Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இன்னார்க்கு இன்னாரென்று…
இன்னார்க்கு இன்னாரென்று…
இன்னார்க்கு இன்னாரென்று…
Ebook187 pages1 hour

இன்னார்க்கு இன்னாரென்று…

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"அத்தை, அத்தை," என கூவிக்கொண்டே வந்த, தன் மருமகள், இலக்கியாவை, "வாடியம்மா, ஏதமா, மூணு நாளா, இந்த பொண்ணை காணோமேன்னு, தவித்து போயிட்டேன்," என்று கூறியவாறே, இலக்கியாவை வரவேற்றார்.
 இவளின் குரலை கேட்ட, அத்தை மகள்கள், வனஜா, கோகிலா இருவரும், அவளை பார்த்து, கேலியாக,
 "ஏண்டி வர்றதுதான் வரே! அதென்ன, அத்தை, அத்தைன்னு, ஏலம் போட்டுட்டு வரே! அமைதியா வரத் தெரியாதா?" என்றனர்.
 "உம் அமைதியா வந்தா, அவளுக்கு பெயர் 'இலக்கியா' இல்லையே!" என்றார். அத்தையும் சேர்ந்து கொண்டு,
 "என்ன அத்தை! நீங்களுமா!" என்று சிணுங்கினாள்.
 அப்போதுதான் மாடியிலிருந்து இறங்கி வந்த, சித்தார்த், 3 நாட்களாக, பார்க்கமுடியாமல், தவித்தவன் இன்று, அவளை பார்த்ததும், மனசுக்குள் மகிழ்ச்சி அடைந்தான். ஆனாலும், அதை வெளிக்காட்டாது, தன் தங்கைகளிடம்,
 "மூன்று நாளும், வீடு எவ்வளவு அமைதியாயிருந்தது. இன்று பார், ஒரே காட்டு கத்தலா இருக்கு" என்றான்.
 இதை கேட்ட இலக்கியாவின் மனசு, சுருண்டது. இவனை பார்க்காது, தவித்துபோய் ஓடி வந்தால், நம் வருகையும், பேச்சும், அவனக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. ஆசையாகவோ, கேலியாகவோ பேசவேண்டாம். ஒரு பார்வையாவது பார்த்தால் ஆகாதா! நாம்தான், இவன் மீது உயிரை வைத்திருக்கோமோ! அவனுக்கு நம்மீது எந்த எண்ணமும் இல்லையோ! என்று மனசுக்குள் தவித்தாலும், எதையும் வெளிகாட்டாது, அத்தையிடம், "நான் வர்றேன், அத்தை, என்னால் யாருக்கும், எந்த சங்கடமும் வேண்டாம்." என்று கிளம்ப ஆயத்தமானாள்."ஏண்டி, உனக்கென்னாயிற்று? இன்றைக்கு, அவன் ஏதோ, விளையாட்டா, சொன்னான். இதைபோய், சீரியஸா எடுத்துகிட்டு," என்று சமாதானம், சொன்னார்.
 சித்தார்த், சும்மா இராது, "ஏம்மா போறவங்களை தடுக்கிறீங்க! இன்றைக்கு, காலை டிபன், வெங்காய ஊத்தப்பம்; நான்கு மிச்சம்" என்றான். அவள் ரோஷமாக.
 "அத்தை, நான் ஒன்றும், எங்க வீட்டிலே சாப்பாடு இல்லாமல் உங்க வீட்டுக்கு சாப்பிட வரல்லை! 3 நாளாக, உங்களை எல்லாம் பார்க்கலையேன்னு, வந்தா! நீங்க, இப்படித்தான் பேசறதா! இனிமேல், நான், உங்க வீட்டுக்கு, வந்தா, ஏன் வந்தேன்னு? கேளுங்க!" என்றவள் கண்கலங்க, குரல் தழுதழுக்க, உடனே வேகமாக அங்கிருந்து செல்ல ஆரம்பித்தாள்.
 இதை எதிர்பார்க்காதவர்கள், திகைச்சு போய் நிற்க, அத்தை, தான், "ஏ., இலக்கியா நில்," என்று கூற, அதை காதில் வாங்கி கொள்ளாத, இறங்கிய, இலக்கியாவின் காதுகளில், சித்தார்த் கூறியது, ஸ்பஷ்டமாக விழுந்தது. தன் அம்மா அழைத்தும், பதில் பேசாது சென்றவளின் மீது சித்தார்த்க்கு, கோபம் வர...
 "போனா, போறா! விடுங்கம்மா! ஏன் போய் கெஞ்சிக்கிட்டு இருக்கீங்க!" என்று அம்மாவை கடிந்து கொண்டான். ஆனா மனசில், சங்கடமாக உணர்ந்தான். தான் எப்போதும் போல், அவளை சீண்ட, இன்று என்னாயிற்று, அவளுக்கு! என யோசித்தான்.
 அவன் அம்மாவோ, "பாவம்டா, அந்த பொண்ணு, அத்தை, அத்தைன்னு நம்ம வீட்டையே சுத்தி, சுத்தி வரா! அவளை போய்" என்று தன் மகனிடம், ஆதங்கப்பட்டார்.
 இதையெல்லாம், பார்த்தும், கேட்டும் கொண்டிருந்த, அவன் தங்கைகளும் அம்மாவுக்கு ஆதரவாக பேச, அவன், மௌனமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
 தன்வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த இலக்கியாவின் மனமோ, சொல்ல முடியாத வேதனையில், தத்தளிக்க, பொங்கி வந்த கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கினாள். 'இது விஷயம் நம் வீட்டுக்கு தெரியகூடாது.' என எண்ணியவள். தன் முகத்தை நன்கு துடைத்துவிட்டு, இயல்பாக வைத்துகொண்டு, சென்றாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 16, 2023
ISBN9798223289449
இன்னார்க்கு இன்னாரென்று…

