Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Koodugal Thedi
Koodugal Thedi
Koodugal Thedi
Ebook198 pages1 hour

Koodugal Thedi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரபல வாரப் பத்திரிகைகளில் நான் எழுதிய பல்வேறு சிறுகதைகள், பரிசு பெற்ற கதைகளின் தொகுப்பே கூடுகள் தேடி என்ற இந்த சிறுகதைத் தொகுதி. எந்த ஒரு சூழ்நிலையிலும், மனிதாபிமானம், கருணை என்பதை மறந்து விடக் கூடாது என்பதைத்தான் இதில் வலியுறுத்தி இருக்கிறேன். எத்தனையோ துரோகங்கள், அநியாயங்கள் நமக்கு நேரலாம். ஆனால் நம்மால் யாருக்கும் அது நிகழக் கூடாது என்பதே இதன் அடிப்படை. படிப்பவர் மனதில் சிறு சலனத்தை உண்டு செய்தாலும் அது இந்தத் தொகுப்பிற்குக் கிடைத்த வெற்றி என்றுதான் நான் நினைக்கிறேன்.

Languageதமிழ்
Release dateFeb 24, 2024
ISBN6580101010745
Koodugal Thedi

Read more from Ga Prabha

Related to Koodugal Thedi

Related ebooks

Reviews for Koodugal Thedi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Koodugal Thedi - GA Prabha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கூடுகள் தேடி

    Koodugal Thedi

    Author:

    ஜி.ஏ.பிரபா

    GA Prabha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels

    பொருளடக்கம்

    முன்னுரை

    ஞாபகார்த்தம்.

    தரை தொடும் பறவைகள்

    தோற்(காத)பாவை

    நம்பிக்கை நட்சத்திரம்.

    நன்றி

    பரிவு

    பறக்கத் தெரிந்த பட்டாம்பூச்சிகள்

    மனப்பசி

    மாநிறம்

    முடியும்!

    மெல்லப் புரியுது உன் மனசு.

    பெண்மை

    காதல் யுத்தம்

    கூடுகள் தேடி

    கணக்கு

    தீக்குளிக்கும் நந்தவனங்கள்

    தாய்ப்பொம்மை

    திக்கற்றவர்கள்

    பேரன்பின் பிரியங்களுடன் தமிழ்

    உப்புத் தண்ணீர்.

    முன்னுரை

    இனிய வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்.

    life span ல் கடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பார்க்கும்போது பிரமிப்புதான் ஏற்படுகிறது. ஒரு நல்ல மனுஷியாக வாழ்ந்திருக்கிறோம் என்பதுடன், நல்ல கருத்துள்ள கதைகளை எழுதி இருக்கிறோம் என்ற திருப்தியும், நிறைவு ஏற்படுகிறது.

    எத்தனை பரிசுகள்! பத்திரிகைகள் என்பதுடன், இன்று ஜி ஏ பிரபா என்ற ஒரு எழுத்தாளரையும் அந்தக் கதைகள் உருவாக்கியது. தட்டிக் கொடுத்து, பரிசுகள் கொடுத்து, உற்சாகப் படுத்திய பத்திரிகை ஆசிரியர்கள்தான் நாற்பது வருடம் கழித்தும் என்னை எழுத வைக்கிறார்கள்.

    தொகுப்பாக இந்தக் கதைகள் வரும் இந்த நேரத்தில் இதயம் நனைந்த நன்றியை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் உள்ள கதைகளில் ஒன்று, இரண்டைத் தவிர மற்றவை அனைத்தும் 88-95 களில் வெளியானவை. சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவை.

    என் காலத்துக்குப் பிறகும் இவைகள் என் பெயர் சொல்லும் என்ற நம்பிக்கையில் இச் சிறுகதைகளைத் தொகுத்து ஈ புத்தகமாக வெளியிடுகிறேன்.

