Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vendam Andha Pathavi Uyarvu...
Vendam Andha Pathavi Uyarvu...
Vendam Andha Pathavi Uyarvu...
Ebook69 pages23 minutes

Vendam Andha Pathavi Uyarvu...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பதவி உயர்வின் காரணமாக வெளியூருக்கு செல்ல வேண்டிய நிலை முத்தன்னாவுக்கு. ஆனால் அவர் செல்ல மறுக்கிறார். அவரை அனுப்பி வைக்க பாடாய்படும் அவர் மனைவி சென்பகம். வெளியூருக்கு சென்றாரா முத்தன்னா? கணவன்-மனைவிக்குள் நடக்கும் இந்த போராட்டத்தை நகைச்சுவையுடன் நம்முடன் பகிர்ந்து உள்ளார் கலைமாமணி கோவை அனுராதா...

Languageதமிழ்
Release dateApr 8, 2023
ISBN6580136909091
Vendam Andha Pathavi Uyarvu...

Read more from Kalaimamani Kovai Anuradha

Related to Vendam Andha Pathavi Uyarvu...

Related ebooks

Reviews for Vendam Andha Pathavi Uyarvu...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vendam Andha Pathavi Uyarvu... - Kalaimamani Kovai Anuradha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வேண்டாம் அந்தப் பதவி உயர்வு...

    Vendam Andha Pathavi Uyarvu...

    Author:

    கலைமாமணி கோவை அனுராதா

    Kalaimamani Kovai Anuradha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-kovai-anuradha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி – 1

    காட்சி – 2

    காட்சி - 3

    காட்சி - 4

    காட்சி - 5

    காட்சி - 6

    காட்சி - 7

    காட்சி - 8

    காட்சி - 9

    காட்சி - 10

    காட்சி - 11

    காட்சி - 12

    காட்சி - 13

    காட்சி - 14

    பாத்திரங்கள்

    முத்தன்னா பி.ஈ - வீட்டுத் தலைவர் - வயது 45

    சென்பகம் - மனைவி - வயது 40

    பட்டாபிராமன் - மாமனார் - வயது 65

    தங்கம்மாள் - மாமியார் - வயது 55

    பார்த்தசாரதி - அகௌவுண்ட்ஸ் ஆபீசர் - வயது 50

    ஜானகிராமன் - அகௌவுண்ட்ஸ் கிளார்க் - வயது 40

    வீராசாமி – பிளானுக்கு வருபவர் - வயது 40

    ஆலாலசுந்தரம் - டாக்டர் - வயது 45

    புவனா - பக்கத்து வீட்டு சிறுமி - வயது 10

    ஒரு ஆள் - முத்தன்னாவை தூக்கி வருபவன் - வயது 40

    காட்சி – 1

    பாத்திரங்கள்: முத்தன்னா, சென்பகம், பிளான் கேட்க வருபவர் வீராசாமி.

    குரல்: சார்... பேப்பர்...

    (பேப்பர் தரையில் விழும் சத்தம்)

    முத்தன்னா: (மெதுவாக) ம்... நான்தான் ஈசிசேர்ல உட்கார்ந்திருக்கேனே... பேப்பரை கையில கொடுக்கக்கூடாது? கீழே போட்டுட்டு போறேன் பாரு... (உள்ளே திரும்பி) சென்பகம்... அம்மா சென்பகம்... என்ன பண்றே உள்ளே? பேப்பர் வந்தாச்சு பாரு... கொஞ்சம் வந்து எடுத்து கையில குடு...

    சென்பகம்: (உள்ளே இருந்து வந்துகொண்டே) இது உங்களுக்கே நல்லாயிருக்கா?

    முத்தன்னா: (சலிப்புடன்) எதைச் சொல்றே?

    சென்பகம்: நியூஸ் பேப்பர் ரெண்டடி தள்ளி இருக்கு... இதை எழுந்து எடுக்கக் கூடாதா? அதுக்குகூட இந்த சென்பகம் வரணுமா? தாலியை கட்டிகிட்டா அடிமையா நினைக்கிறீங்க பாருங்க... நானும் உங்க மாதிரியேதானே ஆபீசுக்கு போறேன்... 9 மணிக்குள்ள எத்தனை வேலைகளை முடிச்சி வச்சிட்டு வரவேண்டியிருக்கு... இது ஏன்தான் உங்களுக்கு புரியமாட்டேங்குதோ?

    முத்தன்னா: பேசாம அந்த பேப்பரை எடுத்துக் கொடுத்துட்டு போயிருந்தா இவ்வளவு பேசவும் வேண்டாம்... உனக்கு ஸ்ட்ரெயினும் கொறைச்சலாயிருக்கும்

    சென்பகம்: அப்படியா... இந்தாங்க பேப்பர்... ஆமா... ராத்திரி பூரா நல்லா குறட்டைவிட்டு தூங்கிட்டு இப்ப என்ன ஈசிசேர்ல படுத்து தூக்கம்?

    முத்தன்னா: நான் குறட்டைவிட்டது உனக்கு எப்படி தெரியும்?

    சென்பகம்: ம்... ஏதோ புலி கூண்டுக்குள்ள படுத்திருக்கிறமாதிரி டொர் டொர்னு ஒரு சத்தம்... எங்க தூக்கம் வரேங்குது... முழிச்சுட்டே உட்கார்ந்திருந்து அந்த

    Enjoying the preview?
    Page 1 of 1