Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thannambikkai Ennum Mahasakthi
Thannambikkai Ennum Mahasakthi
Thannambikkai Ennum Mahasakthi
Ebook178 pages2 hours

Thannambikkai Ennum Mahasakthi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகம் வியக்க சாதனைகளை செய்த மனிதர்களை ரகசியகமாகவும், மர்மமாகவும் ஆற்றலுடன், இயக்கிச் செல்லும் மகத்தான சக்தி இது. நம்புங்கள், நம்புவது நடக்கும் என்ற, அடிப்படையில் இயங்கும் ரகசிய சக்தி இது. ‘முடியும்’ என்பது தன்னம்பிக்கையின், உள்ளுறை சக்தி ஆகின்றது.

உங்களுக்குள் இருக்கும், இந்த மர்ம சக்தியிடம், சென்று, உங்களின் நம்பிக்கை மாறாமல், இன்னது வேண்டும் என்று கேட்பதுடன், அதற்கான முயற்சியிலும், விடாப்பிடி வேகத்தில் தொடர்ந்து செல்லுங்கள். நீங்கள் நினைத்த சிம்மாசனத்தின் உச்சியில், நிச்சயம், நீங்கள் அமர்ந்து கொண்டிருப்பீர்கள்!

தன்னம்பிக்கையின் வழியில், உங்கள் வாழ்க்கை சிறக்க, இந்த நூலை இனி படியுங்கள்.

Languageதமிழ்
Release dateSep 20, 2016
ISBN6580110801527
Thannambikkai Ennum Mahasakthi

Read more from Udayadeepan

Related to Thannambikkai Ennum Mahasakthi

Related ebooks

Reviews for Thannambikkai Ennum Mahasakthi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thannambikkai Ennum Mahasakthi - Udayadeepan

    http://www.pustaka.co.in

    தன்னம்பிக்கை என்னும் மகாசக்தி

    Thannambikkai Ennum Mahasakthi

    Author:

    உதயதீபன்

    Udayadeepan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/udayadeepan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. தன்னம்பிக்கை என்பது என்ன?

    2. தன்னம்பிக்கைக்குள் செல்லும் வழிகள்

    3. வறுமை தரும் தன்னம்பிக்கையின் பலன் பிரமிக்கத்தக்கது...

    4. தன்னம்பிக்கையினால் சக்திமான் ஆகுங்கள்

    5. உயிரில் தன்னம்பிக்கை வைப்பது அவசியத்தேவை ஆகின்றது

    6. தன்னம்பிக்கையை வெற்றி ஆக்கும் வழிகள்

    7. வரிசை வரிசையாக தன்னம்பிக்கை அலைகள் வரும்...

    8. தன்னம்பிக்கை சக்தி ஒருவருக்குள் பெருகும் நேரங்கள்...

    9. தன்னம்பிக்கையின் செயல்பாடுகள்

    10. சரியான நேரத்தில் தன்னம்பிக்கை வெற்றியாகிவிடும்

    11. பதட்டம் தன்னம்பிக்கையின் முதல் எதிரி

    12. தன்னம்பிக்கையினை வலுப்படுத்தும் வழிகள்...

    13. ஆன்மாவில் தன்னம்பிக் கைவைப்பது அசாதாரண வெற்றிகளை அளிக்கும்...

    14. பணம் சம்பாதிப்பதில் தன்னம்பிக்கைகள்...

    15. கருப்புக்கரியின் தன்னம்பிக்கை...

    16. அதிக தன்னம்பிக்கை மனிதனை சீர்குலைத்துவிடும்...

    17. தன்னம்பிக்கையில் அகங்காரத்தின் துளிர்...

    18. தன்னம்பிக்கை சூழ்நிலைகளால் கரையக் கூடியது...

    19. வலுவான தன்னம்பிக்கையை அடையும் படிகள்...

    20. தகுதிகளை அடைவதில் தன்னம்பிக்கையின் அவசியம்

    21. தன்னம்பிக்கை புனித இலக்குடன் இருக்க வேண்டும்

    22. தன்னம்பிக்கைக்குரிய நேரங்கள்

    23. முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை

    24. தன்னம்பிக்கையில் உயிர்தன்மை படிய வேண்டும்...

    25. தன்னம்பிக்கையின் உயரங்கள்

    26. தன்னம்பிக்கையில் கனவு காணுங்கள் நிறைவேறும்...

