Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பெண் மனதை தொட்டு
பெண் மனதை தொட்டு
பெண் மனதை தொட்டு
Ebook106 pages39 minutes

பெண் மனதை தொட்டு

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சம்பத்குமாருக்கு உயிரிப்புள்ள இந்த வாழ்க்கையை விட்டு, இயந்திரதனமான - சென்னை வாழ்க்கையை, மேற்கொள்ள வேண்டியிருக்கிறதே, என ஆதங்கப்பட்டான். சென்னையில் இவனுடைய நண்பன் சுபாஷுக்கு போன் பண்ணி கேட்க, "அவனும் தைரியமாக வா, நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று ஆதரவு கொடுக்க சம்பத்குமார் மகிழ்ச்சியடைந்தான். இனி, சம்பத்குமாரை, சம்பத் என சுருக்கமாகவே அழைக்கலாம்.
 சம்பத் வேலை வேண்டி, இரண்டு, மூன்று இடங்களுக்கு, விண்ணப்பம் அனுப்பியதில், இரண்டு கம்பெனியிலிருந்து இன்டர்வியூவுக்கு வரும்படி அழைப்பு வந்திருந்தது.
 அதன் அடிப்படையில் சென்னை செல்ல தயாரானான். நாளை சென்னை செல்ல வேண்டும். முதல் நாள் காலையில், வரப்பின் மீது நடந்து, வயல்வெளிகளை பார்வையிட்டவன், மனம் வேதனையடைந்தது. அங்கிருந்த ஒரு மரத்தின் மீது சாய்ந்தபடி சோகமாய் இருந்தான். அப்போது அவனுடைய ரேடியோவிலிருந்து, அவனுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக ஒரு பாடல்,
 உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்
 உலகத்தில் போராடலாம்.
 உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்,
 தலை வணங்காமல் நீ வாழலாம்.
 என்ற பாடல் ஒலிபரப்பாகவும், அவனுக்கு, நம்பிக்கை வந்தது. அதே சமயம், அவனை தேடிக்கொண்டு, அவன் தம்பி வரவும், அவனுடன் சேர்ந்து கிளம்பினான்.
 சென்னை மீனம்பாக்கம், விமானநிலையம். வெளிநாட்டுக்கு சென்று, படிப்பை முடித்துவிட்டு, வரும் தன் மகள், மனோகரியை அழைத்து போக வந்திருந்தார் தொழிலதிபர் தர்மதுரை. கோட், சூட்டுடன், கம்பீரமாகஇருந்தார். அவர் முகத்தில் செல்வக்களை தாண்டவம் ஆடியது. அதே போன்று, அவரது மகள் முகத்திலும், பணம், படிப்பு, இவற்றுடன், கர்வமும் சேர்ந்து தெரிந்தது.
 அப்பாவை பார்த்த மகிழ்ச்சியில், "ஹாய் டாடி" என அழைத்தவாறே, ஓடி வந்து, உற்சாகமாக கட்டிக் கொண்டாள். அவரும், அதே உற்சாகத்துடன் மகளை அணைத்தவாறே, வெளியே நின்று, தனது பென்ஸ் காரில், அழைத்து போனார். அவர்களது வீடு அண்ணநகரில் இருந்தது. அதை வீடு என்று சொல்வதைவிட மாளிகை என்றே சொல்லலாம். அவ்வளவு பெரிதாகவும், மார்பிளால் இழைக்கப்பட்டு பார்ப்பதற்கு பளபளப்பாக இருந்தது. கேட்டிலிருந்து, சுமார் 12 கி.மீ. தூரத்தில் வீட்டின் வாசல் இருந்தது. சிமெண்ட் பாதையின், இரு பக்கங்களிலும், பலவகை பூச்செடிகள், அழகுற குரோட்டன்ஸ்கள், செயற்கை நீருற்று என்று இருந்தது. அவைகளை பார்த்தாலே தோட்டக்காரனுடைய கைவண்ணம் தெரிந்தது.
 - என்ன இருந்து, என்ன செய்ய, அவளுடைய, தாய், தனலெட்சுமி, இவள் வெளிநாட்டுக்கு, படிக்க செல்வதற்கு முன்பே உயிரை விட்டுவிட்டாள். சிறுவயது முதலே, இவர்களின் வீட்டில், ஆயாவாக வேலைக்கு வந்து சேர்ந்த, சுந்தரி, தான் இன்றளவும் அவளை ஒரு தாயன்போடு, கவனித்து வருகிறாள். வீட்டுக்கு வந்தவளை ஆரத்தழுவி வரவேற்றார் சுந்தரி. முன்பு அதனை விரும்பி ரசிப்பவள், இன்று அதை பெரிதாக மதிக்கவில்லை. நாசுக்காக அவளிடமிருந்து விலகினாள். குளிச்சுட்டு வர்றேன்னு, உள்ளே சென்று விட்டாள். "எப்படியிருக்கே! ஆயாம்மா?" என்று ஒரு வார்த்தைகூட கேளாது சென்றது சுந்தரிக்கு வருத்தமாக இருந்தாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாது, பிரயாணக் களைப்பாக இருக்கலாம் என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள்.
 குளிச்சுட்டு வந்த மனோகரி, தான் வாங்கிட்டு வந்த பொருட்களை, ஒவ்வொருவருக்கும் கூப்பிட்டு தந்தார். தன் அப்பாவுக்கு, பாண்ட், சர்ட்டும், அதனுடன் விலையுயர்ந்த ஒரு கைக்கடிகாரமும், ஆயாம்மாவுக்கு ஒரு பாபா சிலையும் தந்தாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223741862
பெண் மனதை தொட்டு

