Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சதுரங்க குதிரைகள்!
சதுரங்க குதிரைகள்!
சதுரங்க குதிரைகள்!
Ebook145 pages34 minutes

சதுரங்க குதிரைகள்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சாண்ட்லியர் ஹோட்டலின் கீழ்தளத்தில் இருந்த ரெஸ்டாரெண்டிலிருந்து - டின்னர் முடித்துக்கொண்டு - விவேக்கும் ரூபலாவும் வெளிப்பட்டார்கள்.
 "டின்னர் எப்படி ரூபி...?"
 "பரவாயில்லை..."
 "உன்னை திருப்திப்படுத்தவே முடியாது. ஒவ்வொரு அயிட்டமும் எவ்வளவு அமர்க்களமாயிருந்தது. அந்த கீரை சூப், வெஜிடபிள் புலாவ், பட்டர் நாண், பொட்டட்டோ கட்லெட், கோபி பன்னீர் மசாலா... இதுல ஒரு அயிட்டமாவது உனக்கு பண்ணத் தெரியுமா...? வெண்டைக்கால் பொரியல் பண்ணி கத்தரிக்காயை சாம்பார்ல போடத்தான் லாயக்கு…"
 "பேசாம வாங்க... புது வருஷம் பொறந்து பத்து நிமிஷம்கூட ஆகலை. சண்டை போட்டுக்க வேண்டாம்."
 "பின்னே நூறு ரூபாய் டின்னரை சாப்பிட்டு ஏதோ பார்லி கஞ்சி சாப்பிட்ட மாதிரி 'பரவாயில்லை'ன்னு சொல்றியே..."
 "சரி... சரி... நீங்க வாங்கிக் கொடுத்த டின்னர் நள மகா ராஜா சமையல் மாதிரி இருந்தது. போதுமா...?"
 "இந்த கிண்டல்தானே வேண்டாம்ங்கிறது..."
 "இதென்னடா... வம்பா போச்சு… டின்னர் பரவாயில்லைன்னு சொன்னா சத்தம் போடறீங்க... நல்லாயிருக்குன்னு சொன்னா கிண்டல்ன்னு சொல்றீங்க...!"
 "உன்னப்பத்தி எனக்கு தெரியாதா என்ன...?ரூபலா தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த வெள்ளை நிற கர்ச்சீப்பை எடுத்து விவேக்கின் முகத்துக்கு நேரே ஆட்டினாள்.
 "சமாதானம்..."
 "அப்படி வா... வழிக்கு..." சொன்னவன் தன் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டை ரூபலாவின் கையில் திணித்தான். "இதைப்பிடி! வர்றேன்..."
 "எங்கே போறீங்க...?"
 "போட்ட பீடா... சரியில்லை... ஜர்தா சேர்த்திருக்கான் போலிருக்கு... நான் போய் வாய் கொப்பளிச்சுட்டு வந்துடறேன்... இங்கேயே நில்லு."
 "வாஷ் பேசின் எங்கேன்னு கேட்டுக்கிட்டு போங்க..."
 "எனக்குத் தெரியும்... அந்த காரிடர்க்குப் பக்கத்துல இருக்கு..." - விவேக் சொல்லிக் கொண்டே நடந்தான்
 ரிசப்ஷன் ஹாலைக் கடந்ததும் காரிடர் வந்தது. ஆட்களின் முகம் தெரியாத அளவுக்கு இருட்டு.
 'இது ஜர்தா பீடாதான். யார்க்கோ கொண்டு போய் வைக்க வேண்டியதை பேரர் எனக்கு கொண்டு வந்துட்டான் போலிருக்கு!'
 தலை லேசாய் சுழல்வது போன்ற பிரமை.
 வேகமாய் நடந்தான்.
 'இந்த அவஸ்தையை துப்பி வாயைக் கொப்பளிக்க வேண்டும்...!'
 யோசித்துக் கொண்டே விவேக் நடக்க-
 'த்தட்...'
 பூட்ஸ்கால் எதன் மீதோ இடறியது.
 கீழே விழப்போன விவேக்சட்டென்று சுதாரித்துக்கொண்டு –
 குனிந்து பார்த்தான்.
 அந்தப் பெண் நீட்டிய கால்களோடு - வாய் பிளந்து எசகு பிசகாய் விழுந்து கிடந்தாள். கண்ணின் பார்வைகள் ஸ்தம்பித்துப் போயிருந்தன.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 18, 2023
ISBN9798223307303
சதுரங்க குதிரைகள்!

