Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஆரியம் , திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே ..
ஆரியம் , திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே ..
ஆரியம் , திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே ..
Ebook99 pages31 minutes

ஆரியம் , திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே ..

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்க்கையில் இரு வேறு விளிம்பில் நிற்கும், இரு வேறு மொழி, கலாச்சாரம் கொண்ட, செல்வத்தில், செல்வாக்கில் ஏணி வைத்தாலும் எட்டாத தூரத்தில் இருக்கும் ஒரு இளைஞனும் , இளைஞியும் எப்படி சந்திக்கிறார்கள், அவர்களுக்குள் எப்படி காதல் மலர்கிறது, அந்த காதலுக்கு ஏற்படும் வித்தியாசமான சிக்கல், அதில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வாழ்வில் இணைகிறார்கள் என்பதை ரொமான்ஸ் கலந்து சுவாரஸ்யத்துடன் சொல்ல முயன்றிருக்கிறேன்.

COME, FALL IN LOVE

Languageதமிழ்
Release dateOct 19, 2023
ISBN9798223314486
ஆரியம் , திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே ..
Author

கவி ராஜ்

வணிக மேலாண்மை பட்டதாரி. 20 வருடமாக  கார்ப்பரேட் கம்பெனி  பணி கதைகள் என் முதல் காதல்!   காதல் மேல் அளவிலா காதல் கொண்ட கதாசிரியன்..  

Related to ஆரியம் , திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே ..

Related ebooks

Reviews for ஆரியம் , திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே ..

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஆரியம் , திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே .. - கவி ராஜ்

    அத்தியாயம்-1

    இரு துருவங்கள், இரு மாறுபட்ட கவலைகள்.

    1996ஆம் ஆண்டு

    செல்ஃபோன் உள்ளிட்ட இன்றைய பல நவீன வசதிகள் வெகுஜன பயன்பாட்டுக்கு வராத காலகட்டம் அது.

    சோலையூர்,

    தமிழ்நாடு

    தமிழ் நாட்டின் தெற்கும் அல்லாத வடக்கும் அல்லாத மையப் பகுதியில் இருக்கும் ஒரு மாவட்டத்தை சேர்ந்த கிராமம் அது.

    பெயருக்கேற்றாற் போல் பசுமையான வயல்வெளிகள் நிறைந்த கிராமம்.

    விவசாயம் தான் மக்களின் முக்கிய தொழில்.

    பெரிதாக ஆறு, ஏரி போன்றவை அந்தப் பகுதியில் இல்லாததால் நிலத்தடி நீரை நம்பியே மக்கள் விவசாயம் செய்தனர்.

    ––––––––

    அந்த ஊர் மாவட்ட தலைநகருக்கு அருகில் இருந்ததால், பட்டிக்காடு என்றும் சொல்ல முடியாத, நகரமாகவும் கருத முடியாத இரண்டும் கெட்டான் ஊர்.

    அந்த கிராமத்தை சேர்ந்தவன் நமது நாயகன்  ராசு.

    ராசு இருபத்தைந்து வயது இளைஞன்.

    நாம் அன்றாடம் பார்க்கும் பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம் கொண்டவன்

    ஆள் சற்றே ஒல்லியாக தெரிந்தாலும்,

    மாநிற மேனி.அகன்ற தோள்களும் நல்ல உறுதியான உடலும் வசீகரமான முகமும் கொண்ட சராசரியை விட காண்போரை சற்றே ஈர்க்க கூடிய தோற்றம் கொண்டவன்.

    சிறு வயதில் இருந்தே பாடப் புத்தகங்களையும் தாண்டி நிறைய புத்தகங்கள் படிப்பவன் என்பதால் அளவாக பேசினாலும் பேச்சில் சுவாரஸ்யம் தெறிக்கும்.

    தன்னுடைய லைட் ஹ்யூமரால் தன் நட்பு வட்டாரத்தை எப்போதும் கலகலப்பாக வைத்து இருப்பவன்.

    சிறு வயதில் இருந்தே அவன் அப்பாவுக்கு உதவியாக விவசாய பணிகள் செய்து வருவதாலும், விளையாட்டில் ஆர்வம் உள்ளவன் என்பதாலும் உடல் உரமேறி ஃபிட்டாக இருந்தான்.

    ––––––––

    அருகில் இருந்த நகரத்தில் உள்ள கல்லூரியில் டிகிரி முடித்துவிட்டு, கூடுதலாக

    ஒரு தனியார் இன்ஸ்டிடியூட்ல் ஒரு வருட கம்ப்யூட்டர் கோர்ஸ் முடித்திருந்தான்.

