Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sethu Kaalvai – Oru Paarvai
Sethu Kaalvai – Oru Paarvai
Sethu Kaalvai – Oru Paarvai
Ebook136 pages47 minutes

Sethu Kaalvai – Oru Paarvai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழன் கால்வாய்த் திட்டம் 1860ஆம் ஆண்டில் வகுக்கப்பட்டது. அப்போது அதற்கு 2 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இந்தத் தொகையைச் செலவழிக்க ஆங்கிலேய அரசுக்கு மனமில்லை.

இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1956ஆம் ஆண்டில், 8 கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தை நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டது. ஆனாலும் அப்போதும் எதுவும் நடக்க வில்லை.

1963ஆம் ஆண்டில் 21 கோடி ரூபாய் செலவில் மறுமதிப்பீடு தயார் செய்யப்பட்டது. திட்டக்குழு ஒப்புதல் அளித்தது. இந்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் இலங்கையின் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயகா அப்போதைய இந்தியப் பிரதமர் நேருவுக்கு எழுதிய கடிதத்தில் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இலங்கையின் ஒரே சர்வதேச துறைமுகமான கொழுப்பு துறைமுகம் தனது முக்கியத்துவத்தை இழந்துவிடும் என்று கூறினார். இலங்கையைத் திருப்திபடுத்துவதற்காகப் பிரதமர் நேரு இத்திட்டத்தை மூட்டை கட்டி வைத்தார்.

ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்குப் பிறகு, இத்திட்டம் இப்போது எடுத்துக்கொள்ளப்பட்டு ஏறத்தாழ 2,500 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட உள்ளது. தமிழ் மக்களின் நீண்ட காலக் கனவு நிறைவேற வழி பிறந்துள்ளது.

1981ஆம் ஆண்டில் இத்திட்டம் பற்றிய சாத்திய கூறுகளைக் கண்டறிய இந்திய அரசால் நியமிக்கப்பட்ட இலட்சுமி நாராயணன் குழுவினரிடம் எங்கள் இயக்கத்தின் சார்பாக விண்ணப்பம் ஒன்று அளிக்கப்பட்டது.

1982ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி, தமிழகச் சட்டமன்றத்தில் தமிழன் கால்வாய்த் திட்டம் குறித்து ஒருமணி நேர விவாதத்திற்கான தீர்மானம் கொடுத்தேன். அத்தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட நானும் மற்றக் கட்சித் தலைவர்களும் பேசினோம். அதே மாதம் ஏப்ரல் 15 முதல் மே 15 வரை தமிழன் கால்வாய் உள்ளிட்ட திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வற்புறுத்தித் தமிழகம் முழுவதிலும் கூட்டங்களை நடத்தினோம். 1982ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி இதற்காக மத்திய அரசு அலுவலகங்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

மதுரை உட்பட பல முக்கிய நகரங்களில் தமிழன் கால்வாய் குறித்துப் பல கருத்தரங்குகளை நடத்தினோம்.

இந்தப் பணிகள் யாவற்றிலும் எனக்குத் துணையாக நின்றவர் வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் ஆவார். இத்திட்டம் குறித்து விவரமாகவும் விளக்கமாவும் அவர் எழுதி உள்ள இந்த நூல் மக்களுக்கு நன்கு பயன்படும். குறிப்பாக இத்திட்டம் பற்றிப் பல்வேறு தரப்பினர் எழுப்பி உள்ள ஐயங்களைத் தெளிவிக்கும் வகையில் ஏராளமான விவரங்களைக் கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டின் தலையாய தேசியப் பிரச்னைகள், திட்டங்கள் ஆகியவை குறித்து இதுபோன்ற நூல்களை எழுதித் தொண்டாற்ற வேண்டுமென அவரை வேண்டிக்கொள்கிறேன். தமிழ் கூறும் நல்லுலகம் இந்நூலினை வரவேற்கும் என நம்புகிறேன்.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580142906789
Sethu Kaalvai – Oru Paarvai

Read more from K.S. Radhakrishnan

Related to Sethu Kaalvai – Oru Paarvai

Related ebooks

Reviews for Sethu Kaalvai – Oru Paarvai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sethu Kaalvai – Oru Paarvai - K.S. Radhakrishnan

    https://www.pustaka.co.in

    சேதுக் கால்வாய் - ஒரு பார்வை

    Sethu Kaalvai – Oru Paarvai

    Author:

    கே.எஸ். இராதாகிருஷ்ணன்

    K.S. Radhakrishnan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ ks-radhakrishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இந்தியாவின் மதிப்பை உயர்த்தும் சேதுக்கால்வாய்.

    சேதுக் கால்வாய்க்கு விடிவுகாலம் வந்தாச்சு!

