Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

XYZ மர்டர்ஸ்
XYZ மர்டர்ஸ்
XYZ மர்டர்ஸ்
Ebook139 pages34 minutes

XYZ மர்டர்ஸ்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சாயந்தரம் ஆறு மணி.
 காஷ்மீரச் சால்வையைப் போர்த்துக் கொண்டு பங்களா தோட்டத்து புல்வெளியில் வாக்கிங் ஸ்டிக் உதவியோடு - நடந்து கொண்டிருந்த ஜெயம்மாள், சமையல் ஆள் வேணு காம்பௌண்ட் கேட்டுக்குள் நுழைவதைப் பார்த்ததும் ஆர்வமாய் நிமிர்ந்தாள்.
 "என்னடா வேணு...? அந்தப் பெண்ணைப் பார்த்தியா?"
 "பார்த்தேன்மா... கண்ணகி சிலையாண்டை இன்னிக்கு உட்கார்ந்து பாடிட்டிருக்கா..."
 "அப்படியா...?" முகமலர்ந்து போனவள் - கொஞ்சம் வேகமான நடைபோடு போர்டிகோவை நோக்கிப் போனாள்.
 காண்டேஸா கார்க்கு சாய்ந்து நின்றபடி பேப்பர் படித்துக் கொண்டிருந்த கார் டிரைவர் சங்கரன் - ஜெயம்மாவைப் பார்த்ததும் அவசர அவசரமாக பேப்பரை சுருட்டினான்.
 "சங்க ரா..."
 "என்னம்மா...?"
 "காரை எடு..."
 சங்கரன் பவ்யமாய் - காரின் பின்பக்கக் கதவைத் திறந்துவிட - ஜெயம்மாள் உள்ளே நுழைய நுழைய -
 "அத்தே!" குரல் கேட்டு திரும்பினாள்.
 பங்களாவின் உள்ளேயிருந்து அவளுடைய அண்ணன் மகன் மனோகரன் வந்து கொண்டிருந்தான்.
 "என்னடா மனோ?""எங்கே கிளம்பிட்டீங்க அத்தே...?"
 "பீச் வரைக்கும் போய்ட்டு வரலாம்ன்னு..."
 "உங்களுக்கு இருக்கிற சைனஸ் ட்ரபுளுக்கு - பீச் பக்கமே போகக்கூடாதுன்னு நம்ம டாக்டர் சொல்லியிருக்கிறதை மறந்துட்டீங்களா...?"
 "எனக்கு உடம்பு இப்போ... நல்லாத்தானே இருக்கு..."
 "இப்போ எதுக்காக பீச்சுக்குப் போறீங்க...?"
 "காத்து வாங்கத்தான்..."
 "நம்ம மொட்டை மாடிக்குப் போனாலே காத்து வருமே அத்தே...!"
 "டேய் மனோ...! இன்னிக்கு அந்தப் பொண்ணு கண்ணகி சிலைக்குப் பக்கத்தில் பாட்டுப் பாடிட்டு இருக்காளாம்..."
 மனோகரன் கோபமாய் போர்டிகோ படிகள் இறங்கி வந்தான். "அத்தே! நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. மாமா ராஜா சர் ஏகாம்பரம் உயிரோடு இருந்தவரைக்கும் - அவர் எவ்வளவு மதிப்போடும் மரியாதையோடும் இருந்தார். ஆனா நீங்க.... எவளோ ஒரு பிச்சைக்காரி பாடற பாட்டைக் கேக்கறதுக்காக - மெட்ராஸ் பூராவும் அலையறீங்க... அவ எந்த பிளாட்பாரத்துல உட்கார்ந்துகிட்டு - இன்னிக்கு பாடப் போறாங்கிறதை தெரிஞ்சுக்கிறதுக்காகவே... சமையல்காரனை விட்டு மெட்ராஸ் பூராவும் மெனக்கெட்டு அலையச் சொல்லியிருக்கீங்க..."
 ஜெயம்மாள் மனோகரனை ஏறிட்டாள். "டேய்! மனோ! அந்தப் பொண்ணோட பாட்டை என்னால கேக்காமே இருக்க முடியாது. அந்தக் குரலைக் கேட்டா எம் மனசுக்கு ஒரு நிம்மதி கிடைக்குது. அந்த நிம்மதி எனக்கு வேணும். அதுக்காகத்தான்... இந்த மெட்ராஸ்ல அவ எங்கே பாடினாலும் ஓடறேன்... என்னோட சந்தோஷம் உனக்குப் பெரிசில்லையா...?மனோகரன் ஒரு நீளமான பெருமூச்சுவிட்டு - தோள்களைக் குலுக்கிக் கொண்டான். "நீங்க என்ன சொன்னாலும் கேக்க மாட்டீங்க... அத்தே! வாங்க நானே காரை ட்ரைவ் பண்ணிட்டு வர்றேன்."
 ஜெயம்மாள் புன்னகையோடு காருக்குள் போனாள். மனோகரன் காரின் டிரைவிங் சீட்டை ஆக்ரமித்தான்.
 "கொஞ்சம் வேகமா போடா... அந்தப் பொண்ணு பாடிட்டு போயிடப் போறா..."
 மனோகரன் காரை கிளப்பி - காம்பௌண்ட் கேட்டைத் தாண்டினான். சாய்ந்தர நேர - சென்னை போக்குவரத்தில் கலந்து - கடற்கரை சாலையைத் தொட்டதும் - ரியர் வ்யூ கண்ணாடியில் பார்த்துக் கொண்டே கூப்பிட்டான்.
 "அத்தே..."
 "என்னடா...?"
 "அந்தப் பொண்ணோட பாட்டு எனக்கென்னமோ சாதாரணமாத்தான் இருக்கு. அந்தக் குரல்ல உங்களுக்கு மட்டும் என்ன லயிப்பு..."
 "என்னமோ தெரியலைடா மனோ...! பெரிய பெரிய பாடகிகளோட கச்சேரிகளுக்கெல்லாம் போயிருக்கேன். அவங்க பாடின பாட்டையெல்லாம் கேட்டிருக்கேன். அப்பெல்லாம் எம் மனசுக்கு கிடைக்காத நிம்மதி - தெருவோரத்துல நின்னு பத்து பைசாவுக்காக கையேந்திகிட்டு அந்தப் பெண் பாடற பாட்டுல கிடைச்சிருக்கு..."
 "உங்களை புரிஞ்சுக்கவே முடியலை அத்தே...! இன்னிக்கு இந்த பீச் ரோட்ல அவ எங்கே பாடறா..."
 "கண்ணகி சிலைக்குப் பக்கத்துல..."
 கார் 'ஜிவ்'வென்று பறந்தது.
 இரண்டே நிமிஷம்!
 கண்ணகி சிலை வந்தது. அதற்கு கொஞ்சம் தள்ளி - சின்னதாய் ஒரு கும்பல் தெரிந்தது.
 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 9, 2023
ISBN9798223172703
XYZ மர்டர்ஸ்

