Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sithalukku Sontha Veedu
Sithalukku Sontha Veedu
Sithalukku Sontha Veedu
Ebook79 pages28 minutes

Sithalukku Sontha Veedu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தாயம்மா கட்டிட வேலை செய்யும் சித்தாள். இரண்டு மாதக் குழந்தையை வயிற்றில் சுமக்கும் போதே கணவன் குடிபோதையில் விபத்தில் இறந்து விடவே, பெண் குழந்தையை மன உறுதியுடன் படிக்க வைத்தாள். இவள் மகள் தமிழ்ச்செல்வி ஆடிட்டர் வேலையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக சம்பளம் பெறும் அதிர்ஷ்டசாலி. தாயுக்கு சொந்த வீடு வாங்கித் தர வேண்டும் என்பது அவள் கனவு... லட்சியம். கனவோடு சேர்ந்து லட்சியமும் நிறைவேறியதா? இல்லையா? என்பதை வாசித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateDec 30, 2023
ISBN6580136909205
Sithalukku Sontha Veedu

Read more from Kalaimamani Kovai Anuradha

Related to Sithalukku Sontha Veedu

Related ebooks

Reviews for Sithalukku Sontha Veedu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sithalukku Sontha Veedu - Kalaimamani Kovai Anuradha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சித்தாளுக்கு சொந்த வீடு

    Sithalukku Sontha Veedu

    Author:

    கலைமாமணி கோவை அனுராதா

    Kalaimamani Kovai Anuradha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-kovai-anuradha

    பொருளடக்கம்

    காட்சி 1

    காட்சி 2

    காட்சி 3

    காட்சி 4

    காட்சி 5

    காட்சி 6

    காட்சி 7

    காட்சி 8

    காட்சி 9

    காட்சி 10

    காட்சி 11

    காட்சி 12

    காட்சி 13

    காட்சி 14

    பாத்திரங்கள்

    1. தமிழ்ச்செல்வி – ஆடிட்டர் - வயது 30.

    2. தாயம்மா - தமிழ்ச்செல்வியின் அம்மா- வயது 50

    3. குமாரசாமி- குடும்பத் தலைவர்- வயது 60

    4. லோகநாயகி- குமாரசாமியின் மனைவி – வயது 55

    5.செல்வ குமரன்- குமாரசாமியின் மகன்- வயது 31

    6. மாணிக்கம் - கோவில் குருக்கள்- வயது 50

    7. A to z அ னா ஆவன்னா- தரகர்- வயது 60

    8. அனுத்தமா- தமிழ்ச்செல்வியின் தோழி- வயது 30

    9. செல்லம்மா காய்கறி விற்பவர்- வயது 45

    காட்சி 1

    இடம்: தமிழ்ச்செல்வி வீடு.

    பாத்திரங்கள்: தமிழ்ச்செல்வி, தாயம்மாள்.

    (காய்கறி விற்கும் காளியம்மாள் வீட்டிற்குள் வந்து)

    காளியம்மாள்: அம்மா... அம்மா... காளியம்மா வந்தருக்கேன்ம்மா... காய் வேணுமா?

    தாயம்மா: தமிழ்ச்செல்வி... கிச்சன்ல இருக்கேம்மா... கொஞ்சம் காயைப்

    பார்த்து வாங்கு...

    தமிழ்ச்செல்வி: சரிம்மா...

    காளியம்மா: கொஞ்சம் கூடையை எறக்கு கண்ணு... ஸ்... ஸ்சு... காலையிலயே இன்னிக்கு சரியான வெய்யில்...

    தமிழ்ச்செல்வி: தண்ணி குடிக்கிறயா...?

    காளியம்மா: புண்ணியமா போகும்... கொஞ்சம் பிரிட்ஜ் தண்ணி குடு கண்ணு...

    தமிழ்ச்செல்வி: (சிரித்துக்கொண்டே) காளியம்மா... அது பிரிட்ஜ் இல்லே... ஃப்ரிட்ஜ்...

