Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paarkadal
Paarkadal
Paarkadal
Ebook99 pages43 minutes

Paarkadal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703483
Paarkadal

Read more from Vidya Subramaniam

Related to Paarkadal

Related ebooks

Reviews for Paarkadal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paarkadal - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    பாற்கடல்

    Paarkadal

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    ரமணன் அம்மாவை நமஸ்காரம் பண்ணினான். செளக்யமாரு. தேசம் விட்டு தேசம் போற. எங்க இருந்தாலும் என் பிள்ளையாவே இருக்கணும். வேளா வேளைக்கு சாப்டு. வாரா வாரம் எண்ணை ஸ்நானம் பண்ணு. எந்தச் சூழ்நிலைலயும் குடியும் அசைவமும் பழக்கிக்காதே ரெண்டு வேளை சந்தியாவந்தனம் பண்ணி, காயத்ரி ஜெபி.

    போறுமேம்மா. அவன் என்ன குழந்தையா? அண்ணா ராமகிருஷ்ணன் அலுத்துக் கொண்டான்.

    நீ வாடா ரமணா. அம்மா எல்லாத்தையும் சொல்லி முடிக்கறதுக்குள்ள ஏரோப்பிளேன் போய்டும். வேணுங்கறதெல்லாம் மறக்காம எடுத்து வெச்சுண்டயோன்னோ?

    ம். ஆச்சு

    நாங்களும் ஏர்போர்ட் வரோமே. தங்கைகள் சொல்ல, அண்ணா அவர்களை முறைத்தான்.

    மொட்டை மாடில போய் நில்லுங்கோடி. இவன் ஏர்ற பிளேன் இப்டிதான் பறந்து போகும். இங்கேர்ந்து கையாட்டினா போறும்

    வந்துட்டு போட்டுமேண்ணா.

    சிபாரிசா...? பஸ் ஃபேர் எல்லாம் எவ்ளோ ஏறிக்கிடக்குன்னு தெரியுமா? ஏர்போர்ட் வரைக்கும் வரணும்னு தோணும். அது வரைக்கும்தான் வரவும் முடியும். கூடவே பிளேன் ஏறி அமெரிக்காக்கு வந்துட முடியுமா? சும்மா வெறுமன ஆசைப்படுவானேன்? அங்க வந்து என்ன செய்யப்போறா? கையாட்டுவா! அதை இங்கயே செஞ்சுட்டு போறது!

    அண்ணா நிர்த்தாட்சண்யமாக மறுத்துவிட தங்கைகள் முகம், சுருங்கிப் போயிற்று. பஸ் கட்டணம் அண்ணாவுக்கு ஒரு சாக்கு என்பது அவர்களுக்குத் தெரியும். அண்ணாவுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதென்பது அறவே பிடிக்காத செயல். அது எவ்வித பொறுப்பாயினும் சரி. தனியாளாய் செல்வதில் உள்ள செளகர்யங்கள் தான் அவனுக்கு தங்கைகளின் ஆசையைவிட முக்கியம்.

    தங்கைகளை அழைத்துச் சென்றால் இஷ்டம்போல போக முடியாது வர முடியாது. நினைத்தபோது சிகரெட் பற்ற வைத்துப் புகைவிட முடியாது. அவன் சிகரெட் பிடிப்பது இன்னும் அம்மாவுக்குத் தெரியாது. ஒரே ஒரு முறை மொட்டை மாடியில் வைத்து அவன் புகைப்பதைத் தர்ஷிணி பார்த்திருக்கிறாள். அம்மாவிடம் சொன்னால் அண்ணா அடிப்பானோ என்ற பயத்தில் சொல்லவில்லை. கல்யாணமாகி இரண்டு குழந்தைகளைப் பெற்றவனைப் பற்றி என்ன போட்டுக் கொடுக்க முடியும். மன்னிக்குத் தெரியாதா என்ன? அவளே பேசாமல் இருக்கும்போது நமக்கென்ன பெருதனம் என்று நினைத்து விட்டுவிட்டாள்.

