Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadaisi Kodu
Kadaisi Kodu
Kadaisi Kodu
Ebook197 pages1 hour

Kadaisi Kodu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு தேசத்தின் முகவரி அதன் வரைபடம். இன்றைக்கு அதைத் தயாரிக்க வளர்ந்த தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. வரைபடம் தயாரிப்பதற்காகவே படங்கள் எடுக்கும் விசேஷ காமிராக்கள் பொருத்தப்பட்ட விமானங்கள், விண்ணிலிருந்து படமெடுத்து வினாடிகளில் அனுப்ப செயற்கைக் கோள்கள், அந்த விபரங்களை சரிபார்ப்பதற்கென்றே தயாரிக்கப்பட்ட மென்பொருளுடன் தரையில் காத்திருக்கும் கணணி எனப் பல வசதிகளுடன் மேப்கள் தயாரிப்பது என்பது தனியொரு இயலாகவே வளர்ந்திருக்கிறது.
காடுகளிலும், மலைகளிலும், சிறிய கிராமங்களிலும், நதிகளிலும், ஆபத்தான இடங்களிலிருந்தும் அளவுகளைக் குறித்து, கணக்கிட்டு, சரிபார்த்து இந்த வரைபடத்தை தயாரித்து முடிப்பதற்குள் இந்தப் பணியில் பலியானவர்களின் எண்ணிக்கை அந்த காலகட்டத்தில் நடந்த எந்த ஒரு போரைவிடவும் அதிகம். நீண்ட அந்த சர்வே பணியின் இறுதியில் வரைபடத்தின் கடைசிக் கோடு முடிந்த இடம் இமயத்தின் பாதம். "அறிவியல் வரலாற்றிலேயே மேற்கொள்ளப்பட்ட மிகப் பிரமாண்டமான, பிரமிப்பான பயணம்" என புவியியல் ஆய்வாளர்களால் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இந்த நீண்ட நெடும்பயணத்தின் முடிவில் கிடைத்தது, இந்திய தேசத்தின் வரைபடம் மட்டுமில்லை. உலகின் மிக உயர்ந்த மலைச்சிகரம் இந்தியாவில் இமயமலைப் பகுதியில் இருப்பது என்பதையும்தான். அந்த மலைகளில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் உயர்ந்த சிகரத்திற்கு ஏன் எவரெஸ்ட் என்று பெயரிடப்பட்டது என்பதற்கான காரணத்தை அறியும்போது நம் நெஞ்சம் நெகிழ்வது நிஜம்.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580138606229
Kadaisi Kodu

Read more from V. Ramanan

Related to Kadaisi Kodu

Related ebooks

Reviews for Kadaisi Kodu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadaisi Kodu - V. Ramanan

    http://www.pustaka.co.in

    கடைசிக் கோடு

    Kadaisi Kodu

    Author:

    வி. ரமணன்

    V. Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author//v-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆச்சரியங்களின் பொக்கிஷம்

    பயணத்தின் முடிவில்

    1. வெள்ளைக் கூடாரமும் மஞ்சள் கொடியும்

    2. முதல் கோடு

    3. கேப்டனின் கனவு

    4. தெய்வச் செய்தி

    5. ஆதிவாசிகளிடம் கற்ற அறிவியல்

    6. தமிழ் நாட்டு காதலி

    7. தஞ்சை பெரிய கோயிலில் நடந்தது

    8. நெளிந்த சக்கரமும் உடைந்த மனமும்

    9. விருதுகளும் விரிந்த பணிகளின் எல்லைகளும்

    10. எதிர்பாராமல் வந்த எவரெஸ்ட்

    11. யானை கற்றுக் கொடுத்த பாடம்

    12. ஒரு கற்பனைக் கோட்டின் விலை பதினைந்து உயிர்கள்

    13. கட்டடங்களின் ஜெயிலில் இந்தியா

    14. விளக்கொளியில் படித்த செய்தி

    15. எங்கள் வாழ்நாள் சாதனை

    16. நடுவில் நின்று போன நடுக்கோடு

    17. மேதையை தொடர்ந்த பிடிவாதமான கெட்டிக்காரன்

    18. கடைசிக் கோட்டின் முதல் அடி

    19. வெள்ளிப் பனிமலை சொன்ன ரகசியம்

    20. நிச்சயமாக இது தானா?

    21. குரு பக்தியின் இமயம்

    22. இந்தியாவின் முகவரி

    இந்த படைப்பை உருவாக்க உதவிய குறிப்புகளும் புத்தகங்களும்:

    ஆச்சரியங்களின் பொக்கிஷம்

    சென்னையின் புறநகர்ப் பகுதியொன்றில் இருந்தது அந்தக் குடியிருப்பு. நண்பர் ஒருவரைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தோம். முன்னர் அந்தப் பகுதிக்கு ஒருபோதும் போனதில்லை. ஆனால் கையில் முகவரி இருக்கிறது, கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையோடுதான் புறப்பட்டோம். மதுரைக்காரர்கள் சொல்வார்களே 'வாயிலிருக்கு வழி' என்று, அந்தத் துணிச்சல் வேறு.

