Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பிரியமுடன் ஒரு வார்த்தை!
பிரியமுடன் ஒரு வார்த்தை!
பிரியமுடன் ஒரு வார்த்தை!
Ebook126 pages46 minutes

பிரியமுடன் ஒரு வார்த்தை!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அடுத்த மாதம், படிப்பு முடிந்து, அமொக்காவிலிருந்து, கௌதம் வரப்போகிறான். அவனுடைய வரவை எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். எல்லோரையும் விட, பவித்ராவின் பெண் யமுனா, மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தாள். அவளுக்கும், கௌதமுக்கும், திருமணம் செய்யணும் என்று பெரியோர்கள் நினைத்திருந்தனர். இதில் கௌதமுக்கு விருப்பமில்லை. சமயம் வரும்போது சொல்லிக் கொள்ளலாம் என இருந்தான். யமுனாவுக்கு அவனின் படிப்பு, பணத்தின் மீதே அதிகளவு ஆசை இருந்தது. ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாக நினைத்திருக்க, காலம் போட்ட கணக்கு வேறு விதமாக இருந்ததை யார் அறிவார்?
 சென்னை: மீனம்பாக்கம் விமான நிலையம், கௌதமை வரவேற்க, குடும்பமே அந்த அதிகாலை நேரத்திலும் வந்திருந்தது. அவனும், படிப்புக்களையுடன், பணக்காரகளையும் ஒன்று சேர, முகமெல்லாம் மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தான். பிரயாண களைப்பு, நண்பர்கள் சந்திப்பு என ஒரு வார காலம் ஓடிற்று, கௌதம் படிப்பை முடித்துவிட்டு நல்ல விதமாக வந்து சேர்ந்து விட்டான் என்பதற்காக குலதெய்வம், மீனாட்சி அம்மனை தரிசிக்க, எல்லோரும், குடும்பத்துடன் கிளம்பினர். அவர்கட்கு சொந்த ஊர் மதுரை. பிழைப்புக்காக, சென்னை வந்து, அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டாலும், எந்த ஒரு நல்ல காரியம் என்றாலும், மதுரை சென்று மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வது அவர்களின் வழக்கம்.
 கோவிலுக்குச் சென்று தரிசனம் முடித்துவிட்டு, அங்கே அவர்களுக்கென்று இருந்த வீட்டில் தங்கியிருந்தனர். எல்லோரும், பேசிக்கொண்டிருக்க, தாத்தாவும், பாட்டியும் தங்களுடைய பழைய உறவினரை பார்த்து வர தனியாக காரில் சென்றனர். உறவினர்களை பார்த்து, பேசிவிட்டு, திரும்பி வரும்போது, எதிரே வந்த அரசுபேருந்து ஒன்று மோத, அந்த இடத்திலேயே டிரைவர் உட்பட, மூவரும் இறந்துவிட, குடும்பமே பதறிப்போயினபின்னர், அங்கேயே அவர்களது தகனத்தை, முடித்து விட்டு, இறுதி சடங்குகளையும் செய்தனர். பின்னர் சென்னை திரும்பி, இதோ அவர்கள் இறந்து ஒருமாதம் ஆயிற்று. மெள்ள, மெள்ள, இயல்பு நிலைக்கு திரும்பினர்.
 அப்போதுதான் ஊரிலிருந்து திரும்பியிருந்த, மரகதம்மாள், இவர்களின் துக்கச் செய்தியை கேள்விப்பட்டு, வீட்டுக்கு வந்திருந்தார். மரகதம்மாள், கங்காதரனின் மனைவி, யசோதாவுக்கு நெருங்கிய உறவினர் அவருக்கு சொந்தம் என்று சொல்லிக் கொள்ள யாரும் கிடையாது. தனியாகவே வாழ்ந்து வந்தார். இங்கு வந்ததும், அவர்களின் செல்வ செழிப்பையும், ஒற்றுமையையும் கண்டு அங்கேயே தங்கிவிட்டார். மற்றவர்களும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காலம் அதன் இயல்புக்கேற்ப நகர்ந்து கொண்டிருந்தது.
 பாலகிருஷ்ணனின் வீடு, அன்று ஞாயிற்றுக்கிழமை, அனிதா, ஓய்வாக வீட்டிலிருந்தாள். தம்பி பிரசன்னா, கல்லூரி மாணவர்களுடன் சுற்றுலா சென்றிருந்தான். அனிதாவுக்கு, திடீரென்று மயிலாப்பூரிலுள்ள சாய்பாபா கோவிலுக்கு செல்ல வேண்டும் போல தோன்ற, அம்மாவை கூப்பிட்டாள். அவரோ,
 "நீ போய்ட்டு வா, எனக்கு வேலையிருக்கிறது."
 "என்னம்மா, நீ, எப்பபாரு வேலை வேலைன்னுட்டு கோவிலுக்குத் தானே கூப்பிடுறேன்" என்று ஆதங்கப்பட்டாள்.
 "நான், உன்னுடன் கோவிலுக்கு வந்துட்டா, இங்கே யார், சமைப்பாங்க? என்னால் முடியாது"
 இதை கேட்டுக்கொண்டிருந்த, பாலகிருஷ்ணன், அவருக்கு தன் மகள் மீது கொள்ளை பிரியம்.
 "அனிதா இங்கே வாம்மா! நான் கோவிலுக்கு வருகிறேன் புறப்படு" என்றார்.
 இதை கேட்ட மீனாட்சி, அங்க வந்து, "அதெப்படி என்னைவிட்டு போகலாம்? இதோ 5 நிமிடத்தில் தயாராகி விடுகிறேன்." என்று கூற, அனிதாவோ, "இல்லம்மா நீ சமையலை கவனி, நானும், அப்பாவும் போய் வருகிறோம்." அவ்வளவுதான் மீனாட்சிக்கு வந்ததே கோபம்.ஏண்டி நான் என்ன, இந்த வீட்டு சமையல்காரியா? என்னை விட்டு, நீங்கள் எப்படி போறீங்கன்னு? பார்க்கிறேன்" என்று சத்தம்போட, "இப்ப, என்ன, நீயும் கிளம்புகிறாயா? வா, போகலாம்" என்றவர் அனிதாவை பார்த்து சிரித்தார்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223668992
பிரியமுடன் ஒரு வார்த்தை!

