Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

விவேக் அது விஷம்!
விவேக் அது விஷம்!
விவேக் அது விஷம்!
Ebook156 pages37 minutes

விவேக் அது விஷம்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரிஸீவரை எடுத்தார்  ஐ.ஜி.
 "ஹலோ..."
 மறுமுனையில் சட்ட அமைச்சர் மதியரசன் பதற்றக் குரலில் கேட்டார்.
 "யாரு... ஐ.ஜி.ராம்மோகனா...?"
 "ஆமா ஸார்..."
 "எனக்கு வந்த தகவல் உண்மையா?"
 "எது ஸார்...?"
 "குத்தீட்டி ஜெயிலிலிருந்து தப்பிச்சுட்டானாமே?"
 "ஆ.. ஆமா... ஸார்..."
 "என்னய்யா இது... ஆமா... சோமான்னு சொல்லிகிட்டு...? அவன் வெளியே வந்தா எனக்கு எவ்வளவு பெரிய ஆபத்துன்னு உனக்குத் தெரியாதா..?"
 "தெ... தெரியும்... ஸார்...! எப்படியோ இங்கே ஜெயில்ல பொறுப்பில் இருக்கிறவங்க அசட்டையா இருக்கப் போய் இப்படி ஒரு சம்பவம் நடந்தது...."
 "இந்த வழவழா கொழ கொழா வெண்டைக்காய் ஸ்டேட்மெண்ட்டெல்லாம் என்கிட்ட வேண்டாம். அதையெல்லாம்  நாளைக்குப் பத்திரிகைக்காரங்ககிட்ட வெச்சுக்க. எனக்கு வேண்டியது எல்லாம் உண்மை. அந்த குத்தீட்டி குமார் எப்படி தப்பிச்சான்...?தெ.. தெரியலை ஸார்...! அதைக் கண்டுபிடிக்கத் தான் தீவிரமான முயற்சிகளை எடுத்துட்டிருக்கேன்..."
 "இதோ... பார்ய்யா... அந்த குத்தீட்டி குமார் என் தலைக்கு மேலே தொங்கற கத்தி மாதிரின்னு உனக்குத் தெரியும். அவனை இவ்வளவு அலட்சியமா தப்பவிட்டுட்டு, முயற்சி எடுக்கறேன்... நடவடிக்கை எடுக்கறேன்னு கதை பேசிட்டிருக்கியே! இதுக்காகத்தான் உன்னை டி.ஐ.ஜி. போஸ்டிலிருந்து ஐ.ஜி.க்கு தூக்கிப் போட்டேனா...?"
 "ஸார்.. அது.. வந்து..."
 "என்னய்யா வந்து.. போயி...? குத்தீட்டி குமார் ஒரு பயங்கரமான க்ரிமினல். அவனோட தூக்குத்தண்டனை ரத்தான நாளிலிருந்து எனக்குத் தூக்கமே போச்சு. சரி ஆயுள்தண்டனை முடிஞ்சு அவன் வெளியே வர்றதுக்குள்ளே அவனுக்கு ஒரு முடிவு கட்டிடலாம்னு நினைச்சுட்டிருந்தேன். இப்போது அந்த நினைப்பிலும் மண். அவன் வெளியே தப்பிச்சு வந்துட்டான். இனி எனக்கு ஒவ்வொரு நிமிஷமும் கண்டம்தான். எந்த நேரத்துல என் மேல துப்பாக்கி தோட்டா பாயும்னு தெரியலை..."
 "பயப்படாதீங்க ஸார். எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்..."
