Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வசந்தகால பூக்கள்
வசந்தகால பூக்கள்
வசந்தகால பூக்கள்
Ebook155 pages57 minutes

வசந்தகால பூக்கள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலையில் சாமி தரிசனம் முடித்துவிட்டு மலை இறங்கியபோது சற்று தூரத்தில் இருவழியாக பாதை பிரிந்தது. ஏதோ யோசனையில் வலது பக்கம் திரும்ப வேண்டியவன் இடது பக்கம் திரும்பி நடந்தான்.
 சிறிது தூரம் சென்றபின் தான் வந்த பாதையில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாது அமைதியான காட்டுப்பகுதியாக இருந்ததை உணர்ந்தான். சுற்றும் முற்றும் பார்க்க அங்கே அவன் கண்டகாட்சி அப்படியே அவனை உறைய வைத்தது. அங்கே ஒரு மரத்தின் பின்னால் ஒரு சிறுவனை கட்டிப்போட்டு கத்தியைக்காட்டி பயமுறுத்தியவாறு அவன் அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டிருந்தான் ஒருவன். பயத்தில் கத்தப்போன சிறுவன், திருடன் கையிலிருந்த கத்தியைப் பார்த்து, கண்களில் பயத்துடன் அழுது கொண்டிருந்தான்.
 சந்தானம் சமயோசிதமாய் நின்ற இடத்திலிருந்தவாறே, சற்றே உரத்த குரலில் "திருடன், திருடன் யாராவது ஓடி வாருங்கள். உதவி, உதவி" என்று சத்தம் போட திருடன் பயந்து போய் சிறுவனை விட்டு, விட்டு, கிடைத்த நகைகளுடன் ஓடிப்போய் விட்டான்.
 சந்தானம் சிறுவனிடம் விபரம் கேட்க, அப்பா, அம்மாவுடன் மருதமலைக்கு சாமி கும்பிட வந்ததாகவும், வந்த இடத்தில் தான் அவர்களை பிரிந்து விட்டதாகவும் கூறினான். 'நான் அழுது கொண்டிருந்தேன். அப்போது இந்த அங்கிள் வந்து என்னை அப்பாவிடம் அழைத்துப் போவதாக கூறி இங்கு அழைத்து வந்துவிட்டார்' என்றான்.
 சந்தானம் வசந்தனை அழைத்துக்கொண்டு போய் சாப்பாடு எல்லாம் வாங்கி கொடுத்து அவன்கூறிய முகவரியை விசாரித்து தெரிந்து கொண்டு - ஊட்டிக்கு வந்து சேர்ந்தான்.
 பிள்ளையைக் காணாது தவித்த அவன் பெற்றோர்கள் மருதமலை காவல் நிலையத்தில் புகார் செய்துவிட்டு அழுதவாறு ஊட்டி திரும்பியிருந்தனர். எதிர்பாராதவிதமாக பிள்ளை திரும்ப வந்ததைப் பார்த்ததும் அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பிள்ளையை வாரி எடுத்து மகிழ்ந்தனர்.ந்தானத்தை எஸ்டேட்டில் வேலை பார்த்துக்கொண்டு, வசந்தனுக்கு பாதுகாப்பாக இருக்கும் படியும் கூறி, தன் குடும்பத்தில் ஒருவனாக கண்ணபிரான் சேர்த்துக் கொண்டார்.
 பாமாவுடன் காதல் தோல்வியால் மனம் வெறுத்துப்போன சந்தானம் திருமணமும் செய்து கொள்ளவில்லை. வருடம் ஒருமுறை தன் சொந்த ஊருக்கு சென்று வருவான். அடுத்து அடுத்து வந்த ஆண்டுகளில் அவனது சித்தி கனகாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது. தம்பி பாபுவும் படித்து முடித்துவிட்டு சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தான்.
 ஊட்டியில் வசந்தனும், சந்தானத்தின் பேரில் அதிக பாசம் கொண்டிருந்தான். இப்போது அவனுக்கு 25 வயது. ஆண்டுகள் பல கடந்தன. சந்தானம் அந்த குடும்பத்தில் ஒருவராகி விட்டார்.
 வசந்தனும் நல்ல பண்புகளை கொண்டவனாகவே இருந்தான். இருவேறு ரசனைகளை கொண்டிருந்தான். வயதிற்கேற்ற உடலமைப்புடன், பணக்கார பொலிவு முகத்தில் தெரிய நன்கு படித்து நாகரீகமாகவும் இருந்தான். பரத நாட்டியத்தையும் ரசித்தான். காபரே டான்ஸையும் கண்டு களித்தான். அவனைப் பொறுத்தவரை அழகை ரசிப்பதில் தவறில்லை. அதை அனுபவிக்க நினைப்பது தவறு என்று! எண்ணுபவன் அதற்காக அவன் பெண்களிடம் பழகாமல் இருந்ததில்லை. வரம்பு தாண்டாமல் அவன் பழக்கம் இருக்கும். பணக்கார இளைஞர்களுக்கே உரிய சில தீய பழக்க வழக்கங்கள் இல்லாதவன். அவனும், சந்தானத்துடன் சேர்ந்து உழைத்த உழைப்பினால் எஸ்டேட்டில் நல்ல வருமானம் வந்தது...
 அவளது பெற்றோர்கள் அவனுக்கு பெண்பார்க்கத் தொடங்கினார்கள். இனம் இனத்தோடு சேரும். பணம் பணத்தோடு சேரும் என்பதற்கிணங்க, இன்னொரு எஸ்டேட்டின் உரிமையாளர் பரசுராமின் மகள் வித்யாவை பேசி முடித்தனர். திருமணத்திற்கு நாள் குறித்து எல்லோரும் ஆவலாக இருந்த போது தான் அந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.
 அன்றும் வழக்கம் போல ஜீப்பை எடுத்துக்கொண்டு வெளியே வசந்தன் கிளம்பும் போது, சந்தானம் "கல்யாண மாப்பிள்ளை அதிகம் வெளியே போகக்கூடாது" என்று தடுத்தார். ஆனால் வசந்தன் சிரித்துக்கொண்டே கிளம்பி விட்டான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223308362
வசந்தகால பூக்கள்