    ரமணன் புறப்பட்டான். எல்லோரும் வாசல் வரை வந்து வழியனுப்பினார்கள். அக்கம் பக்கத்தவர் பார்க்க அவன் அமெரிக்காவுக்குப் புறப்பட்டது பெருமையாய், கெளரவமாய் இருந்தது. அவன் போனதும் ஒவ்வொருவராய் வந்து விசாரிப்பார்கள். சமையல்காரி பிள்ளை அமெரிக்காவில் உத்யோகம் பார்க்கப் போவான் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஏன் அம்மாவும் மற்றவர்களுமேகூட நினைத்துப் பார்த்ததில்லை.

    ரமணன் நன்றாகப் படித்தபோது அவன் மார்க் பார்த்து அம்மாவும் அப்பாவும் சந்தோஷப்படுவதோடு சரி, அவன் என்னவாக ஆக வேண்டும் என்றெல்லாம் அவர்கள் யோசித்ததுமில்லை அதற்கு அவனைத் தயார் படுத்தியதுமில்லை. உழைப்பதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. அப்பா கல்யாணம் கார்த்தி என்று பெரிய வேலைகளுக்குச் சமைக்கப் போனால் அம்மா சீமந்தம், தெவசம், பிறந்த நாள், பூஜைகள் என்று சின்ன விசேஷங்களுக்கு சமைக்கப் போவாள்.

    அப்பாவுக்கு ஆயிரக்கணக்கில் வருமானம் வந்தாலும் நூற்றுக்கணக்கில் தான் வீட்டுக்குத் தருவார். மிச்சமெல்லாம் சீட்டாட்டத்திலும். குதிரை வாலிலும் காணாமல் போகும். அம்மா ஏதாவது கேட்டால் அடி உதை என்று வீடு ரெண்டு படும். அம்மாவின் சொற்ப வருமானத்தில் தான் ஆறு பேர் வயிறு நிறைய வேண்டிய நிலையில் குழந்தைகளின் படிப்பைப் பற்றியோ எதிர்காலத்தைப் பற்றியோ யோசிக்கவோ கனவு காணவோ அவனுக்கு ஏது நேரம்? ஒண்டுக்குடித்தனங்கள் நிறைந்த ஒரு ஸ்டோரில் தான் ஜீவிதம். தண்ணி க்யூ, பாத்ரூம் கியூ, டாய்லட் கியூ என்று எல்லாவற்றிற்கும் போராட்டம், ஓட்டம், டர்ன் போட்டுக் கொண்டு ஆளுக்கொரு நாள் தண்ணீர் அடித்தாக வேண்டும். உள்ளங்கைகள் காய்ந்து விடும். சில நேரம் என்னடா வாழ்க்கை என்று அலுத்து விடும் ஆனால் தப்பிக்க முடியுமா...?

    நாம ஏம்மா பணக்காராளா இல்ல...? ஏன் பங்களால இல்ல...? சாமி ஏன் நமக்கு மட்டும் பணம் பங்களா எல்லாம் குடுக்கல? கடைசி பெண் அனுராதா ஒரு முறை அம்மாவிடம் கேட்டே விட்டாள்.

    அதுக்கெல்லாம் பூர்வ ஜென்மத்துல புண்ணியம் பண்ணியிருக்கணும்டி. நாம என்னல்லாம் பாவம் பண்ணினோமோ?

    பூர்வ ஜென்மம்னா...?

    இதுக்கு முந்தின ஜென்மம்.

    முந்தின ஜென்மம்னா.

    நீ சாப்ட்டு எழுந்துக்கறயா? எனக்கு நிறைய வேலையிருக்கு. சந்திரா மாமியாத்துல போய் அதிரச மாவு போட்டு வெச்சுட்டு வரணும். அம்மா பதில் சொல்லத் தெரியாமல் பேச்சை மாற்றி அவளை விரட்டினாள், ரமணன் தங்கையை சமாதானப்படுத்தினான்.

    அம்மா சொல்றதையெல்லாம் மறந்துடு. கொஞ்சம் கஷ்டப்பட்டா நாமளும் பணக்காராளா ஆய்டலாம்.

    எப்டி...? எப்பொ...?

    நா நல்லா படிச்சு அமெரிக்கால போய் உத்யோகம் பார்த்து நிறைய பணம் சம்பாதிச்சு அனுப்பறேன். அந்த பணத்துல இங்க பெரிய வீடு வாங்கலாம். நல்ல சாப்பாடு, நல்ல

    Enjoying the preview?
    Page 1 of 1