Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rali & Thamizh Inbam - Jun 2017: Rali & Thamizh Inbam
Rali & Thamizh Inbam - Jun 2017: Rali & Thamizh Inbam
Rali & Thamizh Inbam - Jun 2017: Rali & Thamizh Inbam
Ebook150 pages45 minutes

Rali & Thamizh Inbam - Jun 2017: Rali & Thamizh Inbam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

 

WhatsApp got together six very different people with a common passion for expressing their thoughts in Tamil poetry, using knowledge gained only during their school days, decades ago.

 

A portion of their attempts form this book. Many of the poems highlight the greatness of God Almighty but there are also verses covering social topics.  All verses are rich in their expression and content. A good number of verses belong to Venpa - a traditional poetical genre framed using strict grammatical rules. The others have been rendered with prosodic features. The book is sure to inspire readers, including the younger generation, and show them the beauty, richness, depth and intricacies of Tamil.

 

Contents not only include the Authors' individual topics but also interesting debates in poetical form titled as "Kavithai Pokkuvaraththu' (poetical exchanges). These exchanges throw a new perspective on historical incidents and day-to-day life. They are thought provoking and have an enthralling effect on the reader.

 

Take a walk with the authors along lanes forgotten, and discover a world of knowledge through the lens of beautiful Tamil.

Languageதமிழ்
Release dateMay 21, 2020
ISBN9781393616443
Rali & Thamizh Inbam - Jun 2017: Rali & Thamizh Inbam

Related to Rali & Thamizh Inbam - Jun 2017

Related ebooks

Related categories

Reviews for Rali & Thamizh Inbam - Jun 2017

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rali & Thamizh Inbam - Jun 2017 - Rali

    June 2017

    Published by:

    Rali & Thamizh Inbam

    22/26 Third Main Road

    Nanganallur Chennai 600061

    All rights reserved

    முன்னுரை

    யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்

    இனிதாவது எங்கும் காணோம் !

    முண்டாசுக் கவிஞன் பல வருடங்களுக்கு முன் மொழிந்த உண்மை இன்றும் இளமையாய் பரிமளித்துக் கொண்டிருக்கிறது. சங்கம் வளர்த்த கன்னித் தமிழைப் பலர் பல வடிவங்களில் பலவிதமாய்க் கையாள முயன்றாலும், மிகவும் கண்ணியமாய் அத்தாய்மொழியை உபயோகிக்க இந்தக் குழு எடுத்த கன்னி முயற்சியிது.

    இத்தொகுப்பில் பங்களித்தவர்கள் எவருமே பெரும் தமிழறிஞர்களோ, புலவர்களோ அல்லர். அனைவரும் தனித்தமிழ்த் துறை அல்லாத, வெவ்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள் / பணி ஓய்வு பெற்றவர்கள். இது, எப்போதோ பள்ளியில், கல்லூரியில் கற்ற சொற்பத் தமிழறிவையும், தமிழ்  ஆர்வத்தையும் மட்டுமே கொண்டு எண்ணங்களைப் பாக்களாக வெளிப்படுத்திய முயற்சி ஆகும்.

    மரபுக் கவிதைக்குரிய இலக்கணம், சந்தங்கள் இவற்றிற்கு முன்னுரிமை இன்றி, பொருள் வெளிப்பாட்டுக்கு முன்னுரிமை தந்து எழுதப்படும் தற்காலக் கவிதைகளுக்கு நடுவே, கருத்தை வெளிப்படுத்துவதை முடிந்தவரை இலக்கண விதிகளுக்குட்பட்டு, சந்தம், ஓசைநயம் இவற்றுடன் சேர்ந்த படைப்புகளாகச் செய்யும் ஆவலால் விளைந்ததே இக்கவிதைத் தொகுப்பு.

    இரண்டாயிரம் வருடங்களாய்த் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு பல மாறுதல்கள் கண்டு வெள்ளமாய்ப் பெருக்கெடுத்த தமிழ்க் கவிதையை முடிந்தவரையில் மரபிலிருந்து விலகாமல் எளிய வடிவங்களில் படைக்க  முயன்றிருக்கிறோம்.