Read more from Prema Rathnavel

Related to வசந்தகால பூக்கள்

Related ebooks

Related categories

Reviews for வசந்தகால பூக்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வசந்தகால பூக்கள் - Prema Rathnavel

    1

    மார்கழி மாதம் ஈரோடு மாவட்டத்தில் ஒரு சின்ன கிராமம் மக்கள் அதிகாலை எழுந்து குளித்து கோவிலுக்குப் போகிறார்கள்... கோவிலின் மணி ஓசை காதுக்கு இனிமையாக இருக்கிறது.

    கிராமத்தின் முக்கிய தெருவிலுள்ள கல்யாணமாகாத பெண்களும் காலையிலேயே கோவிலுக்கு சென்று ஆண்டாளின் - திருப்பாவையை பாடியவாறு கோவிலை வலம் வருகிறார்கள்.

    உமா மகேஸ்வரியும் தன் தோழி ராதாவுடன் அந்தக் கூட்டத்தில் இருந்தாள்.

    உமாவும், ராதாவும் சிறு வயது தோழிகள். அவர்கள் வீடு அடுத்த, அடுத்த தெருக்களில் இருந்ததால் இருவரின் குடும்பத்துக்குள்ளும் நெருக்கம் அதிகமாக இருந்தது.

    உமா நடுத்தர வர்க்கம். அவள் தான் மூத்தவள். அவளுக்கு கீழே ஒரு தங்கையும், தம்பியும் உண்டு. அவளது அப்பா சத்தியமூர்த்தி. அரசாங்க அலுவலகம் ஒன்றில் தலைமை கிளார்க்காக வேலைபார்ப்பவர். நேர்மையானவர். உமாவும் பிளஸ் டூ முடித்து நர்ஸிங் பயிற்சி பெற்று ஓர் ஆஸ்பத்திரியில் ஸ்டாப்நர்ஸாக வேலை பார்த்தாள். அம்மா குணவதி வீட்டைப் பார்த்துக் கொள்கிறார். தம்பி கல்லூரியில் முதல் வருடமும், தங்கை ப்ளஸ்-1ம் படித்தனர்.

