Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rali & Thamizh Inbam - Nov 2016
Rali & Thamizh Inbam - Nov 2016
Rali & Thamizh Inbam - Nov 2016
Ebook80 pages29 minutes

Rali & Thamizh Inbam - Nov 2016

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல். 

 

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

 

உங்களுக்காக சில துளிகள்  (Excerpts):

 

" சுமந்து விறகுவிற்றாற் போல்மண் பிறர்போல்
  சுமந்து உழைத்தாலேன் பட்டிருப்போம் நாங்கள்
  உமக்காகப் பட்ட அடி "

 

" வாழ்ந்த பின்னர் வாழ்விலென்ன எஞ்சிடும் சாரம் 
  வசந்தகாலம் நோக்கிநிற்கும் ஒருதுளி ஈரம் "

 

" அம்பும் அதையெய் தவனும் தனதுடம்பில்
  அம்புதைத் தோனும் அவன்வலியும் எல்லாமே
  ஒன்றே "

 

" பரியோ நரியோ உரியோன் ஒருவன்
  சரியோ தவறோ அறியார் எவரும் "

 

" ஒருஎண்ணம் பின்வரும் எண்ணம் இவற்றுள்
  ஒருஎண்ணம் இல்லா இடைவெளியில் உள்ள 
  ஒருஉண்மை காண்பது நன்று "

 

" புரியா தெளிதில் அவன்செய்கை ஆனால்
  சரியல்ல தாகாதெந் நாளும்  "

Languageதமிழ்
Release dateJul 8, 2020
ISBN9781393655763
Rali & Thamizh Inbam - Nov 2016
Author

V Kalyanaraman

இலக்கிய ஈடுபாடு கொண்ட நிறுவன அதிகாரி A known name in Property Development space in Chennai, contributing to iconic projects such as “Spencer Plaza”, “Olympia Technology Park”.  Held many senior positions including President & CEO of Khivraj Group, CEO of “Serene Senior Living”, developing retirement communities.

Read more from V Kalyanaraman

Related to Rali & Thamizh Inbam - Nov 2016

Related ebooks

Related categories

Reviews for Rali & Thamizh Inbam - Nov 2016

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rali & Thamizh Inbam - Nov 2016 - V Kalyanaraman

    Published by:

    Rali & Thamizh Inbam

    22/26 Third Main Road

    Nanganallur Chennai 600061

    All rights reserved

    முன்னுரை

    வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்

    வாழிய பாரத மணித்திரு நாடு

    மரபுக் கவிதைக்குரிய இலக்கணம், சந்தங்கள் இவற்றிற்கு முன்னுரிமை இன்றி, பொருள் வெளிப்பாட்டுக்கு முன்னுரிமை தந்து எழுதப்படும் தற்காலக் கவிதைகளுக்கு நடுவே, கருத்தை வெளிப்படுத்துவதை முடிந்தவரை இலக்கண விதிகளுக்குட்பட்டு, சந்தம், ஓசைநயம் இவற்றுடன் சேர்ந்த படைப்புகளாகச் செய்யும் ஆவலால் விளைந்ததே இக்கவிதைத் தொகுப்பு.

    தமிழ் இலக்கியத்தில், பக்தி இலக்கியத்தைச் சார்ந்து, பாட்டுடைத் தலைவனாம் இறைவனை பல்வேறு வடிவங்களில் பாட்டிடை வைத்துப் படைக்கப்பட்ட கவிதைகள் பெருமளவில் இங்கு இடம் பெற்றுள்ளன.

    இவை தவிர, இயற்கை, நாட்டு நடப்பு போன்ற கருத்துக்களைக் கொண்ட ஓரிரு  பொதுக் கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

    தமிழின்பம் நுகர்வதற்கு அழைக்கிறோம்.

    ––––––––

    நன்றி.

    தமிழின்பக் குழு.