Read more from Prema Rathnavel

Related to இன்னார்க்கு இன்னாரென்று…

Related ebooks

Related categories

Reviews for இன்னார்க்கு இன்னாரென்று…

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இன்னார்க்கு இன்னாரென்று… - Prema Rathnavel

    1

    மூன்று நாட்களாக, ‘நச நச’வென, பெய்த மழை, அன்றுதான் விட்டிருந்தது, மேகத்தினுள்ளே மறைந்திருந்த ஆதவன். அன்றுதான், தனது ஒளி பொருந்திய முகத்தை காட்டினான். அதனை பார்த்த தாவரங்கள், தங்களின், தலையை ஆட்டி, அவனின் வருகையை வரவேற்றன.

    மழைநீரில், குளித்திருந்ததால், தாவரங்கள், யாவும், பசுமைநிறம் பெற்று, காண்பதற்கு கண்ணை கவர்வதாகவும், குளுமையை அளிப்பதாகவும், இருக்க, மகிழ்ச்சியாக இருந்தது. என்னதான் இருந்தாலும், இயற்கை, தரும் மகிழ்ச்சிக்கு ஈடுஇணையேது?

    மழையின் காரணமாக வீட்டுக்குள்ளே, முடங்கியிருந்த ஆண்களும், பெண்களும், மகிழ்ச்சியுடன், வெளியே வந்தனர். தங்களின், கடமையை செய்ய விரைந்தனர். குழந்தைகள், தங்கள் புத்தகச்சுமையுடன், பள்ளிக்கு புறப்பட்டனர்.

    கால்நடைகளும், உடலை சிலிர்த்துகொண்டு, தங்கள் மேய்ச்சல், நிலத்திற்கு சென்றன.

    பறவைகளும், தங்கள் கூட்டைவிட்டு, மகிழ்ச்சியில், தங்களுக்கே, உரித்தான, ஒலியை எழுப்பியவாறே, இரையைத் தேடி சென்றன.

