Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannil Theriyothoru Thotram
Kannil Theriyothoru Thotram
Kannil Theriyothoru Thotram
Ebook310 pages1 hour

Kannil Theriyothoru Thotram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது வாழ்வியல் தொகுப்பு. இது வாழ்க்கை வரலாறு அல்ல.வாழ்ந்து வந்த பாதையின் சுவடுகள். இதில் சில கலைந்து போயிருக்கலாம். சில தடம் பதித்திருக்கலாம்.
கொடுப்பது தான் தர்மம் அல்ல .துறப்பதும் தர்மம் தான் என்பதை
வாழ்க்கை நமக்கு உணர்த்தும் நீதி என்று புரிந்து கொண்ட
உண்மை.
விருப்பங்களும் எதிர் பார்ப்புக்களும் வேறு வேறு என்பதை புரிய வைத்த போதி மரம் .ஞானம் கிடைத்ததோ இல்லையோ நம்பிக்கை கிடைத்தது.
சிறகுகள் முறிந்தாலும் பறக்கவேண்டும் என்கிற ஆசை முறியக் கூடாது என்பதை உணர்த்தும் வாழ்க்கை.
அது தான் “கண்ணில் தெரியும் தோற்றமாகக்” காணக் கிடைக்கிறது.
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580100805791
Kannil Theriyothoru Thotram

Read more from Vimala Ramani

Related to Kannil Theriyothoru Thotram

Related ebooks

Reviews for Kannil Theriyothoru Thotram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannil Theriyothoru Thotram - Vimala Ramani

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கண்ணில் தெரியுதொரு தோற்றம்

    Kannil Theriyothoru Thotram

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vimala-ramani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    1

    1-6-1955 - 15-9-2019

    இந்த இரு தினங்களையும் என்னால் என் நினைவிலிருந்து அழிக்க முடியாது.

    முதலாம் நாள் திருமண நாள்.

    இரண்டாம் நாள் (திரு) மரண நாள்.

    ஒன்று மகிழ்ச்சியின் வெளிப்பாடு.

    மற்றொன்று மரணத்தின் காலச்சுவடு.

    இரண்டிற்கும் உள்ள இடைவெளி அறுபத்தி நான்கு ஆண்டுகள்.

    அறுபதாம் திருமண நாளையும் கடந்த வருடங்கள்.

    நம்மால் என்ன செய்ய முடியாது என்பதை விட நம்மால் என்ன செய்ய முடியும் என்பதைப் பட்டியலிடுங்கள் என்றார் ஒருவர்.

    நம்மால் மரணத்தைத் தவிர்க்க முடியாது. ஆனால் உயிர் வாழ முடியும்.

    ஆளில்லா திண்ணை, கன்றில்லா தொழுவம், தானியமில்லா குதிர், பரணில் தூங்கும் மரப்பாச்சி பொம்மைகள், பிள்ளைகள் ஆடி விளையாடிய நிலைக்கதவு இவைகள் பழைய கனவுகளின் மிச்சங்கள், எச்சங்கள். எங்கோ படித்தது. நினைவில் நின்றது.

    இனி இது போன்ற நினைவுகள் தான் உயிர் பறவையைத் துடிக்கத் துடிக்க வாழ வைக்கும். கூண்டிலிருந்து பறவை வெளியே பறக்கும் வரை இந்த நினைவுக் கூண்டில் சிறகடித்துப் பறக்கத் தான் வேண்டும். வைத்த உணவை நேரம் தவறியாவது உண்ணத்தான் வேண்டும். பசித்தால் பால் தர பராசக்தி வர மாட்டாள்.

    பசித்தாலும் புசித்தாலும் அது ஒரு கிரியை அவ்வளவு தான்.

    கண்களில் தெரியும் ஒரு உருவெளித்தோற்றமாகக் கடந்த கால நினைவுகள்.

    கோவையின் மருமகளாக இந்த மண்ணில் நான் அடி எடுத்து வைத்த நாள் முதல் இதே மண்ணுக்கு என் கணவரை அர்ப்பணித்த நாள் வரை எத்தனை எத்தனை நிகழ்வுகள். எத்தனை எத்தனை கனவுகள்.

