் இந்த பெரிய நட்ட நடுரோட்டில் ஒடிப் பிடித்து விளையாட நினைக்கும் அந்த இளைஞன்... இளைஞனா… அப்படித்தான் இருக்க வேண்டும்.

    என் இதயம் எங்கோ நழுவுவது போலிருக்கிறது. ஏய்… இளைஞனே… நில் என்னை ஏன் தொடர்கிறாய்.

    இடறி விழப் பார்க்கிறேன். மின்சார ரயில்கள் பெரிதாக ஒளி எழுப்பிக் கொண்டு ஒட எக்மோர் ஸ்டேஷன் பக்கமாக குடிசைகள். அதன் வாயிலில் பற்பல உடல்கள். நான் மிதித்தது கிழவியோ குமரனோ... யாரை மிதித்தேன்.

    அவர்கள் எழுந்து செல்வதற்குள் நான் ஒடுகிறேன். பார்ப்பவர்கள் சந்தேகிக்காதவாறு நடை ஓட்டமாக… இன்னும் அந்த பூதம்…

    மூச்சு இரைக்கிறது. சீ… இவன் எதற்காக என்னைப் பின் தொடர்கிறான். இருள் மெல்ல மெல்ல தலை நீட்டுகிறது. அதன் ஆட்சியில் ஒளி தோற்றுக்கொண்டு வருகிறது. மணி பத்தா பதினொன்றா... தெருப் பிச்சைக்காரர்களைக் கூடக் காணோம்.

    எனக்கு ஆதரவு கொடுத்த கடைகள் ஒவ்வொன்றாக துயில் கொள்ள ஆரம்பித்து விட்டன. எந்த இடம் எங்கே போகிறேன். எனக்கு வேண்டியவர்கள் யார்? எனக்கு வேண்டாதவர்கள் யார்?

    ஐயோ… அது… அந்த இராட்சசன் இன்னும் என்னை…

    ஒடுகிறேன்.

    என்னை விசித்திரமாக பார்த்துக் கொண்டே பெரிதாக ஹாரன் அடித்து விட்டுப் போகிறான்.அந்த லாரி டிரைவர்.

    ஒடுகிறேன்.

    இன்னும் அந்த கருப்புக் கண்ணாடி… என் வேகத்திற்கு ஏற்றபடி காரை அந்த முகம் நசுங்கிய காரை…

    ஒடுகிறேன்.

    நடைப்பாதை முடிகிறது. சாலையைக் குறுக்காக கடக்கையில் ஆட்டோ கிறீச்சிட்டு எனக்காக பிரேக் போட்டு... இந்தாமே, நீ சாவதற்கு என் வண்டியா. கெடச்சீது. இன்னும் ஏதோ என் காதுகள் கூசும்படியாக திட்டிப் போகிறான்.

    ஐயோ அந்த கார் எனக்குச் சமீபமாக. எங்கே மயங்கி விடுவேனோ. என்னைக் காரில் ஏற்றி…

    ஒடுகிறேன்.

    நாக்கு வரண்டு... தொண்டை அடைக்கிறது. குப்பென்று அடைத்து… ஏதோ பாலம். வேகமாக மூச்சைப் பிடித்து ஒடுகிறேன். என்னோடு அதுவும். அந்த முகம் நசுங்கிய காரும்.

    ஏதோ குதிரைப் பந்தயத்தில் குதிரைகளோடு ஒடும் தற்காப்பு ஆம்புலன்ஸ் போல…

    ஓடுகிறேன்.

    இந்த சாலையின் பெயர். சென்னையில் இது எந்த மூலை ஒன்றும் தெரியவில்லை.

    திக்கு தெரியாத காட்டில் சிக்கிய சேயாக தடுமாறுகிறேன்.

    யாராவது என்னை காக்க அமானுஷ்யமாக வர மாட்டார்களா. யாராவது யட்சினியாக ஆகாய மார்க்கமாகவா. அல்லது இந்த தரை மார்க்கமாகவா...

    ஒடுகிறேன்.

    மேகலா. வாம்மா, ஏணிப்படி ஒடுகிறாய். வாம்மா மேகலா இது யார் அங்கையற் கண்ணி அம்மையாரா அழைக்கிறார். அம்மா… அம்மா… என்னால் ஒட முடியவில்லை. எங்கே உங்கள் மடி நான் முகம் புதைத்து அழ வேண்டும்.

    இல்லை. இல்லை… என் மனப் பிரமை இது.

    ஒடுகிறேன்.

