Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கனிந்து வரும் புது வருஷம்!
கனிந்து வரும் புது வருஷம்!
கனிந்து வரும் புது வருஷம்!
Ebook100 pages31 minutes

கனிந்து வரும் புது வருஷம்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நள்ளிரவு 12 மணி.
 கதவு தட்டப்பட்டது! முருகன் - புவனாவின் அண்ணன் - முதலில் விழித்தார்!
 மறுபடியும் கதவு தட்டப்பட்டது.
 எழுந்து விளக்கை போட்டார். நேரம் பார்த்தால் இரவு 12 மணி!
 மற்றவர்களும் விழித்து விட்டார்கள்.
 முருகன் போய் மாஜிக் ஐ வழியாகப் பார்த்தார்.
 சரியாகத் தெரியவில்லை!
 "அண்ணா! ஜாக்ரதை!"
 "க்ரில் கேட் இருக்கும்மா புவனா. பயம் இல்லை!"
 கதவைத் திறந்தார் முருகன்!
 முழு போதையில், குமார் வெளியே நின்று கொண்டிருந்தான்.
 முருகன் ஆடிப்போனார்.
 "எங்கே புவனா? வீட்டைக் காலி பண்ணி, என்னை நடுத்தெருவுல நிறுத்தின அந்த நாய் எங்கே?"
 முருகன் க்ரில் பூட்டைத் திறக்கப்போக,
 "அண்ணா நில்லு! உள்ள சேர்க்காதே!"
 சுகுணா ஓடி வந்தாள்.
 "புவனா! அக்கம் பக்கத்துல தெரிஞ்சா, நமக்குத்தான் மானக்கேடு! வேண்டாம்மா!புவனா ஒரு நொடி தயங்கினாள்.
 'இவர்கள் வாழும் இடம். இது இவர்களது கௌரவப் பிரச்னை! அதை மீறும் உரிமை எனக்கில்லை! காலி பண்ணிட்டு வந்தது தப்போ?'
 முருகன் திரும்பினார்!
 "கொஞ்ச நாள்ல தெரியத்தான் போகுது! இன்னிக்கு பயந்து உள்ளே கூப்பிட்டா, நாளைக்கும் இது தொடரும். நம்ம நிம்மதி போகும்!"
 "ஏய்... தொறடி கதவை!"
 முருகன் குரலை உயர்த்திக் கொண்டார்.
 "புவனா! நீ உடனடியா போலீசுக்கு போன் பண்ணு! இந்த மாதிரி ஆட்கள் இங்கே இருக்கறதைவிட உள்ள இருக்கறதுதான் மேல்!"
 "என்னடா? மெரட்டறீயா?"
 புவனா போய் ரிசீவரை எடுத்துவிட்டாள்.
 "புடிச்சு உள்ள போட்டு நமக்குத் தெரிஞ்ச போலீஸ்காரர் மூலமா முட்டிக்கு முட்டி தட்டினா, சரியாப்போகும்!"
 "ஹலோ! போலீஸ் ஸ்டேஷனா? இங்கே ஒரு ஆள் குடிச்சிட்டு வந்து தொல்லை குடுக்கறார். எங்களுக்கு பாதுகாப்பில்லை! உடனடியா வாங்க! விலாசமா? சொல்றேன்! எழுதிக்குங்க!"
 புவனா சொல்லத் தொடங்க, குமாருக்கு ஒரு பீதி தட்டத் தொடங்கியது!
 'உள்ளே போட்டு போலீஸ் தாறுமாறாக அடித்தால், தாங்குமா?'
 பார்த்தான்!
 சரக்கென திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
 "ஏய் நில்லு! கதவைத் திறந்து அந்த ஆளை மடக்கணும் புவனா!குமாருக்கு கலவரமாகி, அவசரமாக வாசலை நோக்கி ஓடத்தொடங்கினான். ரோந்து சுற்றுபவரின் விசில் சத்தம் நீளமாகக் கேட்க, போலீஸ் என நினைத்து கிடைத்த சந்தில் திரும்பி, குமார் ஓடத்தொடங்கினான்!

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 8, 2023
ISBN9798223216353
கனிந்து வரும் புது வருஷம்!

