Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

123 Indiayave Odathey! Nil!!
123 Indiayave Odathey! Nil!!
123 Indiayave Odathey! Nil!!
Ebook255 pages1 hour

123 Indiayave Odathey! Nil!!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நிர்ப்பந்தத்தில் இந்திய - அமெரிக்க 123 அணு ஒப்பந்தம் எவ்வித ஆக்கப்பூர்வமான விவாதமின்றி தடைமுறைப்படுத்த மத்திய அரசு மும்முரம் காட்டுகிறது. அறிவியல் அறிஞர்கள் இதை எதிர்த்துள்ளனர்.

அமெரிக்கா அதிபர் கென்னடி காலத்திற்கு பிறகு இந்தியா மீது கடுமையாக வஞ்சனை நடவடிக்கைகள் எடுத்ததை யாரும் மறுக்க முடியாது. இந்நிலையில் இந்த ஒப்பந்தம் அவசர கோலத்தில் ஓடுவதைப் போன்று இந்தியா நடந்துகொள்வது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, ‘123-இந்தியாவே நில்! ஓடாதோ!!” என்ற வெளியீடு கொண்டுவரப்படுகிறது. ஒரு போட்டிக்கு கொடுக்கும் தலைப்புபோல உள்ளது. இதுவும் இந்தியாவின் இரண்டுவிதமான கருத்துகளுக்கு இடையே நடக்கின்ற விவாத போட்டியாகும். நாட்டின் மீது அக்கறைக் கொண்டவர்கள் இந்த ஒப்பந்தம் கூடாது என்று போராடுகின்றனர்.

இக்கருத்துக்களிடையே நடக்கும் விவாதங்கள் கடந்த 10 மாதங்களாக விவாதிக்கப்படுகிறது. இந்நூல் 123ப் பற்றி ஓரளவு தெரிந்துக்கொள்ளக்கூடிய அளவில் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவின் நடு நிலைக்கொள்கைக்கும், இறையாண்மைக்கும் சோதனை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இந்த ஒப்பந்தம் கூடவே கூடாது என்ற நிலையில் கருத்தை பதிவு செய்யப்பட்டுள்ளது.

Languageதமிழ்
Release dateAug 13, 2022
ISBN6580142908645
123 Indiayave Odathey! Nil!!

Read more from K.S. Radhakrishnan

Related to 123 Indiayave Odathey! Nil!!

Related ebooks

Reviews for 123 Indiayave Odathey! Nil!!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    123 Indiayave Odathey! Nil!! - K.S. Radhakrishnan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    123 இந்தியாவே ஓடாதே! நில்!!

    123 Indiayave Odathey! Nil!!

    Author:

    கே.எஸ். இராதாகிருஷ்ணன்

    K.S. Radhakrishnan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ks-radhakrishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கே.எஸ்.ஆரின் காண்டீபம் ஏவும் கணை

    என்னுரை

    1. 123 அறிமுகம்

    2. 123 சில கேள்விகள்

    3. அணு தொழில்நுட்பம்

    4. அணுசக்தி வரலாறு

    5. 123 தொழில் நுட்பம்

    6. 123 விளைவுகள்

    7. தாராப்பூர் முதல் கூடங்குளம் வரை

    8. அணு ஒப்பந்தம் சில பார்வைகள்...

    இணைப்பு - 1

    இணைப்பு -2

    இணைப்பு - 3

    ARTICLE 2 - SCOPE OF COOPERATION

    ARTICLE 3 - TRANSFER OF INFORMATION

    ARTICLE 4 - NUCLEAR TRADE

    ARTICLE 5 - TRANSFER OF NUCLEAR MATERIAL.