 "என்னத்தைப் பார்ப்பியோ... பார்க்கமாட்டியோ எனக்குத் தெரியாது... நாளையப் பொழுது விடியறதுக்குள்ளே அந்த குத்தீட்டி குமார் மறுபடியும் ஜெயிலுக்குள்ள இருக்கணும்."
 "இருப்பான் ஸார்..."
 "செய்..."
 மறுமுனையில் ரிஸீவர் கோபமாய் கவிழ்க்கப்பட்டது. ஐ.ஜி. ராம்மோகன் வியர்த்த முகமாய் ரிஸீவரை வைத்துவிட்டு நாற்காலிக்குச் சாய, விவேக் கேட்டான்.
 "யார் ஸார் போன்ல...?"
 "லா மினிஸ்டர் மதியரசன்."
 "போன்ல ஏதோ கடுமையா பேசிட்டார் போலிருக்கே...?"ஆமா மிஸ்டர் விவேக். குத்தீட்டி குமார்க்கும் மதியரசனுக்கும் அரசியல் பகை. அஞ்சு வருஷத்துக்கு முந்தி ரெண்டு பேரும் ஒரே அரசியல் கட்சியில் இருந்தாங்க. அதுக்கப்பறம் மதியரசன் கட்சி மாறிட்டார். இன்னிக்கு மதியரசன் ஒரு மந்திரி. ஆரம்பகாலத்துல இந்த மதியரசன் ஒரு பிம்ப். குத்தீட்டி குமார்க்கும் மதியரசனுக்கும் அரசியல் பகையைத் தவிர வேற ஏதோ பகையும் இருக்கு. அது என்னான்னு தெரியலை. கோர்ட்டுக்கு விசாரணைக்காக வரும் போதெல்லாம் குத்தீட்டி குமார் பகிரங்கமாவே பத்திரிகை நிருபர்கள்கிட்ட 'என்னிக்கு இருந்தாலும் மந்திரி மதியரசனுக்கு என் கையாலதான் சாவு'ன்னு சொல்லுவான்.."
 "அப்படீன்னா மந்திரி மதியரசனுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கணுமே...?"
 "அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன். மதியரசனின் பங்களாவைச் சுத்தியும் விஜிலன்ஸ் ஸ்க்வாட் போட்டுட்டேன். அது தெரிஞ்ச பின்னாடிதான் மந்திரி எனக்கு போன் பண்ணியிருக்கார்." சொன்ன ஐ.ஜி., விவேக்கிடம் ஆர்வம் ததும்ப கேட்டார்.
 "விவேக்...! குத்தீட்டி குமார் எப்படி தப்பிச்சு வெளியே போனான்னு இன்னும் ஒரு அரை மணி நேரத்துல கண்டுபிடிச்சுடலாம்னு சொன்னீங்க.. அது எப்படி..?"
 விவேக் மேஜையின் மேல் இரண்டு முழங்கைகளையும் ஊன்றிக் கொண்டான்.
 "ஸார்... கொஞ்ச நேரத்துக்கு முந்தி முள்ளு மரப்பகுதிக்குள்ளே அஞ்சு செண்ட்ரி சர்ச் பண்ணினாங்க இல்லையா...?"
 "ஆமா..."
 "அதுல ஒரு செண்ட்ரி உயரமா கறுப்பா இரந்தாரே... அவர் பேர் என்ன...?"
 "சித்தரஞ்சன்..."
 "அவரை இங்கே வரவழைக்க முடியுமா...?"
 ஐ.ஜி. வியப்பாய் விழிகளை உயர்த்தினார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 2, 2024
ISBN9798224370351
விவேக் அது விஷம்!

