Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மேகங்கள் இல்லாத வானம்..!
மேகங்கள் இல்லாத வானம்..!
மேகங்கள் இல்லாத வானம்..!
Ebook89 pages34 minutes

மேகங்கள் இல்லாத வானம்..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அது ஒரு தனியார் மருத்துவமனை. அவசர சிகிச்சை பிரிவின் வெளியே ரங்கநாதனின் குடும்பத்தினர் காத்திருந்தனர். உள்ளே அவருக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் வெளியே வந்த டாக்டர்கள், அவர்களைப் பார்த்து, வெரி சாரி நாங்கள் எíவ்வளவோ முயற்சி செய்தும் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்று சோகத்துடன் கூறி சென்றனர்.
 ரங்கநாதன் பிழைக்க மாட்டார் என்பது அவரது குடும்பத்தினருக்கும் தெரியும். இருந்தாலும் கடைசி முயற்சியாக செய்தனர். ரங்கநாதனுக்கு வயது 50க்கு மேல் ஒன்றிரண்டு இருக்கலாம். அளவான குடும்பம். பையன் மித்ரன், பெண் அதிசயா, மனைவி ருக்மணி என்ற சிறிய குடும்பம்.
 மித்ரன் எம்.பி.ஏ. முடித்து சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையில் வேலைக்கு போகவில்லை. அதிசயா டிகிரி முடித்து கல்யாண கனவுகளுடன் வீட்டில் வலம் வந்து கொண்டிருந்தாள். ரங்கநாதன் ஒரு பெரிய எலக்ட்ரானிக் தொழிற்சாலையில் தலைமை பொறியாளராக வேலை பார்த்து வந்தார். ஒரு அபார்ட்மெண்டில் இரண்டு படுக்கையறைகள், ஒரு ஹால், கிச்சன் என்ற அளவில் ஒரு வீட்டை பாங்க் லோன் போட்டு வீடு வாங்கியிருந்தார்.
 மகளுக்கு கல்யாண செலவுக்குன்னு ஒரு தொகை பாங்கில் போட்டு வைத்திருந்தார். மகனுடைய தொழில் தொடங்கும் ஆசைக்கு குறுக்கே நிற்காது, அந்தப் பணத்தை தருவதாக கூறியிருந்தார். மகன் மித்ரன் மீது அவருக்கு ரொம்ப நம்பிக்கை. மகளுக்கும், கல்யாணம் செய்ய இன்னும் இரண்டு வருடங்கள் காத்திருக்கலாம் என்று நினைத்திருந்தார். பாங்கில் போட்ட பணம் முதிர்ச்சியடைய இன்னும் 3 மாதங்கள் இருந்தன. அதனால் மித்ரனும் தொழில் தொடங்குவதற்கு தேவையானவற்றை படித்து தெரிந்து கொண்டிருந்தான். இப்படி ஆளுக்கொரு எண்ணத்தில் இருந்த போதுதான் அந்த துயர சம்பவம் நிகழ்ந்ததுஅன்று சனிக்கிழமை. பக்கத்து கோவிலில் ஏதோ விசேஷம் என்று எல்லோரும் புறப்பட, ரங்கநாதனோ, "நான் வரவில்லை. நீங்க போயிட்டு வாங்க" என்றார்.
 "ஏங்க, உடம்பு ஏதும் சரியில்லையா?" என்று ருக்மணி அக்கறையுடன் கேட்டார். -
 "அதெல்லாம் ஒன்றுமிலலையம்மா. நேற்று இரவு சரியா தூக்கம் இல்லை. அதான்" என்று ஆறுதலாக சொன்னார்....