    ARTICLE 6 - NUCLEAR FUEL CYCLE ACTIVITIES

    ARTICLE 7 - STORAGE AND RETRANSFERS

    ARTICLE 8 - PHYSICAL PROTECTION

    ARTICLE 9 - PEACEFUL USE

    ARTICLE 10 - IAEA SAFEGUARDS

    ARTICLE 11 - ENVIRONMENTAL PROTECTION

    ARTICLE 12 - IMPLEMENTATION OF THE AGREEMENT

    ARTICLE 13 - CONSULTATIONS

    ARTICLE 14 - TERMINATION AND CESSATION OF COOPERATION ARTICLE 15 - SETTLEMENT OF DISPUTES

    ARTICLE 16 - ENTRY INTO FORCE AND DURATION

    ARTICLE 17 - ADMINISTRATIVE ARRANGEMENT

    PM’S STATEMENT IN THE LOK SABHA ON CIVIL NUCLEAR ENERGY COOPERATION WITH THE UNITED STATES

    கே.எஸ்.ஆரின் காண்டீபம் ஏவும் கணை

    கரிசல் மண்ணின் சிந்தனைச் சுரங்கமாம் உயிரினிய சகோதரர் வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள், நம் தாயகமாம் தமிழகத்தின் வருங்கால சந்ததிகளின் நலன் காக்கும் உரிமைப் போராளி ஆவார். இந்தியத் துணைக்கண்டத்தின் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் எனும் வேட்கை, தணலாக அவர் நெஞ்சில் கனன்று கொண்டு இருப்பதன் விளைவுதான் அவர் படைக்கும் நூல்கள் தொடுக்கும் பொதுநல வழக்குகள், எடுக்கும் மேலோர் விழாக்கள்.

    எட்டயபுரத்து எரிமலைக் கவிஞனை, ‘கரிசல் காட்டின் கவிதைச்சோலையாக பொருநைக்கரைப் பெருமையை ‘நிமிர வைக்கும் நெல்லையாக’, தமிழரின் பல்லாண்டுக் கனவை ‘சேதுக்கால்வாய் ஆய்வாக’, கி.ரா. எனும் ஈரெழுத்தை ‘இலக்கிய வானமாக’, தன் எண்ணத்தூரிகையால் காலத்திரையில் அழியா ஓவியம் ஆக்குகிறார்.

    அவரது காண்டீபம் ஏவும் கூர்மையான கணைதான். 123 இந்தியாவே ஓடாதே! நில்!! எனும் இந்நூல். இந்தியாவின் எதிர்காலத்தைப் பாழ்படுத்தும் நாச வலைதான், அமெரிக்க இந்திய அணு ஒப்பந்தம் எனும் பேருண்மையை, ஐயந்திரிபற விளக்குகிறார். அமெரிக்க ஏகாதிபத்தியக் கழுகின் பிடியில், வலியப்போய்ச் சிக்கிக்கொள்ள ஏன் ஓடுகிறாய்? என ஆணித்தரமான வாதங்களை, ஆளும் துரைத்தனத்தின் மீது பாணங்களாகத் தொடுக்கிறார்; ஓடாதே நில் என எச்சரிக்கை விடுக்கிறார்.

    அணு ஆயுத வல்லரசாம் அமெரிக்காவின், ‘மூன்று கல் தீவு’ என்ற அணு உலை, 200 கோடி டாலர் செலவில் மூடப்பட்டும், கதிர் இயக்கக் கசிவால் அங்கே விளையும் தீங்கினை, ஃபிரெஞ்சு நாட்டின் அணுமின் உலைகள் ஏற்படுத்தும் நாசத்தைத் தடுக்கத் திணறும் நிலைமையைச் சுட்டிக்காட்டும் இவர், எரிநகரத்தை நாம் ஏன் வலிய வரவழைத்துத் தலையில் சுமக்க வேண்டும்? எனும் சிந்தனைக்குக் கூர் தீட்டுகிறார் இந்நூலில்.

    இலட்சக்கணக்கான ஈராக் மக்களின் உயிர்களைப் பலிகொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நாசகார ‘நிமிட்ஸ்’ கப்பல், சென்னைக் கடல் அருகில் நங்கூரம் இட்டதும் அந்த அமெரிக்க இராணுவத்தோடு மேற்கொண்ட இந்தியாவின் கூட்டுப் பயிற்சியும், பண்டித நேரு வகுத்த அணிசேராக் கொள்கையை ஆயிரம் அடி குழிதோண்டிப் புதைத்த அக்கிரமத்தை ஆவேச வேதனையுடன் விளக்குகிறார். அணு மின்சாரம், அணு ஆயுதம் அணு உலைகள் குறித்த அறிவியல் விளக்கங்களை இந்நூலில் காணலாம்.

