Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நாளைய வானம்
நாளைய வானம்
நாளைய வானம்
Ebook80 pages26 minutes

நாளைய வானம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அதிர்ச்சி பரவிய முகத்தோடு ஆத்மாவையும், பூமிகாவையும் ஒரு முறை நிமிர்ந்து பார்த்தார் ரவியாதவ்.
 பிறகு தொடர்ந்து டெலிபோனில் பேசினார்.
 "போலீஸில் இன்பார்ம் பண்ணினீர்களா?''
 "....."
 ''சரி.''
 ரிசீவரை வைத்தவர் நிமிர்ந்தார்... உச்ச பட்ச கவலையைக் குரலில் பூசிக் கொண்டு சொன்னார்.
 ''ஆத்மா நீங்கள் இரண்டு பேரும் வந்த பைக் சில நிமிஷங்களுக்கு முன்னால் அக்னி துணுக்குகளாய் வெடித்துச் - சிதறி இருக்கிறது.''
 அதிர்ச்சி இவர்கள் முகத்தையும் தொற்றிக் கொண்டது.
 "எ... எ... என்ன?''
 அவரே தொடர்ந்து சொன்னார்.
 "இந்த நிமிஷத்திலிருந்து நீங்கள் இருவரும் பலத்த பாதுகாப்பின் கீழ் இருக்க வேண்டியது அவசியம்...''
 கண்களில் மெல்லிய பய ரேகைகள் விழுந்து இருக்க பூமிகா கேட்டாள்.
 ''யார் எங்களைக் கொலை செய்ய முயன்று இருக்கிறார்கள்? எதற்காக இந்தக் கொலை முயற்சி?''
 "இதையெல்லாம் கண்டுபிடிக்க போலீஸ் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறது.''
 "ஸார் இது கவலை தரும் விஷயம் மட்டும் இல்லை பயத்தையும் தருகிறது.'துணிச்சலான காரியத்தை நாஸா உங்களிடம் ஒப்படைக்க இருக்கிறது! பயம் என்ற வார்த்தையே நீ உச்சரிக்கக் கூடாது பூமிகா.''
 "ஸார்... பதினைந்து நிமிஷங்கள் தாமதமாய் நாங்கள் உங்களை சந்திக்க வந்திருந்தால் எங்கள் கதி என்னவாகியிருக்கும்!''
 "வாஸ்தவம்தான். உங்கள் இருவரையும் ஆபத்து சூழ்ந்திருப்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதற்கப்புறமும் உங்கள் பாதுகாப்பில் நாங்கள் அலட்சியமாய் இருக்கப்போவதில்லை. நடந்தது நடந்து விட்டது. இதைப் பற்றி பெரிதாகக் கவலைப்பட வேண்டாம். உங்கள் கடமைகளை வழக்கம் போல் செய்யுங்கள். நான் உங்கள் உயிர்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.''
 ஆத்மா புன்னகைத்தான்.
 "பெண்ணுக்கே உரிய சுபாவ பயத்தில் பூமிகா பேசிவிட்டாள். இது அவளுக்கு ஏற்பட்டிருக்கிற தற்காலிக பயம்தான். அதை தெளிய வைக்க நானாயிற்று ஸார்!''
 ரவியாதவ் சிரிக்க ஆத்மா தொடர்ந்தான்.
 "மிகப் பெரிய வாய்ப்பு எங்கள் வீட்டுக் கதவை தட்டியிருக்கிறது! எங்களால் இந்தியாவுக்கே பெருமை கிடைக்கப் போகிற இந்த நிமிஷங்களில் எங்களின் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிச்சயமாய் நாங்கள் வீணாக்கவே மாட்டோம்.''
 "குட் ஆத்மா! மை - அட்வான்ஸ் கங்கராஜுலேஷன்ஸ் ஃபார் யுவர் ஃபோர்த் கமிங் சக்ஸஸ்.''
 "தாங்க்யூ ஸார்.''
 கை குலுக்கி விடை பெற்றார்கள்.
 பூமிகாவின் உள் மனசில் மட்டும் இன்னமும் ஒரு நூலிழை பயம் மிச்சமிருந்தது.
 அந்த இன்ஸ்பெக்டர், 'ஆத்மா, பூமிகா'வின் கையைக் குலுக்கி, ''க்ளேட் டு மீட்யூ...'' சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.அமெரிக்க நாஸாவின் கையில் உங்களை ஒப்படைக்கும் வரை உங்கள் பாதுகாப்புக்காக என்னுடைய தலைமையில் தான் ஒரு செக்யூரிடிபோர்ஸ் அமைத்து இருக்கிறார்கள்."
 சொன்ன இன்ஸ்பெக்டர் நாற்பது வயதைத் தொட்டு இருந்தார். கிருதா ஓரம் சொற்பமாய் நரை. அளவான தொப்பை. அரைக் கை சட்டைக்கு வெளியே தெரிந்த இரும்பு மாதிரியான கைகளிலும் - கன்னங்களுக்குக் கீழே புடைத்திருந்த இறுக்கமான தாடையிலும் அடுத்தவர்களை மிரளவைக்கும் கம்பீரம் மிச்சமிருந்தது.
 ஆத்மா கேட்டான்.
 "அந்த பைக் வெடிப்பு சம்பவம் பற்றி ஏதாவது துப்புகிடைத்துள்ளதா இன்ஸ்பெக்டர்?''
 "சக்தி வாய்ந்த ஆர்.டி.எக்ஸ் ரசாயனத்தால் தயாரிக்கப்பட்ட குண்டு வெடித்துள்ளது. சிதறிக் கிடந்த சர்க்யூட்போர்டுகளை வைத்த அணு எலக்ட்ரானிக் டயம் பாம் என்று தெரிகிறது. ஹைடெக் அறிவோடு தயாரிக்கப்பட்டபாம்.''
 ''இந்தக் காரியத்தை செய்தது யாராக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?''
 "விசாரணை தீவிரமாய் நடந்து வருகிறது. விரைவில் கண்டுபிடித்து விடுவோம்.''
 "இந்த கொலை முயற்சிக்கு பின்னணியில் முக்கியமான ஏதாவது காரணம் இருக்க வேண்டும்.''
 "எனக்குத் தெரிந்தவைரை ஒரே ஒரு மோடிவ்தான்."
 "என்ன அது?''
 "ப்ரொப்ஷனல் ஜெலஸி?''
 "பொறாமையா?''
 ''எஸ் - இந்த விண்வெளித் துறையில் உங்களுடைய அசாத்தியத் திறமை யாரோ ஒரு எக்ஸ்க்கு பொறாமையை உண்டாக்கி இருக்கிறது. அந்த எக்ஸின் சதிதான் இந்த குண்டு வெடிப்பு.''
 ஆத்மா, பூமிகா இருவரும் திகைப்போடு ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொள்ள இன்ஸ்பெக்டர் தொடர்ந்தார்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 4, 2024
ISBN9798224934454
நாளைய வானம்

