Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

D.M.K. – Samooga Neethi
D.M.K. – Samooga Neethi
D.M.K. – Samooga Neethi
Ebook225 pages1 hour

D.M.K. – Samooga Neethi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வழக்கறிஞர் தம்பி திரு. கே.எஸ். இராதாகிருஷ்ணன், “தி.மு.க. – சமூகநீதி” எனப் படைத்துள்ள இந்த அருமையான நூல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில், காஞ்சியில் வெளியிடப்படுவது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

சமூகநீதியின் தாயகம் தமிழகம் என்பதை இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. தமிழகத்தில் வாழும் ஏழை எளிய தாழ்த்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களை, அவர்களிலும் நலிந்தவர்களை - நசுக்கப்பட்டவர்களை முன்னேற்றுவதற்குத் திராவிட இயக்கம் கண்ட அருமருந்து சமூக நீதி. அந்தச் சமூக நீதியை வென்றெடுப்பதில் - பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் நடேசனார், முத்தையா முதலியார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரும், அவர்களைத் தொடர்ந்து இன்றைய தி.மு.கழகமும் மேற்கொண்ட - மேற்கொண்டுவரும் முயற்சிகளை - போராட்டங்களை எல்லாம் இந்நூலில் தெளிவாகத் தொகுத்துத் தந்துள்ளார்.

Languageதமிழ்
Release dateSep 6, 2021
ISBN6580142906761
D.M.K. – Samooga Neethi

Read more from K.S. Radhakrishnan

Related to D.M.K. – Samooga Neethi

Related ebooks

Reviews for D.M.K. – Samooga Neethi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    D.M.K. – Samooga Neethi - K.S. Radhakrishnan

    https://www.pustaka.co.in

    தி.மு.க. - சமூகநீதி

    D.M.K. – Samooga Neethi

    Author:

    கே.எஸ். இராதாகிருஷ்ணன்

    K.S. Radhakrishnan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ks-radhakrishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    சமூக நீதிப் போர்

    பிற்சேர்க்கை : 1

    பிற்சேர்க்கை : 2

    பிற்சேர்க்கை : 3

    பிற்சேர்க்கை : 4

    பிற்சேர்க்கை : 5

    பிற்சேர்க்கை : 6

    பிற்சேர்க்கை : 7

    பிற்சேர்க்கை : 8

    பிற்சேர்க்கை : 9

    பிற்சேர்க்கை : 10

    பிற்சேர்க்கை : 11

    பிற்சேர்க்கை : 12

    பிற்சேர்க்கை : 13

    பிற்சேர்க்கை : 14

    பிற்சேர்க்கை : 15

    பிற்சேர்க்கை : 16

    பிற்சேர்க்கை : 17

    பிற்சேர்க்கை : 18

    பிற்சேர்க்கை : 19

    அணிந்துரை

    வழக்கறிஞர் தம்பி திரு. கே.எஸ். இராதாகிருஷ்ணன், தி.மு.க. – சமூகநீதி எனப் படைத்துள்ள இந்த அருமையான நூல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில், காஞ்சியில் வெளியிடப்படுவது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

    சமூகநீதியின் தாயகம் தமிழகம் என்பதை இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. தமிழகத்தில் வாழும் ஏழை எளிய தாழ்த்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களை, அவர்களிலும் நலிந்தவர்களை - நசுக்கப்பட்டவர்களை முன்னேற்றுவதற்குத் திராவிட இயக்கம் கண்ட அருமருந்து சமூக நீதி. அந்தச் சமூக நீதியை வென்றெடுப்பதில் - பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் நடேசனார், முத்தையா முதலியார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரும், அவர்களைத் தொடர்ந்து இன்றைய தி.மு.கழகமும் மேற்கொண்ட - மேற்கொண்டுவரும் முயற்சிகளை - போராட்டங்களை எல்லாம் தம்பி திரு. கே.எஸ். இராதாகிருஷ்ணன் இந்நூலில் தெளிவாகத் தொகுத்துத் தந்துள்ளார். அவருக்கு என் பாராட்டுகள். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப் போராட்ட வரலாற்றை விளக்கும் இந்நூல் வருங்காலத் தலைமுறையின் சமூக நீதிச் சிந்தனைகளுக்கு விருந்து படைத்திட, சமூகநீதிப் போர் முழுமையடையத் தக்கவகையில் விழிப்புணர்வு புகட்டிட வாழ்த்துகிறேன்.