    காளியம்மா: என்னவோ ஒன்னு... பேர்ல என்ன இருக்கு...? அது கொஞ்சம் தொண்டையில ஜில்லுன்னு எறங்கினாத்தான் வெய்யிலுக்கு எதமா இருக்கு...

    தமிழ்ச்செல்வி: ஆமா... அரை மணிநேரத்துக்கு முன்னாலேயே உன் குரல் பக்கத்து வீட்டுல கேட்டுது... இத்தனை நேரமா அவங்க காய் வாங்க?

    காளியம்மா: அது நாட்டு வைத்தியர் வீடு கண்ணு... அந்த ஐயா இருந்தார்னா இப்படித்தான்... வாழக்காய் வேண்டாம்... வாயு... கத்திரிக்கா தோல் வியாதி... கொத்தவரங்காய் மூச்சு புடிப்பு... இப்படி எதையாவது சொல்லி எந்தக் காயும் வாங்க மாட்டாரு... அரை மணிநேரம் ஆராஞ்சு தம்மாத்துண்டு வாழத்தண்டு கேப்பாரு...

    தமிழ்ச்செல்வி: அவரு வைத்தியரு... எதைச் சாப்பிட்டா என்ன வியாதி வரும்னு தெரியும்... அதுதான் சொல்றாரு...

    காளியம்மா: அட போ கண்ணு நீ ஒன்னு... நான் சின்ன பொண்ணா இருக்கறப்போ டீ காப்பி குடிச்சா உடம்புக்கு கெடுதின்னு வாத்தியார் சொன்னாரு... இப்போ எதோ அமெரிக்காகாரன் சொன்னானாமே... டீ குடிச்சா மாரடைப்பு வராதுன்னு...

    காளியம்மா: நான் போகும் போதேல்லாம் அந்த தாசில்தார் வீட்டம்மா டீ குடுக்கும். இங்க பாருகண்ணு... கடவுளு மனுசன் துன்னறதுக்குத்தான் எல்லாத்தையும் படைச்சிருக்கான்... அதுல எந்த தப்பும் வறாது... வேணுமானா பாரேன்... வேற எந்த நாட்டுக்காரனாவது குப்பைக் கீரையை ஆராய்ச்சி பண்ணி இதை சாப்பிட்டா இன்ன வியாதி போகும்னு சொன்னான்னு வச்சிக்க... அப்புறம் குப்பைக் கீரை விலையெல்லாம் கோபுரத்துல ஏறிக்கும்...

    தமிழ்ச்செல்வி: காளியம்மா... நீ மட்டும் படிச்சிருந்தா இந்த உலகத்தையே விலை பேசிடுவே...

    காளியம்மா: அந்தக் கொடுப்பினைதான் எனக்கு இல்லேயேதாயீ. ஆசையா பள்ளிக் கூடத்துக்கு போயிட்டிருந்த என்னை எங்க ஆத்தாக்காரி ஒரு எடுபட்ட பயலுக்கு கட்டி வச்சிட்டா... இன்னைக்கு ரோடு ரோடா பெத்த புள்ளங்களுக்கு சோறு போட, காய்கறி கூடையோட திரியறேன்... வர்ற பத்து இருபதையும் அந்த பொறம்போக்கு புடிங்கி சாராயத்தைக் குடிச்சிட்டு, எந்த சாக்கடையிலயாவது விழுந்து கெடக்கும்... அதை விடும்மா... எங்கதை ரொம்ப நீளம்... என்ன காய் வேணும் சொல்லு...

    தமிழ்ச்செல்வி: உன் புள்ளைங்களையாவது நல்லா படிக்க வையு காளியம்மா... உன் கஷ்ட்டமெல்லாம் தீர்ந்திடும்... சரி... மொட்டைகோஸ் இருக்கா...? கால் கிலோ தா... அதுதான் எங்கம்மாவுக்கு ரொம்ப புடிக்கும்...

    காளியம்மா: ஏந்தாயீ... எப்ப காய் வாங்கினாலும் உங்க

    Enjoying the preview?
    Page 1 of 1