Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Valaagam Oru Kaadhal
Oru Valaagam Oru Kaadhal
Oru Valaagam Oru Kaadhal
Ebook251 pages1 hour

Oru Valaagam Oru Kaadhal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நான் ஆங்கிலத்தில் எழுதிய A Dalit’s Love (Available in Amazon and Pustaka)) என்ற நாவலின் மொழியாக்கம் இது. மூலத்தை எழுதிய நானே இதை மொழி பெயர்க்கும் போது, சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாவலில் இருக்கும் நிறை, குறைகள் கண்ணுக்குத் தெரிந்தன. அதனால் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஆங்கில மூலத்தில் வருகிற கதாபாத்திரங்களையே வைத்துக்கொண்டு புதிய நாவலைப் போல எழுதிவிடுவது என்று தீர்மானித்தேன். அதனால் மூலத்தில் இருந்த சில காட்சிகள், உரையாடல்கள் புதிதாக அமைக்கப்பட்டன.
ஆபகநி எனப்படும் இந்தக் கல்வி நிலையம்தான் இந்நாவலின் ஹீரோ.. வெளி உலகத்தில்இருக்கிற எல்லா ஆசாபாசங்களும் அங்கே வேலை செய்கிறவர்களுக்கும், படிப்பவருக்கும் உண்டு. காதல், கடமை, ஏமாற்றுதல், ஏமாறுதல், சதி போன்ற செயல்கள் அவர்களுக்கும் உண்டு.
ஒரு தலித் லெக்சரர் ஓர் உயர்ஜாதிப் பெண்ணைக் காதலித்து, அதனால் வரும் விளைவுகளைச் சந்திக்கிறான். அதே கேம்பஸில் ஒரு மாணவி சில துன்பங்களுக்கு ஆளாகி அவற்றை எவ்வாறு சமாளிக்கிறாள் என்பதும் ஒரு கிளைக்கதை. மாணவர்களின் சேர்க்கை, அவர்களின் தேர்வுகள் ஆகியவற்றில் கூட சில சதிகள் பின்னிருந்து இயக்குகின்றன.
நீங்கள் இந்த ஆபகநியையும், அது இருக்கிற ஊரையும் தேடினால் கிடைக்காது. ஏனெனில் அது ஒரு கற்பனையூர். ஆனால் அங்கே நடைபெறுகிற செயல்கள் உண்மை சார்ந்தவை.
Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580115206250
Oru Valaagam Oru Kaadhal

Read more from Ananthasairam Rangarajan

Related to Oru Valaagam Oru Kaadhal

Related ebooks

Reviews for Oru Valaagam Oru Kaadhal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Valaagam Oru Kaadhal - Ananthasairam Rangarajan

    http://www.pustaka.co.in

    ஒரு வளாகம் ஒரு காதல்

    (தலித் காதல் கதை)

    Oru Valaagam Oru Kaadhal

    (Thalith Kaadhal Kathai)

    Author:

    அனந்தசாய்ராம் ரங்கராஜன்

    Ananthasairam Rangarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ananthasairam-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    முன்னுரை

    நான் ஆங்கிலத்தில் எழுதிய A Dalit’s Love (Available in Amazon and Pustaka)) என்ற நாவலின் மொழியாக்கம் இது. மூலத்தை எழுதிய நானே இதை மொழிபெயர்க்கும்போது, சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாவலில் இருக்கும் நிறை,குறைகள் கண்ணுக்குத் தெரிந்தன. அதனால் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஆங்கில மூலத்தில் வருகிற கதாபாத்திரங்களையே வைத்துக்கொண்டு புதிய நாவலைப் போல எழுதிவிடுவது என்று தீர்மானித்தேன். அதனால் மூலத்தில் இருந்த சில காட்சிகள், உரையாடல்கள் புதிதாக அமைக்கப்பட்டன.

