Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ingeyum Sila Pookkal Malarum
Ingeyum Sila Pookkal Malarum
Ingeyum Sila Pookkal Malarum
Ebook89 pages34 minutes

Ingeyum Sila Pookkal Malarum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பல்வேறு கவிதை நூல்களும் மொழிபெயர்ப்பு நூல்களும் எனது படைப்புகளாக வெளிவந்துள்ளன. இருப்பினும் எனது சிறுகதைத் தொகுப்பு வெளிவருவது இதுவே முதன்முறை. வெளியீடு புஸ்தகா மூலம் அமைந்தது பெருமை.

பெரும்பாலும் பல்வேறு போட்டிகளில் பரிசு வாங்கிய எனது சிறுகதைகளின் தொகுப்பே "இங்கேயும் சில பூக்கள் மலரும்". அதிலும் சென்னை தினமலர் வாரமலர் டி.வி.ஆர் நினைவு 2016 ஆண்டு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூ.20000/- வென்ற சிறுகதையே இங்கேயும் சில பூக்கள் மலரும் சிறுகதையாகும்.

இச்சிறுகதையுடன் வேறு போட்டிகளில் வென்ற பதினோரு சிறுகதைகளைத் தொகுத்து இச்சிறுகதைத் தொகுப்பு வெளியாகிறது. புஸ்தகா ராஜேஷ் அவர்கள் சிறந்த வடிவமைப்புடன் இந்நூலை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன். இதன்மூலம் சிறுகதை இலக்கிய உலகில் காலடி எடுத்து வைக்கிறேன். இதற்கு அடிகோலிய எனது பெற்றோர்கள் தெய்வத்திரு. தர்மியா. ரா. குப்புசாமி ஐயர் தர்மியாகு. சுமித்ரா அம்மையார் இருவரையும் வணங்கி மகிழ்கிறேன். எழுத்துப் பணிகளில் தொடர்ந்து என்னை ஊக்குவிக்கும் எனது காதல் மனைவி லோகாவதி ஹரிஹரனுக்கும் நன்றி. மற்றும் புஸ்தகா நிறுவனத்திற்கும் வடிவமைப்பு அச்சுப் பணி மேற்கொண்ட பணியாளர்களுக்கும் நன்றி.

சிறுகதை நேயர்களுக்கும் இலக்கியப் படைப்பாளர்களுக்கும் இதனை வாசித்து என்னைத் தொடர்ந்து ஊக்குவிக்க இருப்போர்க்கும் உலகளாவிய சிறுகதை வாசிப்பாளர்களுக்கும் நன்றி.

Languageதமிழ்
Release dateAug 28, 2023
ISBN6580168310147
Ingeyum Sila Pookkal Malarum

Related to Ingeyum Sila Pookkal Malarum

Related ebooks

Reviews for Ingeyum Sila Pookkal Malarum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ingeyum Sila Pookkal Malarum - Ilaval Hariharan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இங்கேயும் சில பூக்கள் மலரும்

    (சிறுகதைகள்)

    Ingeyum Sila Pookkal Malarum

    (Sirukathaigal)

    Author:

    இளவல் ஹரிஹரன்

    Ilaval Hariharan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ilaval-hariharan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆங்கோர் ஏழை

    கூடு தேடும் பறவைகள்

    அவனும் நம் குலம்தான்

    அம்மாவின் சிரிப்பு

    மறந்து போன ஆசை முகம்

    ஈன்ற பொழுதிற் சிறுகதை

    தெய்வக் குழந்தைகள்

    ஒரு தீராநதி

    பீட்சா எனுந் தூண்டில்

    இரண்டு இட்லியும் ரத்னா கபேயும்

    அப்பாவின் நண்பர்

    இங்கேயும் சில பூக்கள் மலரும்

    ஆங்கோர் ஏழை

    டி.எச். லோகாவதி

    மதுரை.

    சார் ரெண்டு பேருக்கும் சேர்த்து நானூறு ரூபா கொடுங்க சார்.

    பரமன் கேட்டதும் பார்த்தசாரதிக்கு வந்ததே கோபம்.

    என்னப்பா இது அநியாயமா இருக்கு ஒரு நியாயம் வேணாம். இப்படியா கொஞ்ச நேர வேலைக்கு அடாவடியா கேப்பாங்க. கேக்கறதுக்கு ஆள் இல்லேன்னு ஒரேயடியாக் கேக்கறீங்களேப்பா நாங்களும் கஷடப்பட்டுத்தான் சம்பாதிக்கிறோம் பார்த்துக் கேளுங்கப்பா.

    குரல் உயர்த்தி கைகளை ஆட்டி ஏதோ சண்டைக்குச் செல்பவர் போலப் பேசினார்.

    பரமனுக்குச் சங்கடமாகவும் வருத்தமாகவும் இருந்தது. பார்த்த வேலைக்கு நியாயமான கூலி கேட்டாலும் தர யோசிக்கிறார்கள் இந்த மனிதர். அதுவும் இரண்டு பேர் பார்த்த வேலைக்கான கூலி. பாவம், கூட வந்தவன் படிக்கிற பையன் கைச்செலவுக்குப் பணம் கிடைக்குமே என்று வந்தவன், தெரிந்த பையன்தான்.இப்படியான வேலை என்றதும் மளமளவென இறங்கி வேலை பார்த்தவன்.