    சேதுக்கால்வாய்த் திட்டம் வரலாறு

    செல்வம் குவிக்கும் சேதுக் கால்வாய்

    பல தடைகளை மீறிய சேதுக் கால்வாய் திட்டம்

    சேதுக் கால்வாய் திட்டம்: நிதி அம்சங்கள்

    சேதுக் கால்வாய் திட்டத்திற்கு மூலதனப் பங்குகள் வாயிலாகத் திரட்டப்படும் நிதி:

    கால்வாய் அமைப்பும், தூர்வாரும் பணிகளும்.

    சேதுக்கால்வாயும் சுற்றுச்சூழலும்

    சேதுக் கால்வாய் திட்டம் - முழு விவரம் தூத்துக்குடி புதிய துறைமுகம் வந்தது எப்படி? பிரதமர் நேரு அவர்களை நேரில் சந்தித்த வரலாறு!

    அறிஞர் அண்ணா அறிவித்த எழுச்சி நாள் அன்று நிறைவேற்றிய தீர்மானம்

    பன்னாட்டுக் கால்வாய்கள்

    தமிழன் கால்வாய்: நீண்டகாலக் கனவு நிறைவேறுகிறது...

    பழ.நெடுமாறன்

    தமிழன் கால்வாய்த் திட்டம் 1860ஆம் ஆண்டில் வகுக்கப்பட்டது. அப்போது அதற்கு 2 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இந்தத் தொகையைச் செலவழிக்க ஆங்கிலேய அரசுக்கு மனமில்லை.

    இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1956ஆம் ஆண்டில், 8 கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தை நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டது. ஆனாலும் அப்போதும் எதுவும் நடக்க வில்லை.

    1963ஆம் ஆண்டில் 21 கோடி ரூபாய் செலவில் மறுமதிப்பீடு தயார் செய்யப்பட்டது. திட்டக்குழு ஒப்புதல் அளித்தது. இந்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் இலங்கையின் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயகா அப்போதைய இந்தியப் பிரதமர் நேருவுக்கு எழுதிய கடிதத்தில் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இலங்கையின் ஒரே சர்வதேச துறைமுகமான கொழுப்பு துறைமுகம் தனது முக்கியத்துவத்தை இழந்துவிடும் என்று கூறினார். இலங்கையைத் திருப்திபடுத்துவதற்காகப் பிரதமர் நேரு இத்திட்டத்தை மூட்டை கட்டி வைத்தார்.

    ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்குப் பிறகு, இத்திட்டம் இப்போது எடுத்துக்கொள்ளப்பட்டு ஏறத்தாழ 2,500 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட உள்ளது. தமிழ் மக்களின் நீண்ட காலக் கனவு நிறைவேற வழி பிறந்துள்ளது.

    1981ஆம் ஆண்டில் இத்திட்டம் பற்றிய சாத்திய கூறுகளைக் கண்டறிய இந்திய அரசால் நியமிக்கப்பட்ட இலட்சுமி நாராயணன் குழுவினரிடம் எங்கள் இயக்கத்தின் சார்பாக விண்ணப்பம் ஒன்று அளிக்கப்பட்டது.

    1982ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி, தமிழகச் சட்டமன்றத்தில் தமிழன் கால்வாய்த் திட்டம் குறித்து ஒருமணி நேர விவாதத்திற்கான தீர்மானம் கொடுத்தேன். அத்தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட நானும் மற்றக் கட்சித் தலைவர்களும் பேசினோம். அதே மாதம் ஏப்ரல் 15 முதல் மே 15 வரை தமிழன் கால்வாய் உள்ளிட்ட திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வற்புறுத்தித் தமிழகம் முழுவதிலும் கூட்டங்களை நடத்தினோம்.

    1982ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி இதற்காக மத்திய அரசு அலுவலகங்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

    மதுரை உட்பட பல முக்கிய நகரங்களில் தமிழன் கால்வாய் குறித்துப் பல கருத்தரங்குகளை நடத்தினோம்.

    இந்தப் பணிகள் யாவற்றிலும் எனக்குத் துணையாக நின்றவர் வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் ஆவார். இத்திட்டம் குறித்து விவரமாகவும் விளக்கமாவும் அவர் எழுதி உள்ள இந்த நூல் மக்களுக்கு நன்கு பயன்படும். குறிப்பாக இத்திட்டம் பற்றிப் பல்வேறு தரப்பினர் எழுப்பி உள்ள ஐயங்களைத் தெளிவிக்கும் வகையில் ஏராளமான விவரங்களைக் கொடுத்துள்ளார்.

    தமிழ்நாட்டின் தலையாய தேசியப் பிரச்னைகள், திட்டங்கள் ஆகியவை குறித்து இதுபோன்ற நூல்களை எழுதித் தொண்டாற்ற வேண்டுமென அவரை வேண்டிக்கொள்கிறேன். தமிழ் கூறும் நல்லுலகம் இந்நூலினை வரவேற்கும் என நம்புகிறேன்.

