Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thaai Thamizhe Ulagin Muthan Mozhi
Thaai Thamizhe Ulagin Muthan Mozhi
Thaai Thamizhe Ulagin Muthan Mozhi
Ebook173 pages59 minutes

Thaai Thamizhe Ulagin Muthan Mozhi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மொழியியல் தொடர்பாக பல நூல்களை ஆய்வு செய்து மொழி தோற்றம் குறித்தும் ஒலியின் மாற்றமே மொழி என்று விரிவாக ஆதாரத்துடன் தொல்லியல் ஆய்வாளர்கள் பெயருடன் குறிப்பிட்டுள்ளது மிக சிறப்பு.

தமிழர்கள் உலகம் முழுவதும் சென்றது எப்படி இந்தியாவின் பூர்வ குடிகள் தமிழர்கள் தான் என்பதை நன்கு விளக்கமாக அம்பேத்கர் மற்றும் விவேகானந்தர். திருவள்ளுவர். தொல்காப்பியர் ஆகியோரின் வரலாற்று நூல்களை நன்கு ஆராய்ந்து, தகுந்த பாடல்களை மேற்கோள்காட்டி இந்த நூலை சிறப்பாக தொகுத்துள்ளார்.

ஆசிரியரின் எழுத்து நடையும் சொல் வளமும் மிகச் சிறப்பு. ஒரு கருத்தை மெருகேற்றி மிகச் சுருக்கமாக கேட்பவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் சொல்ல வந்த கருத்தை தெளிவாக பேசக்கூடிய ஆசிரியர். அதே போன்று அவருடைய எழுத்தும் எளிதாக புரிந்து கொள்ள கூடிய வைகையில் உள்ளது. படிக்கும் போது தொடர்ந்து நம்மை அடுத்தடுத்த பக்கங்களுக்கு நகர்த்திச் செல்கிறது.

மொழியியல் தொடர்பாக பல நூல்கள் இருந்தாலும் இவ்வளவு தெளிவாக ஆண்டுகளுடன் ஆய்வாளர்களை குறிப்பிட்டுள்ள இந்த நூல் இதழியல் மற்றும் மொழி குறித்து ஆய்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும். இந்நூல் மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என்பதில் ஐயமில்லை!

Languageதமிழ்
Release dateMar 18, 2023
ISBN6580164209703
Thaai Thamizhe Ulagin Muthan Mozhi

Related to Thaai Thamizhe Ulagin Muthan Mozhi

Related ebooks

Reviews for Thaai Thamizhe Ulagin Muthan Mozhi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thaai Thamizhe Ulagin Muthan Mozhi - M. Sivanandam

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    தாய்த் தமிழே உலகின் முதன் மொழி

    Thaai Thamizhe Ulagin Muthan Mozhi

    Author:

    மு. சிவானந்தம்

    M. Sivanandam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-sivanandam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    வாழ்த்துரை

    என்னுரை

    1. தமிழை மீட்போம் வாருங்கள்

    2. தமிழே உலகின் முதன் மொழி

    3. தமிழே! உலக மொழிகளின் தாய் மொழி

    4. மொழிப்பற்றே தாய்த்தமிழைக் காக்கும்

    5. மொழிவழி மாநிலமும் மொழிப்போர் இயக்கமும்

    6. பழந்தமிழ்நாடு ஓர் அறிமுகம்

    7. தமிழகமும் தமிழ் தேசியமும்

    8. தமிழ்மொழி வழிக்கல்வியும், கல்வி உரிமையும்

    9. நமது கல்விப்பயணம் கரைசேருமா?

    10. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்

    11. தமிழர்களின் காலக்கணிதம்

    12. ‘தை’ முதல்நாளே தமிழப் புத்தாண்டு

    13. தன்னுரிமையா? தண்ணீர் உரிமையா?

    14. தமிழ் இயக்கப் போராளிகள்

    வாழ்க்கை குறிப்புகள்
    Table Description automatically generated with medium confidenceGraphical user interface, text Description automatically generated

    அணிந்துரை

    தமிழ் அடையாள மீட்பின் குரல்

    A person with a mustache Description automatically generated with medium confidence

    - இரா. காமராசு

    பேராசிரியர் மற்றும் தலைவர்,

    நாட்டுப்புறவியல் துறை,

    தமிழ்ப் பல்கலைக்கழகம்

    தஞ்சாவூர் – 613 010

    நல்லாசிரியர் மு. சிவானந்தம் தமிழ் மொழியின் மீதும் இலக்கியத்தின் மீதும் ஆழ்ந்தப் பற்றுக் கொண்டவர். சிறந்த கல்வியாளர். பேச்சாளர். எழுத்தாளர். இயக்கச் செயற்பாட்டாளர். பொதுவுடைமைக் கொள்கையாளர். எளிய, இனிய நடையில் நூல்களைத் தந்தவர். அவரின் இத்தொகுப்பு இன்றைய நாளில் மிகவும் அவசியமானது.

    தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ் நிலம் ஆகியவற்றைக் காத்து வளர்த்துப் போற்றிப் பேண வேண்டியதன் தேவையை இந்நூல் உணர்த்தி நிற்கிறது. இந்நூலில் இடம் பெறும் கட்டுரைகள், தமிழ் அடையாள மீட்பை வலியுறுத்துகின்றன. தமிழே உலகின் முதன் மொழி, உலக மொழிகளின் தாய்மொழி, மொழிப்பற்றே தாய்த்தமிழைக் காக்கும் ஆகிய மூன்று கட்டுரைகளும் தமிழ் மொழியின் தொன்மை, உலக மொழிகளுக்கு மூதாய் மொழியாய் விளங்கும் தன்மை, மொழிப்பற்றின் தேவை ஆகியவற்றை முன்வைக்கின்றன.

    மொழிவழி மாநிலமும் மொழிப்போர் இயக்கமும், பழந்தமிழ்நாடு ஓர் அறிமுகம், தமிழகமும் தமிழ்த் தேசியமும், தன்னுரிமையா? தண்ணீர் உரிமையா? ஆகிய கட்டுரைகள் தமிழ் நாட்டின் வரலாறு, பண்பாடு, தனித்தன்மை, மொழிவழி மாநிலப் போராட்டம், எல்லைப் போராட்டம், தமிழ்த் தேசியம் எனும் கருத்தாக்கம், தமிழ் நாட்டில் இனச் சிக்கல்கள், காவிரி நதிநீர்ப் போராட்டம் முதலிய கூறுகளை முதன்மைப்படுத்தித் தமிழ்நாட்டு நலன்களுக்குக் குரல் கொடுக்கின்றன.

    தாய்மொழி வழிக்கல்வியும் கல்வி உரிமையும், நமது கல்விப் பயணம் கரை சேருமா? ஆகிய இரு கட்டுரைகளும் தமிழ்நாட்டில் தாய்மொழி வழி தமிழ் மொழி வழிக் கல்வி குறித்தும், தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தமிழ் வழியில் தருவது குறித்தும் பேசுகின்றன. தாய் மொழிவழிக் கல்விச் சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். இன்று பொறியியலில் தமிழ் ஒரு பாடமாக ஏற்கப்பட்டு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது பாராட்டத்தக்கது. இது போல மருத்துவப் படிப்பிலும் தமிழ் ஒரு பாடமாக அமைய வேண்டும். அனைத்து உயர் தொழில் நுட்பப் படிப்புகளும் தமிழில் வழங்கிட தொடர்ந்து கவனத்துடன் செயலாற்ற வேண்டும்.

    தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், தமிழர்களின் காலக்கணிதம் ஆகிய இரு கட்டுரைகளும் தமிழ் மொழியின் வருங்காலத்தையும், கடந்த காலத்தையும் பற்றிய தருக்கத்தை முன்வைக்கின்றன.

    தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு எனும் கட்டுரை தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு என்பது தை முதல் நாளே என்பதற்கானச் சான்றுகளை வரிசை கட்டி முன்வைக்கிறது. கருதப்பட வேண்டிய கருத்து இது. அதே போல மொழிவழி மாநிலமாக உருவாக்கப்பட்ட 1956 நவம்பர் முதல் நாளையும், ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டப்பட்ட 1967 ஜீலை 18ம் நாளையும் கொண்டாட வேண்டும் என்ற ஆசிரியரின் கருத்து வரவேற்கத்தக்கது.

    தமிழ் அடையாளங்களை மீட்க வேண்டிய காலச்சூழலில் மிக எளிய நடையில் இந்நூலை ஆசிரியர் படைத்துள்ளார். இது ஆய்வு நூல் அல்ல. பொதுமக்களும், மாணவர்களும் எளிதில் விளங்கிக் கொள்ளும் வகையில் அழகியச் சான்றுகளுடன் நூலைத்தந்துள்ளார். மொழி நடையும் கருத்து வளமும் படிப்போரை ஈர்க்கும். தமிழ் மொழியையும் தமிழர் நலனையும் முன்னிறுத்தி நல்லாசிரியர் மு. சிவானந்தம் படைத்துள்ள இந்நூலை அனைவரும் வாங்கிப் படிப்போம்! மேலும் பல நூல்களை எழுதிட ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

    வாழ்த்துரை

    பைந்தமிழ்ப் பாவலர்

    கவிஞர் சி. துரைமாணிக்கம்

    டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதாளர்

    முதுநிலைத் தமிழாசிரியர் பணி நிறைவு

    கீரமங்கலம்.

    உலக மொழிகளின் தாய்மொழி எங்கள் தமிழ் மொழி

    "என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

    தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே"

    என்று திருமந்திரம் மொழிந்தவர் திருமூலர். அருந்தவ முனிவரின் ஒரு மந்திரம் போல் அன்னைத் தமிழுக்கு நல்விருந்து படைத்து அணிசேர்ப்பவர், அருமை நண்பர், ஆசிரியர் மு. சிவானந்தம் அவர்கள். தாய்த் தமிழே உலகின் முதன் மொழி என்னும் உயரிய நூலைப் படைத்து நம்மைப் பேரானந்தப்படுத்தியுள்ளார்.

