Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வீணையடி நீ எனக்கு!
வீணையடி நீ எனக்கு!
வீணையடி நீ எனக்கு!
Ebook117 pages47 minutes

வீணையடி நீ எனக்கு!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கௌரி, அவள் பெற்றோர்களுக்கு ஒரே பெண் எனவே செல்லம் அதிகம். அதைப் போன்று அவளுக்கு ஆசைகளும் அதிகம். கௌரியின் அப்பா, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். கட்டாய ஓய்வில் விருப்பம் கொண்டு கொஞ்ச பணத்துடன் வெளிவந்தவர். சின்னதாக தொழில் தொடங்கி நடத்தி வந்தார். அப்போது கௌரி, கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தாள். கௌரி, பார்ப்பதற்கு, கொஞ்சம் அழகாகவே இருந்தாள்.
 கௌரி ஆசைப்பட்டாள் என்பதற்காகவே அவளை சென்னை கல்லூரியில் சேர்த்திருந்தனர். இரு பாலாரும் படிக்கும் கல்லூரி ஆரம்பத்தில் எந்த பிரச்சனையும் இராது நன்றாகவே போய் கொண்டிருந்தது. கௌரியின் படிப்பு. அந்த கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த, சித்தார்த்தின் கண்களில் கௌரி விழுந்தாள். சித்தார்த் பெரிய பணக்கார வீட்டுப்பையன். பொழுது போக்கிற்காகவும் பெண்களிடம் வம்பு இழுப்பதாற்காகவும் கல்லூரி வருபவன்.
 கௌரியின் ஆசை மனதை புரிந்துக் கொண்டான் வெகு சுலபமாக இருவரும் சினிமா, பீச், ஹோட்டல் என்று பைக்கில் ஊரைச் சுற்றினர். நாளாக ஆக, கௌரியின் பெற்றோர்க்கு விஷயம் தெரியவர அதிரடியாக கௌரியை கல்லூரி படிப்பை விட்டு நிறுத்தியதோடு, அடுத்த வருடமே, தூரத்து சொந்தமான, ஆத்மநாதனுக்கு மணமுடித்து வைத்தனர். கட்டாயமாக.
 கௌரிக்கு, கல்யாணமே பிடிக்கவில்லை. அதுவும், ஆத்மநாதன், பார்ப்பதற்கு சுமாராக இருந்ததும். மில்லில் வேலை பார்ப்பதும் அவளுக்கு பிடிக்கவில்லை.
 ஆத்மநாதனுக்கு இது தெரியும். ஆனாலும் அவர் கௌரியின் மீது அன்பாக இருந்தார். எந்த வித படிப்பும் இல்லாத கௌரி பெற்றோர்களின் வற்புறுத்தலால், ஆத்மநாதனுடன் கடமையாக குடும்பம் நடத்தினாள். அதன் பயனாக இரண்டு வருடம் சென்று கௌரி ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். குழந்தைமாநிறமாக இருந்தாலும் மூக்கும், முழியும் லட்சணமாக களையுடன் இருந்தது. கௌரிக்கு குழந்தையிடமும், பாசம் இல்லை. அவளுடைய எண்ணமெல்லாம், சித்தார்த்தை, மணமுடித்து வாழ்க்கையின் எல்லா சந்தோஷங்களையும், அனுபவிக்க வேண்டும் என்று அந்த எண்ணத்தை, பாழாக்கிய பெற்றோர் மீதும், கணவன், குழந்தை மீதும் வெறுப்பை காட்டினாள் அவளை அதிர்ஷ்ட தேவதை கண் கொண்டு பார்த்தாள்.
 'அப்போது லாவண்யாவுக்கு 5 வயது நடந்து கொண்டிருந்தது. கௌரியின் ஒன்று விட்ட சித்தப்பா. திருச்சியில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான உரிதிபாகங்கள் தயாரிக்கும், தொழிலை நடத்திக் கொண்டிருந்தார். அவருக்கு வயது 50க்கு மேல் ஆகிவிட்டது. அவர் ஏதோ காரணத்தால் கல்யாணமே, செய்துக் கொள்ளாமல், பிரம்மச்சரியாகவே வாழ்ந்து வந்தார். அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட, அப்போதுதான் தனக்கென்று குடும்பம் இல்லையென்பதை, கஷ்டமாக உணர்ந்தார். அத்துடன் தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய தொழிலும் கட்டிய வீடும். தனக்குப்பின் அழிந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தன் ஒன்று விட்ட அண்ணன், கௌரியின், அப்பாவை பார்க்க மதுரைக்கு வந்தார்.
 அவருக்கு, ஆத்மநாதனை மிகவும் பிடித்து போனது. எனவே, ஆத்மநாதனை, திருச்சியுள்ள கம்பெனிக்கு எம்.டி ஆக்கிவிட்டு, சொத்துக்களை கௌரியின் பேரில் எழுதி வைத்துவிட்டு கையில் கொஞ்சம் பணத்துடன், தீர்த்த யாத்திரை கிளம்பிவிட்டார். கௌரியினுள் அடக்கி வைக்கப்பட்டிருந்த ஆசைகள், பணத்தை கண்டதும், மீண்டும் உயிர் கொண்டு எழுந்தது.
 முதல் வேலையாக தன் மகளை ஊட்டியில் உள்ள பள்ளியில் சேர்த்தாள். கணவன் ஆத்மநாதனுடன் திருச்சிக்கு செல்லமாட்டேன் எனக்கூறி பெற்றோர்களுடன் தங்கிவிட்டாள். பெற்றோர்களும், கணவனும் சொல்லிப் பார்த்தும், எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223228752
வீணையடி நீ எனக்கு!