    வியர்வை ஆறாக பெருகுகிறது. அந்தக் காரிலிருந்து எரி நட்சத்திரமாக அந்த சிகரெட் எகிறி என்னைத் தொட்டு உரசிச் செல்கிறது. கார் பக்கவாட்டில் அசைநது மீண்டும் நி தானித்து என்னுடன் ஓடி வருகையில் அவன் கையில் புதிதாய் ஜனித்த சிகரெட்.

    ஒடுகிறேன்.

    டேய் என்னை அப்படிப் பார்க்காதே. பார்வையாலேயே கற்பழிக்க முயலாதே. அபலை என்றால் அனைத்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தமா.

    கார் என்னருகில் கீறிச்சிட்டு நிற்கிறது. சாலையில் நடமாட்டமில்லை. வாகனங்கள் என் துணையாய் ஓடவில்லை.

    பேபி கமான். கெட் இன் அவன் சிகரெட் புகையும் கையோடு என் வலக்கையை – பிளாஸ்டிக் பை பிடித்த கையை – பிடித்த காருக்குள் இழுக்கிறான். சிகரெட் என் புறங்கையைச் சுட்டு விடுகிறது.

    கையை பலங் கொண்ட மட்டும் இழுக்கிறேன். அவன் பிடி இறுக நான் திமிர… ஒரு மோட்டார் சைக்கிள் ஓடி வருகிறது. மோட்டார் சைக்கிள் என்னைச் சட்டை செய்யவில்லை.

    மீண்டும் ஒட்டம்.

    அந்த இராட்சசன் திரும்பவும்… ஒடுகிறேன்.

    இனிமேல் அதிக தூரம் என்னால் ஓட முடியாது. உடல் கீழே சாய்ந்து விடும் போலத் தெரிகிறது. மாட்டிக் கொண்டு விடுவேன்.

    ஒடுகிறேன்.

    நன்றாகத் தெரிகிறது. என்னைக் கடத்திப் போக பார்க்கிறான். கடத்திப் போய். கடத்திப் போய்... பயம் என் காலில் சலங்கை கட்டிக் கொள்கிறது.

    ஒடுகிறேன்.

    பெரிய பெரிய பங்களாக்கள் மூடப்பட்ட இரும்பு கேட் அவர்கள் இதயமா. கதவா அது. இவர்களா பகலில் சீமான்கள். சீமாட்டிகள்.

    ஒடுகிறேன்.

    இங்கே இப்படி உடலையும் அதைவிட பெரிதாக அழகையும் பெண்மையையும் சுமந்து ஓடுகிறேனே என்னைக் காப்பாற்ற யாருமில்லையா?

    ஏய் மேகலா, ஏண்டி இப்படி ஒடற. நில். இதோ நானும் வரேன். நீரஜா கத்துகிறாள்.

    என் பிரமை. திரும்ப ஓட்டம்.

    சுற்றும் முற்றும் பார்த்தால் அந்த நீரஜா இல்லை. என் மனதில் அவள் சிம்மாசனமிட்டு என்னை இப்படி அழைத்தாளா?

    சாலை எனக்கு முன்பாக பெரிய நீண்ட கருஞ்சேலையை விரித்தாற் போல ஒடிக் கொண்டிருக்கிறது. அந்த இராட்சசனிடமிருந்து என்னால் தப்ப முடியுமா? நம்பிக்கை ஒடிந்து விட்டது.

    ஒடுகிறேன்.

    கார் மெல்ல அசைந்து வருகிறது. ஐயோ. எதற்காகவோ சில கணங்கள் நின்றிருந்த கார்காரன் மீண்டும் வரப் போகிறான். இந்த அமைதியைப் பயன்படுத்தி அலாக்காகத் தூக்கி காரின் பின் சீட்டிலோ முன் சீட்டிலோ போட்டு அடைத்து. என் இதயம் நின்று விட்டதா? ஒடுகிறதா?

    ஒடுகிறேன்.

    கார் வேகத்துடன் ஓடி வருகிறது. அது அருகே ஓடி வருவதற்குள் ஏதாவது செய்ய வேண்டும். அருகே மேலே பங்களா. எனக்காகவா இப்படி கேட் விரிய திறந்திருக்கிறது.

    நொடியில் இருளில் புகுந்து பாரிஜாத செடிப் புதரில் மறைந்து ஒண்டிக் கொள்கிறேன். பக்கத்தில் தவளை கிர்கிர் ர்ர்க்... என ரகசியம் பேசுகிறது. இதன் சத்தத்தில் ஏதாவது பாம்பு…

    ஏதாவது புதர் நெடியா… தும்மல் வருவதைப் போல் மூக்கு விடைக்கிறது.