    ‘மூன்று நாட்களாக, தனது வீட்டிலிருந்து, இரண்டு தெரு தள்ளியிருக்கும். அத்தை வீட்டுக்கு செல்ல முடியாது தவித்து கொண்டிருந்த இலக்கியா, மிக்க, மகிழ்ச்சியுடன் அம்மாவிடம், சொல்லிவிட்டு, அவரின் பதிலுக்கு காத்திருக்காமல், சிட்டென பறந்து விட்டிருந்தாள்.’

    அவளின் வேகத்தை கண்ட, அவளின் அம்மா, பர்வதம், ‘அடி ஆத்தி, என்ன வேகம்ன்’னு தனக்குள்ளே, பேசிக்கொண்டு, வேலையை கவனித்தார்.

    என்ன, உனக்குள்ளேயே, பேசிக்கிறே! என்று கேட்டவாறே வந்தார் அவளின் கணவர் சபேசன்.

    உம் நான் என்னத்தே பேசப்போறேன்! எல்லாம் உங்க மகளை பற்றித்தான்.

    ம்... அவளுக்கென்ன? என்றார்.

    அவளுக்கென்ன, காலையிலே அத்தை வீட்டுக்கு போறேன், சொல்லி மான்குட்டியாட்டம், துள்ளி, ஓடுறா! என்றார் பெருமையாக,

    அதை கேட்ட சபேசன், மனதில் மிக்க மகிழ்ச்சியுடன், உம் இந்த 3 நாளா, அவள் வீட்டில் இருந்ததே, பெரிய அதிசயம் என்று நினைத்தவர், தன் மனைவியிடம், பெருமையாக,

    உம், அவ சாப்பாடு இல்லாம கூட இருப்பா! ஆனா, அவ, அத்தை வீட்டுக்கு போகாம இருப்பாளா?

    ஆமாங்க! அவ மனசுபோல, வாழ்க்கை அமையணும். என்றார்.

    அதைபத்தி, நீ ஏன், கவலைப்படுறே! எல்லாம் நல்லவிதமாக அமையும்! என் தங்கை, அமிர்தம் தன் மகன், சித்தார்த்துக்குதான் இலக்கியா என்று கூறியிருக்கிறாள். இலக்கியாவும், அத்தையின்மீது, அதிகளவு - பாசம் வைத்திருக்கிறாள். தங்கையின், மகன் சித்தார்த்துக்கும், அப்படி ஓர் எண்ணம், இருக்கு! அப்படியிருக்கும் போது நீ ஏன் கவலைப்படுறே!

    ம்... நீங்க சொல்வது என்னவோ உண்மைதான். ஆனால் உங்க மச்சினர், ராமலிங்கம் அண்ணனுக்கு விருப்பம், இருப்பதுபோல் தெரியவில்லையே!

    அதுதான் என் கவலை என்று கூறி ஆதங்கப்பட்டார்.

    பர்வதம், யார் என்ன நினைத்து என்ன! அவளுக்கென்னு, எங்கே வாழ்க்கை அமையுமோ! அங்குதான் அமையும். நம்முடையது வெறும் முயற்சி மட்டும்தான். முடிவு, வெற்றியோ, தோல்வியோ, இறைவன் வசம். எனவே மனதை அலைபாயவிடாது. நல்லதே நடக்கும் என்று பொறுமையாக இருப்போம். என்று பேசி முடித்தார்.

    அதை கேட்ட அவள் மனைவி ஆறுதலடைந்தவர், சரி, சாப்பிட வாங்க! உங்களுக்கு பிடித்த இடியாப்பமும், குருமாவும், வச்சிருக்கு! என்று கூறி,

    அவர் சாப்பிடுவதற்கு, தட்டு எடுத்து பரிமாற ஆரம்பித்தார்.

    காலை டிபன், அவளுக்கு பிடித்தமானதாக இருக்க, மனைவி பரிமாறியதை, ரசித்து ருசித்து சாப்பிட்டவர், நீ, சாப்பிடலையா? என்றார்.