Read more from Rajeshkumar

Related to சதுரங்க குதிரைகள்!

Related ebooks

Related categories

Reviews for சதுரங்க குதிரைகள்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சதுரங்க குதிரைகள்! - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    ஜெயகோபால் ஐந்தாவது தடவையாய் குரல் கொடுத்தான்.

    சந்தியா...

    ட்ரஸ்ஸிங் அறையிலிருந்து சந்தியாவின் குரல் கேட்டது.

    வந்துட்டேன்...

    நீ கண்ணாடி முன்னாடி நின்னு அரைமணி நேரமாச்சு! மணி இப்ப எவ்வளவு தெரியுமா...?

    என்னவாம்...?

    பத்தரை...

    புத்தாண்டு பார்ட்டி பதினோரு மணிக்குத்தானே ஆரம்பம்?

    அதுக்காக சரியா போய் பார்ட்டிக்கு நிக்கணுமா? பார்ட்டி நடக்கிற ஹோட்டல் பக்கத்திலா இருக்கு...? ஹீரோ ஹோண்டாவில் போனாலே பதினஞ்சு நிமிஷமாகும்...

    சரி... புலம்பாதீங்க... வந்துட்டேன்...

    ட்ரஸ்ஸிங் அறையிலிருந்து வெளிச்சமாய் வெளியே வந்தாள் சந்தியா. பளபளப்பான ரோஜாநிற சல்வார் கம்மீஸ். அதில் சிரிக்கும் சூர்யகாந்தி பூக்கள். இருபத்தைந்து வயது சந்தியா அரைமணிநேர மேக்கப்பின் விளைவாக ஐந்து வயது குறைச்சலாய் தெரிந்தாள்.

    ட்ரஸ் எப்படி...?

    சந்தியாவுக்கு ஜே!

    இந்த கிண்டல்தானே வேணாம்ங்கிறது...?

    அட... நிஜமாத்தான் சொல்றேன். இந்த ரோஜா நிற சல்வார் கம்மீஸ்ல பார்க்கும் போது நீ எப்படி இருக்கே தெரியுமா?

    எப்படி இருக்கேன்...?

    ஒரு பெரிய ரோஜா பூவுக்கு கையும் காலும் முளைச்ச மாதிரி இருக்கு…

    சரி... எனக்கு ஏதோ ந்யூ இயர் ப்ரஸண்டேஷன் குடுக்கப் போறதா சொன்னீங்களே...?

    ஆமா...

    எங்கே...?

    என் கோட் பாக்கெட்ல இருக்கு...

    குடுங்க...

    இப்ப குடுக்க மாட்டேன்...

    பின்னே எப்பவாம்...?

    புதுவருஷம் பிறந்ததும்... அதாவது 12.01க்கு.

    சரி... ப்ரஸண்டேஷன் என்னான்னு சொல்லிருங்களேன். டென்ஷன் இல்லாமே இருப்பேன்...

    சொல்லமாட்டேன். அது சஸ்பென்ஸ்…

    வாங்கின பொருளோட முதல் எழுத்தை மட்டும் சொல்லுங்களேன்.

    நோ... க்ளூஸ்... அந்த பரிசுப் பொருள் என்னான்னு 12.01க்குத்தான் தெரியும்... ம்... கிளம்பு...

    பிசாசு...! கல்லிலிருந்து நார் உரிச்சுடலாம், உங்ககிட்டயிருந்து ஒரு வார்த்தையைக் கூட உரிக்க முடியாது.

    ஜெயகோபால் சிரித்தான்.