    ஆனால் அந்தப் புறநகர் பகுதியைக் கண்டுபிடிக்கவே சற்று திணறிவிட்டோம். வண்டி ஓட்டிக் கொண்டு வந்த நண்பர் நவீன யுகத்து யுவன், வார்த்தையாவது வழியாவது, எல்லாம் இந்தக் கணினி சொல்லும். கூகிளாண்டவர் இருக்கையில் என்ன கவலை என்று தனது ஸ்மார்ட் போனை எடுத்து தனக்கு முன் நிறுத்திக் கொண்டார். கணினி அவரைக் கைவிடவில்லை. ஆனாலும் கலாசாரம் கொஞ்சம் திணற அடித்துத்தான் விட்டது. நம்மூரில் ஒரு பிள்ளையார் கோயில் தெருதானா? ஒரு அண்ணா நகர்தானா?

    இன்று தொழில்நுட்பம் எத்தனையோ விஷயங்களுக்குத் தீர்வு கண்டுவிட்டது. அதில் வரைபடமும் ஒன்று. ஆனால் இரு நூற்றாண்டுகளுக்கு முன் அது அத்தனை எளிதான காரியம் அல்ல. காரணம் அதற்கான கருவிகள் கிடையாது. அதற்கான அவசியம் கூட உணரப்படாத காலம் அது. அதுவும் தவிர இந்தியா போன்ற கடலும் மலையும் நதியும் வனமும் பாலையும் பட்டிணமும் கொண்ட ஒரு தேசத்தை அளந்து வரைபடம் தயாரிப்பதைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.

    ஆனால் அதைக் கனவு கண்டான் ஒரு இளைஞன். போரில் தோற்று போர்க் கைதியாக அமெரிக்காவில் அடைபட்டுக் கிடந்த ஒரு ஆங்கிலேயன். அவன் வந்து இந்தியாவை அடி அடியாக (உண்மையிலேயே நூறு நூறு அடியாக) அளக்க நேர்ந்தது வரலாற்றின் ஆச்சரியங்களில் ஒன்று.

    அது மட்டும்தானா?

    இந்தியாவை அளப்பதற்கான முதல் நடவடிக்கை இங்கே சென்னை கடற்கரையில்தான் துவங்கியது.

    இந்த அளவைதான் இமயத்தின் உயரமான சிகரம் எவரெஸ்ட் என்பதை உலகிற்குச் சொன்னது.

    எத்தனையோ சிகரங்களை அளந்த அந்தக் கருவி தஞ்சைப் பெரிய கோவில் மீது ஏறிய போது உடைந்து கீழே சிதறியது.

    அதைச் செப்பனிட்டுக் கொடுத்தவர்கள் திருச்சி பொன்மலைத் தொழிலாளர்கள்.

    அந்த இளைஞன் மணந்தது ஒரு தமிழ்ப் பெண்ணை.

    இத்தனை அதிசயங்களும் பொதிந்துக் கிடக்கிற ஒரு 40 ஆண்டு பயணத்தைச் சுவைபட ஒரு நாவலைப் போலச் சொல்லும் நூல் இது. சரளமான நடை, கணிதத்தைக்கூடக் கதை போலச் சொல்கிறார் இதன் ஆசிரியர் ரமணன். அதன் சுவை எனக்குப் பிடிக்கிறது. எல்லாருக்கும் பிடிக்கும். ஆனால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஏனெனில் எழுதிப் பழகிய கை அது.

    என்னை பிரமிப்பில் ஆழ்த்திய விஷயம் ஒன்றுண்டு. பத்திக்குப் பத்தி தகவல்கள் பொதிந்து கிடக்கும் பொக்கிஷம் இந்த நூல். இந்தத் தகவல்களைத் திரட்ட, திரட்டியதை கோர்வைப்படுத்த, கோர்வைப்படுத்தியதைச் சரிபார்க்க சற்றும் சளைக்காத உழைப்புத் தேவை. அந்த உழைப்பு என்னை ஆச்சரியப்படுத்துகிறது.