Read more from Rajeshkumar

Related to நாளைய வானம்

Related ebooks

Related categories

Reviews for நாளைய வானம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நாளைய வானம் - Rajeshkumar

    1

    கான்க்ரீட் துண்டங்களை வரிசை கட்டி வைத்தது போல இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பாமிலி க்வார்ட்டர்ஸ்.

    ஜி ப்ளாக்கில் - நாலாம் எண் வீட்டில் டெலிபோன் ஓயாமல் வீறிட்டது.

    குளியலறையிலிருந்து வெளிப்பட்ட ஆத்மா வேகநடையில் வந்து ரிசீவரை எடுத்தான்.

    ‘‘ஹலோ... ஆத்மா ஹியர்...’’

    ‘‘இஸ்ரோ பர்சனல் டிபார்ட்மெண்டில் இருந்து பேசுகிறோம்.’’

    ‘‘சொல்லுங்கள்.’’

    "உங்களை சீஃப் டைரக்டர் உடனே சந்திக்க விரும்புகிறார்.’’

    "இதோ... கிளம்பிவிட்டேன்.’’

    "உங்கள் மனைவி பூமிகா இருக்கிறார்களா?’’

    "இருக்கிறாள்.’’

    ‘‘பூமிகாவையும் சேர்த்துத்தான் அவர் பார்க்க விரும்புகிறார். நீங்கள் இருவரும் உடனே புறப்பட்டு டைரக்டரை சந்திக்கவும்.’’

    "ஆகட்டும். ஒரு நிமிஷம் ப்ளீஸ்.’’

    "எஸ்.’’

    "சீஃப் டைரக்டர் என்ன விஷயமாய் எங்களைப் பார்க்க விரும்புகிறார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?’’

    ‘‘மன்னிக்கவும். அந்த விபரம் இன்னும் எங்களுக்கே தெரிவிக்கப்படவில்லை.’’

    டெலிபோன் தொடர்பு அறுந்தது.

    உள்ளறை ஒன்றிலிருந்து வந்தாள் பூமிகா. இருபத்து மூன்று வயது. கூந்தலை பாப்கட்டாய் சுருக்கி இருந்தாள். அவளை ஒரு முறை யார் பார்த்தாலும், சரி செர்ரிப்பழத் துண்டுகளாய் மினுமினுக்கும் அந்த ஈர உதடுகள் மனசில் கெட்டியாய்ப் பதிந்து போகும். பூமிகா கேட்டாள்.

    ‘‘ஆத்மா! டெலிபோன் யாரிடமிருந்து?’’

    ‘‘பர்சனல் டிபார்ட்மென்ட்.’’

    "என்ன விஷயம்?’’

    "டைரக்டர் நம் இருவரையும் உடனே பார்க்க விரும்புகிறார்.’’

    ‘‘எதற்காக?’’