Read more from Rajeshkumar

Related to XYZ மர்டர்ஸ்

Related ebooks

Related categories

Reviews for XYZ மர்டர்ஸ்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    XYZ மர்டர்ஸ் - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    'எக்ஸ் ஒய் இஸட் கன்சல்டன்ஸ்' - பித்தளை போர்டில் மின்னிய என்க்ரேவ் எழுத்துக்கள் காலை பத்துமணி சூரியனின் வெளிச்சத்தில் நிறங்களை உற்பத்தி பண்ணிக்காட்ட - அதை கண்களில் வாங்கிய ரவிப்ரகாஷ் காரை ரோட்டோரமாய் ஓரம் கட்டி நிறுத்தி கீழே இறங்கினான்.

    ரவிப்ரகாஷ் இருபத்தியாறு வயதான ஆரோக்கியமான இளைஞன். இவனை வர்ணிக்க வேண்டிய அவசியமில்லை. அழகாக இருந்தான். மரங்களுக்கு மத்தியில் தெரிந்த கட்டிடத்தைப் பார்த்துக் கொண்டு நடந்தான்.

    அந்தக் கட்டிடம் முழுவதுமே ஒரு காம்ப்ளக்ஸ் மாதிரி தெரிந்தது. குளிர்பானக்கடை வீடியோ கேம் பார், ஏர்க்கண்டிஷன்ட் சலூன், ஒரு ஜவுளிக்கடையின் ஷோ ரூம், சோவியத் புத்தக ஸ்டால்

    -அதற்குள் மாடிப்படிகள் வர - ரவிப்ரகாஷ் ஏறினான். மிடி அணிந்த இரண்டு பெண்கள் தங்கள் பிரா சைஸ்களைப் பற்றி லஜ்ஜையில்லாமல் உரத்த குரலில் பேசிக்கொண்டு எதிரே வர - அவர்களுக்குப் பின்னால் ஒரு இளைஞன் கெட்ட பார்வையோடு தெரிந்தான்.

    ரவிப்ரகாஷ் முதல் மாடிப்படிகளை சிரத்தையாக முடித்துக் கொண்டு - அந்த வராந்தாவின் ஹாலில் நடந்து - கோடியில் இருந்த

    எக்ஸ் ஒய் இஸட் என்று சிவப்பு பெயிண்டால் எழுதப்பட்ட கண்ணாடிக் கதவுக்கு முன்னால் போய் நின்றான்.

    கதவு 'புஷ்' என்று சொல்ல புஷ்ஷினான். அது வெண்ணெய்யாய் நகர்ந்து வழிவிட - உள்ளே போனான்.

    ஸ்கர்ட் அணிந்து - டைப்ரைட்டிங் மெஷினைத் தட்டிக் கொண்டிருந்த அந்தப் பெண் நிமிர்ந்தாள். வாயைத் திறந்து வெளிச்சம் அடிக்கிற - பல்வரிசை தெரிய கேட்டாள்.