Read more from Prema Rathnavel

Related to வீணையடி நீ எனக்கு!

Related ebooks

Reviews for வீணையடி நீ எனக்கு!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வீணையடி நீ எனக்கு! - Prema Rathnavel

    1

    "நான் ஆட்சி செய்து வரும் நான் மாடக்கடலிலே

    மீனாட்சி என்ற பெயர் எனக்கு

    கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னிலே

    விசாலாட்சி என்ற பெயர் வழக்கு",

    என்ற பாடலை கண்முடி ரசித்தபடி, தொடையில் தாளம் போட்டுக் கொண்டிருந்தார். கல்யாணராமன், பாடலை ரசித்தபடியே தன் கணவனையும், ஓரக்கண்ணால் பார்த்த வண்ணம் காலை சமையலில் ஈடுபட்டிருந்தாள் அவர் மனைவி தாமரை.

    அன்று பள்ளி இல்லாததால் அவர்களது 7 வயது மகன் சூர்யா வெளியே விளையாடப் போய்விட்டிருந்தான். இந்த குழந்தைகள் இருக்கிறார்களே! மகா புத்திசாலிகள். பள்ளி இருக்கிற நாட்களில் என்னதான் தடி போட்டி எழுப்பினாலும், கஷ்டப்பட்டுக் கொண்டே எழுந்திருப்பார்கள். பள்ளி இல்லாத நாட்களில் யாரும் எழுப்பாமலே சீக்கிரம் எழுந்து விளையாடப் போய்விடுவார்கள்.

    சூர்யாவும் அப்படித்தான் அன்று காலையில் சீக்கிரம் எழுந்து, அம்மா தந்த பாலை குடித்து விட்டு விளையாட சென்றவன், பசிக்கும் போது தான் வீட்டுக்கு வருவான்.

    அவர்கள் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி, சின்ன மைதானம் போன்று ஒரு வெற்றிடம் இருந்தது அங்கேதான். அந்த தெரு பையன்கள் எல்லோரும் விளையாடுவார்கள். அதில் சூர்யாவின் வகுப்பில் படித்த கவின் என்பவனும் ஒருவன் காலையிலே விளையாட வருபவன், காலை, மதியம் என்று சூர்யாவுடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு மாலையானதும் தான் வீட்டிற்கு செல்வான்.

    அன்றும் அப்படித்தான். காலை நேர விளையாட்டை முடித்து விட்டு சாப்பிடுவதற்குகாக வந்தனர். சூர்யாவின் அம்மா, ஆப்பமும், தேங்காய்பாலும் வைக்க, இருவரும் நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட்டனர். அவர்களை பார்த்து ரசித்து மகிழ்ந்தனர் பெற்றோர்கள்.