    அரங்கனை நினைத்து ஆண்டாள் கண்ட கனவு நிறைவேறியது.

    ஆண்டவனை நினைத்து பக்தர்கள் காணும் சில கனவுகள் பலிக்கும் சில பலி கேட்கும்.

    பக்த மீரா கண்ட கனவு துவாரகையில் முடிந்தது.

    யசோதா கண்ட கனவு புத்தரின் துறவறத்தில் சங்கமித்தது.

    அகலிகை காத்திருந்தாள் ராமரின் காலடிக்காக. நானும் காத்திருக்கிறேன் காலனின் காலடிக்காக. தவிர்க்க முடியாததை ஏற்றுக் கொள்வது தான் பக்குவப்பட்ட மனத்தின் அடையாளம். காத்திருத்தல் என்பது சோம்பலின் அடையாளமல்ல.

    அது நம் நேரத்தின் வியர்வைத் துளிகள்.

    கனவுகள் நம் நம்பிக்கையின் விளைவுகள்.

    எங்கோ தூரத்தில் தெரியும் ஒரு தேவனின் நிழல் உருவம் தேடி என் பயணம் தொடர்கிறது.

    "கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில்

    கண்ணன் அழகு முழுதில்லை."

    இது அழகைத் தேடிப் பயணிக்கும் பயணமல்ல. ஜீவ அமுதை சிந்தாமல் சிதறாமல் பொக்கிஷமாக்கும் ஒரு முயற்சி. பொக்கிஷங்கள் புதையுண்டு போகலாம். ஆனால் என்றாவது ஒரு நாள் யாராவது தேடிக் கண்டுபிடிப்பார்கள்.

    நம்பிக்கை எனும் இரும்புச் சங்கிலியால் கட்டபட்டது தான் வாழ்க்கை

    மீண்டும் மணமகளாகிறேன்.

    என் கரம் பற்றி பிரியேன் என்று வாக்குத் தந்தவர் வார்த்தை தவறிவிட்டார். வாழ்விலும் தவறிவிட்டார்.

    திருமணத்திற்கு சாட்சியான அக்னி மரணத்திற்கும் மின் மயானத்தில் ஒளிர்ந்தது.

    சாட்சி பூதமாக நான்.

    திருமணத்தின் போது வாழ்த்து அக்ஷதையாக மங்கள அட்சதையாக தலையில் வீழ்ந்த அட்சதைகள் நிறமிழந்து வாய்க்கரிசியானது.

    கரம் பிடித்த கரங்கள் மரணத்தால் வெட்டப்பட்டு மண்ணில் வீழ்ந்து சாய்ந்தன.

    ஏழடி எடுத்து வைத்த கால்கள் சுவாதீனமற்றுப் போயின!

    திருமணமாலையாக கழுத்தில் வீழ்ந்த அலங்கார மாலைகள் இறுதி ஊர்வல மாலைகள் ஆயின.

    ஜானவாச மாப்பிள்ளை அழைப்பு அலங்கார வண்டி அமரர் ஊர்தியாகத் தன் பயணத்தை ஆரம்பித்தது.

    உறங்குவது போலும் சாக்காடு தெரியும்.

    ஆனால் அந்த நீள் உறக்கத்தின் விழிப்பிற்குக் காத்திருக்க முடியுமா?

    எப்போ வருவாரோ? என்கிற எதிர்பார்ப்பு இல்லை தான். ஆனால் வந்துவிடமாட்டாரோ? என்கிற பேராசையுடன் இடைப்பட்ட நேரத்தில் இனிப்பும் கசப்பும் கலந்த நினைவுகளை நினைத்துப் பார்க்கிறேன்.

    இது வாழ்க்கை வரலாறல்ல. வாழ்வின் சுவடுகள்.

    கடற்கரை மணலில் தெரியும் காலச்சுவடுகள்.

    காற்றடித்தாலும் அலை வீசினாலும் அழிந்து போகும் மணற்குவியல்கள்.

    ஆனால் என் மனமெனும் பாறையில் அழியாமல் செதுக்கப்பட்ட அஜந்தா ஓவியங்கள்.