    எனக்குப் பிடித்த விதத்தில் அட்டைப் படம், அழகான எழுத்துகள், கண்ணை உறுத்தாத விதத்தில் font என்று சகல விதத்திலும் திருப்தியாக இருக்கிறது புஸ்தகா வெளியிடும் என் புத்தகங்கள். புஸ்தகா நிறுவனத்திற்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும், மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதேபோல் என் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்து உற்சாகப் படுத்தும் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் என் மகிழ்வான நன்றிகள்.

    படியுங்கள். கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் பல சிறப்பான கதைகளை எழுத உற்சாகம் தாருங்கள்.

    நன்றி,

    அன்புடன்,

    ஜி ஏ பிரபா.

    ஞாபகார்த்தம்.

    செய்தி வரும்போது மதியம் மூன்று இருக்கும்.

    கதிரவன் அலுவலகத்துக்கு அண்ணா போன் செய்து அங்கிருந்து அவன் வீட்டுக்கு வந்து சித்ராவை அழைத்துக் கொண்டு கிளம்ப நான்கு மணி ஆகி விட்டது.

    அவளிடம் நேரடியாகச் சொல்லாமல் கிளம்பு என்றான். எப்போதும் அவன் கலகலவென்று பேச மாட்டான். சித்ராவுக்கும் அவனிடம் ஒரு தயக்கம். இன்னும் நெருக்கம் வரவில்லை. இரண்டாவது கணவன். வாழ்க்கை கொடுத்து ஆறு மாதம்தான் ஆகிறது.

    என்ன விஷயம்- அவளுக்குள் இருந்த சந்தேகம் கூர்மையாக வெளிப்பட்டது.

    உங்க அம்மா இறந்துட்டாங்க

    எப்போ- குரல் உடனே உடைந்தது.

    பார்த்தியா இதுக்குத்தான் சொல்றது- கதிரவன் ஆதரவாக தோளைத் தட்டித் தந்தான்.

    ஆனால் அம்மா இறந்தது கூட ஒரு விதத்தில் நல்லதுதான் என்று தோன்றியது சித்ராவுக்கு. அத்தனை அவஸ்தைப்பட்டு விட்டாள் வாழ்க்கையில். எழுபது வயது வாழ்க்கையில் நோய், ஏழ்மை, வெறுப்பு, கஷ்டம்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கை அவளுக்கு துன்பங்களைக் கொண்டு வந்து கடைசியில் நோயும் அவளை உருக்குலைத்து விட்டது.

    அம்மா பார்த்த ஒரே சந்தோஷமான விஷயம் சித்ராவின் மறுமணம்.

    ஆசை ஆசையாய் வளர்த்த பெண். பார்த்து பார்த்து சீர் செய்து மகளை கல்யாணம் செய்து கொடுத்தார். ஆனால் திருமணமான ஒரே வருடத்தில் கணவன் ஆக்சிடெண்டில் இறந்து போக, நொறுங்கிப் போனாள் அம்மா.

    ஆனால் நடப்பது எதுவும் நன்மைக்கே என்று தீர்மானமாக நம்பினாள் அம்மா. வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும். அதற்கு என்ன அர்த்தம் என்று இன்னைக்கு நமக்கு புரியாது. ஆனால் பிற்காலத்தில் நமக்கு எதனால் இது நிகழ்ந்தது என்று புரியும் என்று தீவிரமாக பெண்ணுக்கு மறுமணம் செய்ய மாப்பிள்ளை தேடினார்.

    நாத்தனார், கணவனை இழந்து வந்தது கூட சந்தோஷமாகத்தான் இருந்தது அண்ணிகளுக்கு. இவர்கள்தான் ஆதரவு என்று வேலைகளை இழுத்துப் போட்டு செய்தாள் சித்ரா. சமையல் செய்து, குழந்தைகளை கவனித்து என்று எல்லாம் சித்ராவே கவனிக்க, அவர்களுக்கு வேலை குறைந்து போனது.