    ஆபகநி எனப்படும் இந்தக் கல்வி நிலையம்தான் இந்நாவலின் ஹீரோ.. வெளி உலகத்தில்இருக்கிற எல்லா ஆசாபாசங்களும் அங்கே வேலை செய்கிறவர்களுக்கும், படிப்பவருக்கும் உண்டு. காதல், கடமை, ஏமாற்றுதல், ஏமாறுதல், சதி போன்ற செயல்கள் அவர்களுக்கும் உண்டு.

    ஒரு தலித் லெக்சரர் ஓர் உயர்ஜாதிப் பெண்ணைக் காதலித்து, அதனால் வரும் விளைவுகளைச் சந்திக்கிறான். அதே கேம்பஸில் ஒரு மாணவி சில துன்பங்களுக்கு ஆளாகி அவற்றை எவ்வாறு சமாளிக்கிறாள் என்பதும் ஒரு கிளைக்கதை. மாணவர்களின் சேர்க்கை, அவர்களின் தேர்வுகள் ஆகியவற்றில் கூட சில சதிகள் பின்னிருந்து இயக்குகின்றன.

    நீங்கள் இந்த ஆபகநியையும், அது இருக்கிற ஊரையும் தேடினால் கிடைக்காது. ஏனெனில் அது ஒரு கற்பனையூர். ஆனால் அங்கே நடைபெறுகிற செயல்கள் உண்மை சார்ந்தவை.

    1

    ஆபகநி வாயிலில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட நூறு பேர் நின்றுகொண்டிருந்தனர். எல்லோர் கையிலும் பதாகைகள், உருட்டுக் கட்டைகள் இருந்தன பெரும்பாலோர் பரட்டைத் தலை சகிதம் அழுக்குச் சட்டை போட்டவர்களாய் இருந்தார்கள். ஏதோ ஒரு கட்சியின் அடியாட்களைப் போல தெரிந்தனர். தொண்டர்கள் என்று கூட சொல்லிக் கொள்ளலாம். அவர்கள் அங்கிருந்த போலீஸ்காரர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள்..

    அவனை வெளியே விடு

    அடிடா, கொல்லுடா

    ஏ பிரின்ஸிபாலே! வெளியே வா

    இன்ன பிற கோஷங்கள் அங்கே எழுந்தன. சிலர் கல்வி நிலையத்தின் இரும்புக் கிராதிகளை அசைத்தார்கள். உள்ளே சில போலீஸ்காரர்கள் பூட்டியிருந்த கேட் அருகே நின்றிருந்தனர். வெளியே இருந்த போலீஸார் கலவரம் செய்கிறவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். மேலும் அவர்களைக் கலைக்க தங்களின் லத்திகளைக் கொண்டு அடிக்காமல் பிடித்துத் தள்ளினர்.

    வளாகத்தின் உள்ளே அரசமரத்தின் கீழே ஒரு போலீஸ் கார் நிறுத்தப்பட்டிருந்தது. வெளி காம்பவுண்ட் சுவரில் ஒரு பெரிய நீல நிறப் பெயர்ப்பலகை இருந்தது: அதை பக்கத்திலிருந்த குரோட்டன் செடி சிறிது மறைத்தவாறு வெளியில் நீட்டிக்கொண்டிருந்தது.

    ஆசிரியர் பயிற்சிக் கல்வி நிலையம் (ஆபகநி), ஜி.ஆர். பட்டி

    சென்னைக்கு அருகே ஒரு புறநகர் பகுதியில் அது இருந்தது. நகரத்தின் சுவடில்லாமலும், கிராமமாய் இல்லாமலும் ஒரு புறநகர் ரயில் நிலையம் கொண்ட ஊராய் ஜி ஆர் பட்டி இருந்தது.

    உள்ளே மாணவர்கள் தங்கள் சீருடையில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். நம்ம ரவி சாரை அரிவளால் வெட்டுப்படாம காப்பாத்தினேன். ஒரு மாணவன் பயந்த குரலில் சொன்னான்.

    அவருக்கு காயம் ஏற்பட்டுச்சா?

