Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ilanthamizharukkul Pavendar
Ilanthamizharukkul Pavendar
Ilanthamizharukkul Pavendar
Ebook108 pages25 minutes

Ilanthamizharukkul Pavendar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இளைய சமுதாயம் பாவேந்தரனுடைய சிந்தனைகளை உணர்ந்து கொள்ள வேண்டும் அதன் மூலம் உணர்வு கொள்ள வேண்டும் என்கின்ற லட்சிய உணர்வோடு பாவேந்தர் உடைய சிந்தனைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட கவிதை தொகுப்பு இதன் மூலம் இளைய சமுதாயம் கல்வி அறிவியல் சமூக விஞ்ஞானம் விளையாட்டு பொது அறிவு உலகியல் சிந்தனை இவற்றை பெற முடியும் என்கின்ற கவிதைகளின் பதிவாக இந்த நூல் அமைகிறது.

Languageதமிழ்
Release dateNov 14, 2023
ISBN6580170610299
Ilanthamizharukkul Pavendar

Read more from Munaivar Idayageetham Ramanujam

Related to Ilanthamizharukkul Pavendar

Related ebooks

Reviews for Ilanthamizharukkul Pavendar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ilanthamizharukkul Pavendar - Munaivar Idayageetham Ramanujam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இளந்தமிழருக்குள் பாவேந்தர்

    Ilanthamizharukkul Pavendar

    Author:

    முனைவர் இதயகீதம் இராமானுஜம்

    Munaivar Idayageetham Ramanujam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/munaivar-idayageetham-ramanujam

    பொருளடக்கம்

    அணிந்துரை

    அணிந்துரை

    பொய் கலவாக் கவிதைகள்

    நுழைவாயில்...

    பாவேந்தனுக்கு ஏன் கவியாரம்...

    பாவேந்தர் வருகின்றார்!

    பாவேந்தர் தாலாட்டு!

    இளம் தமிழர் பட்டறை!

    பண்பாட்டு வரிகள்!

    பூட்டிய கதவு திறப்பது எப்போது தமிழ்

    பாட்டு வேந்தன்!

    திசை. மறந்து போகாதே!

    உலகத் தமிழ் ஆராய்ச்சி!

    ரோட்டோரம் வாழ்க்கை!

    சமத்துவத்தைப் பேணி நின்ற கவிராசன்!

    உழவர்கள்

    கனவு

    அழகின் சிரிப்பு

    உள்ளமெனுகு வயல்வெளி

    தியானம் கற்றுக்கொன

    அம்மாவின் உரத்த சிந்தனை

    வையத் தலைமை கொள்

    பாவேந்தன் வழி நிற்போம்!

    ஏழு கடல் அவள் வண்ணம்!

    முதியோர் காதல்!

    பவேந்தரின் அறிவியல் பார்வை?

    பூமிக்காக குடை பிடிக்கிறது!

    மனதைத் தூய்மைப்படுத்தி

    பாவேந்தன் உயர் சிந்தனை!

    பாவேந்தன் பரம்பரையே மாறிவிடு

    வெளியே வா!

    விழிக்கண் திறக்கட்டும்!

    இளைய சமுதாயம்!

    சுழலட்டும் ராட்டினம்

    தொல்காப்பியர்

    அடையாளம் இழக்காதே!

    சிலை போல ஏன் அங்கே நின்றாய்!

    குகை வாழ் ஒரு புலியே!

    புறப்படு தமிழா!

    எரிமலை சொல்லெடுத்து!

    புதுமை என்னும் பூக்கட்டு!

    நல்லதை நாளும் விதைப்போம்

    உலகமொழிகளுக்கே அன்னை!

    உழைப்பும் இலக்கியமும் ஒரு மனிதனை உருவாக்க முடியும். உயர்வாக்க முடியும் என்பதை சமுதாயத்திற்குச் சுட்டிக் காட்டியவர் முனைவர் இதயகீதம் அ. இராமானுஜம் அவர்கள்.

    கவிதை. இலக்கியம், பட்டிமன்றம், எழுத்து என வாழ்ந்து வரும் இவருக்குத் தர மேம்பாட்டு தொழில் நுட்பமும், விவசாயமும் இரண்டு கண்கள்.

    இதுவரை 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய இவர் அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர். அண்மையில் தமிழன், சங்கரா போன்ற தொலைக்காட்சிகளில் பட்டிமன்ற நடுவராக இவர் ஆற்றிய சொற்பொழிவு மக்களிடம் வரவேற்பைப் பெற்றது.