    அப்போது கல்யாணராமனின் நண்பர்... ஆத்மநாதன் தன் 5 வயது குழந்தை லாவண்யாவுடன் வந்தார். அவரைக் கண்ட கல்யாணராமன் வாப்பா ஆத்மா என்று, தாமரையும், வாங்கண்ணா! என்று முகமலர்ச்சியுடன் வரவேற்றார். சூர்யா அவர்களை பார்த்து, சிரித்து விட்டு, மீண்டும் தன் நண்பனுடன் விளையாடச் செல்ல, டே சூர்யா, லாவண்யாவையும் கூட்டிப்போ, என்று கல்யாணராமன் சொல்ல, அவனோ நாங்க, பசங்களா விளையாடுறோம். நீ வரக்கூடாது என சொல்லிட்டு ஓடிப் போயிட்டான்.

    போடா, என பழிப்புக் காட்டிய, லாவண்யா பாருங்க. ஆன்ட்டி, இந்த சூர்யாவை எனக் கூறியவாறே தாமரையின் கழுத்தை கட்டிக் கொண்டாள்.

    நீ வாடா செல்லம், அவன் கிடக்கிறான், என்று அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டார். தாமரை.

    ஆத்மநாதனும் கல்யாணராமனும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பவர்கள். ஆத்மநாதனின் மனைவி கௌரிக்கு சற்று குணம் போதாது. அவள் இவர்களுடன் ஒட்டமாட்டாள். ஆனால் தாமரை அதை பொருட்படுத்துவதில்லை. ஆத்மநாதனும், மனைவி மறுத்தாலும் வரும் போது, தன்னுடன் குழந்தையை கூட்டிக்கொண்டு தான் வருவார்.

    2

    கௌரி, அவள் பெற்றோர்களுக்கு ஒரே பெண் எனவே செல்லம் அதிகம். அதைப் போன்று அவளுக்கு ஆசைகளும் அதிகம். கௌரியின் அப்பா, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். கட்டாய ஓய்வில் விருப்பம் கொண்டு கொஞ்ச பணத்துடன் வெளிவந்தவர். சின்னதாக தொழில் தொடங்கி நடத்தி வந்தார். அப்போது கௌரி, கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தாள். கௌரி, பார்ப்பதற்கு, கொஞ்சம் அழகாகவே இருந்தாள்.

    கௌரி ஆசைப்பட்டாள் என்பதற்காகவே அவளை சென்னை கல்லூரியில் சேர்த்திருந்தனர். இரு பாலாரும் படிக்கும் கல்லூரி ஆரம்பத்தில் எந்த பிரச்சனையும் இராது நன்றாகவே போய் கொண்டிருந்தது. கௌரியின் படிப்பு. அந்த கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த, சித்தார்த்தின் கண்களில் கௌரி விழுந்தாள். சித்தார்த் பெரிய பணக்கார வீட்டுப்பையன். பொழுது போக்கிற்காகவும் பெண்களிடம் வம்பு இழுப்பதாற்காகவும் கல்லூரி வருபவன்.

    கௌரியின் ஆசை மனதை புரிந்துக் கொண்டான் வெகு சுலபமாக இருவரும் சினிமா, பீச், ஹோட்டல் என்று பைக்கில் ஊரைச் சுற்றினர். நாளாக ஆக, கௌரியின் பெற்றோர்க்கு விஷயம் தெரியவர அதிரடியாக கௌரியை கல்லூரி படிப்பை விட்டு நிறுத்தியதோடு, அடுத்த வருடமே, தூரத்து சொந்தமான, ஆத்மநாதனுக்கு மணமுடித்து வைத்தனர். கட்டாயமாக.

    கௌரிக்கு, கல்யாணமே பிடிக்கவில்லை. அதுவும், ஆத்மநாதன், பார்ப்பதற்கு சுமாராக இருந்ததும். மில்லில் வேலை பார்ப்பதும் அவளுக்கு பிடிக்கவில்லை.