    திருமணத்திலிருந்தே ஆரம்பிக்கிறேன்.

    துவக்கமாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும்.

    2

    வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ

    இப்படி பாட்டுப் பாடி திரைப்படங்களில் நடப்பது போல் என் கைப்பிடித்து யாரும் மணவறை அழைத்துச் செல்லவில்லை.

    திண்டுக்கல் ஒரு சிறிய ஊர் (இன்று பெரிய மாவட்டம்) இந்த ஊரில் தான் என் படிப்பு விளையாட்டு கனவுகள் எல்லாமே. என்னோடு உடன் பிறந்தவர் என் அக்கா ஒருவர் மட்டும் தான். அவருக்கும் எனக்கும் பதினைந்து வயது வித்தியாசம். என்னுடன் விளையாட என் வயது ஒத்த தோழியோ தோழர்களோ யாருமே வீட்டில் இல்லை. எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் என் அக்கா திருமதி தான். ஒரு மங்கலான நினைவு. என் சகோதரியின் திருமணத்தின் போது பாயாஸத்தை கவுனில் கொட்டிக் கொண்டு அழுத நினைவு.

    அதனால் எனக்கு பாய் பிரண்ட்ஸ் தான். எங்கள் வீட்டு மாடியில் குடியிருந்த பாலு, நரசிம்மன் இவர்கள் தான் என் சினேகிதர்கள். தவிர நாங்கள் அனைவரும் அந்த வருடம் எஸ்.எஸ்.எல்.ஸி தேர்வுக்காகக் காத்திருந்தவர்கள்.

    க்ரூப் ஸ்டடி சண்டை எல்லாமே எங்களுக்குள் உண்டு.

    என் சகோதரி பிறந்த வீட்டிற்கு வரும் போதெல்லாம் எச்சரிப்பார்கள்.

    ஆம்பளைப் பசங்களோட சேந்து விளையாடாதே காது அறுந்துடும்.

    எனக்கு சிரிப்பு வரும். நல்லவேளை தோடு ஜிமிக்கி எல்லாம் வாங்க வேண்டாம். செலவு மிச்சம்.

    பிற்பகல் அப்பா தூங்கும்போது எங்கள் பிரம்மாண்டமான வீட்டின் வெளியே காம்பௌண்ட்டை சுற்றி நாங்கள் கண்ணாம்மூச்சி விளையாடுவோம். அப்பா ஏதும் சொல்ல மாட்டார். இத்தனைக்கும் ஆங்கிலேயர் காலத்து காவல் துறை உயர் அதிகாரி. என் தாய் திட்டுவார்.

    விமலா மொள்ள ஓடு.

    ஓட்டம் ஓட்டம் வாழ்வின் மொத்த ஓட்டத்தையும் அன்றே ஓடி முடித்து விட்டேன்.

    பல்லாங்குழி, தாயம் இது போன்ற இன்டோர் கேம்ஸ் எனக்குத் தெரியாது.

    மீறிப் போனால் கேரம் போர்ட். அதில் கூட எனக்குக் கட் அடிக்க வராது.

    ரெட் காயின் போட்டால் பாலோ காயின் போட வராது. ஆட்டமிழப்பேன்.

    இன்று கூட பாலோ காயின் போடத் தெரியாமல் தான் ஆட்டமிழந்து கொண்டிருக்கிறேன்.

    தஞ்சை போய் சங்கீதம் கற்று ஹிந்தி பயின்று திண்டுக்கல் வந்தது பழைய கதை. ஏற்கனவே சொன்ன கதை.

    என்னை இவர் பெண் பார்க்க வந்தபோது என்னைப் பாடச் சொன்னபோது கூட யாரோ? இவர் யாரோ? என்ன பேரோ? என்று குறும்புத்தனமாகப் பாட ஆசை.

    துள்ளலும் துடிப்பும் மிக்க கவலையற்ற பருவம். நானும் என் தாயும் சினிமாவைப் பார்த்துவிட்டு அதைப்பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அலசிய பருவம். என் தாய் தான் எனக்கு சரிக்கு சமமான தோழி ஆசானாக ஞானம் கற்பித்த குரு. என்னை நல்ல முறையில் செதுக்கிய சிற்பி… நல்ல மோல்டில் என்னை வார்த்தெடுத்த காரணகர்த்தா. எனக்கு கீதை கற்பித்த கண்ணன்… பாரதி பாடியது போல் கண்ணனின் பல வடிவங்கள்.