Read more from Rajeshkumar

Related to விவேக் அது விஷம்!

Related ebooks

Related categories

Reviews for விவேக் அது விஷம்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    விவேக் அது விஷம்! - Rajeshkumar

    விவேக் அது விஷம்!

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    நல்ல தூக்கத்தில் இருந்த விவேக்கை டெலிபோன் குரைத்து எழுப்பிவிட, விவேக் போர்வையை உதறிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தான். ரிஸீவர் காதுக்குப் போயிற்று.

    ஹலோ...

    சிறைச்சாலை பிரிவு ஐ.ஜி. ராம்மோகன் குரல் கொடுத்தார்.

    ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ் மிஸ்டர் விவேக். இந்த அகால நேரத்தில் உங்களை எழுப்பி தொந்தரவு தர்றதுக்காக...

    நோ... ப்ராப்ளம்... ஸார்...! விஷயம் முக்கியமானதாக இல்லாத பட்சத்தில் நீங்க போன் பண்ண மாட்டீங்களே...? எனிதிங்க் இம்பார்ட்டன்ட் ஸார்...?

    எஸ்.... மிஸ்டர் விவேக். அரைமணி நேரத்துக்கு முந்தி சென்ட்ரல் ஜெயில் கண்டெம் சிறையிலிருந்து கைதி ஒருத்தன் தப்பிச்சுட்டான். கைதி பேர் குத்தீட்டி குமார். ஆயுள் தண்டனைக் கைதி...

    எப்படி தப்பினான்...?

    தெரியலை.. சரியா பனிரெண்டு மணிக்கு வார்டன் கண்டெம் செல் பக்கம் ரவுண்ட்ஸ் போயிருக்கார். ஸெல்லில் ஆளைக் காணோம்...

    ஜெயிலுக்குள்ளே நல்லா சர்ச் பண்ணிப் பார்த்தீங்களா ஸார்...?

    பார்த்துட்டோம். அவன் எப்படி தப்பிச்சு போனான்ங்கிற மார்க்கம் பிடிபடலை. அவன் ஒரு மோசமான க்ரிமினல். ஏதோ கட்சி தேர்தல் விவகாரத்துல தகராறு ஏற்பட்டு ரெண்டு பேரைக் குத்தீட்டியால குத்தி கொலை பண்ணியிருக்கான். கீழ்க் கோர்ட்ல தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு ஹைகோர்ட்ல ஆயுள் தண்டனையா குறைஞ்சது... விடியறதுக்குள்ளே அவனை ஜெயிலுக்குக் கொண்டு வந்தாகணும் விவேக். இந்த விஷயத்துல உங்க யோசனையும் அஸிஸ்டன்ஸும் வேணும்.

    ஷ்யூர்...

    நான் இப்போ ஜெயில் காம்பஸுக்குள்ளேதான் இருக்கேன். நீங்க உடனடியா இங்கே வரமுடியுமா?

    இதோ...! கிளம்பிட்டேன்..

    விவேக் ரிஸீவரை வைத்துவிட்டு எழ முயன்ற விநாடி, ரூபலா கேட்டாள். தூக்கக் கலக்கக் குரல்.

    மணி இப்ப என்ன தெரியுங்களா?

    தெரியும்! பனிரெண்டரை...

    கண்டிப்பா நீங்க போயாகணுமா?

    ம்...! காரண காரியம் இல்லாமே ஜெயில்துறை ஐ.ஜி.ராம்மோகன் எனக்கு போன் பண்ணமாட்டார்.

    ரூபலா அலட்சியமாய் கேட்டாள்.

    ஒரு கைதி ஜெயிலிலிருந்து தப்பிச்சுட்டான். இது தானே கேஸ்?

    விவேக் வேறு ட்ரஸ்ஸுக்கு மாறிக்கொண்டே புன்னகைத்தான்.

    மேலோட்டமா பார்த்தா இதுதான் கேஸ். பட்... அந்த கேஸுக்குப் பின்னாடி ஏதோ விவகாரம் இருக்கு. அந்த விவகாரம் என்னான்னு போனாத்தான் தெரியும்.

    நீங்க கிளம்பற ஜோரைப் பார்த்தா இன்னிக்கு உங்களுக்கு ஏகாதசியாத்தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்...

    ரூபலா சொல்லிக் கொண்டிருக்கும் போதே விவேக் மாருதி கார் சாவியைப் பொறுக்கிக் கொண்டு - வாசல்கதவைத் திறந்தபடி வெளியே வந்தான்.

    போர்டிகோவின் ஜீரோவாட்ஸ் வெளிச்சத்தில் கடல் வண்ண மாருதி மினுமினுப்பாய் நின்றிருக்க, விவேக் உள்ளே போனான். ரூபலா காரின் கதவருகே குனிந்தாள்.