    உம், நான் என்னிக்கு, நீங்க சாப்பிடாம, சாப்பிட்டிருக்கேன்.

    அதை கேட்டவர், ஏண்டி உனக்கு பசிச்சா, நீ சாப்டவேண்டியதுதானே! இன்னும், அந்த காலம் மாதிரியே நடக்கிறே! என்று அன்புடன் கடிந்து கொண்டார். அதை காதில், வாங்கிகொள்ளாதவர் போன்று, இன்னுமொரு இடியாப்பத்தை அவரின் தட்டில் வைத்தார்.

    என்ன இன்னிக்கு இடியாப்பம்

    உங்க பொண்ணுக்கும் பிடிக்குமே! அதனால் செஞ்சேன்! ஆனா, அவ எங்கே, எப்படா விடியும்னு எழுந்ததும், குளிச்சுட்டு, அத்தைவீட்டுக்கு ஓடியே போயிட்டா! என்றார். சாதாரணமாக

    2

    "அத்தை, அத்தை, என கூவிக்கொண்டே வந்த, தன் மருமகள், இலக்கியாவை, வாடியம்மா, ஏதமா, மூணு நாளா, இந்த பொண்ணை காணோமேன்னு, தவித்து போயிட்டேன்," என்று கூறியவாறே, இலக்கியாவை வரவேற்றார்.

    இவளின் குரலை கேட்ட, அத்தை மகள்கள், வனஜா, கோகிலா இருவரும், அவளை பார்த்து, கேலியாக,

    ஏண்டி வர்றதுதான் வரே! அதென்ன, அத்தை, அத்தைன்னு, ஏலம் போட்டுட்டு வரே! அமைதியா வரத் தெரியாதா? என்றனர்.

    உம் அமைதியா வந்தா, அவளுக்கு பெயர் ‘இலக்கியா’ இல்லையே! என்றார். அத்தையும் சேர்ந்து கொண்டு,

    என்ன அத்தை! நீங்களுமா! என்று சிணுங்கினாள்.

    அப்போதுதான் மாடியிலிருந்து இறங்கி வந்த, சித்தார்த், 3 நாட்களாக, பார்க்கமுடியாமல், தவித்தவன் இன்று, அவளை பார்த்ததும், மனசுக்குள் மகிழ்ச்சி அடைந்தான். ஆனாலும், அதை வெளிக்காட்டாது, தன் தங்கைகளிடம்,

    மூன்று நாளும், வீடு எவ்வளவு அமைதியாயிருந்தது. இன்று பார், ஒரே காட்டு கத்தலா இருக்கு என்றான்.

    இதை கேட்ட இலக்கியாவின் மனசு, சுருண்டது. இவனை பார்க்காது, தவித்துபோய் ஓடி வந்தால், நம் வருகையும், பேச்சும், அவனக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. ஆசையாகவோ, கேலியாகவோ பேசவேண்டாம். ஒரு பார்வையாவது பார்த்தால் ஆகாதா! நாம்தான், இவன் மீது உயிரை வைத்திருக்கோமோ! அவனுக்கு நம்மீது எந்த எண்ணமும் இல்லையோ! என்று மனசுக்குள் தவித்தாலும், எதையும் வெளிகாட்டாது, அத்தையிடம், நான் வர்றேன், அத்தை, என்னால் யாருக்கும், எந்த சங்கடமும் வேண்டாம். என்று கிளம்ப ஆயத்தமானாள்.

    ஏண்டி, உனக்கென்னாயிற்று? இன்றைக்கு, அவன் ஏதோ, விளையாட்டா, சொன்னான். இதைபோய், சீரியஸா எடுத்துகிட்டு, என்று சமாதானம், சொன்னார்.

    சித்தார்த், சும்மா இராது, ஏம்மா போறவங்களை தடுக்கிறீங்க! இன்றைக்கு, காலை டிபன், வெங்காய ஊத்தப்பம்; நான்கு மிச்சம் என்றான். அவள் ரோஷமாக.

