Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

As I Am Suffering From Love
As I Am Suffering From Love
As I Am Suffering From Love
Ebook192 pages48 minutes

As I Am Suffering From Love

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.

குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.

திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124003756
As I Am Suffering From Love

Read more from Kulashekar T

Related authors

Related to As I Am Suffering From Love

Related ebooks

Reviews for As I Am Suffering From Love

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    As I Am Suffering From Love - Kulashekar T

    http://www.pustaka.co.in

    அஸ் ஐ ஆம் ஸஃபரிங் ஃபிரம் லவ்

    As I Am Suffering From Love

    Author:

    தி. குலசேகர்

    T. Kulashekar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kulashekar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கதாபாத்திரங்கள்

    காட்சி- 1

    காட்சி- 2

    காட்சி - 3

    காட்சி - 4

    காட்சி- 5

    காட்சி- 6

    காட்சி- 7

    காட்சி- 8

    காட்சி- 9

    காட்சி- 10

    காட்சி- 11

    காட்சி- 12

    காட்சி- 13

    காட்சி- 14

    காட்சி- 15

    காட்சி- 16

    காட்சி - 17

    காட்சி- 18

    காட்சி- 19

    காட்சி- 20

    காட்சி- 21

    காட்சி- 22

    காட்சி- 23

    காட்சி- 24

    காட்சி- 25

    காட்சி- 26

    காட்சி- 27

    காட்சி- 28

    காட்சி- 29

    காட்சி- 30

    காட்சி- 31

    காட்சி- 32

    காட்சி -33

    காட்சி- 34

    காட்சி- 35

    காட்சி- 36

    காட்சி- 37

    காட்சி- 38

    காட்சி- 39

    காட்சி- 40

    காட்சி- 41

    காட்சி- 42

    காட்சி- 43

    காட்சி - 44

    காட்சி- 45

    காட்சி- 46

    காட்சி- 47

    காட்சி- 48

    காட்சி- 49

    காட்சி- 50

    காட்சி- 51

    காட்சி- 52

    காட்சி- 53

    காட்சி- 54

    காட்சி- 55

    காட்சி- 56

    காட்சி- 57

    காட்சி- 58

    காட்சி- 59

    காட்சி- 60

    காட்சி- 61

    காட்சி- 62

    காட்சி- 63

    காட்சி- 64

    காட்சி- 65

    காட்சி- 66

    காட்சி- 67

    கதாபாத்திரங்கள்

    1.கதிர்- இளம் கம்ப்யூட்டர் எஞ்சினியர்- டீம் லீடர்

    2.தேஜஸ்வினி - கதிரின் மனைவி

    3.பாரு என்கிற பார்வதி - கதிரின் சாப்ட்வேர் டீமில் உள்ள ஜுனியர் / தோழி

    4.சித்தார்த் என்கிற சித்து – முன்னால் வங்கி ஊழியன் - கதிரின் பள்ளி நண்பன்

    5.இந்திரஜித் - சைக்யாட்ரிஸ்ட்

    6.பூசாரி - முருகன் கோயில் பூசாரி

    7.பூசாரியின் உதவியாளன்-

    8.தீனா - கம்ப்யூட்டர் ஜோசியன்.

    9.தீனாவின் உதவியாளன்

    10.வருண் - ப்ரைவேட் டிடெக்டிவ்

    11.சார்பதிவாளர்

    12.குப்பை பொறுக்குபவன்

    13.ரவுடி

    14.பாருவின் அம்மா

    காட்சி- 1

    இடம்- புதுப்பேட்டை சேரிப்பகுதி மற்றும் பாழடைந்த கார்ஷெட்

    நேரம்- இரவு

    இடம் பெறுபவர்கள்- கதிர், குப்பை பொறுக்குகிற தாடி வாலா, ஒரு ரவுடி,

    எஃபெக்ட்- பைக் சத்தம், பைக் ஸ்டார்ட் செய்கிற சத்தம், விரைந்து செல்கிற சத்தம், இரவுக் கோழியின்‘ஙொய்ங்..ஙொய்ங்.’ சத்தம், வேகமாக வீசும் காற்றின் ஓசை, காலடி சத்தம், ஊளைக்காற்றின் சத்தம், துப்பாக்கி திறந்து பார்க்கிற சத்தம்

    ஆம்பியன்ஸ்- இரவின் ஓசை, எங்கோ தூரத்தில் நடந்து கொண்டிருக்கும் பட்டறை வேலை சத்தம்.. காற்றின் ஓசை.. இரவுப்பூச்சியின் ராகம்..

    கதிர் தனிமையான இடத்திற்கு சென்று துப்பாக்கி வாங்குவது

    இரவு நேரம்.

    கதிர் பைக் விரைவாக ஓட்டிச் செல்கிறான்.

    கதிர் இறுக்கமான மனநிலையோடு ஆள் நடமாட்டமில்லாத, அந்த சேரிப் பகுதிக்கு பைக்கில் வருகிறான்.

    அங்கு புகைத்தபடி படுத்துக் கிடக்கும் தாடி வாலாவிடம் கேட்கிறான்.

    கதிர்- சித்தனை பாக்கணும்...

    குப்பை- (சைகையில்) யார் அனுப்பிச்சது??