    இதற்குச் செலவிட்ட உழைப்பில் ஒரு நாவல் எழுதிவிடலாம். அது பெயரையும் பொருளையும் கூட கொண்டு வந்து கொடுக்கும். ஆனால் ரமணன் அதைச் செய்வதில்லை. அவரது மனம் புதுமையை விரும்புகிற மனம். தமிழில் சொல்லப்படாத செய்திகளை இங்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பது அவர் ஆசைகளில் ஒன்று, அதற்குக் காரணம் அத்தகைய முயற்சிகள் தமிழுக்கு வளம் சேர்க்கும் என்பது மட்டுமல்ல. அவை வாசிப்பவர்களின் அறிவைப் பெருக்கும்; இதைப் போல நாமும் செய்து பார்க்க வேண்டும் என மனதில் எழுச்சியூட்டும் என்பதும்கூட அதன் பின்னுள்ள நோக்கம்.

    ரமணனின் அந்த நோக்கம் இந்த நூலில் முழுமையாக நிறைவேறி இருக்கிறது. வாழ்த்துகள்!

    இது போன்று இன்னும் சொல்லப்படாத செய்திகளைச் சொல்லும் பல நூல்களை ரமணன் தர வேண்டும். அது தமிழ் வாசகனை புதிய உலகங்களுக்கு இட்டுச் செல்லும். அதற்காகக் காத்திருப்போம்.

    மெய்யான தவங்கள் பொய்யானதில்லை.

    மாலன்

    பயணத்தின் முடிவில்

    ஒரு தேசத்தின் முகவரி அதன் வரைபடம். இன்றைக்கு அதைத் தயாரிக்க வளர்ந்த தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. வரைபடம் தயாரிப்பதற்காகவே படங்கள் எடுக்கும் விசேஷ காமிராக்கள் பொருத்தப்பட்ட விமானங்கள், விண்ணிலிருந்து படமெடுத்து வினாடிகளில் அனுப்ப செயற்கைக் கோள்கள், அந்த விபரங்களை சரிபார்ப்பதற்கென்றே தயாரிக்கப்பட்ட மென்பொருளுடன் தரையில் காத்திருக்கும் கணணி எனப் பல வசதிகளுடன் மேப்கள் தயாரிப்பது என்பது தனியொரு இயலாகவே வளர்ந்திருக்கிறது.

    ஆனால் இந்திய தேசத்தின் முதல் சரியான வரைபடம் உருவான காலத்தில் இந்த வசதிகளை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. 1800ஆம் ஆண்டு துவங்கி 40 ஆண்டுகள் போராட்டமான நீண்ட 1600 மைல் பயணத்தில் சுட்டெரிக்கும் வெயில், கடும் மழை, வெள்ளம் புயல் போன்ற பெரும் இயற்கையின் சீற்றங்களுடன் போராடி, விஷக் காய்ச்சல், மலேரியா போன்ற நோய்களினால் நேர்ந்த பல ஆயிரக்கணக்கான உழைப்பாளர்களின் மரணம்.

    அதிகார வர்க்கத்தின் ஆணவம், மக்கள் எதிர்ப்பு போன்ற சவால்களுடனும் போராடி, அங்குலம் பிசகாமல் மிகுந்த கவனத்துடன் நாட்டின் நீள, அகலங்களை அளந்து தயாரிக்கப்பட்டிருக்கிறது நமது இந்திய தேசத்தின் முதல் வரைபடம்.

    காடுகளிலும், மலைகளிலும், சிறிய கிராமங்களிலும், நதிகளிலும், ஆபத்தான இடங்களிலிருந்தும் அளவுகளைக் குறித்து, கணக்கிட்டு, சரிபார்த்து இந்த வரைபடத்தை தயாரித்து முடிப்பதற்குள் இந்தப் பணியில் பலியானவர்களின் எண்ணிக்கை அந்த காலகட்டத்தில் நடந்த எந்த ஒரு போரைவிடவும் அதிகம். நீண்ட அந்த சர்வே பணியின் இறுதியில் வரைபடத்தின் கடைசிக் கோடு முடிந்த இடம் இமயத்தின் பாதம். அறிவியல் வரலாற்றிலேயே மேற்கொள்ளப்பட்ட மிகப் பிரமாண்டமான, பிரமிப்பான பயணம் என புவியியல் ஆய்வாளர்களால் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இந்த நீண்ட நெடும்பயணத்தின் முடிவில் கிடைத்தது, இந்திய தேசத்தின் வரைபடம் மட்டுமில்லை. உலகின் மிக உயர்ந்த மலைச்சிகரம் இந்தியாவில் இமயமலைப் பகுதியில் இருப்பது என்பதையும்தான். அந்த மலைகளில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் உயர்ந்த சிகரத்திற்கு ஏன் எவரெஸ்ட் என்று பெயரிடப்பட்டது என்பதற்கான காரணத்தை அறியும்போது நம் நெஞ்சம் நெகிழ்வது நிஜம்.