    இன்று தொலைக்காட்சி சேனலில் திரைப்படம் வெளியான இரண்டாம் நாளே வெற்றிகரமான முதல் நாள் என்று நாலைந்து பேர்கள் அமர்ந்து கொண்டு அதைப்பற்றி பேசுவதும் அதில் நடித்த வட இந்திய நடிகை அலகுத் தமிழில் கொஞ்சுவதும், கதாநாயகன் ழகர லகர பேதமின்றி பீலா விடுவதுமான கேலிக்கூத்துக்கள் அன்றில்லை.

    நானும் என் தாயும் எத்தனை எத்தனை படங்கள் ஒன்றாகப் பார்த்து ஒன்றாகச் சிரித்து அழுது இருட்டில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி ஒன்றாகக் கண்ணீர் துடைத்து…

    என் தாய் உண்மையான விமர்சகி. கூர்மையாகப் பார்த்து விமர்சனம் செய்வார்.

    இன்னுமா உங்க சினிமாப் பேச்சு ஓயல்லை? என்று அரைத்தூக்கத்தில் எழுந்து வந்து என் தந்தை சத்தம் போட்டபிறகு தான் நாங்கள் அடங்குவோம்.

    பழைய தேவதாஸ் படத்தில் (சாவித்திரி நாகேஸ்வர ராவ் நடித்தது)

    கனவிது தான் நனவிது தான் என்று யார் சொல்லுவார்? விதி யார் வெல்லுவார்? என்று தெலுங்கு வாடை வீசும் கண்டசாலாவின் குரலில் நாகேஸ்வரராவ் பாடும் போது நாங்கள் கண்ணீர் வடித்திருக்கிறோம்.

    உண்மை தான் விதியை யாராலும் வெல்ல முடியாது.

    வாழ்க்கை என்பது கனவிற்கும் நினைவிற்கும் இடைப்பட்ட காலம்.

    கெட்டி மேளம் முழங்க மங்கள அக்ஷதைகளும் புஷ்பங்களும் ஆசிகளாகத் தலையில் வந்து வீழ இவர் என் கழுத்தில் மங்கல நாண் பூட்டினார்.

    மணையில் அமரும் போது கூட சப்பணம் கொட்டி பத்மாசனத்தில் அமர்ந்த என்னை என் சித்தி இடுப்பில் கிள்ளி குந்தி உட்காரச் சொல்லித் தந்தார்.

    கன்னூஞ்சல் முடிந்து வயிறு முட்ட பாலும் பழமும் சாப்பிட்டு ஹோம புகையில் தலை சுற்றி வாந்தி வரும் நிலையில் என் தாய் அவசரமாக வந்தார்.

    மாப்பிள்ளை உன்னை கூப்பிடறார்.

    என்னையா எதுக்கு? குற்றம் என்ன செய்தேன் கொற்றவா? என்று சினிமாப் பாணியில் கேட்கத் தோன்றியது.

    தனியாப் பேசணுமாம்.

    மணமேடையில் அத்தனை நேரம் தனியாத் தானே இருந்தோம்? அப்போது பேசாததையா இப்போது பேசப்போகிறார்?

    அந்தக் காலத்தில் அதாவது அறுபது அறுபத்தைந்து வருடங்களுக்கு முன் தாலி கட்டும் முன் மணமகன் மணப்பெண்ணிடம் பேச மாட்டான். ரிசப்ஷன் போது பேசினாலே வாண்டுகள் கண் கொத்திப் பாம்பாக பார்த்துக் கொண்டிருக்கும்.

    ரமணி மாடியிலே காத்துண்டு இருக்கான் உனக்கு ஏதோ கிப்ட் தரணுமாம்

    என் நாத்தனார் என் காதுகளில் கிசுகிசுத்தார்.