    sign of karunanithi

    (மு. கருணாநிதி)

    அலுவலகம்:

    அண்ணா அறிவாலயம்

    367-369 அண்ணா சாலை

    சென்னை - 600 018

    இல்லம்:

    நெ. 15, 4வது தெரு

    கோபாலபுரம்

    சென்னை – 600086

    சமூக நீதிப் போர்

    திராவிட இயக்க வரலாற்றில் சமூகநீதி போராட்டம் மிக முக்கியமானது ஆகும். சமூகநீதியை கம்யூனல் ஜி.ஓ., வகுப்புவாரி பிரதிநிதித்துவம், வகுப்புரிமை, ரிசர்வேஷன், இடஒதுக்கீடு எனப் பல பெயர்களில் அழைக்கின்றனர். சமூகநீதி என்பது ஒரு வகுப்பாரைத் தாழ்த்தியோ அச்சுறுத்தியோ பெறும் சலுகையல்ல, ஒவ்வொரு வகுப்பும் அரசியல், கல்வி, வேலை வாய்ப்புகளில் இடம் பெற வேண்டிய உரிமை; அதாவது பிறப்புரிமை ஆகும். ஆகவேதான் சமூகநீதி ஒரு காலகட்டத்தில் 'வகுப்புரிமை' எனக் கூறப்பட்டது. இந்த வகுப்புரிமையைத் தோற்றுவித்தவர்கள் ஆங்கிலேயர்களே. அதனைத் திராவிட இயக்கம் வளர்த்தெடுத்தது.

    டாக்டர் நாயர் தொடங்கி முதல்வர் கலைஞர் வரை சமூக நீதிக்காகப் போராடியவர்களே! இன்னமும் அந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இப்போராட்ட வரலாற்றில் பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் சி. நடேசனார், முத்தையா முதலியார், பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் மாபெரும் சாதனைகளை நிகழ்த்தியவர்கள் ஆவர். இவர்களுள் தலைவர் கலைஞர்க்கென்று மிகச் சிறப்பான இடமுண்டு. ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், பெருந்தலைவர் காமராசர் ஆகியோருக்கும் சமூகநீதித் தளத்தில் பங்குண்டு.

    சமூகநீதியின் தொடக்கம்

    இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்தபோது ஆங்கிலேயர்கள் குறைவான தொகையினர், ஆளப்படும் இந்தியர்கள் தொகையில் அதிகம். மிகப்பலராக இருந்த இந்தியர்களுக்கு அரசுப் பணிகளில் இடமே இல்லை என்கிற நிலை, அவர்களுக்கு வெறுப்பையும் அதிருப்தியையும் தந்தது. சொந்த நாட்டவர்க்கு ஏதோ சில பணிகளைத் தர ஆங்கிலேயர் முன் வந்தனர். இப்படித் தரப்பட்ட பணியிடங்கள் அனைத்தையும் பிராமணர்களே பெற்றனர்.

    1853-இல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 49 பேர் - ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் நெல்லூர் மாவட்ட வருவாய்த் துறையை ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இவர்கள் அனைவரும் பிராமணர்களே¹. 1894 முதல் 1904 வரை நிர்வாகப் பணிகளிலும் சரி, தொழில் சார்ந்த பணிகளிலும் சரி, பிராமணர்களே அதிக இடங்களில் இருந்தனர். இதனால் பிராமணர் அல்லாதாரிடையே எதிர்ப்புகள் மெல்ல எழுந்து அது ஆங்கிலேயர்களுடைய செவிகளிலும் விழத்தொடங்கியது².