    அந்த முகம் நசுங்கிய கார் வருகிறது. ஒற்றைக் கண் இராட்சசனைப் போல ஒரு விளக்கெரிய விரைந்து வந்து இங்கே முகாமிடுகிறது. இதயம் தொண்டை வழியே வந்து விடுமோ. அடைத்துக் கொள்கிறது தொண்டை.

    மூக்கில் நமைச்சல், எந்த நேரத்திலும் தும்மல் வரலாம். என் தும்மலே என்னைக் காட்டிக் கொடுத்து...

    இந்த சென்னையைப் பற்றி சீதா என்னென்று கதை சொல்லியிருக்கிறாள். இவனிடம் மாட்டிக் கொண்டு ஏதாவது லாட்ஜில்… அரையிருட்டில்… விசில் சத்தத்தில் பூட்ஸ் ஒலிகளுக்கும் பயந்து, கை விலங்கிற்கும் கம்பிக் கதவிற்கும். பயந்து… நடத்தைக்கெட்டவள்… தூ...

    வயிற்றைப் புரட்டிக் கொண்டு வருகிறது.

    அந்தப் பாவி காரிலிருந்து இறங்கி சுற்றும் முற்றும் தேடுகிறான்.

    இந்தப் பக்கமாக வருகிறானே. தெரு விளக்கில் மீசையருகில் இருக்கும் பெரிய மிளகு மச்சம். ஐயோ வருகிறான். வந்து விட்டால், எந்த நேரத்தில் என்னைப் பார்த்து விடலாம். நான் சத்தமிட்டாலும், இவள் என் மனைவி எனக்கும் இவளுக்கும் தகராறு என்று சேரும் கூட்டத்திடம் சொல்லி ஏமாற்றி ஏதாவது ஒரு சிகப்பு விளக்கு.

    இந்த மூக்கிற்கு ஏனிந்த நமச்சல். உடன் பிறந்தே என்னைக் காட்டிக் கொடுக்க சதி செய்கிறதா? பாழாய் போன மூக்கு, மூக்கில்லாமல் ஆண்டவன் படைத்திருக்கக் கூடாதா?

    அவன் வந்து விட்டான். சுற்றும் முற்றும் தேடுகிறான். பங்களா போர்டிகோவில் விளக்கெரிவதைப் பார்க்கிறான். தயங்கி நிற்கிறான்.

    எனக்குப் பின்னால் ஏதோ புஸ்ஸென்று சத்தம். பாம்பா… உடம்பு உதறுகிறது. அந்த தவளை என்ன ஆகியிருக்கும். கை கால்களிலும் நமைச்சல். மூக்கைத் தேய்த்து அழுத்தி வாயல் சுவாசிக்கிறேன்.

    கடன்காரன் இந்தப் பக்கமாக பார்க்கிறான். என்னைப் பார்த்திருப்பானா? குலை நடுங்குகிறது. மயக்கமாகி விடுவேனோ?

    அவன் பின் வாங்கி நடக்கிறான். இதயம் நின்று விட்டு துடிக்கிறது. கார் புறப்பட்டு வேகமாகிறது.

    இப்போது பாம்பின் பயம் பிறந்து வளர்ந்து விட்டது. குபீர் என எழுந்து முன்னால் வருகிறேன்.

    பெரிதாக தும்மல் போடுகிறேன். கை கால்கள் புல்பூண்டால் நமைக்கின்றன. சேலையை உதறி கூத்தலில் ஒட்டியிருந்த புற்களைப் பிடுங்கி… கீழே கிடக்கும் பையில் வெளியே எட்டிப் பார்க்கும் சேலையை உள் தள்ளி… சிகரெட் சுட்ட இடம் எரிகிறது.

    அவன் ஒழிந்து விட்டான். இனிமேல் என்ன செய்வது. எங்கே போவது. இந்த கார்க்காரனிடமிருந்து தப்பியாகிவிட்டது. இந்த ஊரில் இவனைப் போல எத்தனைக் கார்க்காரர்களோ.

    இவர்களிடம் மாட்டிக் கொள்ளவா அந்த பாலாற்றங் கரையை விட்டு வந்தேன். இந்த இரவில் இந்தக் கருமையில் இந்தத் தனிமையில் பெரும் நிதியாக இந்தப் பேரழைகையும் பெண்மையையும் எடுத்துக் கொண்டு தான் எங்கே போகட்டும்.