    கம்ப்யூட்டரில் தனக்கு இருக்கும் திறமைக்கும், சிறு வயதில் இருந்து ஆங்கில வழியில் படித்ததால், தனக்கு இருக்கும் ஆங்கில புலமைக்கும் எளிதில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கிக் கொண்டு இருந்தான்.பக்கத்து நகரத்தில் மட்டும் அல்லாமல் சென்னைக்கும் சென்று சில மாதங்கள் தங்கியும் வேலை தேடினான்.

    எதுவும் பலன் தராததால்  விரக்தியில் இருந்தான்.

    அவன் அப்பா நகரத்தில் ஒரு கம்பெனியில் கிளார்க்காக பணிபுரிந்து கொண்டே,

    விவசாயத்தையும் கவனித்து வந்தார்.

    தன் வேலை தேடும் போராட்டத்துக்கு இடையே,தன்னால் முடிந்தவரை  அவன்அப்பாவுக்கு விவசாயத்தில் உதவியாக இருந்தான் ராசு.

    அவன் குடும்பம் ஊரில் செல்வாக்கு மிக்கதாக இருந்தும், பரம்பரை சொத்துக்களில் பெரும் பகுதி அவன் தாத்தா காலத்திலேயே விற்கப்பட்டுவிட்டதால்.. அது போக மீதி சொத்தில், அவன் அப்பாவின் சகோதரர்களுக்கு பாகம் பிரித்தது போக இவர்கள் பங்காக வீடும், ஒன்றரை ஏக்கர் நிலமும் மட்டுமே மிஞ்சியது. நிலத்தில் இருந்து வந்த சொற்ப வருமானமும், அவன் அப்பாவின் சம்பளமும் இவர்களின் வாய்க்கும் வயிற்றுக்குமே சரியாக இருந்தது.

    விவசாயத்தில் நக்ஷ்டம் ஏற்பட்டு கடன் வேறு இருந்தது.

    எனவே, இவன் ஒரு நல்ல வேலைக்கு செல்வது மிகவும் அவசியமாக இருந்தது.

    அந்த அவசியம் நாளடைவில் அவனுக்கு லட்சிய கனவாகவே மாறிவிட்டது.

    எப்படியாவது தன் சொந்தக் காலில் நின்று பொருளாதார தன்னிறைவு பெற்று தன் குடும்பத்தை தலை நிமிர வைக்க வேண்டும் என்ற கனவோடு முயற்சிகள் செய்து வந்தவனுக்கு தோல்விகள் மட்டுமே பரிசாக கிடைத்தது.

    ––––––––

    இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை மாநகரம்,

    ஜூஹூ பீச்.

    அன்று விடுமுறை நாள் என்பதால் பீச்சில் அளவற்ற கூட்டம்.

    சிறியவர் முதல் பெரியவர் வரை ஆர்ப்பரித்து வந்த கடல் அலையில் கால் நனைத்து மகிழ்ச்சி கூச்சலிட்டுக் கொண்டு இருந்தனர்.

    ஆங்காங்கே அழகழகான இளம் ஜோடிகள் விதவிதமான உடைகளில் ஓரங்கட்டி அமர்ந்து கடலை பார்த்தபடி கடலை போட்டுக் கொண்டு இருந்தனர்.

    இவ்வளவு சந்தடி மிகுந்த கடற்கரையில் நீல நிற ஜீன்ஸ், பிங்க் நிற டீ க்ஷர்ட் அணிந்த அழகே உருவான அந்த இளம்பெண் தனிமையில் அமர்ந்தபடி, எதையோ பறிகொடுத்தவள் போல விரக்தியோடு சிறுசிறு கற்களை எடுத்து ஆர்ப்பரித்து வந்த அலைகளை நோக்கி எறிந்து கொண்டு இருந்தாள்.

    அவள் மனதுக்குள், ஏய் சோனு நீ எங்கேடா இருக்கே! சீக்கிரம் வந்து என்னை இந்த போலியான மனிதர்களிடமிருந்து காப்பாற்றி என்னை உனதாக்கிக் கொள்ளுடா! என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.

    அவள் புலம்பலில் நியாயம் இல்லாமல் இல்லை.

    இதுவரை அவள் சந்தித்த ஆண்கள் எல்லோரும் அவள்

    Enjoying the preview?
    Page 1 of 1