Read more from Prema Rathnavel

Related to பிரியமுடன் ஒரு வார்த்தை!

Related ebooks

Related categories

Reviews for பிரியமுடன் ஒரு வார்த்தை!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பிரியமுடன் ஒரு வார்த்தை! - Prema Rathnavel

    1

    சென்னை மாநகரம் பேச்சுலர்ஸ் ஹெவன் என்று சொல்லப்டுகின்ற திருவல்லிக்கேணி. இங்கு பிரசித்தி பெற்ற, பார்த்தசாரதி பெருமாள் கோயிலும், பெரிய தெரு பிள்ளையார் கோயிலும், இன்னொரு சிறப்பம்சம். உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான, மெரினா கடற்கரை அருகிலேயே உள்ளது. பலதரப்பட்ட மக்களும் வசிக்கும் பகுதி. சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர்களை விட, வெளியூரிலிருந்து, வந்து, வாழ்பவர்கள் தான் அதிகம். இன்றும் ஆயிரக்கணக்கானோர். கல்லூரி முடிந்ததும் வேலை தேடி வருபவர்களும் சினிமா மோகம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வரும். ஆண்களும், பெண்களும் வருகின்ற ஊர். வந்தாரை வாழ வைக்கும் நகரம். கௌரவம் பார்க்காமல், அதிக சம்பளம் எதிர்பார்க்காது, உழைக்கும் நோக்கத்துடன் உள்ளவர்களை வஞ்சனை செய்யாத நகரம். அவரவர் வசதிக்கேற்ப, பஸ், ஆட்டோ, இரயில் என்று பயணிப்பதற்கும், சாப்பிடுவதற்கு கையேந்தி பவன் முதல் ஸ்டார் ஹோட்டல்கள் நிறைந்த நகரம். கோலிவுட் என்று சொல்லப்படுகின்ற, சினிமா உலகம் இங்குதான் உள்ளது. மற்றொரு சிறப்பு அம்சம். புகழ்பெற்ற, சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ளது சேப்பாக்கம் என்னும் இடத்தில். நகரம் என்றாலே, நல்லது, கெட்டது கலந்துதான் இருக்கும். சென்னை நகரமும் அதற்கு விதி விலக்கல்ல. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி எனபல மொழி பேசுபவர்களும் உண்டு.