    ராதாவின் குடும்பம் சற்று வசதி குறைவானது. அவளது அப்பா வேதாசலம் ஒரு கடையில் வேலை பார்க்கிறார். குறைவான சம்பளம். அவரது மனைவி சாந்தா வீடுகளில் ஆர்டர் எடுத்து அப்பளம் இடுவது, முறுக்கு, தட்டை, அதிரசம், சீடை போன்ற பலகாரங்கள் செய்து தருவது என்று ஓரளவு வருமானம் பார்த்துக் கொண்டிருந்தார்.

    கஷ்டமான சூழ்நிலையிலும் ராதாவை கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தனர். அவள் தங்கை ரேகா, சற்றே திக்கி, திக்கிப் பேசுபவள். அதை ஒரு பெரிய குறையாக கருதாமல், அவளை நல்ல முறையிலே படிக்க வைத்தனர். அவளும் நன்றாக படித்ததுடன், கட்டுரை எழுதும் போட்டிகள், ரங்கோலி கோலம் போடுவது, பூ வேலை செய்வது என கைவேலைத்திறனை வளர்த்துக் கொண்டிருந்தாள்.

    ஊட்டியிலுள்ள கண்ணபிரான் எஸ்டேட் மிகப்பெரியது. அவரும், அவரது மனைவி ஜமுனாவும், ஒரே மகன் வசந்தன் ஆகிய மூவர்கொண்ட இனிய குடும்பத்தில் ஒருவராகவும், வசந்தனுக்கு உதவியாளராகவும் இருந்து வந்தார் சந்தானம்.

    சந்தானமும், வசந்தனும் காலையில் ஜீப்பில் ஏறி, காரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறி தோட்டங்களுக்கு சென்று பார்வையிட்டு மொத்த வியாபாரிகளுக்கு காய்கறிகளை முறையாக வழங்கிவிட்டு வீடு திரும்பியதும், டிபன் முடித்துவிட்டு கணக்கு வழக்குகளை பார்ப்பது வழக்கம்.

    2

    அங்கிள் என்று வசந்தனால் அழைக்கப்பட்ட சந்தானம் சேலம் மாவட்டம். அவனது அப்பா கந்தசாமி மெயின் ரோட்டில் சிறிய ஹோட்டல் ஒன்று நடத்தி வந்தார். சந்தானத்திற்கு படிப்பு வரவில்லை. எனவே பத்தாம் வகுப்பு முடித்தகையோடு அப்பாவுடன் ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டு வந்தான். அவனுக்கு ஒரு தம்பி பாபு பிளஸ்-2 படித்துக் கொண்டிருந்தான்.

    இந்நிலையில் அம்மா சத்யவதி காய்ச்சல் என்று படுத்தவர்தான். எந்த மருத்துவ முறைக்கும் கட்டுப்படாது உயிரைவிட்டு விட்டார். குடும்பமே ஆடிப் போனது. சந்தானத்திற்கு அப்போது இருபது வயது. அம்மா இறந்த மூன்று மாதங்களுக்குப்பின் அவனது அப்பா ஒரு ஏழைப் பெண்ணுக்கு வாழ்வளிக்கிறேன் என்று 2-ம் கல்யாணம் பண்ணிக்கொண்டார்.

    இது பிள்ளைகளுக்கு பிடிக்கவில்லை. சித்தி கனகா அவர்களிடம் நன்றாகவே நடந்து கொண்டாலும் அவர்களால் அவளை தாயாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாளானால் எல்லாம் சரியாகிவிடும் என்று கந்தசாமியும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

    நிலைமை இப்படியிருக்க சித்தி கனகாவின் உறவுக்காரப்பெண் பாமா சேலத்திலுள்ள கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்காக, இவர்களின் வீட்டிற்கு வந்தாள்.