    கதிர்- டக்லஸ்...

    உடனே அவன் ஒரு பாழடைந்த காரேஜ் பக்கம் கையை காட்டுகிறான்.

    கதிர் அங்கே நடந்து செல்கிறான்.

    யாருமில்லாத அந்த இடத்திலிருந்து திடீரென ஒருவன் எதிர்படுகிறான்.

    கதிர்- கருப்பு புறா வேணும்...

    டப்பு என சைகையிலேயே கேட்கிறான்.

    கதிர் எடுத்துத் தருகிறான்.

    ரவுடி- (அவன் எண்ணிப் பார்த்துவிட்டு) பத்தாயிரம் கம்மியா இருக்கு...

    கதிர்- (எல்லா பாக்கெட்டிலும் பதட்டத்துடன் தேடிப் பார்த்து விட்டு) அப்புறமா கொண்டு வந்து தந்தர்றேன்...

    நம்பாதவனாய் ஏளனச் சிரிப்பு சிரிக்கிறான்.

    கதிர் கையில் இருந்த மோதிரத்தை கழற்றித் தருகிறான்.

    மறுப்பாய் தலையசைத்து, காசு தான் வேணும் என்று சைகையில் வெளிப்படுத்துகிறான்.

    கதிர்- இதை வச்சுக்கோ... பாக்கி தந்துட்டு வாங்கிக்கறேன்...

    உடனே அவன் கதிரை அங்கேயே இருக்கும்படி கட்டளையிட்டு விட்டு, இருளுக்குள் போய் மறைகிறான்.

    கதிர் யோசனையோடு நகம் கடித்தபடி இங்குமங்கும் நடந்தபடி இருக்கிறான்.

    அப்போது அந்த மர்மநபர் வருகிறான். கையில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் ஒரு மஞ்சள் பை எடுத்துக்கொண்டு வந்து தருகிறான். அதன் உள்ளே நியூஸ் பேப்பரில் சுற்றி வைக்கப்பட்ட ஒரு பொட்டலம் இருக்கிறது.

    ஒவ்வொரு பேப்பராக எடுக்க எடுக்க இரண்டு மூன்று என வந்து கொண்டே இருக்கிறது.

    கதிர் முகம் ஆர்வமடைகிறது.

    அந்த பேப்பர் பொட்டலத்திற்குள் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி வெளிப்படுகிறது.

    கதிரின் பைக் இருளுக்குள் சென்று மறைகிறது.

    இரண்டு மாதத்திற்கு முன்…

    -கட்-

    காட்சி- 2

    இடம்- ஒதுக்கமான சாலை மற்றும் வொர்க் ஷாப்

    நேரம்- மாலை

    இடம் பெறுபவர்கள்- கதிர், பாரு, சித்து

    வேகமாய் வந்து கொண்டிருந்த கதிரின் பைக் சடன் பிரேக் போட்டது போல நிற்க, பின்னால் உட்கார்ந்திருந்த பாரு அவன் ஹெல்மெட்டில் நங்கென முட்டிக் கொள்கிறாள்.

    பாரு- (தேய்த்து விட்டபடி) ஆ… மச்சி... ஏன்டா இப்பிடி சாவடிக்கிற... எனக்கு கொம்பு மொளைச்சதுனா நான் என்ன பண்ணுவேன்...

    கதிர்- வேணும்னா ஹெல்மெட்டை கழட்டி தரேன்... பதிலுக்கு முட்டிக்கோ...

    பாரு- அன்னைக்கி நீ தெரியாம இடிச்சதுக்கு பதிலா, நான் நங்குனு முட்டுனேன்... அந்த காண்டுல தான் இப்படிலாம் பண்றியா...

    கதிர்- நான் ஒன்னும் பண்ணலடி...

    பாரு- நீ ஒன்னும் பண்ணல... நானா தான் ஆசைஆசையா முன்னாடி வந்து உன் ஹெல்மெட்ல நங்குனு செதறுதேங்கா அடிச்சாப்ல முட்டிக்கிட்டேன்... எனக்கு வேண்டுதல் பாரு...

    கதிர்- நம்புடி... என்னாச்சின்னே தெரியல...

    பாரு- அப்போ வண்டிய நீ நிறுத்தலேனா... பூதம் வந்து நிறுத்திச்சா...

    கதிர்- வேணும்னா நீ ஓட்டு...

    பாரு- குட்றா...

    பாரு வண்டியை வாங்கி நகர்த்த பார்க்கிறாள். நகர மறுக்கிறது.

    பாரு- ஆமாண்டா...

    கதிர்- நியூட்ரல்ல இருக்கா பாரு...

    பாரு- இருக்கே... சித்துக்கு ஃபோன் போடு...

    வொர்க் ஷாப்பில் ஒரு ஸ்கூட்டரை ரிப்பேர் பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த் ஃபோன் பெல் அடிக்கிறது.

    சித்து- சொல்டா மச்சான்... ம்... ம்... பரவால்லடா... என்ன இருந்தாலும் அது உன் அப்பாவோட ஞாபகமா வச்சிருக்கற பைக்ல... ம்... இதா வரேன்...

    ***

    ஸ்டேண்ட் போட்டு நிற்கும் பைக்கை சித்து

    Enjoying the preview?
    Page 1 of 1