    ஆத்மநாதனுக்கு இது தெரியும். ஆனாலும் அவர் கௌரியின் மீது அன்பாக இருந்தார். எந்த வித படிப்பும் இல்லாத கௌரி பெற்றோர்களின் வற்புறுத்தலால், ஆத்மநாதனுடன் கடமையாக குடும்பம் நடத்தினாள். அதன் பயனாக இரண்டு வருடம் சென்று கௌரி ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். குழந்தை மாநிறமாக இருந்தாலும் மூக்கும், முழியும் லட்சணமாக களையுடன் இருந்தது. கௌரிக்கு குழந்தையிடமும், பாசம் இல்லை. அவளுடைய எண்ணமெல்லாம், சித்தார்த்தை, மணமுடித்து வாழ்க்கையின் எல்லா சந்தோஷங்களையும், அனுபவிக்க வேண்டும் என்று அந்த எண்ணத்தை, பாழாக்கிய பெற்றோர் மீதும், கணவன், குழந்தை மீதும் வெறுப்பை காட்டினாள் அவளை அதிர்ஷ்ட தேவதை கண் கொண்டு பார்த்தாள்.

    ‘அப்போது லாவண்யாவுக்கு 5 வயது நடந்து கொண்டிருந்தது. கௌரியின் ஒன்று விட்ட சித்தப்பா. திருச்சியில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான உரிதிபாகங்கள் தயாரிக்கும், தொழிலை நடத்திக் கொண்டிருந்தார். அவருக்கு வயது 50க்கு மேல் ஆகிவிட்டது. அவர் ஏதோ காரணத்தால் கல்யாணமே, செய்துக் கொள்ளாமல், பிரம்மச்சரியாகவே வாழ்ந்து வந்தார். அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட, அப்போதுதான் தனக்கென்று குடும்பம் இல்லையென்பதை, கஷ்டமாக உணர்ந்தார். அத்துடன் தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய தொழிலும் கட்டிய வீடும். தனக்குப்பின் அழிந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தன் ஒன்று விட்ட அண்ணன், கௌரியின், அப்பாவை பார்க்க மதுரைக்கு வந்தார்.

    அவருக்கு, ஆத்மநாதனை மிகவும் பிடித்து போனது. எனவே, ஆத்மநாதனை, திருச்சியுள்ள கம்பெனிக்கு எம்.டி ஆக்கிவிட்டு, சொத்துக்களை கௌரியின் பேரில் எழுதி வைத்துவிட்டு கையில் கொஞ்சம் பணத்துடன், தீர்த்த யாத்திரை கிளம்பிவிட்டார். கௌரியினுள் அடக்கி வைக்கப்பட்டிருந்த ஆசைகள், பணத்தை கண்டதும், மீண்டும் உயிர் கொண்டு எழுந்தது.

    முதல் வேலையாக தன் மகளை ஊட்டியில் உள்ள பள்ளியில் சேர்த்தாள். கணவன் ஆத்மநாதனுடன் திருச்சிக்கு செல்லமாட்டேன் எனக்கூறி பெற்றோர்களுடன் தங்கிவிட்டாள். பெற்றோர்களும், கணவனும் சொல்லிப் பார்த்தும், எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

    3

    ஆத்மநாதன், திருச்சி சென்று அங்குள்ள வீட்டில் தங்கிக் கொண்டு தொழிலை கவனித்து வந்தார். வாரம், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மதுரை வருவார். வரும் போது, தன் நண்பனையும், பார்த்து செல்வார். பள்ளி விடுமுறை என்பதால், லாவண்யா, மதுரைக்கு வந்திருந்தாள். இது தெரிந்து ஆத்மநாதனும் மதுரைக்கு வந்தார். லாவண்யா, தாத்தா, பாட்டிக்கும், அப்பாவுக்கும் செல்லப்பெண். ஆனால் குணத்தில் கௌரியை கொண்டிருந்தாள் பிடிவாதமும், யாரையும் மதிக்காத குணமும் கொண்டு வளர்ந்தாள்.

    ஆத்மநாதனும் சொல்லி பார்த்தார். ஊகும் அவள் கேட்பதாயில்லை வளர்ந்தால் சரியாகி விடுவாள் என நினைத்தார்.

    மதுரைக்கு வந்திருந்தவர். வழக்கம் போல் தன் மகளையும் அழைத்துக் கொண்டு, நண்பன் கல்யாணராமனை பார்க்க வந்தார். அப்போது சூர்யா வீட்டில் தான் இருந்தான். அவன் லாவண்யாவை கண்டு கொள்ளவே இல்லை. தாமரை அவர்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1