Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maanbumigu Maamiyar
Maanbumigu Maamiyar
Maanbumigu Maamiyar
Ebook114 pages41 minutes

Maanbumigu Maamiyar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாண்புமிகு மாமியார். நாங்க தீர்மானம் பண்ணிட்டோம். இன்னும் இரண்டு மணிநேரம் இந்த நாடகத்தை படிச்சுட்டு, சிரிப்பா சிரிச்சிட்டு நீங்களும் இந்த முடிவுக்குத்தான் வரபோறீங்க. யார் சார் அந்த அவர்கள்? அதை ஒரு பெரிய சஸ்பென்ஸோ த்ரில்லிங்கோ ஒரு சமூக ஆராய்ச்சியோ இல்லை. தண்டவாளம் மாதிரி ஒன்னு சேராம நூற்றாண்டு கணக்கா போயிட்டு இருக்கற மாமியார் மாட்டுப்பொண்ணு உறவுதான். எங்க வீட்டு ஒத்துப்போறாங்கன்னு யாரோ ஒரு அதிர்ஷ்டசாலி சொல்றது காதுல விழறது. ஆனா பாவம். அவர் லட்சத்தில ஒருத்தர்தானே? இது ஜனநாயக நாடு சார். மெஜாரிடி பார்க்கணுமே. இந்தப் பிரச்சினையைத்தான் ஆராய்ச்சி பண்ணி கொஞ்சம் அறுத்துப் பார்ப்போமேங்கற நப்பாசைதான் இந்த நாடகம்.

Languageதமிழ்
Release dateMar 18, 2023
ISBN6580136909089
Maanbumigu Maamiyar

Read more from Kalaimamani Kovai Anuradha

Related to Maanbumigu Maamiyar

Related ebooks

Reviews for Maanbumigu Maamiyar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maanbumigu Maamiyar - Kalaimamani Kovai Anuradha

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    மாண்புமிகு மாமியார்

    Maanbumigu Maamiyar

    Author:

    கலைமாமணி கோவை அனுராதா

    Kalaimamani Kovai Anuradha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-kovai-anuradha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    மாண்புமிகு மாமியார்

    காட்சி - 1

    காட்சி - 2

    காட்சி - 3

    காட்சி - 4

    காட்சி - 5

    காட்சி - 6

    காட்சி - 7

    காட்சி - 8

    காட்சி - 9

    காட்சி - 10

    காட்சி - 11

    காட்சி - 12.

    காட்சி - 13.

    காட்சி - 14.

    காட்சி - 15

    காட்சி - 16

    நாடகப் பாத்திரங்கள்

    1. மஹாதேவ சர்மா - ரிடையர்டு எஸ்.பி.ஸி.ஏ. இன்ஸ்பெக்டர்

    2. ராஜம்பாள் - சர்மாவின் மனைவி (மாமியார்)

    3. மோகனா - கலெக்டர் ஆபிஸ் டைப்பிஸ்ட் (மருமகள்)

    4. பாவானி – மோகனாவின் மருமகள்.

    5. சுந்தரேசன் - மோகனாவின் கணவன்.

    6. சுந்தரமோகன் - சுந்தரேசனின் மகன்.

    6. ஜெயராமன் - மோகனாவின் தந்தை (வீடு புரோக்கர்)

    7. பொன்னுச்சாமி - வண்ணான்

    மாண்புமிகு மாமியார்

    மாண்புமிகு மாமியார். நாங்க தீர்மானம் பண்ணிட்டோம். இன்னும் இரண்டு மணிநேரம் எங்களை பார்த்து சிரிப்பா சிரிச்சிட்டு நீங்களும் இந்த முடிவுக்குத்தான் வரபோறீங்க. யார் சார் அந்த அவர்கள்? அதை ஒரு பெரிய சஸ்பென்ஸோ த்ரில்லிங்கோ ஒரு சமூக ஆராய்ச்சியோ இல்லை. தண்டவாளம் மாதிரி ஒன்னு சேராம நூற்றாண்டு கணக்கா போயிட்டு இருக்கற மாமியார் மாட்டுப்பொண்ணு உறவுதான். எங்க வீட்டு ஒத்துப்போறாங்கன்னு யாரோ ஒரு அதிர்ஷ்டசாலி சொல்றது காதுல விழறது. ஆனா பாவம். அவர் லட்சத்தில ஒருத்தர்தானே? இது ஜனநாயக நாடு சார். மெஜாரிடி பார்க்கணுமே. இந்தப் பிரச்சினையைத்தான் ஆராய்ச்சி பண்ணி கொஞ்சம் அறுத்துப் பார்ப்போமேங்கற நப்பாசைதான் இந்த நாடகம்.

    நம்ம கதாநாயகன் சுந்தரேசனுக்கு ஒரு விபரீத ஆசை. அம்மாவையும், பொண்டாட்டியும் பேலன்ஸ்டா வச்சுக்கணும்னு, திண்டாடி மண்டையைப் பிச்சுக்கப் போறான். பாவம் சார் ஆண் வர்க்கம். கொஞ்சம் கை கொடுங்க சார்…

    காட்சி - 1

    (இடம்: ராஜம்பாள் வீடு. பாத்திரங்கள்: ராஜாம்பாள், மஹாதேவ சர்மா, சுந்தரேசன், வண்ணான் பொன்னுசாமி)

    கொடியில் சர்மா புடவை உணர்த்துகிறார். ராஜம், துளசி பூஜை செய்துக்கொண்டு இருக்கிறாள்.