    அத்தை, நான் ஒன்றும், எங்க வீட்டிலே சாப்பாடு இல்லாமல் உங்க வீட்டுக்கு சாப்பிட வரல்லை! 3 நாளாக, உங்களை எல்லாம் பார்க்கலையேன்னு, வந்தா! நீங்க, இப்படித்தான் பேசறதா! இனிமேல், நான், உங்க வீட்டுக்கு, வந்தா, ஏன் வந்தேன்னு? கேளுங்க! என்றவள் கண்கலங்க, குரல் தழுதழுக்க, உடனே வேகமாக அங்கிருந்து செல்ல ஆரம்பித்தாள்.

    இதை எதிர்பார்க்காதவர்கள், திகைச்சு போய் நிற்க, அத்தை, தான், ஏ., இலக்கியா நில், என்று கூற, அதை காதில் வாங்கி கொள்ளாத, இறங்கிய, இலக்கியாவின் காதுகளில், சித்தார்த் கூறியது, ஸ்பஷ்டமாக விழுந்தது. தன் அம்மா அழைத்தும், பதில் பேசாது சென்றவளின் மீது சித்தார்த்க்கு, கோபம் வர...

    போனா, போறா! விடுங்கம்மா! ஏன் போய் கெஞ்சிக்கிட்டு இருக்கீங்க! என்று அம்மாவை கடிந்து கொண்டான். ஆனா மனசில், சங்கடமாக உணர்ந்தான். தான் எப்போதும் போல், அவளை சீண்ட, இன்று என்னாயிற்று, அவளுக்கு! என யோசித்தான்.

    அவன் அம்மாவோ, பாவம்டா, அந்த பொண்ணு, அத்தை, அத்தைன்னு நம்ம வீட்டையே சுத்தி, சுத்தி வரா! அவளை போய் என்று தன் மகனிடம், ஆதங்கப்பட்டார்.

    இதையெல்லாம், பார்த்தும், கேட்டும் கொண்டிருந்த, அவன் தங்கைகளும் அம்மாவுக்கு ஆதரவாக பேச, அவன், மௌனமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

    தன்வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த இலக்கியாவின் மனமோ, சொல்ல முடியாத வேதனையில், தத்தளிக்க, பொங்கி வந்த கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கினாள். ‘இது விஷயம் நம் வீட்டுக்கு தெரியகூடாது.’ என எண்ணியவள். தன் முகத்தை நன்கு துடைத்துவிட்டு, இயல்பாக வைத்துகொண்டு, சென்றாள்.

    தன் வீட்டுக்குள் வந்த மகளை பார்த்த பர்வதம்,... என்னம்மா இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே! அத்தை, வீட்டிலே இல்லையா? என்றார்.

    ஆமாம்மா! அத்தை, எங்கேயோ வெளியே கிளம்பிட்டிருந்தாங்க! கிளம்பும்போது எங்கேன்னு கேட்ககூடாதுன்னு நினைச்சு, சீக்கிரமா வந்துட்டேன். என்று பொருத்தமாக பொய் சொன்னாள்.

    அதை உண்மையென நம்பிய பர்வதம், சரி சாப்பிட வா! என்று அழைக்க, சாப்பிட பிடிக்காவிட்டாலும், அம்மா எதையாவது நினைத்து கொள்வாள். என்று பிடிக்காம, சாப்பிட, அமர்ந்தவளுக்கு, இடியாப்பமும், குருமாவின், ருசியும் பிடித்துபோக, எப்போதும் போல, அம்மாவை பாராட்டியபடியே சாப்பிட்டாள். அதன்பின், அம்மாவுக்கு சில உதவிகள் செய்துவிட்டு, மாடியிலிருந்த தன் அறைக்கு சென்றாள்.