 சரியென்று அவர்களும் புறப்பட்டு போனார்கள். சிறிது நேரம் சென்றதும் ரங்கநாதன் வீட்டை பூட்டிவிட்டு பால்கனிக்கு வந்து சாலையை வேடிக்கை பார்த்தபடி இருந்தார். கோவிலுக்கு போவோரும் வருவோருமாக தெரு கலகலப்பாக இருந்தது. இவர்கள் இருந்தது மூன்றாவது மாடி. கீழே முழுவதும் கார் பார்க்கிங் மற்றும் இரு சக்கர வாகன பார்க்கிங்.
 இவர்கள் இந்த அபார்ட்மெண்ட்டுக்கு குடிவரும்போது நிறைய வீடுகள் இல்லை. இங்கொன்றும், அங்கொன்றுமாக சில வீடுகளே இருந்தன. இவர்கள் குடிவந்த இந்த பத்து வருடத்தில் வெகு சீக்கிரமாகவே அந்த பகுதி முன்னேற வீடுகளும் நிறைய வந்துவிட்டது. தெருமுனையில் ஒரு பிள்ளையார் கோயிலும் வந்துவிட்டது. இதையெல்லாம் நினைத்துப் பார்த்தார்.
 கோவிலுக்குப் போன தன் குடும்பத்தினர் திரும்பி வருவதை பார்த்தவர், மேலிருந்து குரல் கொடுத்தபடியே தன் கையிலிருந்த சாவியை தூக்கிப் போட, கணப்பொழுதில் தலைசுற்றுவது போலிருக்க, அவ்வளவுதான். 3வது மாடியின் பால்கனியிலிருந்து தலை குப்புற விழுந்தார். தலையில் பலத்த அடி எனினும் உயிர் இருந்தது.
 இரத்தம் வெளியேறி கொண்டிருந்தது. அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, சிகிச்சை அளித்தும் பலனில்லாது உயிர் பிரிந்தது. யாரும் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்க்காத சம்பவங்கள் நடப்பது தானே வாழ்க்கை. ஆஸ்பத்திரியிலிருந்து எடுத்து வந்து இறுதி சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தன.
 நாட்கள் நகர்ந்தன. இதோ ரங்கநாதன் இறந்து 3 மாதம் கடந்து விட்டது. அவர் பணியிலிருந்தபோது இறந்ததால் மித்ரனுக்கு அந்த கம்பெனியில் வேலை போட்டு கொடுத்தனர். அவனின் தொழில் செய்யவேண்டுமென்ற கனவு, கனவாகவே போய்விட்டது. என்ன செய்ய முடியும்? வீட்டுக்கு லோன் கட்டணம், தங்கைக்கு கல்யாணம் பண்ணணும், குடும்பத்தை நடத்த வேண்டும். எல்லோருடைய கனவுகளும் நிறைவேறி விடுவதில்லையே. சில சம்பவங்கள் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடுகின்றன. குடும்ப பொறுப்பு முழுவதும் மித்ரனின் கையில் வந்தது.
 அவன் தங்கையும் இப்போது குடும்ப பொறுப்பு உணர்ந்து அருகிலிருந்த ஒரு சின்ன கம்பெனியில் வேலைக்கு போனாள். அப்பா இறந்து போன அதிர்ச்சியில் அவளது அம்மாவும் அடிக்கடி நோயால் விழுந்தார். இதை எண்ணி மித்ரன், தங்கைக்கு சீக்கிரமாக மணமுடிக்க எண்ணி அதற்கான வேலையில் இறங்கினான். -- ஆபீஸிலும், வெளியில் சில நண்பர்களிடமும் சொல்லி வைத்தான். தங்கை, "இப்ப என்னண்ணா அவசரம்?" என்று கேட்டதற்கு, "இல்லம்மா அதது நடக்க வேண்டிய வயசில் நடக்கணும்" என்று கூறினான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223622611
மேகங்கள் இல்லாத வானம்..!