    ஆங்கிலேயர்களுக்கு இந்திய சமூக அமைப்பைப் பற்றிய புரிதல் இல்லை. இங்கே வர்ணபேதமும் சாதீயமும் உள்ளதை அவர்களால் எளிதில் புரிந்து கொள்ள இயலவில்லை. எல்லோரையும் அவர்கள் 'இந்தியர்கள்' என மட்டுமே கருதினர். பின்னர், அவர்கள் பிராமணர்கள் உயர்சாதியினர் என்றும், அவர்கள் மிகச் சிறுபான்மையினர் என்றும், சிறுபான்மையினராக இருப்பவர்கள் அரசுப் பணிகளில் அதிகமாக இடம் பெற்று ஆதிக்கம் செய்து வருகிறார்கள் என்றும் அறிந்து கொண்டார்கள். இதனால் அந்த ஏகபோகத்தை ஒழிப்பதற்காக ஆங்கிலேயர்கள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார்கள். இதற்காக 1854-இல் வருவாய் ஆணையம் ஒரு நிலை ஆணையைப் பிறப்பித்தது. அந்த ஆணையில் வாரியம்,

    ***

    1. During 1853 the British Government found the virtual monopoly of a single caste in Public Service. The Revenue establishment in Nellore District was controlled by 49 Brahmins, all from the Same Family (Ambasankar Commission Report Vol. I, Page 6)

    2. Between 1894 and 1904 in the Provincial Civil Service out of 16 Officers 15 were Brahmins: among 21 Assistant Engineers 17 were Brahmins (Ambasankar Commission Report Vol. I, Page 7)

    ***

    ‘மாவட்ட ஆட்சியர்கள் சார்நிலைப்

    பணிகளைச் செல்வாக்குப் படைத்த

    குடும்பங்கள் ஏகபோகம் ஆக்கிக்

    கொள்ளாமல் விழிப்போடு பார்த்துக்

    கொள்ள வேண்டும்’³

    என்று அறிவுறுத்தியது. பல்வேறு சாதிகளுக்கு முதல் நிலைப் பணிகளைப் பிரித்தளிக்க முயற்சிக்க வேண்டும் என்று நெறிப்படுத்தினர்.

    ‘1854-ஆம் ஆண்டு ஆணையைத் தொடர்ந்து 1857, 1907 ஆகிய ஆண்டுகளிலும் இத்தகைய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. ஆணைகளைப் பிறப்பித்த அரசு வாளாயிருக்கவில்லை. இந்த ஆணைகள் எப்படிச் செயல்படுத்தப்படுகின்றன என்பதையும் ஆய்வு செய்தது. அவ்வாய்வில் ஆணைகள் சரிவர நிறைவேற்றப்படவில்லை என்பது தெரியலாயிற்று. இதன் மூலமாக பிராமணர்களின் மற்றொரு தந்திரம் வெளிப்பட்டது. பிராமணர்களில் பல பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொரு சாதியினர் எனக்கூறி, பிராமணர்கள் பணிகளை அபகரித்து வந்தனர் என்பதும் தெரியவந்தது. இதன் பிறகு அரசு, ‘பிராமணர்களுக்குள்ளே பல பிரிவுகள் இருந்தாலும் அவர்கள் எல்லாரும் பிராமணர்களே. அவர்கள் அனைவரும் ஒரே சாதியினராகவே கருதப்படுவர். அதன்படிதான் பணி நியமனங்களும் செய்யப்பட வேண்டும்’ என்று சுற்றறிக்கைகளின் மூலமும் ஆணைகளின் மூலமும் தெளிவுபடுத்தியது.

    ***

    3. "Collectors should be careful to see that the subordinate appointments in their districts are not monopolised by members of a few influential families.

    Endeavour should always be made to devide the principal appointments in each district among the several castes"

    (Board of Revenue proceedings dated 9th March 1854 (B.S.O. 128, 2) of 1854)

    ***

    இந்நிகழ்வுகள் எல்லாம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறபோது, அரசின் ஆணை 1854லேயே பிறப்பிக்கப்பட்டுவிட்டது. ஆங்கிலேயர்களும் வகுப்புரிமையைத் தானாக முன்வந்து ஆணையைப் பிறப்பிக்கவில்லை. கோரிக்கைகளை இப்போது வைப்பதுபோல, கட்சிகளோ அமைப்புகளோ கேட்கவில்லை. அந்தந்தச் சாதியினர் தனித்தனிக் குழுக்களாகச் சென்று கோரிக்கைகளை எழுப்பினர். அதன் விளைவாகவே அரசு ஆணைகளைப் பிறப்பித்தது.