Read more from Devibala

Related to கனிந்து வரும் புது வருஷம்!

Related ebooks

Related categories

Reviews for கனிந்து வரும் புது வருஷம்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கனிந்து வரும் புது வருஷம்! - Devibala

    1

    பெட்டியில் துணிமணிகளை எடுத்து அடைக்கத் தொடங்கினாள் புவனா!

    ஆறு வயது அருண் ஓடிவந்தான்!

    ஊருக்குப் போறமாம்மா?

    ஆமாண்டா ராஜா! மாமா வீட்டுக்குப்போறோம்! நீ ட்ரஸ் மாத்திக்கோ!

    குழந்தை உள்ளே ஓடியது! புவனா பீரோவைத் திறந்து பணத்தை எடுத்துக்கொண்டாள். பெட்டியில் வைத்துக்கொண்டாள்!

    தலைவாரி, சேலைமாற்றித் தயாரானாள்! அதற்குள் குழந்தையும் தயாராகிவிட்டது.

    முகத்தைக் கழுவிக்கொண்டு குமார் வெளியே வந்தான்.

    புவனா! காபி குடு!

    பதிலே இல்லை!

    ஏய்... புவனா! உன்னைத்தான்!

    அவள் பெட்டியைக் கொண்டு வந்து கூடத்தில் வைத்தாள்.

    குமார் பார்த்தான்!

    எங்கே போற?

    எங்கண்ணன் வீட்டுக்கு!

    என்ன விசேஷம்?

    சரக்கென திரும்பினாள்!

    இந்த வீட்ல இருக்க எனக்கு நிம்மதியில்லை! பாதுகாப்பில்லை! குழந்தையோட வளர்ச்சிக்கு இது ஆரோக்கியமும் இல்லை!

    நீ என்ன சொல்ற?

    ஒரு குடிகாரன்கூட குடித்தனம் நடத்தறது தேவையில்லை! நான் வர்றேன்!

    புவனா!

    வாடா கண்ணு!

    குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு கதவுவரை வந்துவிட்டாள்!

    குமார் ஓடிவந்து வழிமறித்தான்.

    புவனா! அவசரப்படாதே!

    என்னை யாரும் தடுக்க முடியாது! ஏதாவது பேசணும்னா எங்கண்ணன் வீட்டுக்கு வந்து பேசுங்க!

    குழந்தையுடன் வாசலில் இறங்கிவிட்டாள்!

    போடீ! போனாலும், நீ இங்கேதானே வரணும்! போ!

    புவனா திரும்பினாள்.

    அப்படி ஒரு அவசியம் இனி இருக்காது!

    வேகமாக நடக்கத் தொடங்கினாள்!

    குமார் வெறுப்புடன் உள்ளே வந்தான். புத்தக அலமாரியில் மறைத்து வைத்திருந்த க்வாட்டர் பாட்டிலை எடுத்தான்! மூடி திறந்து கடகடவென சரித்துக் கொண்டான்!

    ‘உங்கண்ணன் வீட்ல எத்தனை நாளைக்கு இருப்பே?’

    ‘சம்பாதிக்கற திமிரா?’

    ‘ஊர் கேவலமா பேசாது?’

    ‘உனக்கு என்னைவிட்டா ஏதுடி நாதி?’

    ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு அறைக்குள் நடக்கத் தொடங்கினான்!

    டெலிபோன் ஒலித்தது.

    போய் எடுத்தான்!

    புவனா இருக்காங்களா?

    எரிச்சலாக வந்தது.

    இல்லை! புவனா இல்லை! இனிமே வரவேமாட்டா! வைங்க போனை!

    மறுபடியும் குடித்தான். தரையில் மல்லாந்து படுத்தான்!

    இந்த நேரம் குமாரைப்பற்றி!-

    குமாருக்கும் புவனாவுக்கும் கல்யாணமாகி ஏழு வருஷங்ககள் முடிந்துவிட்டன.

    குமாருக்கு சகல கல்யாண குணங்களும் உண்டு என்ற விவரமே புவனாவுக்குக் கல்யாணத்துக்குப் பிறகுதான் தெரிந்தது!