    ‘‘அவர்களுக்கே தெரியவில்லையாம்."

    ‘‘இப்படி அவர்கள் சொல்வது நம்பும்படி இல்லை.’’

    "ஏன் அப்படிச் சொன்னார்கள்...?’’

    "டெலிபோனில் அது சம்பந்தமாய்ப் பேச விரும்பாமல் இருந்திருக்கலாம்.’’

    "நீ சொல்வது சரிதான் பூமிகா’’ என்று சொன்ன ஆத்மாவுக்கு முப்பது வயது. இஸ்ரோவில் அவன் சேர்ந்த நாளிலிருந்தே சுப்பீரியர்ஸ் வியக்கும்படி பல புதிய கண்டு பிடிப்புகளை ஆதாரப்பூர்வமாய் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறான். ஆகவே மேலிடம் அவனை ரிசர்ச் டிபார்ட்மென்ட்டின் உயிர்நாடியாய்க் கருதிக் கொண்டிருக்கிறது. அவனுக்கு அஸிஸ்டென்டாக போஸ்டிங் போடப்பட்ட பூமிகாவை ஆறாவது மாதம் காதலிக்க ஆரம்பித்து - பதினெட்டாவது மாதம் கல்யாணம் செய்து கொண்டான். அலுவலகம், சினிமா, வீடு, புத்தகம் என்று எல்லா விதங்களிலும் அவனுடைய அலைவரிசையோடு ஒத்துப் போகிறாள் பூமிகா. ஆகவே அவர்கள் சேர்ந்திருக்கும் ஒவ்வொரு விநாடியும் இனிப்பில் முக்கியெடுக்கப்பட்ட விநாடிகள். டெலிபோன் வந்த - முப்பதாவது நிமிஷம் இருவரும் புறப்பட்டார்கள்.

    பூமிகா வழவழப்பான பனியன் துணி போன்ற ஆடையை உடம்புக்குக் கொடுத்திருந்தாள். இளம் பச்சை நிற கான்வாஸ் ஷூ லேசை இறுக்கிக்கொண்டாள்.

    "ஆத்மா கெட்டியாய் ஜீன்சும், பழுப்பு வர்ண ஜெர்கினும் அணிந்து இருந்தான். முந்நூற்றைம்பது சி.சி. பைக்கை உயிர்ப் பித்தான். சமந்தா பாக்சின் ஆர்க்கெஸ்ட்ராவைப் போல பிராந்தியமே அதிர தடதடத்தது பைக்.

    பைக் கான்க்ரீட் சாலையில் சீறத் துவங்கியது. வேகக்காற்று அவர்களை அலம்பியது.

    அவன் தோளில் தாடையைப் பதித்துக் கேட்டாள் பூமிகா.

    ‘‘ஆத்மா... சீஃப் டைரக்டர் நம்மை வரச் சொன்னதற்கான காரணத்தை உங்களால் யூகிக்க முடிகிறதா?’’

    "ஒரு யூகம் உள்ளது.’’

    "கால் ‘பர்சனல் டிபார்ட்மென்ட்’ மூலமாகத்தானே வந்தது?’’

    "ஆமாம்.’’

    ‘‘அதனால் ப்ரமோஷன் அறிவிப்பார்கள் என்று நினைக்கிறேன்.’’

    ‘‘ப்ரமோஷன் என்பது சாதாரண அலுவலக நடைமுறை காரியம். இப்படிக் கூப்பிட்டனுப்பித்தருமளவுக்கு அதில் முக்கியத்துவம் எதுவுமில்லை.’’

    "ஸ்பெஷல் ப்ரொமோஷனாக இருக்கலாம் அல்லவா?’’

    "அப்படியே இருந்தாலும் அதை பர்சனல் டைரக்டரே தந்து விட்டுப் போகிறார். சீஃப் டைரக்டர் கூப்பிட்டுத் தர வேண்டிய அவசியமே இல்லை.’’

    "நீ சொல்வது சரிதான்...’’

    ‘‘இப்போது யோசித்துப்பாருங்கள். எதற்காக நம்மைக் கூப்பிட்டிருப்பார்...?’’

    "வேறு யூகங்கள் எதுவும் எனக்குத் தோன்றவில்லை பூமிகா. நீ ஏதும் கெஸ் பண்ணி வைத்திருக்கிறாயா?’’

    நம்மிடம் ஒரு முக்கியமான பொறுப்பை ஒப்படைக்கப் போகிறார் என்பது என் யூகம்.

    "என்ன பொறுப்பு?’’

    ‘‘அதை அங்கே போய்த்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.’’

    கியரைக் குறைத்தான் ஆத்மா. ஸ்பீடாமீட்டர் முள் சரசரவெனக் கீழிறங்கியது.

    கனமான இரும்புத்தகட்டில் பித்தளை எழுத்துக்கள் ‘இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம்’

    Enjoying the preview?
    Page 1 of 1