    வீட்டை பூட்டிக் கொண்டு இருவரும் வெளியே வந்தார்கள். ஹீரோ ஹோண்டா காத்திருந்தது.

    உதைபட்டது.

    சந்தியா பில்லியனில் மெத்தென்று பொருந்திக் கொள்ள ஜெயகோபால் வண்டியை விரட்டினான். அண்ணா சாலை புத்தாண்டு அமளியில் இருந்தது. இளைஞர்களும் யுவதிகளும் ஸ்கூட்டர், பைக்குகளில் காய்த்து தொங்கினார்கள். தொப்பிகளை நிறம் நிறமாய் மாட்டிக் கொண்டு கூச்சலிட்டார்கள். வர்ண பலூன்கள் தலைக்கு மேல் பறந்தன.

    என்னங்க...

    சந்தியா ஜெயகோபாலின் முதுகை - தன் நெயில்பாலீஷ் நகங்களால் மெல்ல பிறாண்டினாள்.

    ம்...

    இன்னிக்கு நடக்கப் போற பார்ட்டியில... நீங்க லிக்கரை ‘டச்’ பண்ணக் கூடாது, உங்க கையில பெப்ஸிகோலா மட்டும்தான் இருக்கணும்...

    இது கொடுமை...! பார்ட்டியில கலந்துக்க தலைக்கு இருநூத்தி ஐம்பது ரூபாய் குடுத்திருக்கோம்... என்ஜாய் பண்ண வேண்டாமா?

    பார்ட்டியில அது ஒண்ணுதானா...? அதை விட்டுட்டு மத்ததையெல்லாம் ‘டச்’ பண்ணுங்க...

    சரி... ஒரே ஒரு பெக் மட்டும்...

    நோ...

    ப்ளீஸ்... சந்தியா... ஒரே ஒரு ஸ்மால் மட்டும்.

    ஸ்மால் மட்டும்?

    ஆமா...

    நம்பலாமா உங்களை...?

    நம்பு... நம்பு... பார்ட்டியில நீயும் என் பக்கத்துலதான இருக்கப் போறே...

    ஸ்மால், லார்ஜானால் நான் பத்ரகாளியாயிடுவேன்...

    நீ ருத்ர தாண்டவமும் ஆடுவேன்னு எனக்குத் தெரியாதா...? ஒரு ஸ்மாலுக்கு மேல தாண்டவே மாட்டேன்...

    ஹீரோ ஹோண்டா அண்ணா சாலையில் பாதியை விழுங்கிவிட்டு - தியாகராயநகர் எல்லைக்குள் நுழைந்தது. போக்குவரத்து இல்லாததால் அந்நேரத்துக்கே ஊமையாகிப் போன சாலையில் - ஹோட்டல்கள் மட்டும் நியான் வெளிச்சங்களில் உயிரோடு இருந்தன.

    வேகமாய் - எதிர்பட்ட பைக்கில் இரண்டு இளைஞர்கள் பீர் பாட்டிலோடு கைகளை உயர்த்தி ஹேப்பி நியூ இயர் என்று கத்திவிட்டு போனார்கள். சந்தியா கவலைப்பட்டாள்.

    எதுக்காக இவ்வளவு வேகத்துல போறாங்க...?

    எங்கேயாவது மோதி சாகத்தான்... ஒவ்வொரு புதுவருஷம் பிறக்கப் போகிற ராத்திரியன்னிக்கும் மெட்ராஸ்ல நாலைஞ்சு பேராவது ரோடு ஆக்ஸிடெண்ட்ல செத்துப் போயிடறாங்க. சாகிறது எல்லாமே இந்த மாதிரியான காலேஜ் பசங்கதான். பாட்டில் பீரை குடிக்க வேண்டியது. வண்டியை வேகமா ஓட்ட வேண்டியது. எங்கேயாது மோதி சாக வேண்டியது...

    ஜி.என். செட்டி சாலையை முழுசுமாய்க் கடந்த ஜெய கோபால் வலது பக்கமாய் ஹீரோ ஹோண்டாவை

    Enjoying the preview?
    Page 1 of 1