    தொழில் வழக்கிலும், சொந்த வாழ்க்கையிலும் சாமானிய உரைநடைத் தமிழை மட்டுமே பல ஆண்டுகளாகப் பயன்படுத்தியபின், ஓர் ஆர்வத்தில் கவி எழுதத்  தொடங்கிய போது, தமிழின் சொற்செழுமையும் அதனால் கவிஞனுக்குக் கிடைக்கும் எழுத்துச்  சுதந்திரமும்  கண்டு பிரமித்துப் போனோம் என்பது மிகையற்ற உண்மை.

    தமிழ் இலக்கியத்தில், பக்தி இலக்கியத்தைச் சார்ந்து, பாட்டுடைத் தலைவனாம் இறைவனை பல்வேறு வடிவங்களில் பாட்டிடை வைத்துப் படைக்கப்பட்ட கவிதைகள் பெருமளவில் இங்கு இடம் பெற்றுள்ளன.

    எழுத்தின் ஆணிவேராய் (subject) எத்தனையோ விஷயங்கள்/பிரச்சினைகள் பரவிக் கிடந்து, எடுத்தாளுமாறு ஈர்த்தாலும், எதிர்ப்பு/எதிர்பார்ப்பு மற்றும் எதிர்வினை (reaction) இல்லாத இறையுருவை/உணர்வை வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு சிற்பிகள் வடிக்க முயற்சி செய்திருக்கிறோம்.

    இவை தவிர, இயற்கை, நாட்டு நடப்பு போன்ற கருத்துக்களைக் கொண்ட ஓரிரு  பொதுக் கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

    இத்தொகுப்பில் வெளியிடப்பட்டுள்ள கவிதைகள் அன்றி, இன்னும் பிரசுரிக்கப்படாத  பிற கவிதைகளையும், மேலும் புதிதாய் வரவிருக்கும் உள்ளீடுகளையும் இணையதளத்தில் https://tamizhinbam.wordpress.com  என்னும் வலைப்பதிவில் உய்த்துணரும் வாய்ப்பும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

    இத்தொகுப்பை வழங்குவதில் சுய விளம்பரமோ, வணிகநோக்கமோ எள்ளளவும் இல்லை.

    கடுகளவேயான  எங்கள் தமிழறிவைக்  கொண்டு  கவி எழுதுங்கால் எங்களையும் அறியாது நாங்கள் அநுபவித்த வியப்பையும், தன்னிறைவையும், ஒத்த மனமுடையோருடன் பகிர்ந்து இன்புறுவது  ஒன்றே எங்கள் நோக்கமாகும்.

    இத்தொகுப்பு நாங்கள் படைக்கும்போது எய்திய இறும்பூது உணர்வைப்  படிப்பவர்களின் மனங்களிலும் ஏற்படுத்துமாயின், அதுவே இப்பதிப்பின் பயன் எனக் கருதுகிறோம்.

    கன்னித் தமிழில் கவிதை பலவும்

    எண்ணித் தெளிந்து எழுதுவது இறையருள்

    ––––––––

    தமிழின்பம் நுகர்வதற்கு அழைக்கிறோம்.

    வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்

    வாழிய பாரத மணித்திரு நாடு

    நன்றி.

    தமிழின்பக் குழு.

    ––––––––

    இப்பதிப்பில் கீழ்க்கண்டோரின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

    P. இராமலிங்கம் (ராலி)

    S. K. சந்திரசேகரன் (SKC)

    B. K. இராசகோபாலன் (BKR)

    S. சுரேஷ்  

    இராமமூர்த்தி (பித்தன்)

    V. கல்யாணராமன் (VKR)

    குறிப்பு:

    WhatsApp-பில் இருந்து அப்படியே எடுத்துக் கீழே தந்திருக்கிறோம். பெரிதாக format எதுவும் பண்ணவில்லை. கவிதைகள் WhatsApp-பில் வெளிவந்த தேதி, நேரம் உட்பட அத்தனையும் அப்படியே காணலாம்.

    ராலி & தமிழின்பம்

    JUNE 2017

    6/1/17, 06:19 - Ramamurthy Mama: பித்தன் 171.