    ––––––––

    இப்பதிப்பில் கீழ்க்கண்டோரின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

    V. கல்யாணராமன் (VKR)

    P. இராமலிங்கம் (ராலி)

    B. K. இராசகோபாலன் (BKR)

    S. K. சந்திரசேகரன் (SKC)

    S. இராமமூர்த்தி (பித்தன்)

    S. சுரேஷ்

    குறிப்பு:

    WhatsApp-பில் இடம் பெறும் எங்கள் தமிழ்க் கவிதை Group-ல் இருந்து

    2016  நவம்பர் மாதம் வெளிவந்த கவிதைகளை அப்படியே எடுத்துக் கீழே தந்திருக்கிறோம். பெரிதாக format எதுவும் பண்ணவில்லை

    அணிந்துரை

    ஹரிப்ரியன்

    ––––––––

    ஒரு கருத்து உருவாகும்போது அது விதையாகி விருட்சமாய் வளர்கிறது. அதுவே ஆயிரம் விதைகளாக இருந்தால் பல விருட்சங்களாய் உருமாறி நிழல் தந்து மகிழ்வு தரும். இந்தக் கவிதைப் பதிவுகளும் அவ்வகையைச் சார்ந்தனவே.

    இப்பதிவுகள் நம்மை பக்திப் பரிமாணத்தில் ஒரு புதிய பாதையில் இட்டுச் செல்கின்றன.

    இளவயதுத் தோழர்கள் பல துறைகளில் சென்று பின் ஒன்றிணைந்து தமிழை ஆர்வத்துடன் முன்னெடுத்துச் செல்வது ஆச்சரியமான விஷயமாகவே இருக்கிறது. பக்தி இலக்கியங்களிலும் தமிழிலும் மிகுந்த ஈடுபாடு இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகக் கூடியது.

    ஆநிரை அண்ணலும் ஆலவாய் அழகனும் இவர்களது கவிதை சாகரத்தில் திளைத்து மூழ்கிக் கிடக்கிறார்கள்.

    இவற்றை வெறும் மின்பதிவுகளாக மட்டுமன்றி நூல் வடிவிலும் கொண்டு வர  வேண்டிய கடமையும் இந்தக் குழுவிற்கு இருக்கிறது. அத்தகைய புத்தம் புதிய புத்தகங்களை புரட்டிப் பார்க்கும் ஆவல் கொண்ட இளைய தலைமுறையினர் நிறையப் பேர் இருக்கும் சாத்தியக் கூறும் உண்டு.

    நடந்து முடிந்த புத்தகத் திருவிழாக்களில் ஜவ்வரிசி வடாம் பிழிவது எப்படி? என்ற புத்தகம்தான் அதிக அளவில் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது எனும் பேருண்மை இந்த கவிதைப் பதிவுகள் நூல்களாக வெளியிடப்படுவதன் மூலம் நிச்சயமாக முறியடிக்கப்படலாம்.

    முந்நூறாவது முறையாக ஸ்டிக்கர் பொட்டும், கோல டிசைன்களும் வாங்கி மகிழும் பெண்மணிகள் இந்தப் பதிவில் உள்ள பதினெட்டாவது வெண்பாவை தினம் பாராயணம் செய்து வருவதன் மூலம் ஈசனின் அருள்பெறலாம்.

    ––––––––

    குறிப்பு:

    ஹரிப்ரியன் - காசோலையில் பயணித்து (ஓய்வு பெற்ற வங்கி உதவிப் பொது மேலாளர்) பின்பு ஈசனைப் பாடத் துணிந்தவர்

    NOV 2016

    11/2/16 - Rali Panchanatham: ராலியின் வெண்பா #126:

    தம்பிரான் தோழருக்குத் தோழர் நடமாடும்

    எம்பிரான் காற்சலங்கை ஓசை தினம்கேட்பார்

    நம்மலை நாட்டுத் திருச்சேர மான்பெருமாள்

    நம்பியவுன் பாதம் சரண்.

    (சேரமான் பெருமாள் நாயனார் பற்றி)

    குறிப்பு: தம்பிரான் தோழர் = சுந்தரர்

    11/2/16 - Rali Panchanatham: @BKR Agreed. No eternal punishment in our religion and so the statement is more relevant to Christianity.

    But it is interesting, as it kind of applies to all nonbelievers.

    11/2/16 - Rali Panchanatham: ராலியின் வெண்பா #127:

    உன்னை நினைந்தழுது உன்னடிமை நானென்று

    சொன்ன அடியார் பலர்கண்டு நீசலித்தாய்

    பொன்கொடு பெண்கொடு என்றடம் செய்திட்ட

    வன்தொண்டர் சுந்தரர் செய்கை ரசித்தாய்நான்

    பொன்பெண்மண் கேட்பேன் ரசி.

    11/2/16 - B K Rajagopalan: It does not apply to non believers too, since even the only known

    Enjoying the preview?
    Page 1 of 1