    அதிகமில்லை. இப்போ அவர் ஹாஸ்டல்ல இருக்கார். உள்ளூர் டாக்டர் ஒருத்தர் அவருக்கு சிகிச்சை அளிச்சிட்டு இருக்கார்..

    அவரை ஏன் குறிவைச்சாங்க?

    எனக்கு தெரியாது. நம்மோட ஆபகநி இப்ப பிரச்சனையாகியிருக்கு.ஒரு மாணவ ஆசிரியர் பெருமூச்சு விட்டான்.

    வெளியே நடந்த தள்ளுமுள்ளுவில் ஐம்பதுகளில் இருந்த ஒரு மனிதர் வளாகத்திற்குள் நுழைய முயன்றுகொண்டிருந்தார். ஏறக்குறைய வழுக்கையாக இருந்த அவரது தலை சூரிய ஒளியில் பளபளத்தது. என்ன காரணம் சொன்னால் தம்மை உள்ளே போலீஸார் அனுமதிப்பார்கள் என்று யோசித்தபடி அவர் கூட்டத்தைத் தாண்டி கேட் அருகே சென்றார்.

    சார், இந்த கல்வி நிலையத்துல வேலை செய்யற ஒரு ஆசிரியர்.நான். தயவுசெய்ஞ்சு என்னை உள்ளே விடறீங்களா?என்றார் போலீஸ்காரரிடம். குரலில் ஓர் உறுதி தொனித்தது.

    போலீஸ்காரர் அவரை சில நொடிகள் உற்றுப் பார்த்துவிட்டு கேட்டைத் திறந்தார். அந்த மனிதர் விறுவிறுப்பான நடையில் பிரின்ஸிபால் அறைக்கு முன்னால் போய் நின்றார். உள்ளே போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் பிரின்ஸிபால் பேசிக் கொண்டிருந்தார். சில நிமிடங்களில் இன்ஸ்பெக்டர் வெளியே வந்தார்.

    அந்த மனிதர் உள்ளே செல்லத் தயங்கினார். அவர் கையில் ஒரு கவர் இருந்தது. அதில் அவரது இடமாற்றல் உத்தரவு இருந்தது. பிரின்ஸிபால் இன்னொருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

    வெளியே ஸ்டூலில் அமர்ந்திருந்த பியூன் பாலா அந்த மனிதரை ஆர்வத்துடன் பார்த்துவிட்டு விசாரித்தான்.

    இந்த ஆபகநி.யில் ஜாயின் பண்ண நான் வந்திருக்கேன் என்றார் அந்த மனிதர் தன் கையிலிருந்த கவரை ஆட்டிக்கொண்டே..

    இப்போது பாலா மரியாதையுடன் தனது ஸ்டூலிலிருந்து எழுந்து நின்று உள்ளே எட்டிப் பார்த்தான். இன்னும் பிரின்ஸிபால் பேசிக்கொண்டிருந்தார்.

    சார்! அவர் ஸ்டாஃப்புடன் அரட்டைதான் அடிக்கிறார். நீங்க இப்ப உள்ளே போங்க என்று சொன்னான் பாலா.

    ராம் மோகன் அறைக்குள் நுழைந்தார். பிரின்ஸிபாலுடன் பேசிக்கொண்டிருந்தவர் சரி சார் என்று கூறிவிட்டுக் கிளம்பினார்.