    முதலில் கோபம் வந்தாலும், படிப்படியாகத் திருத்திவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

    உடனடியாக அருண் வயிற்றில் வந்துவிட்டதால், ஒரு வருட காலம் மசக்கை உபத்ரவம், பிறந்த வீடு, வளைகாப்பு, பிரசவம் என ஓடி விட்டது.

    புவனாவுக்கு அம்மா, அப்பா இல்லை!

    அண்ணன்தான் எல்லாம். அண்ணி தங்கமானவள்!

    அவர்களுக்கு இரண்டும் பெண் குழந்தைகள். ஆனாலும் புவனாதான் அங்கு மூத்த மகள்!

    பேறு காலம் முடிந்து குழந்தையை பராமரிக்க ஆள் இல்லாததால் அண்ணியிடம் விட்டு விட்டு புவனா திரும்பினாள்.

    அதன் பிறகுதான் குமாரின் அட்டகாசம் அதிகமானது.

    எந்த நேரமும் குடி, சூதாட்டம்...!

    மூன்றே வருஷங்களில் சேமிப்பெல்லாம் கரைந்து,

    குடும்பம் நடத்த புவனா பட்டபாடு கொஞ்சமில்லை!

    அவளுக்கு உத்யோகம் இருந்ததால் பிழைத்தது.

    நகைகளை விற்று சேமிப்பைக் கரைத்து ஒரு மாதிரி கஷ்டமான ஜீவனத்துக்கு வந்துவிட்டது!

    குமாருக்கு உத்யோகமும் போய் விட்டது.

    நிரந்தர உத்யோகம் போய், துண்டு துண்டாக வேலைகள். எதிலும் நிலையாக இருப்பதில்லை!

    அண்ணனிடம் மறைத்து வைக்க முடியவில்லை! சொல்லிவிட்டாள்.

    அண்ணன் குமாரை அழைத்துக் கேட்டபோது, குமார் அவரை அவமானப்படுத்திவிட்டான்.

    அதற்குமேல் அண்ணனை தலையிட புவனா அனுமதிக்கவில்லை!

    ஏழு வருஷங்கள் முடிவதற்குள் குமார் இருமுறை மோசடி வழக்குக்காக ஜெயிலுக்கும் போயாகி விட்டது!

    இனி இவனுடன் இருக்க முடியாது என புவனா தீர்மானித்துவிட்டாள்!

    புவனாவின் புருஷன் அயோக்யன் என ஊர் முழுக்கத் தெரிந்துவிட்டது!

    முதலில் அவமானப்பட்டாலும், இது தன் தலையெழுத்து என புவனா சகித்துக்கொண்டாள்!

    அந்த சகிப்புத் தன்மைக்கும் ஒரு முடிவு வந்துவிட்டது!

    புறப்பட்டுவிட்டாள்!

    குமார் அவள் போன சில நொடிகளில் வீட்டைக் குடைந்தான் பணத்துக்காக!

    எதுவும் தேறவில்லை! வெறுப்புடன் கதவைப் பூட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டான்!

    புவனா அண்ணன் வீட்டுக்குள் நுழைந்தாள், குழந்தையுடன்!

    பெட்டியுடன் தங்கையை பார்த்ததும் மறுபடியும் பிரச்னை தொடங்கிவிட்டது என அண்ணன் முருகன் தீர்மானித்துவிட்டார்!

    என்னம்மா?

    இனிமே அந்த ஆளோட சேர்ந்து வாழ என்னால முடியாதுண்ணா!

    விட்ரு புவனா! ஏழு வருஷம் கடுமையா போராடியாச்சு! எல்லாத்தையும் இழந்து மன வேதனை மிஞ்சினதுதான் பாக்கி! இப்பவும் நீ சம்பாதிக்கற! உன் கால்ல நிக்கற! உதறு!

    என்னங்க!

    அண்ணி! இந்த மாதிரி வாழ்க்கையை ஒரு பொண்ணு வாழறதுல ஏதாவது அர்த்தம் இருக்கா?

    சரி புவனா! வீட்ல வித்துத் தின்ன ஏதாவது பாக்கி இருக்கா?

    அண்ணா! வீட்டைக் காலி பண்றதா வீட்டுக்காரருக்கு நான் நோட்டீஸ் குடுத்தாச்சு!

    Enjoying the preview?
    Page 1 of 1