    எனக்கு அடைக்கலம் அளிப்பவர்கள் யார்? என் வயிற்றுப் பசிக்கும் உடல் துணிக்கும் ஆதரவாளர் யார்?

    இந்த பங்களாவில் விளக்கு வெளிச்சத்தில் மின்னும் இந்த இடத்திலிருக்கும் நல்ல மனம் கொண்டவர்கள் எனக்கொரு வேலை கொடுக்க மாட்டார்களா. வேலை கொடுக்குமளவிற்கு நான் என்ன பட்டதாரியா. நள்ளிரவில் திருட வந்ததாக நினைத்து...

    இந்த இடத்தை விட்டு போவதே மேல். கால்கள் ஒடி ஒடி தளர்ந்து வலிக்கிறது.

    இது நேரம் வரை குசலம் விசாரிக்காத பசி இப்போது மெல்ல தலை நீட்டுகிறது.

    புதரில் மறைந்தபோது சேலை முந்தானையில் பெரிதாக கிழிசல். சேலையை மாற்றி கட்டிக் கொள்ளக் கூட ஒரு இடமில்லை. சிகரெட் சுட்ட இடத்தில் சரியான எரிச்சல்.

    யாரும் வருவதற்கு முன் போய் விட வேண்டும்.

    கார் ஒன்று வேகமாக உள்நுழைந்து என்னைக் கடந்து போய் நிற்கின்றது. கதவு திறக்கிறது. பயத்துடன் பார்க்கிறேன்.

    2

    ஒரு பெண்ணின் இதயம் கருனையின் கோயிலாக மாறும்போது,

    அதற்கு இணையான வாஞ்சை இந்த உலகத்தில் எங்குமேயில்லை.

    - மார்ட்டின் லூதர்

    *

    மேகலா, ஏய் மேகலா. எங்கேடி தொலஞ்ச. அதைத் தொடர்ந்து மிஸஸ் ராமனாதனின் முணுமுணுப்பு காதுக்கு எட்டவில்லை.

    சீ… மொதல்ல இங்கிருந்து கெட் அவுட் எனக்கு உன்னையும் பிடிக்கல. நீ கொஞ்சி சோறு ஊட்டறதும் பிடிக்கல. ஐ சேயூ கெட் அவுட் பர்ஸ்ட் மிஸஸ் ராமனாதனின் ஆறு வயசு ராஜேஷ், என்னைப் பார்த்துக் கத்துகிறான்.

    மேகலா. என் இங்கிலிஷ் புக் எங்கே வச்ச வந்து எடுத்துக் குடு. ராஜேஷின் அக்கா அனிதா தன் ஏழாம் வகுப்பு புத்தகத்திற்காக என்னை அழைக்கிறாள்.

    மேகலா மேகலாமா… இங்க வந்து பாலை எடுத்து அடுப்பில வையேன். அம்மாக்கு அவசரமா வெளியே புறப்படனுமாம். சமையற்காரி அங்கிருந்தே கத்துகிறாள்.

    மேகலா, என் சிதார் லைட்டரைப் பார்த்தியா. மிஸ்டர் ராமனாதன் மாடியிலிருந்து இரைவது இங்கே கேட்கிறது.

    யார் அழைப்புக்கு ஓடுவது. மனம் தடுமாறி தலையைப் பிய்த்துக் கொள்ளாதக் குறை.

    ஏய் மேகலா… வரவர உனக்கத் திமிர் ஏறிடுச்சி. அன்னிக்குப் பிச்சைக்காரி மாதிரி நின்னதெல்லாம் உனக்கு மறந்துப் போச்சுடி. கூப்பிட்டா கூட வர மாட்டேன் என்கிற. திருமதி ராமனாதன் அடித் தொண்டையில் கத்துகிறாள்.

    மாலையைத் துரத்திக் கொண்டு இருள் விரைந்து வந்து கொண்டிருக்கிறது. விளக்குகளைக் கூட போடாமலே விரைகிறேன்.

    "என்னம்மா வேணும். பறக்கும் கூந்தலை அழுத்திக் கொண்டு அவள் முன்னாள் நிற்கிறேன். ஒயிலாக ஷோபாவில் சாய்ந்து மெடிகல் ஜர்னலைப் படித்துக் கொண்டிருந்தவள் ஏண்டி, கூப்பிட்டா உடன் வரதில்லையா. கடுகடுக்கிறாள்.