Read more from Prema Rathnavel

Related to பெண் மனதை தொட்டு

Related ebooks

Related categories

Reviews for பெண் மனதை தொட்டு

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பெண் மனதை தொட்டு - Prema Rathnavel

    1

    ‘வயல் வரப்பின் மீது நடந்து கொண்டிருந்தான் சம்பத்குமார். அவன் கையில் ஒரு சின்ன டிரான்சிஸ்டர் ரேடியோ இருந்தது. கதிரவன் தன் பொற்கிரணங்களை மெல்லி மெல்ல விரித்து கொண்டிருந்த நேரம். சம்பத்குமார், 25வயது இளைஞன். பொருளாதார பட்டதாரி. அவனுக்கு இப்படி காலை வேளையில், பழைய பாடல்களை கேட்டுக்கொண்டு, வயல்வெளிகளை பார்த்தவாறு வரப்பின் மீது நடந்து செல்வது மிகவும் பிடித்தமான விஷயம்’

    அன்றும் அப்படிதான் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவன் கையிலிருந்த ரேடியோவிலிருந்து ஒரு பாடல்,

    ‘விவசாயி, விவசாயி

    கடவுள் என்னும் முதலாளி

    கண்டெடுத்த தொழிலாளி

    விவசாயி, விவசாயி’

    என்ற பாடல் ஒலித்து கொண்டிருந்தது. அந்த பாடல் அவனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இன்று அந்த பாட்டை ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை. காரணம், முன்பெல்லாம் எங்கு பார்த்தாலும், பச்சை பசேலென்று காட்சியளித்த கிராமம், இன்று எங்கு திரும்பினாலும், காய்ந்து, கருகி போய் சோகத்தை பறைசாற்றிக் கொண்டிருந்தன.

    அதை பார்த்தவனுக்கு மனதில் ரத்தம் வழிந்தது. கடவுளும் சரி, கவர்ன்மெண்ட்டும் சரி, விவசாயிகளைக் கண்டுக் கொள்ளவில்லை. தொடர்ந்து மழை பொய்த்ததால் எங்கும் வறட்சியே காணப்பட்டது.

    "வான் மகளே! உனக்கும், நிலமகளுக்கும்,

    என்ன பிணக்கோ யாமறியோம்

    ஆத்திரத்தில் நீரை அளவு மீறி பொழிந்து,

    வயல்வெளிகளை ஆக்கரமிக்கிறாய்!

    பின் சமாதானம் என்ற பெயரில்

    மௌனம் காத்து, வாடவிடுகிறாய்!

    இது என்ன நியாயம்!"

    மனதில் கேள்வி கேட்டு கொண்டான். பதில் தான் இல்லை. இந்த நிலை இப்படியே தொடர்ந்து நீடிக்குமானால், எல்லோருமே ஊரை விட்டே வெளியேறும் சூழ்நிலை ஏற்படும் என்று வருத்தப்பட்டான்.

    சம்பத்குமாரின் குடும்பம், ஒரு விவசாய குடும்பம். அவனது அப்பா பாண்டியனும், அம்மா சௌந்தர்யாவும், கடினமான உழைப்பாளிகள். இருந்தும் தொடர்ந்து வான்மழை பொய்த்ததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதைக் கவனித்த சம்பத்குமார், தான் இங்கிருந்து வெளியேறி, சென்னை சென்று வேலைப் பார்த்தால் தான், தன் பெற்றோர்களையும், தனக்கு பின்னுள்ள தங்கையையும், தம்பியையும், வாழ வைக்க முடியும் என்ற தீர்மானத்திற்கு வந்து இருந்தான்.

    அவனுடைய தாய் மாமா சங்கரலிங்கம் பக்கத்து கிராமத்தில் தான் இருந்தார். அவருடைய கிராமமும் வறட்சி நிலையில் தான் உள்ளது. முன்பெல்லாம், அவர் நல்ல வசதியாக இருந்தபோது, விளைச்சலில் பாதியை அவன் வீட்டுக்கு அனுப்புவார். அவருக்கு ஒரே மகன். இப்போது தான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தான். கல்யாணமாகி, ரொம்ப வருஷங்களுக்கு பின் பிறந்தவன். இப்ப அங்கும் நிலைமை ஓரளவு சரியில்லை.