    பழம்வேண்டிப் பழனியிலே

    தனி நின்ற பாலகனே

    கிழவனாய் வந்து

    வள்ளியை

    மணந்தோனே

    அழகான வேல்வாங்கி

    சூரனை வதைத்தோனே

    சுழலுகின்ற

    வாழ்க்கையிலே

    சோதனைகள்

    வந்தாலும்

    அழகனேயுன் முகம்கண்டு

    அனைத்தும்

    மறந்திடுவோம்.

    6/1/17, 09:22 - Rali Panchanatham: @பித்தன்

    பலே!

    பழம்விழையழகன் தமிழ்வழங்கும்

    பழனிவாழ்க் கிழவன் வாழ்க!

    6/1/17, 09:23 - Rali Panchanatham: @BKR, Suresh

    Love it !

    6/1/17, 09:25 - Rali Panchanatham: @BKR

    திருக்குறள் திருத்திய

    தீந்தமிழ்க் கில்லாடி நீ.

    6/1/17, 09:36 - Rali Panchanatham: இது வெண்பா அன்று ->

    இடங்கொண்டு மங்கை

    சேர்த்தாய் போற்றி

    மடங்கொண்ட அவளை

    ஈர்த்தாய் போற்றி

    திடங்கொண்டு மூன்றூர்

    காய்ந்தாய் போற்றி

    குடங்கொண்ட முனிக்கு

    உவந்தாய் போற்றி

    விடங்கொண்டு தேவர்

    காத்தாய் போற்றி

    படங்கொண்ட பாம்பு

    பூண்டாய் போற்றி

    நடங்கொண்டு அண்டம்

    அழித்தாய் போற்றி

    அடங்கொண்ட என்னைக்

    காப்பாய் போற்றி.

    (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்!)

    6/1/17, 10:30 - Suresh Dindigul: @BKR நன்று.

    6/1/17, 14:14 - S K Chandraseka: #ப.பி.

    தடித்த ஒரு மகனை தந்தை யீண்டு

    அடித்தால் தாய் உடன்

    அணைப்பாள் தாய்

    அடித்தால் பிடித்து ஒரு தந்தை அணைப்பான் இங்கு எனக்குப் பேசிய தந்தையும் தாயும்

    பொடித் திருமேனி அம்பலத்தாடும் புனித நீ ஆதலால் என்னை

    அடித்தது போதும்

    அணைத்திட வேண்டும்

    அம்மை அப்பா இனி ஆற்றேன்.

    ( திரு அருட்பா )

    6/1/17, 16:23 - Rali Panchanatham:

    ராலி க. நி. தெக்காலம்  #453

    தேயினும் மீண்டும்

    வளர்ந்து இன்று

    சாயினும் மீண்டும்

    பிறந்து உழலும்

    நாயினை மீட்கும்

    உயர்கூடல் ஆல

    வாயிலானை ராலி

    வேண்டுவ தெக்காலம்?

    6/1/17, 16:23 - Rali Panchanatham:

    ராலி க. நி. தெக்காலம்  #454

    ஏடது கல்லாது நல்லது

    நாடவும் செய்யாது

    தேடவும் செய்யாது

    நல்வார்த்தை கேளவும்

    பாடவும் செய்யாதும்

    அருள்தரும் கரியுரி

    மூடவல்லானை ராலி

    வேண்டுவ தெக்காலம்?

    6/1/17, 17:46 - BKR: விழியில் தழலன் அழிவாம் தொழிலன்

    விழிமீன் எழிலாள் கொழுநன் - அழியாக்

    கிழவன் அழகன் தொழுவார் பழிகள்

    மழுவால் அழிக்கும் சிவன்.

    6/1/17, 17:51 - BKR: A better version came as an afterthought.

    விழியில் தழலன் அழிவாம் தொழிலன்

    எழில்மீன் விழியாள் கொழுநன் - அழியாக்

    கிழவன் அழகன் தொழுவார் பழிகள்

    மழுவால் அழிக்கும் சிவன்.

    6/1/17, 17:52 - S

    Enjoying the preview?
    Page 1 of 1