Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poo Malarum
Poo Malarum
Poo Malarum
Ebook118 pages35 minutes

Poo Malarum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789386583765
Poo Malarum

Read more from Rajesh Kumar

Related to Poo Malarum

Related ebooks

Reviews for Poo Malarum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poo Malarum - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    பூ மலரும்

    Poo Malarum

    Author :

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    வீட்டுக்குள் நுழைந்த திவாகர் அறையின் மூலையில் இருந்த சூட்கேசைப் பார்த்துவிட்டு சமையலறை பக்கம் எட்டிப் பார்த்து குரல் கொடுத்தான்.

    ஏய்... நிகிதா...

    சமையலறையிலிருந்து ஒரு சின்ன முனகல் சத்தம் கூட கேட்காமல் போகவே திவாகர் கோபத்தின் உச்சிக்குப் போய் சமையலறையை நோக்கி நடந்தான்.

    உள்ளே இருந்த சமையலறையைத் தொட்டு எட்டிப் பார்த்தான்.

    இலைப் பச்சை நிற மேக்கி உடைக்குள் நுழைந்திருந்த நிகிதா மிக்சிக்குள் எதையோ போட்டு அரைத்துக் கொண்டிருந்தாள்.

    நிகிதா...

    ம்...

    கூப்பிட்டது காதுல விழலை...?

    விழலையே...! மிக்சி சத்தம் போட்டுகிட்டிருக்கும் போது எப்படீங்க காதுல விழும்...?

    நான் உன்கிட்ட என்ன சொல்லிட்டுப் போனேன்...?

    என்ன சொல்லிட்டுப் போனீங்க...?

    சூட்கேசுல என்னோட டிரஸ்சை எல்லாம் எடுத்து வைக்கச் சொன்னேன்னா இல்லையா...?

    சொன்னீங்க...

    ஏன் எடுத்து வைக்கலை...?

    எனக்கு உண்மை தெரியணும்...

    என்ன உண்மை...?

    எங்கே போறீங்க...?

    ஆபிஸ் டூர் போறேன்...

    வர்றதுக்கு எத்தனை நாளாகும்?

    எப்படியும் பத்து பதினைஞ்சு நாளாயிடும்.

    ஆபிஸ் டூர் போனா நாலைஞ்சு நாள்ல வேலையை எல்லாம் முடிச்சுகிட்ட ஊர் திரும்பிடலாம்ன்னு கேள்விப்பட்டேனே...? உங்களுக்கு மட்டும் எப்படி பத்து பதினைஞ்சு நாளாகும்...?

    உனக்கு இதெல்லாம் தேவையில்லாத விசயம். சூட்கேசுல டிரஸ்சை எடுத்து வைய்யின்னா எடுத்து வைக்க வேண்டியது மட்டும்தான் உன் வேலை.

    மன்னிச்சிடுங்க... அப்படியெல்லாம் எந்திரத்தனமா வேலை பார்க்கிறதுக்கு ஒரு பெண்டாட்டி வேண்டாம். ரோபோட் போதும். நீங்க பேசாம ஒரு ரோபோட் கழுத்துல தாலியைக் கட்டியிருக்கலாம்.

    திவாகரின் முகம் சிவந்தது.

    என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரியா போயிட்டிருக்குது...?

    நீங்க ஒரு மாதிரியா நடக்க ஆரம்பிச்சுட்டீங்க... நானும் அதுக்கு தகுந்த மாதிரி மாறிக்க வேண்டியது தானே...?

    என்னடி... பதிலுக்குப் பதில் பேசிகிட்டு...? மூணு வேளையும் உட்கார்ந்து திங்கிற கொழுப்பா...?

    இந்த வீட்ல நான் மட்டுமா மூணு வேளை உட்கார்ந்து சாப்பிடறேன்...?

    ஏய்...

    சும்மா கத்தாதீங்க... பொண்டாட்டி தர்ற மரியாதையைக் காப்பாத்திக்கத் தெரியலைன்னா அதுக்கு யார் என்ன செய்ய முடியும்...?

    திவகாகர் தன் இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு சில விநாடிகள் அவளையே முறைத்தான்.