    இரு குடும்பத்தையும் நினைத்து பார்த்தே, சம்பத்குமார், இந்த முடிவுக்கு வந்திருந்தான். தன் பெற்றோர்களிடம் சொல்ல, வேறு வழியில்லாது, அவர்களும் சம்மதித்தனர். தன் தாய் மாமாவிடம் கூற அவரும் சம்மதித்தார்.

    சங்கரலிங்கத்தின் நண்பன் தர்மதுரை சென்னையில் நல்ல வசதியாகத்தான் இருக்கிறார். அவனிடம் கேட்டால் சம்பத்குமாருக்கு நிச்சயம் வேலை கொடுப்பார். ஆனால் அவர் மனம் சம்மதிக்கவில்லை. முன்பு, தான் அவனுக்கு செய்த உதவிக்கு, பிரதிபலனை எதிர்பார்ப்பது போல் இருக்கும், என எண்ணி, பேசாது இருந்து விட்டார்.

    2

    சம்பத்குமாருக்கு உயிரிப்புள்ள இந்த வாழ்க்கையை விட்டு, இயந்திரதனமான - சென்னை வாழ்க்கையை, மேற்கொள்ள வேண்டியிருக்கிறதே, என ஆதங்கப்பட்டான். சென்னையில் இவனுடைய நண்பன் சுபாஷுக்கு போன் பண்ணி கேட்க, அவனும் தைரியமாக வா, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆதரவு கொடுக்க சம்பத்குமார் மகிழ்ச்சியடைந்தான். இனி, சம்பத்குமாரை, சம்பத் என சுருக்கமாகவே அழைக்கலாம்.

    சம்பத் வேலை வேண்டி, இரண்டு, மூன்று இடங்களுக்கு, விண்ணப்பம் அனுப்பியதில், இரண்டு கம்பெனியிலிருந்து இன்டர்வியூவுக்கு வரும்படி அழைப்பு வந்திருந்தது.

    அதன் அடிப்படையில் சென்னை செல்ல தயாரானான். நாளை சென்னை செல்ல வேண்டும். முதல் நாள் காலையில், வரப்பின் மீது நடந்து, வயல்வெளிகளை பார்வையிட்டவன், மனம் வேதனையடைந்தது. அங்கிருந்த ஒரு மரத்தின் மீது சாய்ந்தபடி சோகமாய் இருந்தான். அப்போது அவனுடைய ரேடியோவிலிருந்து, அவனுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக ஒரு பாடல்,

    உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்

    உலகத்தில் போராடலாம்.

    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்,

    தலை வணங்காமல் நீ வாழலாம்.

    என்ற பாடல் ஒலிபரப்பாகவும், அவனுக்கு, நம்பிக்கை வந்தது. அதே சமயம், அவனை தேடிக்கொண்டு, அவன் தம்பி வரவும், அவனுடன் சேர்ந்து கிளம்பினான்.

    சென்னை மீனம்பாக்கம், விமானநிலையம். வெளிநாட்டுக்கு சென்று, படிப்பை முடித்துவிட்டு, வரும் தன் மகள், மனோகரியை அழைத்து போக வந்திருந்தார் தொழிலதிபர் தர்மதுரை. கோட், சூட்டுடன், கம்பீரமாக இருந்தார். அவர் முகத்தில் செல்வக்களை தாண்டவம் ஆடியது. அதே போன்று, அவரது மகள் முகத்திலும், பணம், படிப்பு, இவற்றுடன், கர்வமும் சேர்ந்து தெரிந்தது.

    அப்பாவை பார்த்த மகிழ்ச்சியில், ஹாய் டாடி என அழைத்தவாறே, ஓடி வந்து, உற்சாகமாக கட்டிக் கொண்டாள். அவரும், அதே உற்சாகத்துடன் மகளை அணைத்தவாறே, வெளியே நின்று, தனது பென்ஸ் காரில், அழைத்து போனார். அவர்களது வீடு அண்ணநகரில் இருந்தது. அதை வீடு என்று சொல்வதைவிட மாளிகை என்றே சொல்லலாம். அவ்வளவு பெரிதாகவும், மார்பிளால் இழைக்கப்பட்டு பார்ப்பதற்கு பளபளப்பாக இருந்தது. கேட்டிலிருந்து, சுமார் 12 கி.மீ. தூரத்தில் வீட்டின் வாசல் இருந்தது. சிமெண்ட் பாதையின், இரு பக்கங்களிலும், பலவகை பூச்செடிகள், அழகுற குரோட்டன்ஸ்கள், செயற்கை நீருற்று என்று இருந்தது. அவைகளை பார்த்தாலே தோட்டக்காரனுடைய கைவண்ணம் தெரிந்தது.

    - என்ன இருந்து, என்ன செய்ய, அவளுடைய, தாய், தனலெட்சுமி, இவள் வெளிநாட்டுக்கு, படிக்க செல்வதற்கு முன்பே உயிரை விட்டுவிட்டாள். சிறுவயது முதலே, இவர்களின் வீட்டில், ஆயாவாக வேலைக்கு வந்து சேர்ந்த, சுந்தரி, தான் இன்றளவும் அவளை ஒரு தாயன்போடு, கவனித்து வருகிறாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1