Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ulkuthu
Ulkuthu
Ulkuthu
Ebook107 pages47 minutes

Ulkuthu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466701
Ulkuthu

Read more from Devibala

Related to Ulkuthu

Related ebooks

Related categories

Reviews for Ulkuthu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ulkuthu - Devibala

    1

    "உன் பையனுக்கு கல்யாணமே செய்யமாட்டியா? காலம் முழுக்க அவன் பிரம்மச்சாரியாத்தான் இருப்பானா!" ஊரே கேட்கத் தொடங்கிவிட்டது சகுந்தலாவை! இதற்கெல்லாம் அசைந்து கொடுப்பவள் அல்ல சகுந்தலா! ஆனாலும் கேள்விக்கணைகள் அளவுக்கு மீறிப் பாய சகுந்தலா யோசிக்கத் தொடங்கி விட்டாள்! இந்த கேள்விக்கு பதில் தெரியும் முன்னால், சகுந்தலாவின் குடும்பம் முக்கியமாக சகுந்தலாவின் குணாதிசயம் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்!

    அது தெரிந்தாலே கேள்விக்கு அர்த்தம்புரியும்! பொதுவாக இங்கேயுள்ள அம்மாக்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்!

    பெற்ற பிள்ளைகள் எல்லாரையும் சமமாக நேசித்து நியாயத்தை மட்டுமே பேசும் அம்மாக்கள்! இதன் சதவீதம் நூற்றுக்கு ஒன்று தேறினால் அதிகம்! நியாயமான அம்மாக்களை இங்கே நீங்கள் தேடி எடுத்து விடலாம்!

    அடுத்தபடியாக ஐம்பது சதவீதம் சுயநலம், கொஞ்சம் நியாயம் என இருக்கும் அம்மாக்கள் பத்து சதவீதம்!

    இவர்கள் ஊருக்கு பயப்படாவிட்டாலும் கொஞ்சம் மனசாட்சிக்கு பயப்படுவார்கள்.

    அடுத்தபடியாக மூன்றாவது ரக அம்மாக்கள்!

    தன்னிடம் வளரும் வரை பிள்ளை, பெண் என்ற பாகுபாடு இல்லாமல் சரி சமமாக மதிப்பார்கள்.

    பெண்ணுக்கு கல்யாணம் முடிந்து புருஷன் வீட்டுக்கு அவள் சென்று விட்டால், அவளை ஓவராக தாங்கோ தாங்கென்று தாங்குவார்கள். அவளது மாமியார், புகுந்த வீட்டு மனிதர்கள் அறவே பிடிக்காது. மாப்பிள்ளையை பிடிப்பது அந்த மாப்பிள்ளையின் கையில்!

    அவன் உறுதியாக தன் பெற்றோரை, உடன்பிறப்புகளை ஆதரித்தால், அவன் நம்பர் ஒன் எதிரி! கையாலாகாத மாப்பிள்ளை என்ற கடுமையாக விமர்சனத்துக்கு ஆளாகிவிடுவான். தன்மகள் ஊர்ப்பட்ட கொடுமைகளை மாமியாரிடம் அனுபவிப்பதைப் போல புலம்பல் வரும்.

    குறிப்பாக நாத்தனாரை வெட்டிப்போடாத குறைதான். மகளை உசுப்பிவிட்டு தனிக்குடித்தனம் போக எல்லா ஏற்பாடுகளையும் செய்வார்கள்.

    இப்படி பல வித முயற்சிகள்! அந்தப் பெண் உண்டாகிவிட்டால், உலகத்திலேயே வேறு யாரும் தாய்மை அடையாதது போல அலட்டல் எல்லை மீறும். அந்தப் பத்து மாதத்தில் இந்த அம்மாக்கள் அடிக்கும் கூத்து தெருக்கூத்துதான்.

    இந்தக் கதை பெரிய கதை!

    விலாவரியாக நம் கதாநாயகி சகுந்தலாவை வைத்துக்கொண்டு அலசலாம்!

    இந்த அம்மாக்களின் அடுத்த அவதாரம் எப்படி!

    தன் பிள்ளைக்கு திருமணமாகி மருமகள் வரும்போது தடாலடியாக தலைகீழாக மாறி விடுவார்கள்.

    இவளும் ஒரு தாய் பெற்ற பெண்தானே!

    அடிப்படை அன்பை... இவளிடம் காட்ட வேண்டும் என்ற நினைப்பே இல்லாமல் ஓவராக தன் மகளைத் தாங்கி, வந்த பெண்ணை வெறுப்பேற்றுவார்கள்.

    அவள் சுமக்கும்போது பூவாக தாங்கும் அம்மாக்கள் இவள் சுமக்கும்போது முள்ளாக மாறி விடுவார்கள்.