    அண்ணாவோடு வெளியில் சுற்ற, அவர்கள் அலுவலகத்துக்கு போனபிறகு பத்திரிக்கை பார்த்துக்கொண்டு, மாடியில் படுத்து தூங்கவும் அவர்களுக்கு சௌகரியமாக இருந்தது...

    ஆனால் அம்மா மட்டும் புலம்பிக்கொண்டே இருந்தாள்.

    எத்தனை நாளைக்குதான் இவர்களுக்கு நீ வேலைக்காரியா இருப்பே? உனக்கு ஒரு வாழ்க்கை வேணும் என்றார். கதிரவன் வந்தான் தன் வாழ்க்கையில். திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகப் போகிறது. இன்னும் அவனை முழுதாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவளிடம் அன்பாகப் பேசுகிறான் நடக்கிறான்... வேண்டியதை கவனித்து வாங்கித் தருகிறான் என்றாலும் முகம் கடுமையாக இருக்கிறது. எந்நேரமும் ஒரு புத்தகத்துடன் ஒதுங்கி இருக்கிறான். குணம் எப்படி, நல்லவனா? கடுமையானவனா என்று அறிய முடியவில்லை.

    மனம் விட்டுப் பேச முடியாமல் ஒரு தயக்கம். தனக்கு வாழ்க்கை கொடுத்தவன் என்ற நன்றி உணர்ச்சி மனதில். என்றாலும் அவளிடம் ஒரு தயக்கம், பயம். எதையும் வாய் விட்டு உரிமையாகக் கேட்க சிறிது தயக்கமாக இருந்தது. அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை என்றதும் அவனே ஒருமுறை அழைத்துப்போனான்.

    அம்மா கையை பிடித்துக்கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். எதுவும் பேச முடியவில்லை. அம்மா ஏதானும் சொல்லிவிடுவாளோ, எதையானும் அம்மாவிடமிருந்து எடுத்துக்கொண்டு போய் விடுவாளோ என்ற பயம் அண்ணாக்களுக்கு. அவளை நகர்த்தி கொண்டு வந்துவிட்டார்கள்.

    அப்பா வாசலில் சாய்ந்தபடி அம்மாவின் பயணம் முடியக் காத்திருந்தார். ஐம்பது வருட வாழ்க்கை. அவ்வளவு சீக்கிரமாக மறக்க முடியுமா? ஆனாலும் அம்மா கழன்று கொண்டு போய்விட்டார். அண்ணா அண்ணிகளின் உதாசீனம், நோய் எல்லாவற்றிலிருந்தும் விடுதலைதான். ஆனால் இருக்கும் மனிதர்களின் நிலை. தன் கவசமாய் இருந்த அம்மா போன பின் அப்பாவின் நிலை என்ன? அவருக்கு உண்டான மரியாதை கிடைக்குமா?" சித்ரா தனக்குள் மருகினாள்.

    அம்மா அடக்கம் முடிந்த இரண்டாம் நாளே சொத்து பிரிப்பதில் தகராறு வந்து விட்டது. எனக்கு வீடு, உனக்கு நகை, இடம் எனக்கு என்று ஆளாளுக்கு சண்டை போட்டுக் கொண்டார்களே தவிர எல்லாரையும் ஒரு வெற்றுப் பார்வை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த அப்பாவை பற்றி யாரும் நினைக்கவில்லை. அண்ணி கூப்பிட்டு

    உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோ. நாளைக்கு அது தரல, இது தரலைன்னு சொல்லக்கூடாது

    அவள் கதிரவன் முகத்தைப் பார்த்தாள்.

    உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோ- கதிரவன்.

    மனது ஒரு நிமிஷம் கசந்து போனது. நீயும் சராசரிதானா என்ற நினைப்போடு அவள் மௌனமாக நின்றாள்...

    உனக்கு ரெண்டு கல்யாணத்துக்கும் அம்மா நகை போட்டு கல்யாணம் செஞ்சா. அதனால உனக்கு எதுவும் தர வேண்டியது இல்லை.- பெரிய அண்ணி.