    ஆங்கில அரசு நிலைத்தற்குப் பிறகு விடுதலை உணர்ச்சி பெருகலாயிற்று. இதனால் புரட்சிகர இயக்கங்கள் தோன்றின. அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறப்போராட்டங்களை நடத்தவில்லை. அவர்கள் வன்முறையாளர்களாகவே இருந்தனர். இதனால் அச்சமுற்ற ஆங்கிலேயர்கள் சார்பில், ஆங்கிலேய அரசு அறவழியாக கோரிக்கைகளைப் பெற்று நிறைவேற்ற ஓர் அமைப்பை உருவாக்கியது. அந்த அமைப்பே இந்திய தேசிய காங்கிரஸ். இவ்வமைப்பு அதிகார மையங்களில் 'இந்திய மயமாக்க' வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தது. ஆங்கிலேயர்களும் இந்தியர்க்குப் பதவிகளை வழங்கினர். ஆனால், அவை பிராமணர்களுக்கே போய்ச் சேர்ந்தன. ஆகவே 'இந்திய மயம்' என்றால் 'பிராமண மயம்' எனப் பொருளுரைத்து அதனை வெளிப்படுத்தியது - திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் கட்சியான நீதிக்கட்சி! அதுமட்டுமன்று ஆங்கிலேய அரசிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்கள். அக்கோரிக்கை இதுதான்:

    ‘இந்தியர்கள் என்பவர்கள் பிராமணர்கள்

    மட்டுமல்ல. இந்தியர்களுள் பிராமணர்கள்

    என்பவர்கள் மிக மிகச் சிறுபான்மையினரே.

    ஆகவே இந்தியர்களில் மிகப் பெரும்

    பான்மையினராக இருக்கும் பிராமணர்

    அல்லாதார்க்கு உரிய இடங்களை ஒதுக்கித்

    தாருங்கள்’

    இக்கோரிக்கையை காங்கிரஸ் எதிர்த்தது. அப்போது காங்கிரஸில் மிகச் செல்வாக்கோடு விளங்கிய பெரியார் ஈ.வெ.ரா தமிழ்நாடு காங்கிரஸின் மாகாண மாநாட்டில் ஐந்துமுறை வகுப்புரிமை குறித்த தீர்மானத்தைக் கொண்டுவந்து பயனற்றுப் போயிற்று. ஆகவே, அவர் காங்கிரஸைக் கண்டித்து அக்கட்சியிலிருந்தே வெளியேறினார்.

    1919-ஆம் ஆண்டு அரசியல் சீர்திருத்தச் சட்டப்படி 1920-இல் தேர்தல் நடந்தது. நீதிக்கட்சி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. சட்டமன்றத்தில் பிராமணர் அல்லாதார்க்கு வகுப்புவாரி அடிப்படையில் அரசுப் பணிகளில் பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்பதற்காக, விவாதங்கள் நடைபெற்றன. 1921-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்களில், 'அரசுப் பணிகளில் பிராமணர் அல்லாதார்க்கு உள்ள இடங்கள் அதிகப்படுத்தப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன்னதாகச் சட்ட மன்றத்தில் டாக்டர் சி. நடேசனார் கொண்டுவந்த தீர்மானத்தின்படி 'பிராமணர் அல்லாதார் யார்?' என்பதும் முடிவு செய்யப்பட்டது. அப்படி முடிவு செய்தால்தானே பிராமணர் அல்லாதார் அரசுப் பணிகளை வகுப்புவாரியாகப் பெறமுடியும்?

    நீதிக்கட்சி அரசு வெளியிட்ட வகுப்புரிமை ஆணைகள்

    நீதிக்கட்சி அரசு, 1921-ஆம் ஆண்டிலேயே முதல் வகுப்புரிமை ஆணையை செப்டம்பர் 16-ஆம் நாள் வெளியிட்டது¹. இரண்டாம் ஆணை 15.8.1922-இல் பொதுத் துறை குறிப்புகளுடன் இணைக்கப்பட்டு

    ***

    1. Public Ordinary Service G.O. No.613/16.09.1927

    ***

    வெளிவந்தது². நீதிக்கட்சி

    Enjoying the preview?
    Page 1 of 1