    பெரிய தெரு, பிள்ளையாரையும், பார்த்தசாரதி பெருமாளையும் தரிசனம் செய்துவிட்டு, செங்கல்வராயன் தெருவிலுள்ள தனது வீட்டுக்குள் நுழைந்தார் பாலகிருஷ்ணன். பாலகிருஷ்ணனுக்கு வயது 50க்கு மேல் ஒன்றிரண்டு இருக்கலாம். அவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், அனிதா என்று ஒரு பெண்ணும், பிரசன்னா என்று ஒரு பையனும் உள்ளனர். இவர் வந்ததை அறிந்த, அவர் மனைவி, மீனாட்சி, குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். அதை வாங்கி குடித்தவர் எங்கே பிள்ளைகள் கிளம்பி விட்டார்களா?

    மீனாட்சியும், ஆமாங்க, அனிதா இப்பத்தான் ஆபீஸுக்கு கிளம்பினாள். பிரசன்னா, இப்போதான் கல்லூரிக்குச் சென்றான் என்றாள். அனிதா, கல்லூரிபடிப்பு முடித்து, தனியார் நிறுவனமொன்றில் அக்கௌண்ட் பிரிவில் வேலை பார்க்கிறாள். பிரசன்னா லயோலா கல்லூரியில், கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கிறான். பாலகிருஷ்ணன், தனியார் நிறுவனமொன்றில் அக்கெவுண்ட் பிரிவில் வேலை பார்க்கிறாள். பிரசன்னா லயோலா கல்லூரியில், கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கிறான். பாலகிருஷ்ணன் தனியார் நிறுவனமொன்றில் கொள்முதல் பிரிவில் வேலை பார்க்கிறார். நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் தான். வாடகை வீடு தான். இருந்தாலும் இல்லறத்தை, இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும், நடத்தி வந்தனர். அத்தம்பதிகள் பிள்ளைகள் இரண்டு பேரும், அம்மாவின் அழகையும், கலரையும், அப்பாவின் உயரத்தையும் கொண்டு, நன்றாகவே இருந்தனர்.

    வருகிற வருமானத்தில் பெண் அனிதாவின் திருமணத்திற்கென்று ஒரு சிறு தொகையும் சேமித்து வந்தனர். இந்த வருடம் பிரசன்னாவுக்கும் படிப்பு முடிந்துவிடும். அவனுக்கும் ஒரு வேலை கிடைத்துவிட்டால், இன்னும் நன்றாயிருக்கும் என எண்ணி இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தார்கள். அடையார், காந்தி நகரில் உள்ள ஒரு பங்களா, காலை நேரம் கலகலப்பாக இருந்தது. மணிவண்ணனும், கங்காதரனும், சகோதரர்கள். இருவருக்கும் மணமாகி, தங்கள் குழந்தைகளுடனும், பெற்றோர்களுடனும் வசித்து வந்தனர். இவர்களின் தங்கை பவித்ராவை உள்ளுரிலே ஒரு வக்கீலுக்கு மணமுடித்து கொடுத்திருந்தனர். சகோதரர்கள் இருவரும், வேற்றுமை பாராது, குடும்பத்தையும், தொழிலையும் கவனித்து, வந்தனர்...!

    மூத்தவர் மணிவண்ணனுக்கு ஒரே மகன் கௌதம். கல்லூரி இறுதியாண்டு முடித்து, மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளான். இளையவன் கங்காதரனுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண்ணும் இருந்தனர். அவரின் பிள்ளைகளுக்கு படிப்பு சரியாக வராத காரணத்தினால், தொழிலை கவனித்து வந்தனர். பெண் மைதிலியோ, எப்படியோ, டிகிரி முடித்துவிட்டு, சோம்பேறியாக வீட்டில் வலம் வந்து கொண்டிருந்தாள்.

    இவர்களின் பெற்றோர், அம்பலவாணன் அபிராமி. அம்பலவாணன் சிறு வயதிலே கஷ்டப்பட்டு உழைத்து மேல் நிலைக்கு வந்தவர். அவர் மனைவி அபிராமியும், அவருடைய கஷ்ட, நஷ்டங்களில் பங்கு கொண்டு வாழந்து வருபவர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், பெண் பவித்ராவும், அவள் கணவன் கிருஷ்ணமூர்த்தியும் வர ஒரே கோலாகலமாக கொண்டாடுவார்கள்.