    என்னங்க...

    ம்...

    வர ரொம்பவும் லேட்டாகிற மாதிரியிருந்தா ஒரு போன் பண்ணுங்க...

    சரி...

    செல்போன் எடுத்துகிட்டீங்களா?

    இதோ...! சர்ட் பாக்கெட்டிலிருந்து எட்டிப் பார்த்துட்டிருக்கே...! வரட்டுமா ரூபி...! கதவை மறக்காமே லாக் பண்ணிக்கோ...

    ம்... ம்...

    ரூபலா காம்பௌண்ட் கேட் கதவைத் திறந்து வைக்க, கார் வெளியேறியது.

    நள்ளிரவுச் சென்னை சோடியம் வேப்பர் விளக்குகளின் பயத்தில் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு பளிச்சென்று இருக்க, விவேக் மாருதியை விரட்டினான்.

    சரியாய் பதினைந்து நிமிஷப் பயணம்.

    சென்ட்ரல் ஜெயில் வந்தது.

    விவேக்கின் காரைப் பார்த்ததுமே சிறை வாசலில் நின்றிருந்த சென்ட்ரிகள் விறைப்பாக உத்யோக சல்யூட்கள் வைத்துவிட்டு அவசர அவசரமாய் கதவைப் பிரித்து வழி விட்டனர்.

    கார் உள்ளே போகும்போதே சிறைச்சாலை முழுக்க ஒரு பதட்டம் அரும்பியிருப்பதை உணர்ந்தான் விவேக். எல்லாப் பகுதிகளிலும் சர்ச் லைட்கள் சுழன்று கொண்டிருந்தன. வாட்ச் அண்ட் வார்ட் டவரின் மேல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஸ்க்வாட் ஒன்று நிழலுருவங்களாய் தெரிந்தது.

    விவேக் காரை மெயின் ப்ளாக்கிற்கு செலுத்தி அங்கு ஏற்கெனவே நின்றிருந்த இரண்டு ஜீப்களுக்கு பின்னால் கொண்டு போய் மௌனமாக்கினான்.

    கீழே இறங்கும்போது ஐ.ஜி. எதிர்கொண்டார்.

    வாங்க விவேக்...!

    விவேக் அவரோடு கை குலுக்கிவிட்டு இணைந்து நடந்தான்.

    குத்தீட்டி குமார் எப்படி தப்பிச்சான்னு கண்டுபிடிக்க முடிஞ்சுதா ஸார்...?

    முடியலை...! போலீஸ் டாக்கை வரவழைச்சு குத்தீட்டி குமார் செல்லிலிருந்து ஸ்மெல் பண்ணவிட்டோம். அது ஜெயிலோட பேக் போர்ஷனுக்குப் போய் குரைச்சுட்டு அன்ரெஸ்ட்டா அங்கேயும் இங்கேயும் ஓட ஆரம்பிச்சுட்டது. எங்களால எதையுமே கெஸ் பண்ண முடியலை.

    செல் எந்தப் பக்கம்..?

    ப்ளீஸ்... கம் திஸ் சைட்...

    ஐ.ஜி. ராம்மோகன் மெயின் ப்ளாக்கிலிருந்து பிரிந்துபோன கடப்பைக்கல் வராந்தாவில் கூட்டிக் கொண்டு போனார். வார்டன்களும், ஜெயிலர்களும் கைகளில் டார்ச்சுகளோடு தொலைவில் அலைந்து கொண்டிருந்தார்கள். போலீஸ் நாய் யோசித்து யோசித்து குரைக்கும் சத்தம் காற்றில் கலந்து எதிரொலித்தது.

    கண்டெம் செல் வந்தது.

    மற்ற கைதிகள் ஜன்னல் கம்பிகளில் முகம் பதித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    செல் வாசலில்

    Enjoying the preview?
    Page 1 of 1