    மறுகாலனியாதிக்கம் எனும் படுகரியில் இந்தியாவை வீழ்த்தும் சதித்திட்டமே 123 இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு விலங்கு பூட்டுகிறது. அணு ஆயுத சோதனை நடத்தத் தடை விதிக்கிறது. அப்படி நடத்தினால் ஒப்பந்தம் காலாவதியாகும் என கைஹடு சட்டம் சொல்லுகிறது. அதனால்தான், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஹைடு சட்டம் நிறைவேத்தப்பட்டபோது, இந்தியாவின் மூத்த அணு விஞ்ஞானிகள், இதனால் இந்தியாவுக்கு ஏற்படும் கேடுகளைச் சுட்டிக்காட்டினர்.

    விஸ்வரூபம் எடுத்து உள்ள அமெரிக்க இந்திய அணு ஆயுத ஒப்பந்தப் பிரச்சனை குறித்து தனது உரத்த சிந்தனைகளை, மக்கள் மன்றத்தில் உலவ விடுகிறார். இந்த அரிய நூலாக

    நாட்டின் நலன் காக்கவும் சூழ்ந்து வரும் ஆபத்துகளைத் தடுப்பதற்கு அபாய அறிவிப்பாக எச்சரிக்கை செய்யவும் இந்த ஆயுத நூல் உறுதியாகப் பயன் தரும். அவரது சிந்தனை அருவியால் தமிழ் நிலம் தழைக்கட்டும் இந்திய ஜனநாயகம் செழிக்கட்டும். வளரட்டும் அவரது எழுத்துப்பணி

    தாயகம்

    சென்னை- 8

    (வைகோ),

    பொதுச் செயலாளர்,

    மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

    என்னுரை

    நிர்ப்பந்தத்தில் இந்திய - அமெரிக்க 123 அணு ஒப்பந்தம் எவ்வித ஆக்கப்பூர்வமான விவாதமின்றி தடைமுறைப்படுத்த மத்திய அரசு மும்முரம் காட்டுகிறது. அறிவியல் அறிஞர்கள் இதை எதிர்த்துள்ளனர்.

    அமெரிக்கா அதிபர் கென்னடி காலத்திற்கு பிறகு இந்தியா மீது கடுமையாக வஞ்சனை நடவடிக்கைகள் எடுத்ததை யாரும் மறுக்க முடியாது. இந்நிலையில் இந்த ஒப்பந்தம் அவசர கோலத்தில் ஓடுவதைப் போன்று இந்தியா நடந்துகொள்வது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    எனவே, ‘123-இந்தியாவே நில்! ஓடாதோ!!" என்ற வெளியீடு கொண்டுவரப்படுகிறது. ஒரு போட்டிக்கு கொடுக்கும் தலைப்புபோல உள்ளது. இதுவும் இந்தியாவின் இரண்டுவிதமான கருத்துகளுக்கு இடையே நடக்கின்ற விவாத போட்டியாகும். நாட்டின் மீது அக்கறைக் கொண்டவர்கள் இந்த ஒப்பந்தம் கூடாது என்று போராடுகின்றனர்.

    இக்கருத்துக்களிடையே நடக்கும் விவாதங்கள் கடந்த 10 மாதங்களாக விவாதிக்கப்படுகிறது. இந்நூல் 123ப் பற்றி ஓரளவு தெரிந்துக்கொள்ளக்கூடிய அளவில் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவின் நடு நிலைக்கொள்கைக்கும், இறையாண்மைக்கும் சோதனை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இந்த ஒப்பந்தம் கூடவே கூடாது என்ற நிலையில் கருத்தை பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மானுடம் தழைத்து ஓங்க வேண்டும், காட்டுமிராண்டித்தனம் கூடாது என்ற வகையில் நாகரீகங்கள் பிறந்தன. நாகரீகங்கள், உலக அமைதி நமக்கு தேவைதானா என்பது இன்றைக்குள்ள வினாக்கள்? வளர்ச்சியின் எதிர்திசையில் செல்லும் இந்த பயணம் கூடாது என்பதுதான் மனிதநேய ஆர்வலரின் ஆர்வமாகும்.