    நேர்மையும் நெறிபிறழாத சீர்மையும் அறிவுக்கூர்மையும் அன்றாடம் மாணவர் நலம் நாடும் பார்வையும் வாய்மையும் வற்றாத தமிழ் வளமையும் சேர்ந்தமைந்த பண்பாளர், பட்டிமன்றப் பேச்சாளர், தன்னம்பிக்கைப் பயிற்சியாளர் பன்முகத் தன்மை பெற்ற கருத்தாளர், எழுத்தாளர், டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற முன்மாதிரி ஆசிரியர் இவர்.

    தித்திக்கும் தெள்ளமிழ்தாய் திகட்டாத உரையமுதாய் புத்திக்கும் புலத்திற்கும் விருந்து படைக்கும் சத்தான முத்தமிழில் எல்லோரும் போற்றும்படி வாருங்கள் வாகை சூடலாம் என்பதே இவரின் முதல் படைப்பு. முதல் நூலில் தடம் பதித்து, தன்னம்பிக்கை வடம் பிடித்து, வாசகரை வசப்படுத்தும் வித்தகராய், வெற்றிகளை குவித்தவர். வண்ணத்தமிழ் குழைத்து எண்ணத்தை எழுத்தாக்கி, எழுதுகோலால் தமிழனைத் தட்டி எழுப்பும் படைப்பாளி இவர்.

    இலட்சிய ஆசிரியர் மு. சிவானந்தம் அவர்கள் மை சிந்தி எழுதாமல் மனம் சிந்தி எழுதியுள்ள தாய்த் தமிழே உலகின் முதன் மொழி என்னும் பெட்டகத்தை படித்தேன், சுவைத்தேன், பெருமை அறிந்தேன், பன்முறை படித்தேன், ஒருபடித் ‘தேன்’ குடித்தேன், வியந்தேன், மகிழ்ந்தேன், தமிழ்த் தேன் நல்கிய நல்லாசிரியரை பாராட்டி மகிழ்கின்றேன்.

    தமிழையும் தமிழ்நாட்டையும் தம்மிரு கண்களாக நேசிப்பவர், நித்தமும், எங்கும் வாசிப்பவர், வகுப்பறைகளில் கற்பிப்பவர், வாழ்நாளெல்லாம் கற்பவர் அதனால் அவலங்களைக் காணும்போது ஆத்திரப்படுகிறார். மலர்ச்சியை காணும்போது மகிழ்ச்சியால் ஆனந்தப்படுகிறார். கோபமும் குமுறலும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்கிலே இந்நூலை பவனி வரச் செய்துள்ளார் என்பதை உள்ளபடி உணர முடிகிறது.

    இந்நூல் 14 தலைப்புகளில் மொழி வரலாற்றுக் கட்டுரைகளாக பகுத்தும் வகுத்தும் தொகுத்தும் தமிழின் அருமை பெருமை பேசுகிறது. வளர்ந்து வரும் இளந்தலைமுறையினர் அறிவதற்கும் புரிவதற்கும் படைக்கப்பட்ட புத்தகம் புதுமையூட்டும் வித்தகம்.

    "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்

    இனிதாவது எங்கும் காணோம்"

    எனப்பாடும் தமிழ்ச் சித்தர் பாரதியின் பாடலைப் படிப்பவர்கள் மனத்தில் நிற்கும்படி பதியம் இட்டுள்ளார்.

    "இனிமைத் தமிழ் மொழி எமது – எமக்கு

    இன்பம் தரும்படி வாய்த்த நல்லமுது"

    என்னும் பாவேந்தரின் வைர வரிகளை அனைவரையும் படிக்கச் செய்கிறார்.

    "தமிழன் என்றோர் இனமுண்டு

    தனியே அவற்கோர் குணமுண்டு"

    என்ற நாமக்கல் கவிஞரின் பாடல் வரிகளைக் காட்டி தமிழனின் பெருமையையும் தமிழின் நீர்மையையும் ஒவ்வொரு தமிழரும் அறிய வேண்டும் என்பதற்காக அரும்பாடு படுகின்றார்.

    "அம்மா அப்பா தந்த மொழி,

    அறிவை வளர்க்கும் அமுதமொழி

    சும்மா இல்லை தாய்மொழி

    செந்தமிழ் அன்றோ செம்மொழி"

    என்ற தகடூர் தமிழ்க்கதிர் பாடலை காண வைத்து இன்றைய நாளில் அம்மா அப்பா பெயர் உச்சரிக்கப்படாமல் மம்மி டாடி கலாச்சாரம் பெருகுவதை உளமுருகி வெந்து நொந்து வேதனைப்படுகிறார். அன்னை மொழியை மறந்து அயல் மொழியின் மீது மோகம் கொண்டோரை வேழமென வேகமாகத் தாக்கி, விவேகமில்லாத அத்தகையோரால்

    Enjoying the preview?
    Page 1 of 1