Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thisai Maariya Thirumanam
Thisai Maariya Thirumanam
Thisai Maariya Thirumanam
Ebook86 pages34 minutes

Thisai Maariya Thirumanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115704106
Thisai Maariya Thirumanam

Read more from Lakshmi Rajarathnam

Related to Thisai Maariya Thirumanam

Related ebooks

Reviews for Thisai Maariya Thirumanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thisai Maariya Thirumanam - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    திசை மாறிய திருமணம்

    Thisai Maariya Thirumanam

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    குழந்தைகள் அனைவரும் சேர்ந்து பாடினார்கள். எல்லாருமே பத்து வயசுக்குட்பட்ட பால மலர்கள். மழலையில் பிறந்து சிந்தும் அமுதத் துளிகளாக அந்தக் கூடத்தை நிறைந்திருந்த கானம். மனத்தை மயக்கும் மாயம் இருந்தது அந்த மோகன கானத்திற்கு. இத்தனைக்கும் மிகச் சிறிய கானம் தான். அவர்கள் சுருதி பிசகாமல் வார்த்தைகளைச் சிதைக்காமல் சுரங்களை இடற விழாமல் பாடிய நேர்த்தி தான் அங்குள்ளவர்களை அசத்தியது.

    அங்குள்ளவர்கள் என்றால் பெரிய ஆடியன்ஸ் என்று அர்த்தமில்லை. தங்கள் குழந்தைகளை அழைத்துப் போக வந்திருக்கும் பெற்றோர்கள் தான் அவர்கள். தாங்கள் பெற்ற மழலைகளின் மேதைத்தனத்தால் நெகிழ்ந்து போயிருந்தார்கள். கண்ணீர் மல்கியது.

    அவர்களில் ஒருத்தியாகப் பிரமிப்புடன் அமர்ந்திருந்த மீரா தான், அவர்களின் பாட்டு டீச்சர். இத்தனை சிறப்பாகச் சேர்ந்து பாடுவார்கள் என்று அவள் கனவிலும் கருதினாளில்லை. தன்னால் இத்தனை சிறப்பாகக் கற்பிக்க முடிந்ததா... என்று தன்னையே உரைத்துப் பார்த்துக் கொண்ட பிரமிப்பும், ஆச்சர்யமும் அவள் மனத்தில் துள்ளிக் குதித்தன.

    அந்த ஹாலின் நுழைவு கதவருகில் உட்கார்ந்து கொண்டிருப்பவர் வெங்கடேசன். மீராவின் அப்பா. அவருமே மகிழ்ந்து போய் பிரமித்து உட்கார்ந்து கொண்டதில் கதவருகில் நிற்கும் அந்த அழகான இளைஞனையும், அவனருகில் ரதி போல் நிற்கும் இளம் பெண்ணையும் கவனித்தாரில்லை.

    அவர்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்த பொழுது தான் திரும்பிப் பார்த்தார்கள்.

    அடடா, வா... வாம்மா... என்று வெங்கடேசன் தான் வரவேற்றார்.

    தன்னை சுதாரித்துக் கொண்ட மீராவும் வா கல்பனா... என்று வரவேற்றாள்.

    மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பலப்பல உபசார வார்த்தைகளைக் கூறிக் கொண்டே கலைந்து போனார்கள்.

    கல்பனாவும், அவளுடன் வந்த இளைஞனும் ஹால் சோபாவில் அமர்ந்தார்கள்.

    ஏய், மீரா... என்ன பிரமாதமா சொல்லிக் கொடுத்திருக்கே... நீ நல்லாப் பாடறதுங்கறது வேற... டீச்சிங் கப்பாசிட்டி வேற... எனக்கு எப்படிப் பாராட்டறதுன்னே தெரியல்ல என்றாள் கல்பனா.

    அந்த அழகான இளைஞனோ மீராவையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தான்.

    என்ன மனோ, வாயைத் திறந்து பாராட்டக் கூடாதா? ஊமை மாதிரி உட்கார்ந்துக்கிட்டு இருக்கீங்க? என்று அந்த இளைஞன் பக்கம் திரும்பிய கல்பனா அதட்டினாள்.

    ஆ... ஆங்... எப்படி பாராட்டறதுன்னே தெரியல்ல... நீ தான் சொல்லிட்டியே கல்பனா என்று அவன் சன்னக்குரலில் தடுமாறினான்.

    மீரா... காபி, பழரசம் ஏதாச்சும் கொண்டு வாம்மா என்று வெங்கடேசன் மீராவைப் பார்த்து கூறினார்.

    இதோ என்று எழுந்தாள் மீரா.

    நாங்க வந்து உன் வகுப்பை கட் பண்ணிட்டமோ! என்று உபசாரமாகக் கேட்டாள் கல்பனா...

    இல்லை... இல்லை... கல்பனா, இவங்க தனித்தனியா கத்துக் கிட்டவங்க இன்னிக்கு சரளி வரிசையிலேர்ந்து கீதம் வரைக்கும் சேர்ந்து பாடணும்னு சொல்லியிருந்தேன். பிச்சு உதறிட்டாங்க... நானே நினைக்கலே இப்படிப் பாடுவாங்கனு என்றாள் மீரா...

    நிமிடத்தில் மின்னலென விரைந்து குளிர்சாதனப் பெட்டியிலிருந்து பழரசத்தை எடுத்து தம்ளர்களில் நிரப்பி தட்டில் வைத்துக் கொண்டு வந்து நீட்டினாள்.

    பழரசத்தை நிரப்பும் பொழுதே ஏகப்பட்ட கேள்விகள் அவளுள் எழுந்தன... கல்பனாவுடன் வந்திருக்கும் அந்த இளைஞன் யார் என்ற ஐயப்பாட்டை தவிர்க்க முடியவில்லை... ஆவலைத் தன்னுள் அடக்கிக் கொண்டவளாக... கல்பனாவே சொல்லட்டும் என்று எண்ணியவளாகவே பழரசத்தை நீட்டினாள்.

    கல்பனா ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டாள். மனோ எடுக்கும் பொழுது மீராவும், அவன் முகத்தை யதேச்சையாக நோக்க, அவனும் நோக்க கண்கள் மின்வெட்டென வெட்டிக் கொண்டன...

    வெண்ணெயில் ரோஸ் வண்ணத்தைக் கலந்தது போல் பளபளப்பு. கண்களில் மை தீட்டினாற் போல இமை முடிகள் அடர்ந்து, அகலமான நெற்றியில் விழும் அடர்ந்த முடிக்கற்றைகள்...

    க்ரேப் ஜூஸா மீரா? என்று கலைத்தாள் கல்பனா...

    ஆமாம்... நானே வீட்ல செய்தது என்ற மீரா, சற்று நாணத்துடன் முகத்தைத் தாழ்த்தினாள்.

    இதுக்குக் கூட உனக்கு நேரம் இருக்குதா மீரா என்று கண்களைச் சிமிட்டியபடி வினவினாள் கல்பனா...

    மிடுக்காக முகத்தை நிமிர்த்தினாள் மீரா. கல்பனா பணக்காரப் பெண். நேரத்தைப் பொழுது போக்காகச் செலவழிப்பவள். கல்லூரி நாட்களில் வகுப்புகளில்

    Enjoying the preview?
    Page 1 of 1