    எனக்கு வெட்கமாக இருந்தது. என்ன கிப்ட்? இப்படியா சொல்லி அனுப்புவார்கள்? அப்போதெல்லாம் திரைப்படங்களில் முத்தக் காட்சிகள் கிடையாது. இரண்டு பூக்களைக் காட்டுவார்கள் இரண்டு புறாக்களைக் காட்டுவார்கள். அவைகள் உரசிக் கொள்ளும் இதுதான் உச்ச பட்ச காதல் காட்சி. இப்போது போல் எச்ச பட்ச காதல் எல்லாம் கிடையாது.

    நான் திக் திக் நெஞ்சுடன் மாடிப்படி ஏறினேன்.

    என்னவர் அங்கு ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

    என்னைக் கண்டதும் வா என்றார். உட்கார் என்றார்.

    நான் தேவர் மகன் ரேவதி மாதிரி பட்டென்று தரையில் அமர்ந்தேன்.

    அங்கே இல்லை இங்கே

    அவர் சொன்னது அவர் மடியா? வெட்கத்துடன் பார்த்தேன்.

    ஒரு ஸ்டூலை எடுத்துப் போட்டு உட்கார் என்றார்.

    பெண்ணுக்கு ஸீட் கொடுத்தார். உட்கார்ந்தேன்.

    அடுத்த மாசத்துலே இருந்து தான் வேலைக்குப் போகப் போறேன். அதுக்குள்ளே நீ கோயமுத்தூர் வந்துடுவே. இப்போ இது…

    அவர் கைகளில் ஒரு நீளமான கிப்ட் பார்சல்… வைர மோதிரமா? தங்கச் செயினா? பார்சல் இத்தனை பெரிசா இருக்கே?

    பார்சலை வாங்கி கொண்டு கிளம்ப முற்பட்டேன்.

    என் எதிரிலேயே பிரிச்சுப் பாரு…

    என் உணர்வுகளைப் பார்க்க ஆசைப்படுகிறார் எனக்குப் பெருமை, எப்படி ரீயாக்ட பண்ணுவது என்று மனத்துள் ஒரு ஒத்திகை…

    என்று கூறுலாமா? சே… வேண்டாம் ரொம்ப வாயைத் திறந்தா சோத்துக்கு பறக்கற பறக்கா வெட்டி மாதிரி இருக்கும்.

    நீங்களே எனக்குக் கிடைச்ச ஒரு கிப்ட்… இது எதுக்கு? சே… இந்த வசனம் நாடகத்தனமா இருக்கும்…

    காலையில் தான் அம்மி மிதிக்கும் போது என் காலைப் பிடித்தீர்கள் இப்போ கையா? இதுவும் தப்பு அவர் தான் என்னைத் தொடவே இல்லையே… சரி பொத்தாம் பொதுவாக ஒரு சிரிப்பு… அசட்டுச் சிரிப்பு அது தான் சரி…

    நான் மெல்ல பார்சலைப் பிரித்தேன்.

    அதற்குள் இருந்தது…?

    3

    வாரத்திற்கு எத்தனை நாட்கள்? ஞாயிறிலிருந்து சனிவரை?

    ஏழு நாட்கள். இது அந்த ஏழு நாட்கள் இல்லை. இது என் திரைப்படம்.

    இப்போது எதற்கு வார மாத கணக்கு என்று கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது.

    கிப்ட் பார்சலைப் பிரித்தேனா? பார்சலுக்குள் பார்சல்… பிரி பிரி என்று பிரித்து… இதென்ன சிதம்பர ரகசியமா? கடைசியில் ஒரு சின்ன அட்டைப் பெட்டி. அதன் மீது ஒரு வாழ்த்து அட்டை. இந்த அட்டையை மேலேயே ஒட்டி இருக்கக் கூடாதோ?

    சொல்லட்டுமா சொல்லட்டுமா? ரகசியத்தைச் சொல்லட்டுமா?

    அந்தச் சின்ன அட்டைப் பெட்டிக்குள்…?

    ஒவ்வொரு கிழமை பெயரையும் எம்பிராய்டரி செய்த ஏழு கர்சீப்புக்கள் லேடீஸ் ஹேண்ட் கீஸ் (சரியாகப் படியுங்கள் கிஸ் இல்லை.)