    இந்த சிறு வெளியீடு எழுத ஆதாரமாக பல நூல்கள். கட்டுரைகள் உதவின. அவை, சி.வி. சுந்தரம், எல்.வி. கிருஷ்ணன், டி.எஸ். அய்யங்கார் எழுதி இந்திய அரசின் அணுசக்தித்துறை வெளியிட்ட இந்தியாவின் அணுசக்தி 50 ஆண்டுகள் என்ற ஆங்கில நூல் பாரதி புத்தகாலயம் வெளியிட்ட டாக்டர் ஏ. தியாகராஜன், டாக்டர் வி. வந்தளா எழுதிய 123 ஒப்பந்தமா நிர்ப்பந்தமா?

    இந்திய இன்டர்நேஷனல் லா வெளியிட்ட அணுசக்தி சம்பந்தமான கட்டுரைகள், டைம்ஸ் ஆப் இந்தியா, இந்து, டெக்கான் க்ரானிக்கல், இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் குறிப்பாக ஜனசக்தி, தீக்கதிர் கட்டுரைகள், பீப்பிள்ஸ் டெமாக்ரஸி, மார்க்சிஸ்ட் போன்ற ஏடுகளில் வெளிவந்த கட்டுரைகள் மிகவும் பயன்பட்டு அதை இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கட்டுரையாளர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இதற்கு சிறப்பான அணிந்துரை வழங்கிய மறுமலர்ச்சி தி.மு.க பொதுச் செயலாளர் பெருந்தகை வைகோ அவர்களுக்கு மிக்க நன்றி.

    இந்த வெளியீட்டை சிறப்புற கொண்டுவர உதவிய பத்திரிகையாளர் மணா, கவிஞர் அ. வெண்ணிலா, பாரதி புத்தகாலய தோழர் நாகராஜன், தோழர் சிராஜுதின், இதற்கு முழுமையாக பணியாற்றிய அன்புக்குரிய விஜய ஆனந்த், நாட்டுப்புற படைப்பாளி கழனியூரான், தீக்கதிர், ஜனசக்தி போன்ற ஏடுகளுக்கு நன்றிகள்!

    வழக்கறிஞர்

    கே.எஸ். இராதாகிருஷ்ணன்

    சென்னை - 600041

    14-02-2008

    1. 123 அறிமுகம்

    எவ்வளவு அழகான முகமூடி பூண்டிருக்கிறது இந்த நகரம்...

    - ஷேக்ஸ்பியர்

    ‘வெனிஸ் நகர வியாபாரி’

    "கடந்த முப்பது ஆண்டுகளில் நமது நாட்டில் மனிதவள மேம்பாட்டில் அக்கறை உள்ள விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் ஏராளமாக உருவாகியிருக்கிறார்கள். அவர்களின் ஆராய்ச்சிகள் மிகச்சிறந்த சந்தைப் பொருட்களை உற்பத்தி செய்யவும் நாடு தன்னிறைவடையவும் காரணமாக அமைந்திருக்கின்றன’ என்று சொல்லுவதும் அனில் ககோத்கர்; ‘அவ்வாறான ஆராய்ச்சிகளின் பலனாக நமது அணுவிசைத் திட்டங்கள் மளமளவென்று வளர்ந்து வருகின்றன. ஏற்கனவே 12 மிகு அழுத்த கனநீர் உலைகள் உற்பத்தியில் உள்ளன. அது மேலும் வளரும் கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் வருங்கால வளர்ச்சிகளுக்கானத் திட்டங்கள் தயார் என்று உற்சாகக் குரல் கொடுத்திருப்பதும் அவரே.