    அண்ணிகள இருவருக்கும் தங்கள அப்பா நிறைய பவுன் போட்டு பைக் வாங்கிக் கொடுத்து கல்யாணம் செய்து கொடுத்தார்கள என்று கர்வம் உண்டு. அந்த அளவுக்கு சித்ராவுக்குச் செய்ய வசதி இல்லை. அண்ணாக்களும் சித்ரா திருமணத்தில் பங்கு எடுக்கவில்லை. என் குடும்பம், என்று மனைவியின் கண் அசைவில் ஒதுங்கி விட்டார்கள்.

    முதல் கல்யாணத்திற்கு போட்ட பத்து பவுனை அப்படியே இரண்டாவது திருமணத்திற்குப் போட்டது. கோவிலில்தான் திருமணம். அண்ணாக்கள் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இருவருக்கும் அரசு வேலை. அந்த கர்வம் அண்ணிகளிடம் தெரியும். ஆனால் அதற்கு அப்பா தன் ஒரே சொத்தாய் இந்த வீட்டை அடமானம் வைத்து பணம் கொடுத்தார் என்பது மறைக்கப்பட்ட உண்மை.

    அப்பா, அப்பா எங்கே? சித்ராவின் கண்கள் தேடியது.

    அப்பா எப்போதும் அமைதி, கண்ணியம். நேர்மையானவர். மூன்று குழந்தைகளை நன்றாகப் படிக்க வைத்து, நல்ல வேலையில் அமர்த்தினார். தனக்கென்று எதையும் வைத்துக் கொண்டதில்லை. வாழும் நாள் எல்லாம் பிள்ளைகள் நலனே என்று உழைத்தவர். யாரிடமும் எதுவும் எதிர்பார்த்து நின்றதில்லை.

    அம்மா அவரின் கவசம். அவரின் குரலாக அம்மா. அவள் சிந்தனை என்றால் அப்பா செயல். அப்பாவின் சம்பளத்தில் எளிமையாக, சிக்கனமாக வாழ்ந்து சேமித்து குழந்தைகளை ஆளாக்கியவள் அம்மா. இனி அப்பா இவர்களிடம் எப்படிக் காலம் தள்ளுவார்? அவள் ஒரு வேதனையோடு அப்பாவை பார்த்தாள். அப்பா கண்மூடிப் படுத்திருந்தார்.

    சாப்பிடுறீங்களா அப்பா- அருகில் நெருங்கிக் கேட்டாள்.

    அப்பா கண்திறந்து பார்த்தார் இல்லம்மா கொஞ்சம் நேரம் போகட்டும்

    எல்லாம் பிரிச்சாச்சா? என்று கேட்டவர் நீ அம்மாவோட நகைகளையும் வெள்ளிப் பாத்திரங்களையும் எடுத்துக்கோ- என்றார்.

    எனக்கு எதுக்குப்பா

    இல்லம்மா. நீ இரண்டாவது திருமணம் செஞ்சிருக்க. அவன் எப்படி என்னன்னு தெரியாது. நாளைக்கு நீ என்ன கொண்டு வந்தேன்னு உன்னை கேவலம் பண்ணிட்டான்னா உனக்கு வேற போக்கிடம் இல்லை. உங்க அண்ணா அண்ணி எல்லாம் உன்ன வச்சு பார்ப்பார்கள்னு சொல்ல முடியாது. –அப்பா எழுந்து உள்ளே வந்தார்.

    சித்ராவுக்கு என்னப்பா தர போறீங்க?

    அவளுக்குத்தான் நகை போட்டு ரெண்டு தடவை கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்குல்ல?- சின்ன அண்ணா கேலியில் மனம் சுருண்டது. கதிரவன் எதுவும் பேசாமல் கை கட்டியபடி நின்றதும் அவளுக்கு வருத்தமாக இருந்தது.