    கறுப்பான நிறமுடைய ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் எதிரே ஓவல் வடிவ மேஜையில் இருந்த பிளாஸ்டிக் ஆங்கிலப் பெயர்ப்பலகை முத்து, பிரின்ஸிபால்-இன்-சார்ஜ் எனக் காட்டியது. பல்வேறு வண்ணப் பேனாக்களுடன் ஒரு பேனா ஸ்டாண்ட் ஒரு மூலையில் நின்றது. மேஜையின் மேல் பாகம் ஒரு செவ்வக கண்ணாடியால் மூடப்பட்டிருந்தது. கண்ணாடியின் கீழ் நடுவில் அந்தக் கல்வி நிலைய வகுப்புகளின் டைம் டேபிள் இருந்தது. வலது கை மூலையில் உயர் அதிகாரிகள் மற்றும் பிற ஆபகநி.களின் தொலைபேசி எண்கள் எழுதிய ஒரு டைப் செய்த காகிதம் இருந்தது. இடதுபுறத்தில் ஒரு நீல நிறத் தொலைபேசி காணப்பட்டது. திருப்பதி வெங்கடேஸ்வரர் படம் கண்ணாடித் தகட்டினுள் மேல் புறம் காட்சியளித்தது. சுவரில் ஒரு அரசாங்க காலண்டர் மின்விசிறிக் காற்றில் படபடக்கும் ஓசை கேட்டது. அதன் பக்கத்தில் சுவர் கடிகாரம் 11.15 ஐக் காட்டியது.

    குட் மார்னிங் சார். ஐயாம் ராம் மோகன். நான் சீனியர் லெக்சரரா சேர வந்திருக்கேன்.

    வெல்கம் சார். ப்ளீஸ் டேக் யுவர் ஸீட்.. முத்து ஒரு கணம் திகைத்துப்போய் அவரை வரவேற்றார்.

    இருவரும் கைகுலுக்கினர். ராம் மோகன் பழுப்பு நிறக் கவரைக் கொடுத்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார்.

    முத்து விரைவாக டிரான்ஸ்பர் ஆர்டரைப் படித்தார். ஆனா எங்களுக்கு இந்த மாதிரி ஆர்டர் இன்னும் வரலையே என்றவர் பஸ்ஸரை அழுத்த பாலா வந்தான். ராணியை வரச் சொல்லு..

    பிரின்ஸிபாலின் தனி உதவியாளர் ராணி இரண்டு நிமிடங்களில் வந்தாள். இவர் ராம் மோகன். நம்ம இன்ஸ்டிடியூட்டில் சேர வந்திருக்கார். இந்த ஆர்டரைப் பாத்து ஒரு ஜாயினிங் ரிப்போர்ட் தயாரிச்சிட்டு வாங்க.

    முத்து ராமிடம் திரும்பி, ‘இப்போ டீ நேரம். குடிக்கிறீங்களா? என்று கேட்டார்.

    ராம் சரி என தலையாட்டினார். பாலா இரண்டு குவளைகளில் இருந்து தேநீர் பரிமாறினான்..

    நீங்க ஒரு ஸ்கூல்ல ஹெட்மாஸ்டரா இருந்திருக்கீங்க.. இந்த ஆபகநி.யை ஏன் நீங்களாவே தேர்வு செய்ஞ்சீங்க?

    ஆபகநிக்கு தானாக முன்வந்து இடமாற்றல் வாங்கி வரும் ஒரு தலைமை ஆசிரியரைக் கண்டு முத்து ஆச்சரியப்பட்டார். பொதுவாக தலைமை ஆசிரியர்களை ஆபகநிக்கு மாற்றுவது ஒரு தண்டனை என்று சொல்வார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முத்து ஜி.ஆர் பட்டி ஆபகநிக்கு வந்தபோது, அவரது பள்ளி பிளஸ் டூ தேர்வுகளில் மிகக் குறைந்த சதவீத தேர்ச்சியே பெற்றிருந்தது. அதனால் அவரை இங்கு மாற்றினார்கள்.

    ராம்மோகன் பதில் சொல்லாமல் புன்னகை செய்தார். பிறகு தான் வந்த காரணத்தைச் சொன்னார்.

    சார்! என் ஒய்ஃப் ஒரு ஆஸ்துமா நோயாளி. திருப்பத்தூர் ஆஸ்துமா பெல்ட்டில் இருக்கு. அவங்க ரொம்ப காலமா கஷ்டப்பட்டாங்க. என் மகளுக்கு மெட்ராஸ்ல ஒரு எம்.என்.சி.யில் வேலை கெடைச்சுது. அவ என் ஒய்ஃப்பை தன் கூட இருக்கணும்னு சொன்னா. அதன்படி மெட்ராசுக்கு வந்துட்டா. நானும் டிரான்ஸ்பருக்கு விண்ணப்பிச்சேன். ஏழு மாசம் கழிஞ்சி இப்பதான் அது கெடைச்சுது என்று ராம் மோகன் தனது இடமாற்றத்திற்கான கட்டாயச் சூழ்நிலையை விளக்கினார்.