    சார் பார்த்த வேலைக்கு நானூறு குடுக்கிறதா இருந்தா கொடுங்க இல்லே...

    இதற்குள் பரமனின் பேச்சை இடைமறித்தார் பார்த்தசாரதி.

    இல்லேன்னா போலீசுக்குப் போயிருவியா. யூனியன் ஆட்களக் கூட்டி வருவியா என்ன செய்வே... என்ன செய்வே?

    பரமனைப் பார்த்துச் சத்தம் போட்டார்.

    பரமன் திகைத்துப் போனான்.

    சார் இதெல்லாம் நான் எங்கே சார் சொன்னேன். பணம் கொடுத்தாக் கொடுங்க இல்லே பணமே வேணாம் தர்மத்துக்கு வேலை பார்த்ததா இருக்கட்டும்னு சொல்ல வந்தேன் அதுக்குள்ளேயும் என்னென்னமோச் சொல்றீங்க

    அட நீ யாருப்பா எங்களுக்கு தர்மம் பண்றதுக்கு...

    தர்மம் என்ற வார்த்தையில் காயப்பட்ட பார்த்தசாரதி ரோஷமாகக் கேட்டார்.

    இதற்குள் அந்த அபார்ட்மெண்டில் உள்ள பிளாட் வாசிகள் கதவைத் திறந்து ஒவ்வொருவராய்க் கீழிறங்கி வந்தனர். பார்த்தசாரதியின் முகம் பார்த்தனர்.

    என்ன செகரட்ரி சார் என்ன பிராப்ளம்?

    நந்தகுமார் வினவினார். மூன்றாவது மாடியில் உள்ளவர்.

    பார்த்தசாரதி நடந்ததை விவரிக்க, நந்தகுமார் பரமனைப் பார்த்தார். அவனருகில் நின்றிருக்கும் பையனைப் பார்த்தார். அவருக்கு வியப்பானது.

    ஏம்ப்பா நீ இன்ஜினியரிங் படிக்கிறே இலலே காலேஜ் ஸ்டூடன்ட்தானே பேரு...

    நந்தகுமார் பெயரை ஞாபகப்படுத்திக் கொள்வதற்காக பேச்சை இழுக்க...

    ராசேந்திரன் சார் நீங்க இங்கேதான் இருக்கீங்களா சார் என்று கேட்டவன் பரமனைப் பார்த்து, அண்ணே சார் எங்க காலேஜ் வாத்தியார். எனக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்கிறவர் இங்கே காசு வாங்க வேண்டாம்ணே என்று நந்தகுமாரைச் சுட்டிக் காட்டியவாறு சொன்னான்.

    ஏப்பா நில்லு நில்லு நீ பாட்டுக்குப் பேசிக்கிட்டே போற இரு என்ற நந்தகுமார், சுற்றி நிற்கும் அபார்ட்மெண்ட் வாசிகளைப் பார்த்தார்.

    கடந்த பத்து நாட்களாக அந்த அபார்ட்மெண்ட் கழிவுநீர்ச் சாக்கடை அடைபட்டுக் கசிய ஆரம்பித்து அபார்ட்மெண்ட்டின் தரைதளம் முழுவதும் அசுத்தமாகி இருந்தது.

    கீழே ஒரு பகுதி இரு சக்கர வாகனங்கள், மறுபகுதி நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாகத்தான் இருந்தது. குடியிருப்போர் அனைவரும் மூக்கைப் பொத்திக் கொண்டு அதை மிதித்தபடி கழிவு நீர் மேலே தெறித்துவிடாதபடி நடந்தும் கடந்தும் சென்றபடி கண்டும் காணாது இருந்தனர். நாற்றம் அந்த அளவு சகிக்க முடியாதபடி இருந்தது. ஓரிரு முறை வாந்தி வருவது போலவும் இருந்தது.

    குடியிருப்போர் நலச்சங்கச் செயலர் பார்த்தசாரதியிடம் சொல்லிச் சொல்லிப் பார்த்தும் பயனில்லாததால் தெரிந்த நண்பர் ஒருவரிடம் சாக்கடை சுத்தம் செய்ய ஆள் அனுப்பச் சொல்லியிருந்தார்.

    ஆமா நீ நாராயணன் சொல்லித்தானே வந்தே பரமனைக் கேட்டார்.

    ஆமா சார் அந்தப் பலசரக்குக்கடைக்காரர் சொல்லித்தான் வந்தேன். சும்மாத்தானே இருக்கேன் ஏதாச்சும் புத்தகம் வாங்கக் காசு கிடைக்கும்னு இவனும் வந்தான். இங்கே வந்து சார்கிட்டே கேட்டதுக்கு, சரி செய்னார். ரெண்டரை மணி நேரம் வேலை பார்த்து மூச்சடக்கி சாக்கடையைச் சுத்தம் பண்ணோம் சார் நியாயமாத்தான் கூலி கேட்கிறோம் அதுக்கு இந்தப் பேச்சு பேசினா எப்படி சார்.

    Enjoying the preview?
    Page 1 of 1