    ஏய்... நிகிதா... இன்னிக்கு உனக்கு என்னாச்சு? ஆபிஸ் வேலையா டூர் போறேன். எனக்கு வேண்டிய டிரஸ்சை எல்லாம் சூட்கேசுல எடுத்து வைக்கச் சொன்னேன். இதுக்குப் போய் இந்த ஆட்டம் ஆடறியா?"

    ஆட்டம் போடறது நீங்களா... நானா...? நீங்க டூர் போற இலட்சணம் எனக்குத் தெரியாதா என்ன...? ஆபீஸ் டூர்ங்கிற பேரில் வெளியூர் போய் எவளையாவது ஜோடி சேர்த்துகிட்டு கொட்டம் அடிப்பீங்க. அந்த கூத்துக்காக இங்கே நான் சூட்கேசுல டிரஸ்சை எல்லாம் எடுத்து வைச்சு வழியனுப்பணுமா...?

    ஏய்... நிகிதா...

    அநாவசியமா எதுக்காக பல்லைக் கடிக்கறீங்க...? உங்க ஏக பத்தினி விரதம் சாயம் போய் ரொம்ப நாளாச்சு.

    நீ அநாவசியமா சந்தேகப்படறே...? உண்மையாகவே நான் ஆபிஸ் டூர்தான் போறேன்... என்னை நம்பு...

    உங்களை எப்படீங்க நம்பறது...? என் சந்தேகத்துக்கு அஸ்திவாரம் போட்டதே நீங்க நடந்துக்கிட்ட முறைதானே...? அன்னிக்கு ஒரு நாள் லோக்கல் லாட்ஜில் ரெய்டு நடந்தப்ப போலீசில் பிடிபட்டீங்க... நீங்க வெளியூர் போனதா நம்பியிருந்த எனக்கு அது ஒரு பெரிய அதிர்ச்சியா இருந்தது.

    நிகிதா! அன்னிக்கு ஒரு மோசமான சம்பவம் நடந்தது உண்மைதான். அதுக்கப்புறம் நான் திருந்திட்டேன்.

    ஆமா ஆமா...! திருந்திட்டீங்க... இப்பெல்லாம் மாட்டிக்கிற மாதிரி தப்பு பண்றதில்லை... உங்க லீலைகளை எல்லாம் வெளியூரில் போய் வைச்சுக்கிறீங்க... என்ன நான் சொல்றது சரிதானே?

    திவாகரின் மனசின் மையத்துக்குள் ததும்புகிற ஆத்திரத்தை கண்களுக்கு கொண்டு வந்தான்.

    இதோ பார்...! தாலி கட்டின பாவத்துக்காக பொறுமையா உன்கிட்ட பேசிட்டிருக்கேன். உன்னைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியமில்லை. நான் இப்போ சுத்தமாத்தான் இருக்கேன்.

    நிகிதா எகத்தாளமாய் சிரித்தாள்.

    நீங்க சுத்தமா இருக்கிற இலட்சணத்துக்கு ஒரு உதாரணம் சொல்லட்டுமா?

    என்ன சொல்லப் போறே?

    போன வாரம் வெள்ளிக்கிழமை சாயந்தரம் ஆறு மணியிலிருந்து இராத்திரி ஒன்பது மணி வரைக்கும் நீங்க எங்கே இருந்தீங்க...?

    திவாகர் யோசித்து விட்டுச் சொன்னான். ஆபிஸ் வேலையா ஒருத்தரை பார்க்கிறதுக்காக பாப்பநாய்க்கன் பாளையம் வரைக்கும் போயிட்டு வந்தேன்."

    பொய்...

    பொய்யா...?

    "ஆமா... பொய்தான்! நீங்க பாப்பநாய்க்கன் பாளையம் போகலை...

    பின்னே...?

    கே.ஜி. தியேட்டர்ல பாப்கட்டிங் பண்ணிகிட்ட ஒருத்தியோடு உட்கார்ந்து படம் பார்த்தீங்க. உண்டா இல்லையா?

    திவாகரின் முகம் அட்டைக்கரி நிறத்துக்குப் போயிற்று. இதெல்லாம் உனக்கு யார் சொன்னது...?

    யார் சொன்னா உங்களுக்கு என்ன...? பாப் தலைக்காரியோடு சினிமாவுக்கு போனீங்களா இல்லையா...?

    திவாகர்

    Enjoying the preview?
    Page 1 of 1