    ராம் சார், நீங்க எனக்கு சீனியரா? நான் 1973 பேட்ச்.

    நான் 1970 இல் சேர்ந்தேன்.

    முகத்தில் புன்னகையுடன் காற்றில் முஷ்டிகளை உயர்த்திய முத்து, கடவுளுக்கு நன்றி! எனக்கு இப்பதான் நிம்மதி. உங்க சீனியாரிட்டி பத்தி டைரக்டருக்கு எழுதறேன். சி இ ஓ ங்களை இங்கே பிரின்ஸிபாலா போட்டா நெறயப் பேர் ஜாயின் பண்றதில்லே. இதை ஒரு தண்டனைனு நெனைக்கிறாங்க. ஒரு அதிகாரி அப்படி கோவையில் இருந்து வர்றதா இருந்தார். செல்வாக்கைப் பயன்படுத்தி அவர் தன் இடமாற்றத்தை ரத்து செய்ஞ்சுட்டார். இப்போ சீனியர் லெக்சரர்களை பிரின்ஸிபாலா உயர்த்த அரசாங்கம் முயலுது. அதனால நான் பத்து மாசமா பொறுப்பு வகிக்கிறேன்.. எனக்கு அப்பென்டிசிடிஸ் பிரச்சினை இருக்கு. இப்போ நான் லீவ் எடுக்க முடியும். நீங்க என்னைவிட சீனியர். அதனால் நீங்க பொறுப்பேற்க முடியும்.

    என்ன சார் சொல்றீங்க? ராம் குழம்பினார்.

    நான் பதவி விலக விரும்பறேன் என்று முத்து தீவிரமாகக் கூறினார்.

    சார், நான் ஆபகநிக்கு புதியவன். ஸ்கூல் மதிரி இது இல்லைனு தெரியும். இந்த நிறுவனத்தின் ஏபிசிடி நடைமுறைகள் கூட எனக்குத் தெரியாது. நான்போய்...... என்று இழுத்தார் ராம் மோகன்.

    கவலைப்பட வேண்டாம்; நீங்க ஆபகநி நுணுக்கங்களை சீக்கிரமா தெரிஞ்சுப்பீங்க. நான் உங்களை ப்ரீ செர்விஸ் துறை தலைவரா ஆக்கறேன். தலைமை ஆசிரியரா இருந்த உங்க அனுபவத்தால அதை நீங்க நல்லா நிர்வகிக்க முடியும்.

    முத்து பஸ்ஸரை அழுத்த பாலா வந்தான். ராணியை ஆபகநி கைட்லைன்ஸ் புஸ்தகத்தோட வரச் சொல்லு.

    வெளியே எதுக்கு ஒரு கும்பல் கலாட்டா பண்றாங்க? போலீஸ் அது இதுனு... ராம் தெரிந்துகொள்ள விரும்பினார்.

    அது ஒரு காதல் பிரச்சினை சார். வேண்டாத வேலை. முத்து மேலே பேசத் தயங்குவது தெரிந்து அந்த உரையாடலை ராம் மோகன் தொடராமல் விட்டார்.

    ஜாயினிங் ரிப்போர்ட் மற்றும் கைட்லைன்ஸ் புத்தகத்துடன் ராணி வந்தாள்.. ராம் ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

    குட் ஆப்டர்நூன் சார்! போஸ்ட் மேன் அறைக்குள் நுழைந்து தபால்களை ஒப்படைத்தார். ராமின் இட மறுதல் உத்தரவு அதில் இருந்தது. மற்றொரு உறை மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் இருந்து வந்திருந்தது. அந்தக் கடிதத்தை ராம் மோகனுக்கு முத்து காட்டினார். ஆபகநி.யில் அட்மிஷன் தொடர்பா ஒரு பெண் தாக்கல் செய்ஞ்ச கேஸ் இது. பல மாசமா இழுத்துக்கிட்டு வருது. இன்னும் தீர்வு இல்லை. முத்து பெருமூச்சு விட்டார். நான் நாளான்னைக்கி ஹைகோர்ட்ல ஆஜராகணும். அதுதான் இந்த லெட்டர்..

