Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mullil Roja!
Mullil Roja!
Mullil Roja!
Ebook142 pages50 minutes

Mullil Roja!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமதி லட்சுமி ராஜரத்னம் திருச்சி நகரில் 27.3.1942ல் பிறந்தார் பத்தாவது வயதில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் தங்க நாணயம் பரிசு பெற்றார்.

இதுவரை 1500 சிறுகதைகள், நிறைய நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைகாட்சி நாடகங்கள், 3 மெகா தொலைகாட்சித் தொடர்கள், 3500 க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள் இவரின் எழுத்துலகச் சாதனைகளாகும். 40 சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பெண் எழுத்தாளரும் இவரே.

காஞ்சி சங்கர மடத்தினால் 1991ல் எழுத்துக்காகவும், 1993ல் ஆன்மீகச் சொற்பொழிவிற்காகவும் கௌர விக்கப்பட்டுள்ளார். இதுவரை 2500 சொற்பொழிகள் செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் சின்ன கச்சேரி செய்த அனுபவம் உண்டு. இதைத் தவிர கோயம்புத்தூர், தஞ்சையில் கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. மகள் ராஜஸ்யாமளாவின் நாட்டியற்குப் பாடிய அனுபவமும் உண்டு.

இவருடைய இதயக்கோயில் நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்ற நாவல். இன்று வரை பலரால் பாராட்டைப் பெற்ற நாவல்.

1999ல் 'செந்தமிழ்ச் செல்வி' என்று ஸ்ரீகுக ஸ்ரீ வாரியார் விருதைப் பெற்றார். ஜனவரி 2002ல் கொழும்புவில் உள்ள இந்து மகா சபை இவருக்கு சொற்சுவை நாயகி என்ற விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. சங்கப்பலகை என்னும் புகழ் பெற்ற கலைமகள் பத்திரிக்கை ஜனவரி 2019-ல் சிறந்த எழுத்தாளருக்கான விருதை கொடுத்து கௌரவித்தது. ஒரே மகள் ராஜஸ்யாமளாவும் எழுத்தாளர் பரத நாட்டியக் கலைஞர்.

2011-ல் கணவனை இழந்த இவர் அதன்பின் உடல் நலம் குன்றி நான்கு அறுவை சிகிச்சைகள், இன்னும் பல உடல் தொந்திரவுகள் என்று சிரமப்பட்டாலும் 76 வயதிலும் மனம் தளர்வுளராமல் எழுதி வருகிறார். உங்கள் பாராட்டு என்ற பெரிய விருதை விட பெரிய உண்டா? என்கிறார்.

Languageதமிழ்
Release dateDec 26, 2019
ISBN6580115704867
Mullil Roja!

Read more from Lakshmi Rajarathnam

Related to Mullil Roja!

Related ebooks

Reviews for Mullil Roja!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mullil Roja! - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    முள்ளில் ரோஜா!

    Mullil Roja!

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    மதிய உணவு இடைவேளை முடிந்து வகுப்பிற்குள் நுழைந்தாள் வந்தனா. தமிழ் பேராசிரியை கனகவல்லி பாடம் நடத்தினால் இன்று பூராவும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இதற்காகவே கல்லூரியில் தமிழைப் பாடமாக எடுத்துக் கொண்டவர்கள் நிறையப் பேர்கள் இருக்கிறார்கள். வந்தனாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

    தன் இருப்பிடத்தில் அமர்ந்த பொழுது கல்லூரி பணியாள் வந்து வந்தனாவை பிரின்ஸிபல் அழைப்பதாகக் கூறிவிட்டு போனான்.

    போ வந்தனா

    தமிழ் பேராசிரியை அவளை அனுப்பி வைத்தாள். பிரின்ஸி அறையை நோக்கிப் போனாள் வந்தனா. ஏகப்பட்ட கேள்விகள் மனதிற்குள் சக்கர வட்டமிட்டன. நடுவகுப்பில் எதற்காகத் தன்னை பிரின்ஸி அழைக்க வேண்டும்? தன் மீது ஏதாவது குற்றம் குறை கண்டு விட்டாரா?

    ஆனால் பிரின்ஸி அறை வாசலிலேயே அவள் வீட்டு கார் டிரைவர் மாணிக்கம் நின்று கொண்டிருந்தான்.

    என்ன மாணிக்கம்?

    மாமா அழைச்சிக்கிட்டு வரச் சொன்னாரு.

    இதுக்காகத்தான் பிரின்ஸி அழைச்சாங்களா?

    ஆமாம் சின்னம்மா.