    பாமா நல்ல பருவத்தில் இருந்தாள். அவளைப்பார்த்ததும் சந்தானத்தின் மனதில் சலனம் ஏற்பட்டது. அவளுக்காக உருகி வழிந்தான், அவள் பின்னால் திரிந்தான். இதைப் புரிந்து கொண்ட பாமாவும், தன் தேவைகளுக்கு அவனை எடுபடியாக பயன்படுத்திக் கொண்டாள். நாட்கள் சென்றன. சந்தானத்திற்கு பாமாவை விட்டு வாழ முடியாது என்று பித்து பிடித்தவனாக மாறினான். ஆனால் பாமா சுயநலவாதியாக இருந்தாள். 3 ஆண்டுகள் கல்லூரி படிப்பு முடித்தவுடன் சந்தானத்திடம் ‘உங்களுக்கு படிப்பு இல்லை என் மீது ஆசையை வளர்க்காதீர்கள்’ என தலையில் இடியை இறக்கிவிட்டு சென்று விட்டாள்.

    சந்தானத்திற்கு அப்போதுதான் உலகம் புரிய ஆரம்பித்தது. பித்து பிடித்தவன் போல் ஆனான் அவன் நிலைமையை புரிந்து கொண்ட அவன் தந்தை நீ இப்படியே இருந்தால் சரிப்படாது. என் நண்பன் சங்கரன் சென்னையில் இருக்கிறான். அவனைப் போய்ப்பாரு. அவன் ஏதாவது ஒரு வேலையில் உன்னைச் சேர்த்து விடுவான். அதிலிருந்து முன்னேறும் வழியைப்பார் என்றவர் ஒரு லெட்டரும், கொஞ்சமும் பணமும் கொடுத்தார்.

    சந்தானம் மறு நாளே சேலத்தை விட்டு கிளம்பினான். ஆனால் விதி அவனை வேறு பாதைக்கு இழுத்தது. ஊரை விட்டு கிளம்பும்முன் மருதமலை முருகனை வழிபட்டுவிட்டு செல்லுவோம் என்று தோன்ற மருதமலைக்கு வந்துவிட்டான். அங்கு அவர் வாழ்க்கையில் ஒரு மாறுதல் ஏற்பட்டது.

    3

    காலையில் சாமி தரிசனம் முடித்துவிட்டு மலை இறங்கியபோது சற்று தூரத்தில் இருவழியாக பாதை பிரிந்தது. ஏதோ யோசனையில் வலது பக்கம் திரும்ப வேண்டியவன் இடது பக்கம் திரும்பி நடந்தான்.

    சிறிது தூரம் சென்றபின் தான் வந்த பாதையில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாது அமைதியான காட்டுப்பகுதியாக இருந்ததை உணர்ந்தான். சுற்றும் முற்றும் பார்க்க அங்கே அவன் கண்டகாட்சி அப்படியே அவனை உறைய வைத்தது. அங்கே ஒரு மரத்தின் பின்னால் ஒரு சிறுவனை கட்டிப்போட்டு கத்தியைக்காட்டி பயமுறுத்தியவாறு அவன் அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டிருந்தான் ஒருவன். பயத்தில் கத்தப்போன சிறுவன், திருடன் கையிலிருந்த கத்தியைப் பார்த்து, கண்களில் பயத்துடன் அழுது கொண்டிருந்தான்.

    சந்தானம் சமயோசிதமாய் நின்ற இடத்திலிருந்தவாறே, சற்றே உரத்த குரலில் திருடன், திருடன் யாராவது ஓடி வாருங்கள். உதவி, உதவி என்று சத்தம் போட திருடன் பயந்து போய் சிறுவனை விட்டு, விட்டு, கிடைத்த நகைகளுடன் ஓடிப்போய் விட்டான்.