    ராணி, ராம் சார் இனிமே நம்ம ப்ரீ சர்வீஸ் ஹெட். அந்த போஸ்ட்டை அவருக்கு அலாட் பண்ணி ஒரு ஆர்டரைப் போட்டு எடுத்துட்டு வாங்க. இப்ப அந்த துறையை பாக்கிற லெக்சரர் மதுவை ரிலீஸ் பண்ணி ரிகார்ட்ஸை இவர் கிட்ட குடுக்கச் சொல்லுங்க என்ற முத்து, ராம் பக்கம் திரும்பி, சார், ப்ளீஸ் ரீட் தி கைட்லைன்ஸ் என்று பழுப்பு நிறப் புத்தகத்தைக் கொடுத்தார். ராம் புத்தகத்துடன் வெளியே வந்தார். கலவரம் செய்த கூட்டம் வாசலில் காணாமல் போயிருந்தது. மூன்று போலீஸ்காரர்கள் பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர்.

    ஜி.ஆர் பட்டி ஆபகநி பத்து ஏக்கரில் பரந்து விரிந்த ஒரு பெரிய வளாகமாகும். மையத்தில் ஒரு பெரிய அரசமரம் நின்றது. நிர்வாகத் தொகுதி இரண்டு மாடி கட்டடமாக இருந்தது. கீழே பிரின்ஸிபால் அறை, அலுவலக அறை மற்றும் ஒரு பொது அறை இருந்தன. கணினிகள் புதிதாக வந்த காலம் என்பதால் ஒரு கண்ணாடியால் பிரிக்கப்பட்ட அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கே ஒரு ஜெராக்ஸ் இயந்திரமும் இருந்தது. எந்தவொரு ஊழியருக்கும் கணினிகளுடன் பழக்கமில்லாததால் அலுவலக எழுத்தர்கள் மட்டுமே அந்த அறையை எப்போதாவது பயன்படுத்தினர். பெரும்பாலும் சாதாரண மெஷினில்தான் டைப் அடித்தனர். மேல் மாடியில் அறிவியல் ஆய்வகங்கள் இருந்தன. பின்புறம் இருபால் மாணவர்க்கான விடுதிகள் மற்றும் ஊழியர்களின் குடியிருப்புகள் இருந்தன. இடையில் ஒரு பெரிய விளையாட்டு மைதானம் இருந்தது.

    ராம் மோகனை ப்ரீ சர்வீஸ் அறைக்கு பாலா அழைத்துச் சென்றான். படிக்கும் மாணவர்களின் சாதியை உள்ளடக்கிய விவரங்கள் கொண்ட ஒரு கரும்பலகைச் சுவர் இருந்தது. ராம் மோகன் தன்னை அங்கிருந்த லெக்சரர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டார். ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனி மேஜை மற்றும் நாற்காலிகள் இருந்தன. அவற்றில் மாணவர்கள் எழுதிய அஸைண்மென்ட் நோட்டுகள் காணப்பட்டன. ராம் மோகனின் மேஜையில் வகுப்புகளின் அட்டவணை ஒரு கண்ணாடி தகடு மூலம் மூடப்பட்டிருந்தது. அவர் தனது இருக்கையில் அமர்ந்து ஆபகநி வழிகாட்டுதல்களைப் படிக்கத் தொடங்கினார்.

    ஒரு தலைமை ஆசிரியராக அவர் தனது பள்ளியில் 2000 மாணவர்களையும் 40 ஆசிரியர்களையும்

    Enjoying the preview?
    Page 1 of 1