    27. தன்னம்பிக்கையை அழிக்கும் சக்திகள்

    28. தன்னம்பிக்கை மாணவனுக்குள் இருக்க வேண்டிய இலக்கு...

    29. தன்னம்பிக்கை ஒரு அசாதாரண சக்தி

    30. தன்னம்பிக்கை வயதானவர்களுக்கு ஒரு நிச்சய தேவையாகின்றது...

    31. உங்கள் மீது பிறர் நம்பிக்கை வைக்க, வழிகள்

    32. தன்னம்பிக்கை ஒரு பெண்ணுக்கு அவசியம் தேவை...

    33. தன்னம்பிக்கை என்பது முடியும் என்பதுதான்

    34. மனிதனுள் அசாதாரணமான தன்னம்பிக்கை சக்திகள்

    1

    தன்னம்பிக்கை என்பது என்ன?

    இது ஒரு சக்தி. நம்பி, இதன்பின்னால் சென்றால், இது மனிதனை ஏமாற்றாமல், அவனுக்கு உயர்வுப் படிகளை அளித்து, அவனுக்கு ஒரு உச்சி இடத்தைக் கொடுக்கும். இந்த சக்தி என்பது, தன்னை நம்பும் ஒருவருக்குள் துளிர்விட்டு முளைவிடும் ஒரு சக்தி. தன்னை நம்புவது என்பது, ஒரு உணர்வுபூர்வமான, தனது ஆழ் மனத்தைச் சென்றடையும் ஒரு வெற்றிப் பாதை.

    மேல் மூளையில் நம்பிக்கை சக்தி

    மனத்தின் அடுக்கு என்பதில் மேல் நிலையில் மூளையில் உள்ள மனம். இது சாதாரணமான காரியங்களுக்குப் பயன்பட்டு நிற்கும் ஒரு சக்தி. இது அன்றாட காரியங் களைச்செய்யப் பயன்பட்டு நிற்பது. இந்த மனம் சாதாரண மான காரியங்களில் சற்று நுணுக்கத்தை, சற்று நேர்த்தியை சேர்க்கும். மற்றபடிக்கு, அசாதாரண காரியங்களை, பூர்த்திக்கும் சக்தி, இதற்குக் கிடையாது. நடுமனதில் நம்பிக்கை சக்திக்கு வலு ஊட்டப் பெறுகின்றது தலையில் மூளையில் உள்ள மனத்தை விடவும், நடு மனது என்பது கூடுதல் சக்தி கொண்டது, இச்சக்தி இருந்து, செயலாற்றும் இடம் மனிதத் தண்டுவடம்.

    மனிதமூளை எல்லாக் காரியங்களையும் செய்ய மனிதனுள்...

    முழுதாக வளரும் முன்பே, சுமார் 260 கோடி காலமாக உயிர்களின் பரிணாம வளர்ச்சியில், மூளையின் செயல் திறனை, உயிர்களின் தண்டுவடமே நிறைவேற்றி வந்திருக்கின்றது.

    தண்டுவட மனம் என்பது ஒரு தூங்காத சக்தி இரவு பகல் எந்த நேரத்திலும், இது உறக்கத்தில்விழாமல், ஒரு உயிரைக் காக்கின்ற, முயற்சியில் ஈடுபட்டு நிற்பது.

    இதன் செயல் திறன் அசாதாரணமானது. இரவில், மனித மூளை உறங்கி ஓய்வெடுக்கும் தருணத்தில், மேலிருந்து கீழே விழுந்த தேள், மனித உடம்பில் ஊர்ந்து செல்லும்போது, உண்டாகும் உணர்வுகளை, தண்டுவடம் ஈர்த்து, அது உடனே தனக்குள் உள்ள அதீத சக்தியினால், கையை இயக்கி ஏவி விடும். கையானது, உடனே ஊர்ந்து செல்லும் தேளைப் பிடித்துத் தூக்கி, வீட்டின் ஒரு மூலையில் விட்டெறியும், தூக்கத்தின் இடையிலும்.

    மூளை இந்நிகழ்வு நடந்து முடிந்து போகும் வரைக்குமே...