    சந்தானம் சிறுவனிடம் விபரம் கேட்க, அப்பா, அம்மாவுடன் மருதமலைக்கு சாமி கும்பிட வந்ததாகவும், வந்த இடத்தில் தான் அவர்களை பிரிந்து விட்டதாகவும் கூறினான். ‘நான் அழுது கொண்டிருந்தேன். அப்போது இந்த அங்கிள் வந்து என்னை அப்பாவிடம் அழைத்துப் போவதாக கூறி இங்கு அழைத்து வந்துவிட்டார்’ என்றான்.

    சந்தானம் வசந்தனை அழைத்துக்கொண்டு போய் சாப்பாடு எல்லாம் வாங்கி கொடுத்து அவன்கூறிய முகவரியை விசாரித்து தெரிந்து கொண்டு - ஊட்டிக்கு வந்து சேர்ந்தான்.

    பிள்ளையைக் காணாது தவித்த அவன் பெற்றோர்கள் மருதமலை காவல் நிலையத்தில் புகார் செய்துவிட்டு அழுதவாறு ஊட்டி திரும்பியிருந்தனர். எதிர்பாராதவிதமாக பிள்ளை திரும்ப வந்ததைப் பார்த்ததும் அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பிள்ளையை வாரி எடுத்து மகிழ்ந்தனர்.

    சந்தானத்தை எஸ்டேட்டில் வேலை பார்த்துக்கொண்டு, வசந்தனுக்கு பாதுகாப்பாக இருக்கும் படியும் கூறி, தன் குடும்பத்தில் ஒருவனாக கண்ணபிரான் சேர்த்துக் கொண்டார்.

    பாமாவுடன் காதல் தோல்வியால் மனம் வெறுத்துப்போன சந்தானம் திருமணமும் செய்து கொள்ளவில்லை. வருடம் ஒருமுறை தன் சொந்த ஊருக்கு சென்று வருவான். அடுத்து அடுத்து வந்த ஆண்டுகளில் அவனது சித்தி கனகாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது. தம்பி பாபுவும் படித்து முடித்துவிட்டு சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தான்.

    ஊட்டியில் வசந்தனும், சந்தானத்தின் பேரில் அதிக பாசம் கொண்டிருந்தான். இப்போது அவனுக்கு 25 வயது. ஆண்டுகள் பல கடந்தன. சந்தானம் அந்த குடும்பத்தில் ஒருவராகி விட்டார்.

    வசந்தனும் நல்ல பண்புகளை கொண்டவனாகவே இருந்தான். இருவேறு ரசனைகளை கொண்டிருந்தான். வயதிற்கேற்ற உடலமைப்புடன், பணக்கார பொலிவு முகத்தில் தெரிய நன்கு படித்து நாகரீகமாகவும் இருந்தான். பரத நாட்டியத்தையும் ரசித்தான். காபரே டான்ஸையும் கண்டு களித்தான். அவனைப் பொறுத்தவரை அழகை ரசிப்பதில் தவறில்லை. அதை அனுபவிக்க நினைப்பது தவறு என்று! எண்ணுபவன் அதற்காக அவன் பெண்களிடம் பழகாமல் இருந்ததில்லை. வரம்பு தாண்டாமல் அவன் பழக்கம் இருக்கும். பணக்கார இளைஞர்களுக்கே உரிய சில தீய பழக்க வழக்கங்கள் இல்லாதவன். அவனும், சந்தானத்துடன் சேர்ந்து உழைத்த உழைப்பினால் எஸ்டேட்டில் நல்ல வருமானம் வந்தது...

    அவளது பெற்றோர்கள் அவனுக்கு பெண்பார்க்கத் தொடங்கினார்கள். இனம் இனத்தோடு சேரும். பணம் பணத்தோடு சேரும் என்பதற்கிணங்க, இன்னொரு எஸ்டேட்டின் உரிமையாளர் பரசுராமின் மகள் வித்யாவை பேசி முடித்தனர். திருமணத்திற்கு நாள் குறித்து எல்லோரும்

    Enjoying the preview?
    Page 1 of 1