    உயரத் தூக்கிப் போட்ட கொண்டையும் ஸ்லீவ்லெஸ் சோளியும் உதட்டில் ரத்தச் சிகப்பும் ஒல்லியாக இருக்கிறாள். காதுகளில் மட்டும் வைரத் தோடுகள், இடக்கையில் சிறிய எலக்ட்ரானிக் வாட்ச், மற்றபடி நகைகள் ஏதுமில்லை. அமெரிக்கன் சிபான் வெள்ளைச் சேலையில் கொண்டையில் பெரிய வெள்ளை ரோஜாவும் நெற்றியில் வெள்ளைப் பொட்டுமாய் கண் இமைகளுக்கு நஸ்காராகவும் கன்னங்களுக்கு குஜும்... இவள் அலங்காரத்தைப் பார்த்தாலே தெரிகிறது. இன்று இரவு இவள் வீடு திரும்ப இரண்டு மணியோ மூன்று மணியோ ஆகப் போகிறது.

    என்னடி அப்படி பார்த்துட்டு நிக்கறே. ஏதோ அநாதையா இருக்கியேன்னு வேலைக்கு வச்சுட்டா..சரி சரி நேரமாச்சு. அந்த அனிதாவை வரச் சொல்.

    என் கண்களில் நீர். இங்கு வந்த இரண்டு மாதங்களில் இதை இரண்டாயிரம் முறையாவது சொல்லிக் காட்டியிருப்பாள்.

    அனிதாவின் அறையைத் தேடிப் போகிறேன். அறையெங்கும் புத்தகங்கள். அவள் தேடிக்கொண்டிருக்கிறாள்.

    அனிதா, உன்னை மம்மி கூப்பிடறாங்க.

    அவள் புத்தகங்களை அடுக்கலானேன்.

    என் இங்கிலீஷ் புத்தகத்தை நீ பார்த்தியா.

    எனக்கு நேரமேது.

    உம்... ஞாபகம் வருது. சாந்திக்கு ஹின்ட்ஸ் எழுத கொடுத்தேனா, திரும்ப வாங்கிக்க மறந்துட்டேன். வாயில் விரல் வைத்து நகத்தைக் கடித்தபடி பேசுகிறாள்.

    எதுக்கு மம்மி கூப்டுது. நான் வரமாட்டேன்னு போய் சொல்லு.

    இவள் முரண்டு பிடித்துக்கொண்டு நிற்பதற்குள் அனிதாவை அனுப்பும்படி எனக்கு உத்தரவுகள்.

    அனிதா வாம்மா. மம்மி என்னைத்தான் திட்டுவாங்க.

    "மாட்டேன் போ. என் பர்த் டேக்குக் கூட இந்த மம்மியால கலந்துக்க முடியல.

    என் பிரண்ட்ஸ எத்தனை நேரம் காத்துட்டிருந்தாங்க. மம்மின்னுதான் பேர். இவங்கள வாரத்துக்கு ஒரு தடவை கூட பார்க்க முடியல. வர மாட்டேன்னு போய்ச் சொல்லு.

    இவள் கத்திப் பேசிக் கொண்டிருக்கும்போதே வாசலில் மிஸஸ் ராமநாதன் தோன்றுகிறாள் மனம் திடுக்கிடுகிறது. கேட்டிருப்பாளோ.

    அனிதாவ எப்ப அழைச்சிட்டு வரச் சொன்னேன். இதென்னடி ரூமெல்லாம் கோலம். எல்லாத்தையும் எடுத்து அடுக்கு. கட்டிலும் பெட்டும்... ஏய் மேகலா… இன்னொரு முறை இப்படி பார்த்தேனா பார். என் தலையில் ஓங்கி இடிக்கிறாள் மிஸஸ் ராமநாதன்.

    அனிதாவின் முன்னால்.வலியை விட அவமான உணர்ச்சி என்னைப் பிடுங்கி தின்கிறது.

    இங்கே பார் மம்மி. உன் அதிகாரமெல்லாம் மத்தவங்களோட வச்சிக்கோ. என்கிட்ட காட்டாத, என் பர்த்டே அன்னிக்கு உனக்குச் சீக்கிரமா பங்களாவுக்கு வரணுமுன்னு தோணுச்சா. நான் எதுக்கு நீ அழைச்சா வரணும்.

    என் கன்னத்தில் பளிர், கண்ணிமைக்கும் நேரத்தில் மிஸஸ் ராமநாதனின் கை என் கன்னத்தில்.

    புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்த நான் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கண்கள் இருண்டு மீண்டும் பிரகாசம் அடைகிறது.

    அவளுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு. எதுக்கு அவளைப் போட்டு அடிக்கிற, அனிதா கோபத்துடன் கத்துகிறாள்.

    இந்த பங்களாவில் மனிதாபிமானம் உள்ள ஒரே உயிர் இவள் மட்டுமே. இவள் எப்படி இவர்களுக்கு மாறுபட்டு பிறந்தாள். மாறுபட்டு வளர்ந்திருக்கிறாள்.

    அனிதா, நீ வயசுக்கு மீறி பேசற. இப்படியே இருந்தியானா ஹாஸ்டலுக்கு அனுப்பிடுவேன். ஜாக்கிரதை.

    அதை முதல்ல செய் மம்மி.

    இனிமேல் தாய்க்கும் மகளுக்கும் இடை நிற்காமல் கன்னத்தைத் தடவி விட்டபடி வெளி வருகிறேன். மாடியில் ராமநாதன் என்னைப் பார்த்தபடி நிற்கிறார்.

    இன்னுமா சிதார் லைட்டர் கிடைக்கல. மேலிருந்து கேட்கிறார்.

    இவர் அறையில் இருக்கும் லைட்டர் கால்கள் முளைத்தா வெளியே போயிருக்கும். இவர் அறையில் போய் மாட்டிக் கொண்டால் அவ்வளவுதான்.

    ராஜேஷ் எடுத்து விளையாடிட்டிருந்தான். அங்கேயே மேட்ச் பாக்ஸ் வச்சிருக்கேன்.

    இதைச் சொல்லி அவர் பதிலுக்குக் கூட காத்திராமல் சமையலறைக்குப் போகக் கிளம்பினேன்.

    ஹாலைக் கடக்கையில் கார் டிரைவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துச் செல்கிறான். என் ஆடைகளை எரிக்கும் பார்வை. எதற்காக இவன் இப்படிப் பார்க்கிறான். அழுக்கேறின வெள்ளைப் பாண்டும் வெள்ளைச் சட்டையும் போட்டுக் கொண்டு முகத்தில் எப்போதும் ஷேவ் செய்ய வேண்டியவைகளோடு அவனைப் பார்த்தாலே எனக்கு வயிற்றைப் புரட்டுவதுண்டு. போதாத குறைக்கு அவன் பார்வை…

    இதற்காகவே காரில் கடைவீதிக்குச் செல்லும் கட்டாயத்திற்கு நான் ஆளாக்கப்பட்டபோது மறுத்திருக்கிறேன். உடன் அனிதாவையோ சமையல்காரம்மாளையோ அழைத்துச் சென்றிருக்கிறேன்.

    பாப்பா, இந்தப் பாலைச் சூடு பண்ணு. அதுக்கு காஸ் அடுப்பில் பாலைக் காய்ச்சினா புடிக்காது. சமையற்காரம்மாள் மும்முரமாக சிற்றுண்டியில் ஈடுபட்டிருக்கிறாள்.

    குமிட்டி அடுப்பில் கரி அள்ளி பற்ற வைக்கிறேன். விசிறி விட்டுப் பாலை அடுப்பில் ஏற்றுகையில் கண்களிலிருந்து சரசரவென வழிகிறது. இதென்ன வாழ்க்கை, ஒரு பிடி சோற்றுக்கும் ஒரு முழத் துணிக்கும் நாயை விட படு கேவலமாக… இங்கே வளர்க்கப் படுகிறதே பாமரேனியன் மிக செல்லமாக அதற்காகும் செல்வில் பத்தில் ஒரு பங்காவது எனக்காகுமா. அதற்காக நான் உழைக்க வேண்டிய உழைப்பு உழைப்பு கிடக்கட்டும். தன் மானத்தைச் சீண்டும் பார்வைகள் ஏச்சுக்கள். பேச்சுக்கள்.

    ஏம் பாப்பா அழறே. இன்னமோ ஒன் தலயெழுத்து. இங்கிட்டு மாட்டிக்கினு முழி பிதுங்கற. அவ இருக்காளே சரியான ராட்சசி. கட்ன புருஷனை மதிக்க மாட்டா. சமையல்காரி தடித்த தொண்டையில் ரகசியம் பேசுவது போலப் பேசுகிறாள். அவள் சாதாரணமாக பேசினால் குரல் மிருதுவாக தாழ்வாக இருக்கும்.