    எதற்காக மாமா அழைத்திருப்பார்? ஒருவேளை அத்தை மரகதத்திற்கு உடல்நலக் குறைவாக இருக்குமோ? மருத்துவமனையில் சேர்த்திருப்பார்களோ? அத்தை மரகதத்திற்கு அடிக்கடி வீஸிங் என்ற மூச்சிறைப்பு வருவது வழக்கம் தான்.

    மனக் கலக்கத்துடன் பிரின்ஸியின் அறைக்குள் நுழைந்தாள் வந்தனா.

    வா வந்தனா. உன் மாமா உன்னை உடனே அனுப்பச் சொல்லி இருக்காரு. வகுப்பறைக்குப் போய் ஆசிரியைகிட்ட சொல்லிட்டுப் போமா

    சரிங்க மேடம்.

    விஷ் யூ ஆல் த பெஸ்ட் வந்தனா - என்று முக மலர்ச்சியுடன் கூறிய பிரின்ஸியை புரியாத குழப்பத்துடன் ஏறிட்டாள் வந்தனா.

    போ மாமா காத்துட்டு இருப்பார்.

    பதில் பேசாமல் ஓட்டமாக ஓடி வகுப்பறையை அடைந்தாள். பேராசிரியையிடம் கூறிவிட்டு புத்தகங்களை அள்ளிக் கொண்டு கார் அருகில் வந்தாள். காரில் அமர்ந்ததும் தான் சுதந்திரமாக மூச்சை இழுத்து விட்டாள்.

    மாணிக்கம் அண்ணே என்னத்துக்காக மாமா வரச்சொல்லி இருக்காங்க? உங்களுக்கு தெரியுமா?

    தெரியலைம்மா

    அத்தைக்கு உடம்பு ஒண்ணுமில்லையே

    அதெல்லாம் ஒண்ணுமில்லே. வீட்ல ஏதோ விசேசம் போல இருக்குதும்மா. வாழை மரம் எல்லாம் கட்டிட்டு இருக்காங்க.

    மாணிக்கம் சொன்னது நிஜம் தான். வாசலில் மாவிலைத் தோரணங்கள், வாழை மரங்கள், சீரியல் பல்ப் வரிசை என்று மாமா மேற்பார்வையில் பணியாட்கள் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

    அவளைப் பார்த்ததும் மாமா அருணாசலம் கையில் உள்ள மாவிலைக் கொத்தைப் போட்டு விட்டு அவள் அருகில் வந்தார்.

    வாம்மா உள்ளே போ முகம் கழுவி டிபன் சாப்பிடு

    முழு நிலவு ஒன்று பெண்ணாகத் திரண்டு வந்தாற்போல் நின்றாள் வந்தனா.

    என்ன மாமா விசேஷம்?

    உள்ளாற போடா. அத்தை சொல்வாங்க.

    வீட்டிற்குள் நுழையும் பொழுதே ஏலம், முந்திரி என்று நெய்யில் வறுபட்டு மணமும், மசாலா குருமா, சேமியா கிச்சடி, வடை பொரியும் எண்ணை கமறலும் மூக்கைத் துளைத்தது.

    அத்தைக்குப் பிறந்த நாளா? இல்லையே... மாமாவுக்கு பிறந்த நாளா? இல்லையே... இருவரின் திருமண நாளா? எல்லாமே நடந்து முடிந்தாகி விட்டது.

    அத்தை-மாமாவிற்கு மூன்றும் பெண்கள். பெரியவள் ரஞ்சனி திருமணம் முடிந்து உள்ளூரிலேயே வசிப்பவள். இரண்டாவது மகள் பிரீதி பிளஸ்-டூவும், மூன்றாவது மகள் அஞ்சு டென்த்தும் படிப்பவர்கள். என்ன விசேசம் என்று தெரியவில்லையே!

    அவள் தன்னறைக்குள் நுழைந்து புத்தகங்களை ஒழுங்குபடுத்தி வைத்தாள்.

    உடை மாற்றிக் கொண்டு முகம் கழுவி லேசான ஒப்பனையுடன் வந்தாள். பிரீதியும், அஞ்சுவும் வந்திருந்தார்கள்.

    அஞ்சு இன்னிக்கு என்ன நடக்கப்போகுது நம்ம வீட்ல? - என்று கேட்டாள் வந்தனா.

    இதற்குள் சமையலறையில் இருந்து ஒரு பணிப்பெண் இவர்களுக்கு சிற்றுண்டி வகைகளை தட்டில் வைத்துக் கொண்டு வந்தாள்.

    வடை ஒன்றை எடுத்து கடித்த அஞ்சு, நீதான் எங்களுக்கு முன்னாலே வந்துட்டே. நாங்க உன்னை கேட்கலாம்னு இருந்தோம் என்றாள்.

    அப்பொழுது தான் அத்தை மரகதம் கடைக்குப் போய் காரில் வந்து இறங்கி உள்ளே வந்தாள்.