    இருந்தாலும் அவ இந்த வீட்டுப்பெண். அம்மா கடைசியில் போட்டிருந்த நகையும், வெள்ளிப் பாத்திரங்களும் அவளுக்குத்தான்

    அது எப்படி? கல்யாணம் பண்ணிக் கொடுத்த பிறகு அந்த வீட்டில் உரிமை கிடையாது- பெரிய அண்ணி துள்ளி வந்தாள்.

    அப்பா இனி நீ உன் இஷ்டத்துக்கு நடக்கக்கூடாது. எங்களுடைய இஷ்டம் என்னவோ அதுக்குத்தான் அனுசரிச்சுப் போகணும். அம்மா இருந்த வரைக்கும் நீ ஆடின ஆட்டம் வேற. இப்ப வேற.- சின்ன அண்ணா பேச்சில் அப்பா சட்டென்று அடிபட்டார். முகம் வாட சித்ராவைப் பார்த்தார்.

    பரவாயில்லப்பா. அண்ணா சொல்றது கரெக்ட்தானே. ஒரு விதத்தில் அண்ணாக்கள் எல்லாம் தன்னுடைய மனைவிமார்களை பணத்துக்கு ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க ஆனா நீங்க எனக்கு ஒரு நல்லவரை கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க அதுதான் முக்கியம்.- சித்ரா அமைதியாகப் பேசினாள்.

    இல்லை, எனக்கு ஒரு பொருள் வேண்டும் அம்மா சொத்துன்னு- கதிரவன் குறுக்கிட்டான்.

    என்ன?- -- என்ன பொருள் வேண்டும்?பெரிய அண்ணாவிடம் ஒரு பயம் தெரிந்தது. வீடு கேட்பானோ? பின்னாடி இடமிருக்கிறது. எல்லாமே அப்பா சேர்த்தது. அதை எல்லாம் கேட்பானோ? பயத்துடன் பார்த்தார்கள்.

    ஆனால் கதிரவன் நிதானமாகக் கேட்டான்.

    சித்ராவுக்கு என்ன தர போறீங்க?

    இரண்டு வெள்ளி குத்துவிளக்கு மட்டும்தான். அண்ணி.

    ரொம்ப நல்லது. எனக்கு அதில் விருப்பமில்லை. நீங்களே அதை வச்சுக்குங்க-கதிரவன் குரலில் சற்று அதிர்ந்து போனாள்.

    கடவுளே! என்ன கேட்கப் போகிறான்? கலவரத்தோடு அவனையே பார்த்தாள்.

    நீங்க கொடுத்ததெல்லாம் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். மனிதர்களை காசு பணத்தைக் கொண்டு எடைபோடக்கூடாது. மரணத்திற்கு முன் இதற்கு அர்த்தமில்லை. ஒரு உயிர் போய்விட்டது. அது எதையும் கொண்டு வரவும் இல்லை. கொண்டு போகவும் இல்லை. இந்த பூமியில் தேடி அடைந்ததை இந்த பூமியிலேயே உதறி விட்டு சென்றுவிட்டது. அதான் உண்மை. நிஜம். வாழ்க்கையிலேயே மிக உயர்ந்த சொத்து என்பது பெற்றவர்கள்தான். ஒவ்வொரு நிமிடமும் அவர்களோடு இருந்து அவர்களின் உணர்வுகளையும், ஆசைகளையும், எண்ணங்களையும், மதிப்பு மரியாதையுடன் நடத்தனும்- கதிரவன் நிதானமாகப் பேசினான்.

    பெத்தவனை நிம்மதியாக சந்தோஷமாக வாழ வைக்கணும். அது அவருக்கு நாம் செலுத்தற நன்றிக் கடன். அதுதான் நாம் மனிதனாக பிறந்ததற்கு அடையாளம்.

    என்றவன் "அம்மாவின் ஞாபகார்த்தமா நான் அப்பாவை என்கூட அழைச்சுக்கிட்டுப் போறேன். விலை மதிப்பில்லாத

    Enjoying the preview?
    Page 1 of 1