    ரமணன்

    1. வெள்ளைக் கூடாரமும் மஞ்சள் கொடியும்

    தொலைவிலிருக்கும் கருநீலவண்ண கடலே சிறிதாகத் தோன்றுமளவிற்கு பெரியதாக, உருக்கிய வெள்ளியாக ஒளிரும் வெண்மணல் வெள்ளமாக பரந்து விரிந்திருக்கும் அந்த மதராஸ் பட்டண கடற்கரையில் கப்பலில் வரும் ஐஸ் கட்டிகளை வைக்கும் பண்டகசாலைக்கு நேரே பளிச்சென்று தெரிகிறது புதிதாக முளைத்திருக்கும் வெள்ளைக் கூடாரம். அதன்மீது படபடக்கும் முக்கோண வடிவ மஞ்சள் கொடி. விபரம் தெரிந்தவர்களுக்கு அது ஒரு சர்வேயரின் கூடாரம் என்பதை உணர்த்தியதால், என்ன சர்வே என்ற ஆச்சரியத்தையும், மற்றவர்களுக்கு 'ஒரு வெள்ளைக்காரன் ஏதோ செய்கிறான்' என்ற சந்தேகத்தையும் எழுப்பிக் கொண்டிருந்தது. வெள்ளைக்கார அரசு அதிகாரிகள் மட்டுமே வசிக்க அனுமதிக்கப் பட்ட அந்த கடற்கரை சாலையில் கம்பீரமான குதிரைகளில் ராணுவ உடையில் சிலரும் பளபளக்கும் ஒரு சில சாரட்களும் சென்றுக் கொண்டிருந்தன.

    முதல் சுதந்திர போர் என்று தவறாக வர்ணிக்கப்பட்ட சிப்பாய்க் கலகம் எழுவதற்கு 60 ஆண்டுகளுக்கு முன் 1800களில், சென்னபட்டணம் மதராஸ பட்டணமாகியிருந்தது. ஈஸ்ட் இந்தியா வியாபார கம்பெனி விதித்த விதை அரசியல் விருட்சமாக வடிவெடுத்து இங்கிலாந்தின் ஆதிக்கம் இந்தியாவில் வேருன்ற துவங்கியிருந்த காலம் அது. கலகத்தாவில் தலைநகருடன் துவக்கப்பட்டிருந்த ஆங்கிலேய ஆட்சிப் பீடம் தனது அதிகார எல்லைகளை விரிவாக்கி கொண்டிருந்த அந்த கால கட்டத்தில் மதராஸ் பட்டணம் மிக முக்கியமான, ஒரு சக்தி வாய்ந்த நகரமாகயிருந்தது. முழு தென் இந்தியாவின் தலைநகர் என்ற அந்தஸ்து பெற்றிருந்த அந்த நகரத்தின் பெயராலேயே மெட்ராஸ் பிரசிடென்ஸி என்று தென்னிந்தியா அறியப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் அரசின் பிரநிதியாக நியமிக்கப்பட்டிருந்த பிரஸிடெண்ட்கள் என்ற பதவி கவர்னர்களாக மாற்றப்பட்டு நிர்வாகத்தில் திறமைசாலிகளான அதிகாரிகள் நியமிக்கப்பட்ட காலம் அது.

    கடற்கரைச் சாலையில் வியாபாரத்திற்காக பண்டகசாலையாகத் துவக்கப்பட்ட இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன் பாண்டிச்சேரி வரை வந்துவிட்டிருந்த பிரெஞ்ச் படைகளுடன் போரிட வேண்டியிருக்கும் என முன்னேற்பாடாக உருவாக்கப்பட்ட கோட்டையின் முகப்பில் பிரிட்டிஷ் அரசின் யூனியன் ஜாக் பறக்கிறது. பளபளக்கும் முகப்பு பீரங்கிகளும் பளிச்சிடும் சுத்தமும் ராணுவத்திண் பராமரிப்பை பறைசாற்றுகிறது கவர்னரின் அலுவலகம். கவர்னர் இன்னும் வரவில்லை.

    வரவேற்பு அறையில் முழு ராணுவ உடையில் காத்திருக்கிறார் கேப்டன் வில்லியம் லாம்டன். கடந்த வாரம் வரை மைசூரில் பிரிட்டிஷ் ராணுவ பணியில் இருந்தவர். திப்பு சுல்தானுடன் நடந்த போரில் முக்கிய பணியாற்றியவர். இப்போது சிவிலியன் பணியாக சர்வேயர் பதவி ஏற்க மதராஸ் பட்டணம் வந்திருப்பவர்.

    கோட்டையின் முன்னால் இருக்கும் அகழியைக் கடக்கப் போடப்பட்டிருக்கும் மரப்பாலத்திலிருந்து கேட்கும் குதிரைகளின் குளம்புகளின் படபட ஓசையும், அதன்மீது அமர்ந்திருக்கும் வீரர்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1