    எஸ்... யாரைப் பார்க்கணும்...?

    ஒரு கன்சல்டேஷனுக்காக வந்தேன்... ப்ரொப்ரைட்டர் இருக்காரா...?

    இருக்கார்... நீங்க யார்ன்னு தெரிஞ்சுக்கலாமா?

    என் பேர் ரவிப்ரகாஷ்... உங்க ப்ரொப்ரைட்டரைப் பார்த்து, பர்சனலா பேசணும்...

    வெயிட் எ... மினிட்... - டைப்ரைட்டிங் மிஷினுக்கு பக்கத்தில் வெளிர் சந்தன நிறத்தில் மின்னிய - இண்டர்காம் ரிஸீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தாள். ஒரு பட்டனை தட்டிவிட்டு -

    ஸார்... நான்... ப்ரியா பேசறேன்...

    ........

    மிஸ்டர் ரவிப்காஷ்ன்னு ஒருத்தர் உங்களைப் பார்க்க வந்திருக்கார்.

    .......

    கேட்டேன். மேட்டர் பர்சனல்ன்னு சொல்றார்...

    ஓ... கே... ஸார்... அனுப்பிச்சு வெக்கிறேன்... சொல்லியபடி ரிஸீவரை சாத்திவிட்டு அவனை ஏறிட்டாள்.

    நீங்க உள்ளே போங்க ஸார்... ஹி... ஈஸ்... வெயிட்டிங்...

    தாங்க்யூ... ரவிப்ரகாஷ் அவள் கைகாட்டிய பக்கமாய் நடந்து - லாமினேட்ஸ் பரப்பப்பட்ட தரையில் நடந்து - 'டீக்வுட்'டால் செய்யப்பட்ட கதவுக்கு முன்பாய் வந்து நின்று -

    'டொக்'கினான்.

    எஸ்... கம்மின்...

    உள்ளேயிருந்து கனமான குரல் கேட்க - கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான் ரவிப்ரகாஷ்.

    பெரிய கண்ணாடி மேஜைக்கு பின்புறம் - மூன்று ரிவால்ங் நாற்காலிகளில் அவர்கள் தெரிந்தார்கள்.

    மூன்று பேருமே பிஸ்கெட் நிற சர்ட்டுகளிலும் - அதற்கு மேட்சாய் பழுப்பு நிற 'டை'களிலும் தெரிந்தார்கள்.

    முதலாம் நபர் மாநிறம் - கொஞ்சம் சதை போட்ட உடம்பு.

    இரண்டாம் நபர் - பாலீஷ் செய்த கோதுமை நிறம்... முன்புற லேசாய் செல்ல வழுக்கை. முன்னைய நபரைக் காட்டிலும் உயரம் கம்மி.

    மூன்றாம் நபர் - நிறத்திலும் உயரத்திலும் அதிக மார்க் வாங்க - உடம்பை கச்சிதமாய் வைத்திருந்தான்.

    வெல்கம் மிஸ்டர் ரவிப்ரகாஷ்... ஒருவன் புன்னகைக்க -

    ப்ளீஸ் பி... ஸீட்டட்... இன்னொருவன் நாற்காலியை கைகாட்ட -

    ரவி ப்ரகாஷ் உட்கார்ந்தான். அவன் உட்கார்ந்ததும் மூன்றாமவன் கேட்டான்.

    என்ன விஷயத்துக்காக எங்களைப் பார்க்க வந்திருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா...?

    ஒ... ஒ... ஒரு பர்சனல் மேட்டர்... மூன்று பேர்களையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே சொன்னான் ரவிப்ரகாஷ்.

    தாராளமா சொல்லலாம்...

    உங்களில்... யார்கிட்டே... சொல்றது...? முதலாமவன் சிரித்தான்.

    எங்க மூணு பேர்கிட்டேயும் சொல்லலாம்... வீ... ஆர்... த... பார்ட்னர்ஸ் ஆப் திஸ் கன்சர்ன். ஐயாம் சேவியர்... ஹி ஈஸ் யஷ்வந்த்குமார்... அண்ட் ஹி ஈஸ் ஜக்ருதீன்... மூணு பேர்களோட முதல் எழுத்தை கனெக்ட் பண்ணிப் பார்த்தா எக்ஸ் ஒய் இஸட் கிடைக்கும். அதையே கன்சர்ன்னுக்கு பேரா வெச்சுட்டோம்...

    ரவிப்ரகாஷ் புன்னகைத்தான். குட் நேம்...

    இனிமே உங்க பிராப்ளத்தை சொல்லலாமே...?

    அவன் மேஜையின் மேல் தன் இரண்டு முழங்கைகளையும் ஊன்றிக் கொண்டான். "இந்த கன்சர்னைப் பத்தி ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் பேப்பர்ல பார்த்தேன். வீட்டுக்

    Enjoying the preview?
    Page 1 of 1