Read more from Prema Rathnavel

Related to மேகங்கள் இல்லாத வானம்..!

Related ebooks

Related categories

Reviews for மேகங்கள் இல்லாத வானம்..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மேகங்கள் இல்லாத வானம்..! - Prema Rathnavel

    1

    கண்ணாடியின் முன் நின்று தன் நெற்றிப் பொட்டை சரி செய்து கொண்டிருந்தாள் சுகந்தி. இன்று அவளுக்கு ஒரு கம்பெனியில் இண்டர்வியூ இருந்தது. அதற்காக தன்னை தயார்படுத்தி கொண்டிருந்தாள்.

    இளம்பச்சை நிறத்தில் சுடிதார் அணிந்து கொண்டாள். நெற்றி பொட்டு பார்த்தவுடனே பளிச்சென்று தெரிந்தது. இப்போ சில பெண்கள் நெற்றியில் பொட்டு இருக்கா இல்லையா என்பதை அருகில் வந்து கூர்ந்து பார்த்தால் தான் தெரிகிறது. கடவுள் உலகில் 20 சதவீதம் பேரைத்தான் அழகாக படைக்கிறார் என்று ஏதோ புத்தகத்தில் படித்ததாக நினைவு. அந்த 20 சதவீதத்தில் ஒருத்தியாக இருந்தாள் சுகந்தி.

    சுகந்தி ஒரு எம்.காம். பட்டதாரி. படிப்பு முடித்து ஆறு மாதம் ஆகியும் வேலை கிடைக்கவில்லை. ஒவ்வொரு இண்டர்வியூவின் போதும் நம்பிக்கையுடன் செல்கிறாள். எங்கு போனாலும் சிபாரிசு தேவைப்படுகிறது. அது இல்லாததால் வேலை கிடைக்க தாமதமாகி கொண்டே வந்தது. இப்போதும் நம்பிக்கையை தளர விடாது அம்மாவிடமும், தம்பி அசோக்கிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள்.

    வீட்டை விட்டு வெளியே வந்தவள் வாசலில் நிறுத்தியிருந்த தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள். அவள் போக வேண்டியது கேளம்பாக்கத்திலுள்ள ஓர் இன்ஜினியரிங் கம்பெனி காலை 10 மணி முதல் 2 மணி வரை நேரம் ஒதுக்கியிருந்தார்கள்.

    குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே அந்த கம்பெனியை வந்தடைந்த சுகந்தி, அந்த கம்பெனியின் கட்டிடத்தை பிரமிக்க பார்த்தாள். 3 மாடி கட்டிடம், கட்டிடம் முழுவதும் கண்ணாடியால் போர்த்தப்ப்பட்டிருந்தது. லிப்டில் ஏறி இண்டர்வியூ நடக்கவிருக்கும் 2வது தளத்தை அடைந்தாள். அங்கு சென்றதும் அவளுக்கு பிரமிப்பு தோன்றியது.

    தன்னைப் போலவே பைல்களை கையில் வைத்துக்கொண்டு நிறைய பேர் இருந்தார்கள். இத்தனை பேரில் தனக்கு இந்த வேலை கிடைக்குமா? மனதில் கேள்வி எழ சுற்றும் முற்றும் பார்த்தாள். சில ஆண்கள் முகத்தில் டென்ஷன் தெரிந்தது, சில பெண்கள் என்னதான் யதார்த்தமாக காட்டிக் கொண்டாலும் லேசான கவலை தெரிந்தது.

    ஊம்... பெருமூச்சு விட்டாள். யார் யாருக்கு என்னென்ன பிரச்சினையோ யோசித்தபடியே அங்கிருந்த இருக்கை ஒன்றில் உட்கார்ந்தாள்.

    சுகந்திக்கு அப்பா கிடையாது. அவர் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. சுகந்தி எம்.காம். படித்து கொண்டிருந்தபோது, வயிற்றுவலி என்று படுத்தவர் தான். இரண்டு மாதங்கள் நோயோடு போராடி சிகிச்சை அளித்தும் பலன் இல்லாது உயிரை விட்டார். வயிற்று வலிக்கு உபயம் டாஸ்மாக்.