    ஏமாற்றம் இதயத்தை அடைக்க என்ன ரீயாக்ட் பண்ணுவது என்று புரியாமல் ராஜேந்திரகுமார் கதையில் வருவது போல் என்று விழித்தேன்.

    பிடிச்சிருக்கா? என்றார்.

    பிடிச்சிருக்கு என்றேன் மணிரத்தினம் பாஷையில்.

    கிளம்பினேன்.

    ஒண்ணுமே சொல்லாமக் கிளம்பினா எப்படி? இந்த கர்சீப்புக்களை அந்த அந்த நாட்களில் யூஸ் பண்ணணும்.

    ஏழு நாட்கள் மட்டும் யூஸ் பண்ணினாப் போதுமா? பாக்கி நாட்கள்? கேட்க ஆசை. ஆனால் கேட்கவில்லை… தோய்த்து தோய்த்து யூஸ் பண்ணலாம் என்று நினைத்திருப்பாரோ?

    இன்னொன்னு இருக்கு

    இன்னுமா? அடுத்து பாத் டவலா?

    இன்னொரு பார்சல்… சுவாரசியமின்றிப் பிரித்தேன்.

    குட்டி குட்டியாக சின்னச் சின்ன பர்ஸுகள்… கிழமைகள் பேர் போட்டு ஒவ்வொரு பர்ஸிலும் புத்தம் புதிய ரூபாய் நோட்டு ஏழு பர்ஸிலும் ஏழு நோட்டுக்கள்.

    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்? இனி ஏழு கார் ஏழு ஸ்கூட்டர், ஏழு பங்களாக்கள்… ஏழேழு ஜன்ம பந்தம்…

    இன்னொன்னு…

    நான் திகைத்தேன்.

    அடுத்து நடக்கப் போவது என்ன?

    இந்தா ஒரு புத்தம் புதிய வெள்ளை கைக்குட்டை ஆண்கள் உபயோகிப்பது…

    இது எதுக்கு?

    இது உனக்கில்லை… எனக்கு… நான் வழக்கம் போல் ராஜேந்திரகுமார் விழி விழித்தேன்.

    இந்த கர்சீப்பிலே நீ அழகா என் பேரை அதாவது வி. ரமணி என்கிற பேரை எம்பிராய்ட்ரி செய்து கோவை வரும் போது கொண்டு வா. இரண்டு மாச டயம் இருக்கு.

    என் தலை சுற்றல் அதிகமானது. எனக்கு சுத்தமாக டிராயிங் வராது. கை வேலைக்கும் எனக்கும் காத தூரம்.

    பள்ளிக் கூட நாட்களிலேயே சயின்ஸ் வகுப்பு ஹோம் ஒர்க் புத்தகத்தில் ஜீரண உறுப்புக்களை படம் வரைந்து பாகங்கள் குறி என்பார்கள்.

    நான் வரைந்த படத்தில் மனிதத் தலை எருமை மாட்டின் தலையாகவும் பெருங்குடல் அனக்கோண்டா பாம்பாகவும் காட்சி தரும்.

    வரைந்த படத்தை ரப்பரால் அழித்து மீண்டும் வரைந்து பக்கங்கள் கிழியும் அளவுக்கு சேதமாகி… பக்கங்களைக் கிழித்துவிடக் கூடாது. எங்கள் சயன்ஸ் டீச்சர் ரொம்பக் கண்டிப்பானவர். நோட் புத்தகத்தை முன்னே பின்னே திரும்பிப் பார்த்து பக்கங்களை எண்ணிக் கண்டுபிடித்து விடுவார்.

    தன் அசுர கையால் வயிற்றின் சதை மொத்தத்தையும் சுருட்டி ஒரு கிள்ளு கிள்ளுவார் பாருங்கள்… யாருக்கும் பக்கங்கள் கிழிக்கத் தோன்றாது.

    பிரசவத்திற்கு தன் சகோதரியின் வீட்டிற்கு அதாவது எங்கள் வீட்டிற்கு சானு சித்தி

    Enjoying the preview?
    Page 1 of 1