    3

    தன் அறைக்கு வந்தவளுக்கு, சித்தார்த் பேசிய பேச்சு மனதில் சுழன்று கொண்டு வந்தது. அவனை நினைத்து பார்த்தாள். சித்தார்த், நல்ல உயரமும், நல்ல நிறமும் கொண்டு, ஆரோக்கியமான உடற்கட்டுடன் இருந்தான். கைக்கு அடங்காத, பம்மென்று நிற்கும், கரு, கருவென தலைமுடியும், அடத்தியான மீசையும் அழகான கண்களும், எடுப்பான நாசியும் கொண்டு, எந்த பெண்ணும் பிடிக்காது என்று சொல்ல முடியாது, ஆணழகனாக இருந்தான். அவனை மனசுக்குள், நினைத்தவுடன், பரவசம் அடைந்தாள். ஆனால், மறு வினாடியே, தான் மட்டும் நேசம் கொண்டு என்ன பயன்? அவனுக்கு ஏன் தன்னை பிடிக்காது போயிற்று? என எண்ணியதும், மீண்டும், கண்ணீர் பொங்கி கொண்டுவர, அழுதபடியே தலையணையில், தலை வைத்து படுத்தாள்.

    அங்கே சித்தார்த்தின், நிலையும், அவ்வாறே இருந்தது. அவன் இலக்கியாவை நினைத்து பார்த்தான். இள மஞ்சள் நிறத்தில், லேசான சதைப்பற்றுடன், நடுத்தரமான உயரத்தில், மனதை, வசீகரிக்கவே செய்தாள். அவனுக்கும், அவளை, ரொம்பவே பிடிக்கும். அதை அவளிடம் வெளிகாட்டாது, அவளை எப்போதும், வெறுப்பதுபோல், சீண்டிகொண்டே இருப்பான். இன்றும், அப்படித்தான். அவளை சீண்ட, நிலைமை வேறுவிதமாயிற்று.

    இலக்கியா, வீட்டுக்கு ஒரே பெண், பி.ஏ. வரை படித்திருந்தாள். அவர்கள் குடும்பம் விவசாய குடும்பம். நிறைய தோப்புக்களும், வயக்காடுகளும், நிறைந்திருக்க, வசதிக்கு குறைவு இல்லை. அது மட்டுமல்லாது, அவளின் அப்பாவும் தன் அம்மாவும், ஒருவர்மீது ஒருவர் அதிகளவு பாசமும் அக்கறையும், உள்ளவர்கள். அதனாலே இளம் தலைமுறையினரும், பாசத்துடன் இருந்தனர்,

    சித்தார்த்தின், அப்பா, ராமலிங்கம், அங்குள்ள விவசாய, கூட்டுறவு வங்கியில் வேலைபார்த்தார். சுமாரான வசதி. ஆனாலும், தன் மகன் சித்தார்த்தை, நன்கு படிக்க வைக்க, அவனும், சென்னையில், பி... ஏ... வரை படித்தான். படித்தவனுக்கு, அவன் எதிர்பார்த்த அளவு பெரிய வேலை கிடைக்கவில்லை. அதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தான். அவன் தங்கைகள், இருவரும், பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தது, போதும் என்று அவர்கள் நினைத்துவிட்டனர். சித்தார்த், எவ்வளவோ எடுத்து கூறியும், தங்கைகள் படிக்க விருப்பமில்லை என கூறிவிட்டனர். பெரிய தங்கை வனஜா, இவனை விட, இரண்டு வயது சின்னவள். சின்ன தங்கை கோகிலா, ஐந்து வயது சின்னவள்.

    பெரிய தங்க. வனஜாவுக்கு, கால் சற்று ஊனம். எனவே சற்றே, காலை விந்தி, விந்தி நடப்பாள் சாதாரணமாக பார்க்கும் போது தெரியாது. சற்றே கூர்ந்து பார்த்தால், தெரியும். இரண்டு, தங்கைகளுக்கும், மணமுடித்து வைக்கும் கடமையும், பொறுப்பும் சித்தார்த்துக்கு, இருந்தது. அவன் பெற்றோர்களும், அவனைத்தான் மலைபோல் நம்பி இருந்தனர்.

    Enjoying the preview?
    Page 1 of 1