    ஆக நம் நாட்டில் அறிவியலறிஞர்களுக்குப் பஞ்சமில்லை, அவர்கள் செய்யும் ஆராய்ச்சிகளுக்கு எல்லையில்லை என்னும்போது 123 ஒப்பந்தம் ஏன்? அணு உலைகள் இறக்குமதி ஏன்? அத்துறையில் தனியார் ஆதிக்கம் மேலோங்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அவ்வாறு ஆனபின் அறிவுத்திறனும் அனுபவமும் நிறைந்த நம் விஞ்ஞானிகளுக்கு வேலைவாய்ப்பு பெருமளவு பாதிக்கப்படுமே; சரிதானா?

    நமது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின் பலனாக உயர்வகை சந்தைப் பொருட்கள் இங்கேயே கிடைக்கும்போது அணுவிசை தொடர்பான கச்சாப்பொருள் முதல் அனைத்தையும் இறக்குமதி செய்வானேன்? இறக்குமதி செய்த அதன்மூலம் உற்பத்தியாகும் அணுவிசை பயன்பாட்டிற்கு வரும்போது விலை மிகவும் அதிகமாகுமே! பாடுபட்டுச் சேர்த்த நமது அன்னியச் செலாவணிக் கையிருப்பு மிகவும் பாதிக்கப்படுவதும் சரிதானா?

    அமெரிக்காவியே முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அணு உலையில் விபத்து ஏற்பட்டது. பயனற்றுப்போன அந்த உலையை மூட 200 கோடி டாலருக்கு மேல் செலவு செய்துவிட்டார்கள், அதிலிருந்து எழும் கதிரியக்கங்களை இன்னமும் முழுவதுமாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த அனுபவத்திற்குப் பின்னரும், தன்னிடமுள்ள அணு உலைகளை நம் போன்ற நாடுகளிடம் தள்ளிவிட அமெரிக்கா துடிப்பது ஏன்? தன் நாட்டின் மின் தேவையில் முக்கால் பகுதியை உற்பத்தி செய்யும் வகையில், 56 அணு உலைகளைக் கொண்டிருக்கிறது பிரான்ஸ். அதுவே, இப்போது அந்நாட்டிற்குத் தலைவலியாகியிருக்கிறது. அணுக்கழிவைப் புதைக்க இடமில்லை வெளியேறும் சுடுநீரை ஆறுகளில் விடுவதால், ஆறுகள் பாழாகின்றன. மீன்கள் சாகின்றன. அதிகமான அணு உலைகளைக் கொண்டிருப்பதாக ஒரு காலத்தில் மார்தட்டிக்கொண்டிருந்த பிரான்ஸ் நாடு, இப்போது செய்வதறியாமல் கையைப் பிசைந்து கொண்டு தவியாய்த் தவிக்கிறது. 15 சத மின் உபயோகத்தைக் குறைத்துக் கொண்டிருக்கிறது. பொருளாதார முன்னேற்றத்திற்கு மின்சாரம் மிக முக்கிய தேவையாகிறது. 2020-ஆம் ஆண்டின் மின் தேவையைக் கணக்கிட்டு, அதற்கான அதிவேகப் பாய்ச்சலுக்காக அணு விசை மின்சாரத்தை நமது நாடு நாடி அமெரிக்காவிடம் கையேந்தி நிற்கிறது.

    வங்கக் கடலில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளோடு சேர்ந்து இந்தியாவும் ஒரு கூட்டுக் கடற்படைப் பயிற்சியைத் துவங்கியிருக்கிறது. எதிர்ப்புகள் புறந்தள்ளப்பட்டு இந்தக் கூட்டுப்பயிற்சித் துவங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பயிற்சிக்குத் தலைமை தாங்குவதே அமெரிக்காதான். இந்தப் பயிற்சிக்காக 13 போர்க் கப்பல்கள் வங்கக் கடலுக்கு வந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை. அமெரிக்காவால் மற்ற நாடுகளைத் தாக்கப் பயன்படுத்தப்பட்டவையாகும். அந்த நாடுகள் அனைத்தும் இந்தியாவோடு நட்புறவு கொண்டுள்ளவை.