    தன் மாப்பிள்ளை எந்த நேரமும் மகளுடன் தன் வீட்டில் நிரந்தரமாக அவனது பெற்றவர்களை உதறி விட்டு - வாழ வேண்டும் என்ற சுயநலம் தலை விரித்தாடும்.

    அதே தன் பிள்ளை மருமகளுடன் மாமியார் வீட்டுக்கு ஒரு ராத்திரி போய்த் தங்கினால், உடம்பு உதறும்! ஆயிரம் காரணங்களை சொல்லி அதை தடுத்து நிறுத்தப் பார்ப்பார்கள்.

    இது மாதிரி ஏராளம்!

    இந்த அம்மாக்கள் 90 சதவீதம்!

    சரி! நம்ம சகுந்தலா எப்படி!

    அதுதான் இந்தக் கதை!

    மேற்படி எல்லைகளை எல்லாம் கடந்த ஒரு அம்மா!

    அதற்கு முன் சகுந்தலாவின் குடும்பம்!

    சகுந்தலா பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த ஒரு சராசரி குடும்பத்தலைவி!

    ஆனால் குடும்ப நிர்வாகத்தில் புலி!

    சோம்பேறி அல்ல!

    அபாரமான நிர்வாகி! அற்புதமான சமையல், தையல், கை வேலைகள் எல்லாம் தெரியும்.

    வீட்டை பளிங்குபோல சுத்தமாக வைத்துக்கொள்வாள்! வந்தவர்களை நன்றாக உபசரிப்பாள்.

    சோம்பேறி அல்ல, தேனீ போல எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பாள்.

    சிரித்த முகம்! கணக்கு வழக்குகளில் ஒரு ஆடிட்டரை மிஞ்சும் சாதுர்யம்!

    குடும்பத்தை நேர்த்தியாக நடத்தும் பெண்! நல்ல குணாதிசயங்களை முதலில் சொல்லி விட வேண்டும்!

    அப்போதுதான் பின்னால் வரும் வெடிகுண்டுகளை நீங்கள் ஜீரணிக்க முடியும்!

    சகுந்தலாவின் கணவர் பசுபதி, மத்திய அரசாங்க ஊழியர்! பட்டதாரி! ஒரு சராசரி மனிதர். நல்லவர்! நியாயம் தெரிந்தவர்! ஆனால் பயந்த சுபாவம்! எந்த முடிவுகளையும் தானே எடுக்கமாட்டார்!

    மூன்று சகோதரிகளுக்கு மத்தியில் கஷ்ட ஜீவனம் நடத்தும் குடும்பத்தில் வாழ்ந்தவர்!

    உழைத்து முன்னுக்கு வந்தவர்!

    தமிழில் அவருக்கு பிடிக்காத சொல் ‘சண்டை’

    யாராவது சண்டை போட்டாலும் சமாதானம் செய்யத் துடிப்பார். அப்பா இறந்து, ராட்சசி அம்மாவை சமாளித்து சகோதரிகளை கரையேற்றி தன் குடும்பம் என அவர் சிந்திப்பதற்குள் நாற்பது வயதை தொட்டு விட்டார்.

    சும்மா சொல்லக்கூடாது! அதற்கெல்லாம் சகுந்தலாவும் முழு ஒத்துழைப்பு தரத்தான் செய்தாள். சந்தேகமில்லாமல் சகுந்தலா ஒரு நல்ல மனைவி தான். எதையும் தடுக்கவில்லை. கடன் வாங்கி கஷ்டப்பட்ட காலத்தில்கூட தனக்கு வேண்டும் என்று நினைக்காத ஒரு நல்ல மனைவி! நகை, புடவைகள் என்று எதிலுமே ஆசையில்லை. குடும்பத்துக்காக உழைத்தவர்! பசுபதிக்கு பக்க பலமாக நின்றவள்!

    சகுந்தலா போல ஒரு நல்ல மனைவி கிடைத்த காரணமாகத்தான் பசுபதியால் சம்சார சாகரத்தில் பத்திரமாக நீந்திக் கரையேற முடிந்தது.

    பணப்பற்றாக்குறை காரணமாக பல சமயங்களில் பசுபதி துவண்ட போதெல்லாம் தைரியம் கொடுத்து தூக்கி நிறுத்தியவள் சகுந்தலா.

    அதற்கேற்ப பட்ஜெட் போட்டு, சமயத்தில் தன் நகைகளை விற்று, எந்த ஒரு தியாகத்துக்கும் தயாராக இருந்த பெண்! அதனால் சகுந்தலா மேல் அலாதிப்பிடிப்பு பசுபதிக்கு!

    ஒரு ஆணுக்கு நிஜமாகவே தன் மனைவி மேல் அளவுகடந்த காதலும், பிடிப்பும், ஈடுபாடும்

    Enjoying the preview?
    Page 1 of 1