    இலக்கியம் மட்டுமல்லாது, ஆன்மீகத் தொடர் சொற்பொழிவும், சமய உரையும் இவருக்குக் கைவந்த கலை. மலேசியா. சிங்கப்பூர். தாய்லாந்து. ஆஸ்திரேலியா. சீனா. இலங்கை எனப் பல இலக்கியப் பயணங்களை மேற்கொண்டுள்ள அறிவியல் தொழில் நுட்ப ஆய்வாளர். இவருக்கு நண்பர்கள் வட்டம் ஏராளம். இளகிய மனம் கொண்ட இதயகீதம்’ எடுத்துச் செய்த உதவிகள் பல.

    40 ஆண்டுகாலம் பாவேந்தருடைய சிந்தனைகளை நெஞ்சிலே சுமந்து. கவிதையாகவும் பட்டிமன்றமாகவும் உரையாகவும் திசையெல்லாம் முழங்கியவர். பாவேந்தருக்காகவே ஒரு தனி நூலை இவர் உருவாக்கியிருப்பது நமக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. அதிலும், அடுத்த தலைமுறையான இளந்தமிழர்கள் தன் நெஞ்சிலே பாவேந்தனுடைய சிந்தனைகளைப் பட்டொளி வீசி, பதியம் செய்து விட்டார்கள். இனி தமிழினத்திற்குப் பொற்காலம் உருவாகும் என்பதை இவருடைய கவிதைகள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.

    "பாவேந்தன் பாட்டொன்று கேட்குது – அது

    பண் அமைத்து புது கீதமாய் இசைக்கிறது

    இயற்கையின் மெட்டெடுத்து வருகிறது

    இனிமையின் நாதமாய் அது ஒலிக்கிறது

    பாட்டாளியின் கூட்டாளி இவரின் பாட்டு

    பண்பட்ட சமுதாயத்துக்கு புதிய நாற்று

    ஏர் பிடிக்கும் உழவனுக்கு ஏற்ற சந்தம்

    ஏற்றம் தமிழர் பெற்றிடவே வந்த சொந்தம்"

    என்ற பாட்டு வரிகள் புத்துணர்ச்சியை உருவாக்குகிறது.

    அதைப்போலவே,

    "கழனியிலே நெல்விளையும் உயிரைக் காக்க

    கடல்நீரும் உப்பாகும் நல்ல சுவையைக் கூட்ட

    காற்றுதான் ஓய்வின்றி உழைப்பைக் காட்டும்

    கார்மேகம் மழையாகித் தாகம் தீர்க்கும்"

    என்ற பாடல் வரிகளில் இயற்கையின் சிறப்பை உணர்த்துகிறார்.

    பாவேந்தர் வழியில் நின்று, பாவேந்தனின் படைப்புகளை ஆய்வு செய்து, தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் உரையாற்றிவருகிற இதயகீதத்தின் இந்த நூல் திசையெல்லாம் புகழ்க் கொடியை நட்டு வைக்கும் என்பதில் ஐயமில்லை. சிறப்புகளும் விருதுகளும் இவரை அரவணைக்கும்

    ர. பிரதாப் குமார்

    அணிந்துரை

    முனைவர் கோ. விசயராகவன் எம்.ஏ.,எம்.பில்.,எம்.பி.ஏ.,பி.எட்.பி.எச்.டி.,

    தமிழ் வளர்ச்சி இயக்குநர்

    தொ.பே.எண் நேரடி: 2819 0411

    அலுவலகம்: 2819 0412 : 2819 0413

    சாதி மத பேதமின்றி, மூடநம்பிக்கைகளை வேரோடு கிள்ளி எறிந்துவிட்டு, பெண்களுக்குரிய கல்வி வாய்ப்புகளையும் சமத்துவமான உரிமைகளையும் வழங்கி, தமிழ்ச் சமுதாயம் ஒற்றுமையுடன் வாழ்வதற்காக, வீறுகொண்டு எழுந்து பல நூறு கவிதைகளையும் கட்டுரைகளையும் ஏட்டில் வடித்து ஒரு பெரும் சமூகப் புரட்சியை உருவாக்கிய சொல்லேர் உழவர்களுள் வரலாற்றில் நிலைத்த இடம் பெற்றுவிட்ட தமிழ்த்தாயின் தவப்புதல்வர்கள்தாம் மகாகவி பாரதியாரும், மகாகவி பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர்.

    அவ்வகையில் ‘இளந்தமிழருக்குள் பாவேந்தர்’ என்ற

    Enjoying the preview?
    Page 1 of 1