    இந்தக் கூட்டுப் பயிற்சிக்கு அடிப்படையாக இருப்பது மன்மோகன்சிங் அரசு அவசர அவசரமாக அமெரிக்காவோடு செய்து கொண்ட ராணுவ ஒத்துழைப்புக்கான உடன்பாடுதான், ஒத்துழைப்பு என்ற பெயரில் பத்தாண்டுகளுக்கு அமெரிக்கா கிழித்த கோட்டில் இந்தியா செல்ல வேண்டும் என்று கையை முறுக்குகிற உடன்பாடு அது. அப்படியொரு உடன்பாட்டிற்கு என்ன அவசியம் வந்தது?

    நாடு இன்று தனது விடுதலை வைர விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. விடுதலைப் பெற்றபிறகு நமது நாட்டிற்குக் கீர்த்தியைத் தேடிக்கொடுத்ததே. ஜவஹர்லால் நேரு காலத்திலிருந்து உறுதியோடு கடைபிடிக்கப்பட்டு வந்த அணிசாராக்கொள்கைதான் ஆக்கிரமிப்பு தாகத்தோடு செயல்பட்ட எந்த நாட்டோடும் இந்தியா எவ்விதமான கூட்டும் ஒத்துழைப்பும் வைத்துக் கொண்டதில்லை. அதே நேரத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்துகொண்டிருந்த விடுதலைப் போராட்டங்களுக்கு இந்தியா தோழமையோடு தோள் கொடுத்து வந்தது. அந்தப் பெருமை, பாரம்பரியம், அமெரிக்காவுடனான இந்த ராணுவக் கூட்டின் மூலம் கைவிடப்படுகிறது என்பதுதான் கவலை.

    இந்தியாவை தனது ராணுவ நோக்கங்களுக்கான கூட்டாளியாக்க அமெரிக்கா விரும்புகிறது. காங்கிரஸ் அமைச்சர்கள் சிலர், இந்தக் கூட்டுப் பயிற்சி ஒன்றும் புதியதல்ல என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள், ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளோடு ஏற்கனவே இப்படிப்பட்ட கூட்டுப் பயிற்சிகள் நடந்துள்ளன. அதேபோன்ற பயிற்சி அமெரிக்காவுடனும் நடத்தப்படுவதில் என்ன தவறு இருக்க முடியும் என்று ஆட்சியாளர்கள் கேட்கிறார்கள். ஆனால் இந்த வாதத்தின் மூலம் ஒரு உண்மை மறைக்கப்படுகிறது. அமெரிக்காவுடன் 10 கூட்டுப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், வேறு ஏதாவது ஒரு நாட்டில் ஒரே ஒருமுறை கூட்டுப் பயிற்சி நடத்தப்படுகிறது என்ற புள்ளி விவரம் மறைக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல இந்தியா இதுவரை வேறு எந்த நாட்டோடும் இப்படிப்பட்ட இராணுவ ஒத்துழைப்பு உடன்பாட்டைச் செய்து கொண்டதில்லை.

    கூட்டுப் பயிற்சிக்காக வங்கக் கடலுக்கு வந்திருக்கிற கப்பல்கள், மனித உயிர்களைக் கொக்கு குருவிகள்போல் கொன்றொழிப்பதில் பெயர் பெற்றவை. உதாரணமாக, இராக் நாட்டை ஆக்கிரமித்த அமெரிக்கா தனது போர் விமானங்கள் மூலம் அந்த நாட்டின் வரலாற்றுச் சின்னங்கள் மீது கூட குண்டுகளைப் பொழிந்தது. 2003-04-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் இராக்கில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளால் கொல்லப்பட்டனர். அந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்டு, பெரும்பாலான அப்பாவி மக்களின் உயிர்த்துடிப்பைப் பறித்த குண்டுவீச்சு விமானங்கள் நிமிட்ஸ் கப்பலிலிருந்துதான் புறப்பட்டுச் சென்றன. ஏற்கனவே

    Enjoying the preview?
    Page 1 of 1