    ரகசியம் என்று ஆரம்பித்தாளானால் நிச்சயம் அடுத்தவர் காதுகளில் விழாமல் இருக்காது. அவ்வளவு நல்ல குரல் வளம்.

    மெளனமாக சேலைத் தலைப்பைக் கண்களில் ஒற்றிக் கொள்கிறேன்.

    நீ பார்த்துக்கறியாமா. நான் ராஜேஷை ட்யூஷனுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யணும்.

    சரி சரி போ. அது வரப்ப நீ எதுக்கு. அதுயென்ன பொம்பளையா. டாக்ரம்மாவாம். பெரிய டாக்டர். வளுக்கிட்டு வர வேண்டிய புள்ளைய வயித்த அறுத்து எடுத்துட்டு பணம் பிடுங்கறவ. சமையல்காரம்மாள் இன்னும் திட்டுவதற்குள் நான் அந்த இடத்தை விட்டுநகர்கிறேன்.

    இயந்திரமாக உடல் வேலை செய்கிறது. விளக்குகளைப் போட்டு டைனிங் டேபிளை உணவுக்காக தயாரித்து... ராஜேஷை உணவு ஊட்டி ட்யூஷனுக்கு அனுப்பி அவன் என் முகத்தில் துப்பியதைத் துடைத்துக் கொண்டு ஏதுமே நடக்காத மாதிரி மிஸஸ் ராமனாதனுக்குப் பெரிய பிக்னிக் பிளாஸ்க்கில் பாதாம் பாலை ஊற்றி காரில் வைத்து அதை காரில் வைக்கும்போது அந்த டிரைவரின் பொல்லாத கண்களின் வரம்பு மீறிய பார்வையை ஒதுக்கி…

    எல்லாவற்றையும் விட என்னை இரவு எட்டு மணிக்குக் கலக்கின விஷயம் என் மனதை அப்பளமாக நொறுக்கிவிட்டது.

    இந்த டிரைவர், தோட்டத்தைத் தள்ளி நடைபாதையில் யாரோ ஒரு இளைஞனோடு பேசிக்கொண்டு நின்றிருந்தான்.

    நானும் அதைச் சட்டை செய்யவில்லை. ஆனால் தோட்டக்காரனைச் சாப்பிட கூப்பிட அந்தப் பக்கம் போன போது அந்த இளைஞனை இனம் கண்டு. மீசையருகில் மிளகு போன்ற மச்சம். அன்று இரவு என்னைக் காரில் துரத்தினவன். இப்போதும் அவன் கையில் புகையும் சிகரெட் சந்தேகமில்லை. அவனேதான்.

    அவனுக்கும் இந்த டிரைவருக்கும் என்ன உறவு. நான் ஏமாந்த நேரமாகப் பார்த்து என்னைக் கடத்தி. கடத்திப் போய்.நான் இருக்கும் இடத்தை மோப்பம் பார்த்து விட்டான். இனி எந்த நேரத்திலும் ஆபத்து என்னைத் தேடி வரலாம்.

    இரவு சாப்பிடுவதில் கூட மனம் செல்லவில்லை.

    என்ன பாப்பா கோழி கணக்கா சோத்த கெளறிகிட்டு இருக்க. சாப்பிடு. இந்த வயசில சாப்பிட்டா தானே. சமையற்காரம்மாள் என் எதிரில் உட்கார்ந்தபடி சோற்றை அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொள்கிறாள்.

    காலைல வருவேன் பாப்பா, எசமானர் கிட்ட சொல்லிட்டேன். அது அதுதான். எசமானியம்மா இரவு எத்தனை மணிக்கு வரப் போவுதோ, நமக்கெதுக்குப் பெரிய இடத்து விசயம்... அவள் நிறுத்திக் கொள்கிறாள்.

    நெடுநேரமாக தொண்டையில் முள்ளாக குத்தியதை வெளியே எடுக்கிறேன்.

    ஏம்மா இந்த டிரைவர் எப்படிப்பட்டவர்.

    எதுக்கு கேக்கற பாப்பா. நல்ல மாதிரி. பாத்தா ஒரு மாதிரி இருக்குன்னா, அது பேரு மட்டும் தங்கமில்ல. குணத்திலயும் தங்கம்தான். எனக்கு ஒண்ணுவிட்ட அக்கா மவன்.

    சரிதான். இனிமேல் அவனைப் பற்றி இவளிடம் கேட்கவே கூடாது.