    விழித்துக் கொள்வதில்லை. தன் தூக்கத்தைவிட்டு, அதன் நிலைமாறுவதில்லை. எல்லாம் நடந்து முடிந்து, அதன் பின்பே, ஏதோ ஒரு உந்துதலில் மூளை, அதன்பின்பு விழித்துக் கொள்கின்றது.

    எனவே நடு நிலை மனம் ஆபத்துக்காலத்தில்...

    தூக்கநேர இரவிலும், உயிர்களைக் காக்கின்றது. இதன் இன்னொரு உதவி என்பது, மனிதனின் கவலைகளைமாற்ற, அவனது ஆசைகளுக்கேற்ப, கனவுகளைச் சிருஷ்டித்து ஹோட்டலில்சாப்பிடுவதுபோன்றும், அவனுக்குப் பிடித்தக் காதலிக்கூட இன்பத்துடன், கொஞ்சி மகிழ்வது போன்றும், கனவுகளை சிருஷ்டித்து, அவனுக்கு வாழ்க்கையில், ஒரு பிடிப்பைக் கொடுத்து, அவனது ஏழ்மை வாழ்க்கையிலும், அவனுக்குள், ஒரு தன்னம்பிக்கையை கொடுத்து நிற்கிறது, இந்த நடுமனம். நடு மனத்தால் கொடுக்கப்படுவது வெறுமையான ஒரு தன்னம்பிக்கை மட்டும் தான். ஆனால் அதற்கு அடுத்து இருக்கிற ஆழ்மனம், மூன்றாம் நிலை மனம், அதீதமான மனம் என்று சொல்லத்தக்க மனமே, அதி அற்புதமான ஆற்றல்களுடன், இப்பிரபஞ்சத்தில் உள்ள பிரபஞ்ச சக்தியுடன், ஒரு தொடர்பை வைத்திருப்பது. மனித நிலைகள், அதன் எல்லைகள், அதன் சக்திகள் தூண்டப்படும்போதுதான், மனித நிலை கடந்த, மனித எல்லைகள் தாண்டிய, சில செயல்கள் மனிதனுக்குள் நிகழ்த்திக் காட்டப்படுகின்றது.

    மனித உடலின்எடை150 அல்லது 160 கிலோ வரை இருக்கும். ஆனால் இந்த எடை கொண்டமனிதன், பல டன்கள் வரை எடை உள்ள, ஒரு கார்கோ விமானத்தை, பல அடிகள் தூரம், இழுக்கும் உடல் வலிமை கொண்டவனல்ல. ஆனாலும், இந்த இயலாமை நிலையிலும், மனிதன் தனது உண்மை நிலையை மீறி, அவன் சில பயிற்சிகளை முறையாக செய்து, சில பிராணாயாம மூச்சுப்பயிற்சிகளில், ஒரு நிபுணத்துவத்தை அடைந்து; தன்னம்பிக்கையுடன், தன் உயிரின் சக்தி, எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டது, என்னும் சதா நினைப்பில் இருந்து, தன்னுள் அந்த அசாதாரண சக்தி தன் நரம்பு, ரத்தம், செல்களில் அபரிமிதமான பலத்துடன் இருக்கிறதாக, இரவும் பகலும் நம்பிக் கொண்டே வந்து, அந்த நம்பிக்கை, அதன் உச்சத்தில் கொடிகட்டிப் பறக்கையில், கார்கோவிமானம் கட்டப் பட்டக் கயிற்றை, தன் பற்களில் கடித்து இழுத்து, கார்கோ விமானத்தை அசைத்து, பல அடிகள் தூரம் இழுத்துக் காட்டும் சாதனையை புரிந்து விடுகின்றான், மனிதன்.

    நம்பிக்கை என்பது தன்னால் முடியும்...

    என்ற அசத்தலான, வலுவான ஒரு சக்தி எண்ணத்தை, மனிதனுக்குள் உள்ள, அவனது 17 ஆயிரம் கோடி செல்களின் அணுக்கருவில், வெற்றிகரமாக பதித்து விடும் போது, ஒரு சாதாரண மனிதன், தனது எடைக்குமேல் உள்ள டன் கணக்கிலான எடையை, அசாதாரணமாக இழுக்கும் அபூர்வ சக்தி, அவனுக்குள் வந்து விடுகிறது. தன்னம்பிக்கை உள்ளே என்ன வகை செயல் மாற்றங்கள் உருவாகின்றன எனக் காண்போம். விதையின் உள்ளே பிளந்து, அதை உற்றுப் பார்க்கின்ற பொழுது, நம் பார்வையில் அதுக்குள்ளே, ஒன்றுமே தெரிவதில்லை. வெறும் சூன்யம் மட்டுமே, நம் கண்ணுக்குத் தெரியும்.