    2

    அடுத்த மாதம், படிப்பு முடிந்து, அமொக்காவிலிருந்து, கௌதம் வரப்போகிறான். அவனுடைய வரவை எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். எல்லோரையும் விட, பவித்ராவின் பெண் யமுனா, மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தாள். அவளுக்கும், கௌதமுக்கும், திருமணம் செய்யணும் என்று பெரியோர்கள் நினைத்திருந்தனர். இதில் கௌதமுக்கு விருப்பமில்லை. சமயம் வரும்போது சொல்லிக் கொள்ளலாம் என இருந்தான். யமுனாவுக்கு அவனின் படிப்பு, பணத்தின் மீதே அதிகளவு ஆசை இருந்தது. ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாக நினைத்திருக்க, காலம் போட்ட கணக்கு வேறு விதமாக இருந்ததை யார் அறிவார்?

    சென்னை: மீனம்பாக்கம் விமான நிலையம், கௌதமை வரவேற்க, குடும்பமே அந்த அதிகாலை நேரத்திலும் வந்திருந்தது. அவனும், படிப்புக்களையுடன், பணக்காரகளையும் ஒன்று சேர, முகமெல்லாம் மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தான். பிரயாண களைப்பு, நண்பர்கள் சந்திப்பு என ஒரு வார காலம் ஓடிற்று, கௌதம் படிப்பை முடித்துவிட்டு நல்ல விதமாக வந்து சேர்ந்து விட்டான் என்பதற்காக குலதெய்வம், மீனாட்சி அம்மனை தரிசிக்க, எல்லோரும், குடும்பத்துடன் கிளம்பினர். அவர்கட்கு சொந்த ஊர் மதுரை. பிழைப்புக்காக, சென்னை வந்து, அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டாலும், எந்த ஒரு நல்ல காரியம் என்றாலும், மதுரை சென்று மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வது அவர்களின் வழக்கம்.

    கோவிலுக்குச் சென்று தரிசனம் முடித்துவிட்டு, அங்கே அவர்களுக்கென்று இருந்த வீட்டில் தங்கியிருந்தனர். எல்லோரும், பேசிக்கொண்டிருக்க, தாத்தாவும், பாட்டியும் தங்களுடைய பழைய உறவினரை பார்த்து வர தனியாக காரில் சென்றனர். உறவினர்களை பார்த்து, பேசிவிட்டு, திரும்பி வரும்போது, எதிரே வந்த அரசுபேருந்து ஒன்று மோத, அந்த இடத்திலேயே டிரைவர் உட்பட, மூவரும் இறந்துவிட, குடும்பமே பதறிப்போயின.

    பின்னர், அங்கேயே அவர்களது தகனத்தை, முடித்து விட்டு, இறுதி சடங்குகளையும் செய்தனர். பின்னர் சென்னை திரும்பி, இதோ அவர்கள் இறந்து ஒருமாதம் ஆயிற்று. மெள்ள, மெள்ள, இயல்பு நிலைக்கு திரும்பினர்.

    அப்போதுதான் ஊரிலிருந்து திரும்பியிருந்த, மரகதம்மாள், இவர்களின் துக்கச் செய்தியை கேள்விப்பட்டு, வீட்டுக்கு வந்திருந்தார். மரகதம்மாள், கங்காதரனின் மனைவி, யசோதாவுக்கு நெருங்கிய உறவினர் அவருக்கு சொந்தம் என்று சொல்லிக் கொள்ள யாரும் கிடையாது. தனியாகவே வாழ்ந்து வந்தார். இங்கு வந்ததும், அவர்களின் செல்வ செழிப்பையும், ஒற்றுமையையும் கண்டு அங்கேயே தங்கிவிட்டார். மற்றவர்களும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காலம் அதன் இயல்புக்கேற்ப நகர்ந்து கொண்டிருந்தது.

    பாலகிருஷ்ணனின் வீடு, அன்று ஞாயிற்றுக்கிழமை, அனிதா, ஓய்வாக வீட்டிலிருந்தாள். தம்பி பிரசன்னா, கல்லூரி மாணவர்களுடன் சுற்றுலா சென்றிருந்தான். அனிதாவுக்கு, திடீரென்று மயிலாப்பூரிலுள்ள சாய்பாபா கோவிலுக்கு செல்ல வேண்டும் போல தோன்ற, அம்மாவை கூப்பிட்டாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1