    கையிலிருந்த பணமெல்லாம் வைத்திய செலவுக்கே சரியானது. அம்மா குடும்பத் தலைவி, படித்திருந்தும் அப்பாவால் முடக்கப்பட்டு வேலைக்கு போகாமல் குடும்பத்தை நிர்வகித்தாள். தம்பி அசோக்குக்கு படிப்பு சரியா வரலை. ஆனாலும் ஒரு டிகிரி அவசியம் வேணும்னு அவனை படிக்க வைத்தார்கள். அவனும் தட்டுத் தடுமாறி பி.ஏ. சரித்திரம் முடித்துவிட்டு வேலை தேடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு ஊர் சுற்றி கொண்டிருந்தான். எனவே இந்த வேலை தனக்கு கிடைத்தால் குடும்பம் என்னும் வண்டி எந்தவித தடங்கலும் இல்லாமல் ஓடும். மனதில் அம்மாவையும், தம்பியையும் நினைத்து பார்த்தாள். அம்மாவின் கவலை தோய்ந்த முகம் மனதில் நிழலாடியது.

    இவளின் சிந்தனையை கலைப்பது போல் பியூன் இவள் பெயரை சொல்லி அழைக்கவும், சட்டென்று நிதானித்து வந்தாள். உள்ளே சென்றாள். இரண்டு ஆண்களும், ஒரு பெண்மணியும் இருந்தனர். அவர்களுக்கு வணக்கம் சொல்லி உட்கார்ந்தாள். வழக்கமான கேள்விகள் தங்கு தடையின்றி பதில் ஆங்கிலத்தில் சொன்னாள். கூடுதல் தகுதியாக இந்தியும் தெரிந்து வைத்திருந்தாள். எல்லாம் முடிந்து நீங்க போகலாம், உங்களுக்கு மெயில் அனுப்புகிறோம் என்று கூற சுகந்தி வெளியே வந்தாள். எல்லா இடங்களிலும் சொல்ற பதில்தான். இதை எதிர்பார்த்ததால் ஏமாற்றம் இல்லை. இன்னும் பல பேர் வெளியே காத்திருந்தார்கள். வெளியே வந்தாள். நடுவானில் சூரியன் உக்கிரமாயிந்தான். வீட்டுக்கு திரும்பினாள்.

    வீட்டுக்கு வந்த மகளின் முகத்தை பார்த்தே அம்மா புரிந்து கொண்டாள். தம்பியோ கண்டு கொள்ளாது போய்விட்டான். எப்போதும் போல அம்மா பூரணி ஆறுதல் சொன்னாள். தன் அறைக்கு சென்று வேறு உடை மாற்றிக் கொண்டு சற்றே ஓய்வாக சேரில் அமர்ந்தாள்.

    2

    அது ஒரு தனியார் மருத்துவமனை. அவசர சிகிச்சை பிரிவின் வெளியே ரங்கநாதனின் குடும்பத்தினர் காத்திருந்தனர். உள்ளே அவருக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் வெளியே வந்த டாக்டர்கள், அவர்களைப் பார்த்து, வெரி சாரி நாங்கள் எíவ்வளவோ முயற்சி செய்தும் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்று சோகத்துடன் கூறி சென்றனர்.

    ரங்கநாதன் பிழைக்க மாட்டார் என்பது அவரது குடும்பத்தினருக்கும் தெரியும். இருந்தாலும் கடைசி முயற்சியாக செய்தனர். ரங்கநாதனுக்கு வயது 50க்கு மேல் ஒன்றிரண்டு இருக்கலாம். அளவான குடும்பம். பையன் மித்ரன், பெண் அதிசயா, மனைவி ருக்மணி என்ற சிறிய குடும்பம்.

    மித்ரன் எம்.பி.ஏ. முடித்து சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையில் வேலைக்கு போகவில்லை. அதிசயா டிகிரி முடித்து கல்யாண கனவுகளுடன் வீட்டில் வலம் வந்து கொண்டிருந்தாள். ரங்கநாதன்

    Enjoying the preview?
    Page 1 of 1