    ராஜம்: உங்களை யாரு இந்த புடவையை ஒணத்தச் சொன்னா? பாக்கறவா என்னவோ இந்த ராஜம் ஆம்படையானை புடவையெல்லாம் துவைச்சுபோடச் சொல்றான்னு கேவலமா பேசுறதுக்கா…

    சர்மா: இதுல என்னடி கேவலம்… நீங்க எனக்கு வேஸ்டி துவைச்சி போடுறதில்லையா? அதைக் கேவலமாவா நினைக்கிறே? ஈக்குவல் பார்ட்னர் பார்ட்னர்சிப்னா இப்படித்தான் இருக்கணும்…

    ராஜம்: அது கிடக்கட்டும்… கொஞ்சம் மார்க்கெட் வரைக்கும் போகச் சொன்னேன்… அந்த வேலையை கவனிக்கக்கூடாதா?...

    சர்மா: என்னவோ இன்னைக்கு வெளியே போகணும்னு நினைச்சாலே தலை சுத்துறது…

    ராஜம்: ஏன்…?

    சர்மா: நீ காலம்பற பழைய பால்ல திரிதிரியா ஒரு காப்பி கலந்து கொடுத்தியே… அதைக் குடிச்சேன்… அப்படியே கிர்ர்னு சுத்தித்து… அதான்…

    ராஜம்: காபியிலே மிஸ்டேக்குன்னு சொல்றேளே?

    சர்மா: நான் எதுக்கு ராஜம் அப்படி சொல்லப்போறேன் பால்லயோ, டிகாஷன்லயோ மிஸ்டேக் இருந்தாலும் இருக்கலாங்கறேன்…

    ராஜம்: ஆமா இப்ப தலை நின்னுடுத்தோ இல்லையோ?

    சர்மா: ஐயையோ… எனக்கு 6 மாசத்துலேயே தலை நின்னுடுத்துன்னு எங்கம்மா சொல்லியிருக்கா…

    ராஜம்: சரி போரும். இதையெல்லாம் ஜோக்குன்னு சொல்லி என்னை ஏன் வீணா கஷ்டப்படுத்துறேள். இப்ப மணி என்ன தெரியுமா?

    சர்மா: 71/2 இருக்குமா?

    ராஜம்: 71/2 யா? நாளைக்குத்தான் இனிமே 71/2. இப்போது மணி 8 ஆகப்போறது.

    சர்மா: ஐயையோ… நான் ஸ்நானம் பண்ணி ஜபம் பண்ணனுமே… (திடீரென்று எழுந்திருக்கிறார்)

    ராஜம்: என்னமோன்னா, ஏதோ உருப்படி இல்லாம வேலை பண்ணின்டு… காலங்காத்தால ஜபம் தபம் பண்ணினால்தான் வீட்டுக்குள் லக்ஷ்மி வருவோ தெரியுமோ? என்ன ஜபம் பண்றேளோ?

    சர்மா: கோவிச்சுக்காதடீ குளிக்க டயம் ஆயிடுத்து… ஒனக்கு ஒன்னு தெரியுமா ராஜம்? ஆசாரமா இல்லாட்டா லக்ஷ்மி வரமாட்டான்னு இல்லே… காலங்காத்தால ஆம்படையான கோவிச்சுண்டாலும் லக்ஷ்மி வரமாட்டா தெரியுமோ?

    ராஜம்: நான் எல்லாம் பாயிண்டாத்தான் கோவிச்சுப்பேன்… நீங்களும்தான் ரிடையர் ஆனதிலிருந்து ஒன்னு சொன்னா ஒன்னு பண்ணி வைக்கிறேள்… எப்பதான் கேட்கிறதாம்… நேத்தைக்கு என்ன பண்ணினேள்?

    சர்மா: என்னடீ ராஜம்… திடீர்னு நேத்தைக்கு என்ன பண்ணினேன்? நீ கேட்டா எப்படிடீ சொல்றது ஒரு நாளைக்கு நீ எவ்வளவோ சொல்ற… நான் எவ்வளவோ பண்றேன்… பர்டிகுலரா குறிப்பிட்டு சொன்னாத்தானே முடியும்.

    ராஜம்: அந்த தகர குடம் அடியில தரதரன்னு ஒழுகறது… எதிர்த்த உப்புத் தண்ணி பைப்புல இருந்து ரெண்டு குடம் தண்ணி கொண்டு வர்றதுக்குள்ள பொடவையே தொப்பமா நனைஞ்சு போயிடறது… கடையில போயி ஈயத்தப் பத்து வச்சிட்டு வாங்கோன்னு சொன்னா என்ன பண்ணிட்டு வந்திருக்கேள்?

    சர்மா: ஓ… ஓ… அதைச் சொல்றயா? அது… அது… வந்து அவன் ரிப்பேர்ல ரொம்ப கெட்டிக்காரன் தெரியுமோ? அவனே சொன்னான் சாமி… கொடம் கீழே நல்லாத்தான் இருக்கு… இந்த கழுத்து பக்கம்தான் கொஞ்சம் ஆடறது… அதை பார்த்த வச்ச கொடுத்தறேன்னு… அனுபவத்தன் அவன் சொல்லும்போது எப்படி ராஜம் தட்டறது? வேணும்னா மறுபடியும் குடு… காண்பிச்சிட்டு வந்துடறேன்…

    Enjoying the preview?
    Page 1 of 1