    சாப்பிட பிடிக்கவில்லை. பாதியிலே கை கழுவி விடுகிறேன்.

    கிச்சனைக் கிளின் செய்துட்டுப் போறியா. அனிதா தூங்கறதுக்குள்ள பால் கொடுத்தாகணும்… பாதாம் பாலை எடுத்துக் கொண்டு நடக்கிறேன்.

    அனிதாவின் அறை லேசாக சாத்தப்பட்டிருக்கிறது. பாடப் புத்தகத்திற்குள் ஏதோ மறைத்துவைத்து படிப்பதைப் போலிருக்கிறது. என்னைப் பார்த்ததும் மூடி மேசை மீது மற்ற புத்தகத்தில் செருகுகிறாள்.

    அனி. இந்தா பாதாம் பால்.

    அழைச்சிட்டு வரச் சொல்லி எத்தனை தரம் சொல்லியிருக்கேன். நீ எட்டிப் பார்த்ததும் எப்படி பயந்துட்டேன் தெரியுமா. என்கிறாள். அதிகப்படியான பயம் அவள் குரலில் தெரிகிறது.

    என்னைப் பார்த்ததும் இவள் எதற்காக பயப்பட வேண்டும். இவள் அழைத்தாள் வர வேண்டியவள் நான். என்னைப் பார்த்து பயப்படும்படியாக இவள் என்ன படித்துக்கொண்டிருக்கிறாள்.

    மம்மி எப்ப வருவா.

    நைட் ரெண்டு மணியாகும்.

    இதே வேலையாப் போச்சு. சரி நீ போறியா. எனக்குத் தூக்கம் வருது.

    என்னைக் கழற்றினாள். தம்பளருடன் வெளி வருகிறேன். அவள் கதவைத் தாளிடுகிறாள்.

    பெண்மையின் வசந்தம் மெல்ல இப்போதுதான் அவள் உடலில் கட்டியம் கூற ஆரம்பித்திருக்கிறது. அதற்குள்.தாய்ப் புலியின் வேகம் குட்டிக்கு வராதோ.

    ராஜேஷின் அறைக்கு அவன் தூங்கிக் கொண்டிருக்கிறான். தலை கீழாக நின்றாலும் அவனை எழுப்பி பாலைக் குடிக்க வைக்க முடியாது.

    டாக்டரைப் பற்றி இந்த விஷயத்தில் கவலையே கிடையாது. சாப்பிட்டவுடன் பாலையும் குடித்து விடுவார்.

    பங்களாவெங்கும் மினுக்கிக் கொண்டிருந்த விளக்குகளை ஒவ்வொன்றாக அனைத்து விட்டேன். கூடத்தில் சரவிளக்குகள் மாங்கிய ஒளியை மென்மையாகத் தெளிக்கிறது. நடு நாயகமாக பெரிதாக மாட்டப்பட்டிருந்த ராமனாதன் தம்பதிகளின் இளமைக் கால புகைப்படம் எளிமையாக சிரிக்கிறது.

    நீ எனக்கு. நான் உனக்கு என்று ஹோமப் புகையில் கண்கள் எரிய மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதெல்லாம் காலச் சக்கரத்தின் தேய்மானத்தில் அழிந்து விட்டது போலும். மிஸ்டர் இப்படி, மிஸஸ் அப்படி.

    இத்தனைக்கும் தி. நகரில் அனிதா நர்ஸிங் ஹோம் என்கிற பெரிய மருத்துவமனையில் இருவரும் மனமொத்த மருத்துவ தம்பதிகள் பணியில் மட்டும்தான். அவரைப் பற்றி இவளோ, இவளைப் பற்றி அவரோ எப்போதும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

    இதென்ன என் மலையத்தனைப் பிரச்சினைகளை விட்டு… அனிதாவின் அறைக்கு அடுத்த அறை என்னுடையது. இரவில் ராஜேஷம் அனிதாவும் ஏதாவது கேட்டால், வந்து எழுப்பினால் என்கிற முன்னேற்பாட்டில் என் அறை அவர்கள் அறைக்கு நடுவே இருந்தது. நான் தாளிட்டுப் படுக்கக் கூடாது. அவர்கள் அழைத்தால் எனக்குக் கேட்காதாம். இதெல்லாம் மிஸஸ் ராமனாதன் ஏற்பாடு.

    அறைக் கதவை அழுந்த சாத்திவிட்டுப்

    Enjoying the preview?
    Page 1 of 1