    மூவரும் போய் சூழ்ந்து கொண்டு இன்னைக்கு என்ன நடக்கப் போகுது நம்ம வீட்ல - என்று கேட்டார்கள்.

    காரிலிருந்து துணிகளையும், மற்ற பொருட்களையும் கொண்டு வந்து டிரைவர் உள்ளே வைக்க,

    முத்தையா எல்லா சாமான்களையும் எடுத்துட்டு வந்துட்டியா?

    கொண்டு வச்சுட்டேம்மா என்று கூறிய டிரைவர், சமையலறையில் இருந்து பணியாள் கொண்டு வந்த காபியை வாங்கிக் கொண்டு வெளியே போனாள்.

    அத்தை என்ன பங்ஷன் நடக்கப் போகுது? என்று கேட்டாள் வந்தனா.

    சொல்றேண்டா கண்ணு. உங்கிட்ட சொல்லாமலயா? வா, இந்த புடவைகள், நகைகள் புடிக்குதான்னு பாருடா கண்ணம்மா - என்று கூறியதுடன் நில்லாமல் புடவை நகைகளை அங்கேயே பிரித்துக் காட்டினாள்.

    அஞ்சு அவசர அவசரமாக நெக்லஸை போட மரகதம் வெடுக்கென்று பிடுங்கினாள்.

    வைடி பெட்டியில

    எனக்கு இல்லையா?

    இல்லேடி

    அப்ப யாருக்கும்மா? - என்று பிரீதி குரலில் ஏமாற்றம் தொனிக்க கேட்டாள்.

    பெட்டியில ஒரு பிரேஸ்லெட்டும், சங்கிலியும் இருந்தது. அதை பிரீதி எடுத்தாள். அதற்கு முன் அஞ்சு புடவைப் பெட்டியை எடுத்து பிரித்தாள். தாமரை வண்ணத்தில் சின்ன சின்ன அரக்குப் பூக்கள் சரிகை தூவலாகப் பரவ, அரக்கு சரிகைப் பார்டரில் புடவை என்னை எடுத்து கட்டு கட்டு என்றது.

    அம்மா புடவை யாருக்கு? என்று அஞ்சு கேட்க, மரகதம் வாயைத் திறக்கும் முன் ரஞ்சினி கணவன் பின் தொடர கையில் குழந்தையுடன் வந்து நின்றாள்.

    வா ரஞ்சனி, வாங்க மாப்பிள்ளை... அட என் செல்ல ராசா வாங்க வாங்க என்று கூறியபடி மரகதம் குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

    அஞ்சுவும், பிரீதியும் குழந்தையைப் பிடுங்கிக் கொண்டு கொஞ்சத் தொடங்கினார்கள்.

    என்னம்மா, நான் வரதுக்குள்ள நீயே போயி வாங்கிட்டு வந்துட்டியா? ரொம்ப மோசம்மா நீ - என்று ரஞ்சனி கோபித்துக் கொள்ள மரகதம் மெள்ளச் சிரித்தாள்.

    எங்க ரஞ்சு நேரம் இருக்குது? பன்னிரெண்டு மணிக்குத் தான் அப்பா வந்து சொன்னாரு. உடனே டிபன், காபின்னு ஏற்பாடு பண்ணச் செய்து, கடைக்கும் ஓடறதுன்னா சாமான்யமா என்ன? என்னை ரெண்டு மணி நேரமா பம்பரமா சுத்த வச்சுட்டாரே! காத்துட்டு இருக்க முடியலே - என்று சமாதானம் சொல்லியவள்,

    ரஞ்சனி புடவையை ஆசையாகப் பார்த்தாள். கண்களில் லேசான பொறாமை ரேகை படர்ந்தது.

    இந்த நிறத்துல தான் என்கிட்ட சேலை இல்ல என்றாள் ரஞ்சனி.

    வாங்கிட்டா போச்சு ரஞ்சு. மாப்பிள்ளை உங்க பொண்டாட்டி என்ன சொல்றா கேட்டீங்களா? என்று கேட்ட மரகதம் தன் மருமகனைப் பார்க்க அவன் பார்வை பதிந்த பக்கம் அவளும் பார்க்க துணுக்குற்றாள்.

    ரஞ்சனியின் கணவன் சிவகுமார் தன் பார்வையை வந்தனாவின் மீதே பதித்திருந்தான். மரகதம் புடவைப் பெட்டிகளையும், நகைப் பெட்டிகளையும் பட்டென்று மூடினாள்.

    இந்தா ரஞ்சனி போ போயி முதல்ல காபி, பலகாரம் சாப்பிடுங்க. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்ற நேரமாயிடுச்சு. எனக்கு எவ்வளவு வேலை இருக்குது? என்று

    Enjoying the preview?
    Page 1 of 1