    பழ. நெடுமாறன்

    8-8-05,

    சென்னை.

    பாரதியின் கனவு இன்று நனவாகிறது.
    தி.க.சி.

    'நிமிர வைக்கும் நெல்லை' முதலான நூல்களை எழுதிய வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களின், 'சேதுக்கால்வாய் - ஒருபார்வை' என்ற நூலைப் படித்தோன்.

    'சேதுக்கால்வாய்க்கு விடிவுகாலம் வந்தாச்சு' என்னும் கும்மாளத்துடன் இந்நூல் தொடங்குகிறது. கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த கால்வாய்த் திட்டம், நடைமுறைக்கு வந்துவிட்டது. இத்திட்டம் வரக்கூடாது என்று உள்ளேயும் வெளியேயும் இருந்து சில சக்திகள் தொடர்ந்து தடுத்து வந்தன என்பதை நாம் அறிவோம்.

    அத்தடைகள் எவ்வாறு முறியடிக்கப்பட்டன என்பதையும் இத்திட்டத்திற்கு விடிவு காலம் வந்ததில், தமிழக அரசியல் கட்சிகள், இடதுசாரி ஜனநாய சக்திகள், தகவல் தொடர்பு சாதனங்கள், மற்றும் பொது மக்களின் பங்களிப்பையும், மாநில, மைய அரசுகளின் நடைமுறையினையும், நடுநிலையில் நின்று, நேர்மையாகவும், திறமையாகவும், ஆணித்தரமான சான்றாதாரங்களுடன் சுருக்கமாக, ஆனால் செறிவாக விளக்குகிறது இந்நூல்.

    தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவே வளம் பெறும் இத்திட்டம் பற்றிய இந்நூலைத் தமிழ் மக்கள் அனைவரும் படித்துப்பயன் பெற வேண்டும் என்பது என் ஆசை.

    'சிங்களத் தீவினுக்கோர்

    பாலம் அமைப்போம்

    சேதுவை மேடுறுத்தி

    வீதி சமைப்போம்!'

    என்று ‘பாரத தேசம்' என்ற கவிதையில் பாடுகிறார் மகாகவி பாரதி.

    பாரதியின் கனவு இன்று நனவாகிறது. சேதுக்கால்வாய் ஒரு பார்வை - என்ற நூலைப் படைத்த வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும், இனப்பற்றும் பாராட்டத்தக்கன.

    இந்நூலை எழுதிய ஆசிரியரின் கடின உழைப்பு குறிப்பிடத்தக்கது. பிற நாடுகள் தமது கால்வாய்த்திட்டப் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு கண்டன என்பதையும், சுற்றுச் சூழல் பிரச்சனைக்கு உதவும் வகையில் சேதுக்கால்வாய்த் திட்டம் எவ்வாறு பயன்படும் என்பதையும் இந்நூலாசிரியர் ஆங்கிலச் சான்றாதாரங்களுடன் விளக்கியுள்ளார்.

    நெல்லை மாவட்டத்தில் பிறந்த கே.எஸ்.ஆர். நதிநீர் இணைப்பு, சுற்றுச்சூழல், விவசாயிகள் நலன், மனித உரிமைகள் போன்ற பிரச்சனைகளில் நாட்டம் கொண்டு அரசியல் களத்திலும் இருபத்தைந்தாண்டுகளுக்கும் மேலாக பணியை மேற்கொண்டு வருகின்றார். அவர் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

    சேது சமுத்திரக் கால்வாய் பாதை, சேது சமுத்திர திட்டம் பற்றிய வரைபடங்கள் இந்நூலைப் புரிந்து கொள்வதற்கு உதவுகின்றன. தக்க தருணத்தில் ஒரு நல்ல நூலைத் தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கியுள்ள ஆசிரியர் வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் நல்வாழ்த்துக்கள்!

    13-06-2005

    நெல்லை-6

    தி.க. சிவசங்கரன்

    இந்தியாவின் மதிப்பை உயர்த்தும் சேதுக்கால்வாய்.

    டி.கே.ரெங்கராஜன்

    சேதுக்கால்வாய்த் திட்டம் குறித்து இந்தச் சிறு நூல் 150 ஆண்டு பயணப்பாதைகளைச் சுட்டிக்காட்டுகிறது. 1860ஆம் ஆண்டில் தொடங்கி 2005 ஜூலை திங்கள் வரையுள்ள வரலாற்றை இந்நூல் விளக்குகிறது. இந்தத் திட்டம் உலக வரைபடத்தில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாகத் தமிழகம் மேலும் வளர்ச்சியடைய உதவும்.

    காலனி ஆதிக்கக் காலத்தில் இருந்து தொடங்கி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி

    Enjoying the preview?
    Page 1 of 1