    ஆனால் அதே விதை மண்ணில் விழுந்து...

    அதில் நீர் துளிகள் பட்டுவிட்டால், அது முளைத்து துளிர்விட்டு செடியாகி, பின்பு தேக்கு மரம் போன்று, கெட்டி மரமாக வலுவுள்ள, பிரமாண்டமான மரம் ஆகிவிடுகின்றது.

    விதை முளைக்கும் வழியில் பாறைகள்...

    இருந்தால் இந்த விதை, அப்பாறையையும் பொடித்து வெடிக்கச்செய்து, தூள் தூளாக்கி, அதில் வளர்ந்தும் விடுகின்றது. நினைத்துப்பார்த்தால், ஒரு துளிருக்குள், இத்துணை மாபெரும் சக்தியா இருக்கிறது என்ற பிரமிப்பே, நமக்குள்ளே கெட்டியாக பிறக்கும்?

    ஒரு விதை கடுமையான பாறையை...

    பிளக்கும் எனில், மனிதனின் சக்திஎத்தனை பெரிய தடைகளையும் தகர்க்கக்கூடியது, என்ற ஒரு ஆழ்நிலை எண்ண சக்தி, மனிதனுக்குள் கண்டிப்பாகத் தேவைப் படும், ஓர் உணர்வு ஆகின்றது. மூன்றாம் நிலை மனத்தின் உள்ளே சென்ற மனிதனின் விருப்பங்கள், அங்கு கொஞ்ச நாள் தங்குவதில், அங்கு ஒரு எண்ணத்தை செயல்படுத்தும் மார்க்கங்கள், இந்த ஆழ்நிலை மனத்தினால், கூர்ந்து ஆராயப்படுகின்றன. மனிதன் விருப்பம் மட்டுமே மனித மூளையில் ஆரம்பத்தில் இருக்கும். ஆனால், அந்த விருப்பத்தை அடைய பலநாள் முயற்சி செய்து, அது முடியாத நிலையில் அந்த விருப்பத்தை, மேல் நிலை மனமான மூளை, தனது மார்க்கத்தில் சென்று, பலமுறை தோல்விகளை அடைந்து விட்ட பின்பு, நடுமனம் தாண்டி தன்னிடம் வந்துவிட்ட மனித விருப்பத்தின் நிலை, இனி தோல்களை அடையாத வகையில், மனிதனின் மூன்றாம் நிலை மனம், அதை தன் கவனத்தில் வைத்துக்கொள்கின்றது.

    எந்தெந்த பாதைகளில் செல்லக்கூடாது...

    என்று, ஏற்கனவே அனுபவத்தில் தோல்விகள் அடங்கிய பழைய காலம், சுட்டிக் காட்டப்பட்டு, தோல்விகளையே அடையாத புதிய பாதை, மூன்றாம் மனத்திற்குள், திட்ட மிடப்படுகிறது. வலுப்படுத்தப்படுகின்றது. அதற்குப் பாதை தயாரானதும் அதை நிறைவேற்றவேண்டிய நுணுக்கங்கள் மூன்றாம் நிலை மனத்திற்குள் இருந்தால், அவை எடுத்துக் கொள்ளப்படுகின்றன. நிறைவேற்ற வேண்டிய காரியம் பெரிதானது, மகத்தானது மிகவும் அசாதாரணமானது எனில், மனித சக்திக்கு அப்பாற்பட்ட அதனுடன் தொடர்புடைய, பிரபஞ்ச மனத்தில் இருந்து, அதன் அசாதாரண வழிகாட்டலில், மிக நேர்த்தியான, உயரங்களுடன்கூடிய, யாரும் செய்து முடிக்க முடியாத சாதனைகள், பிறர் மூக்கில் விரலை வைக்கும் அளவிற்கு, மூன்றாம் மனத்தினால் காலப் போக்கிற்குத் தகுந்தாற் போலத், நிறைவேற்றிக் காட்டப்பெற்று விடுகின்றது.

    மில்டன்

    Enjoying the preview?
    Page 1 of 1