Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sorgathukku Kaditham Podu
Sorgathukku Kaditham Podu
Sorgathukku Kaditham Podu
Ebook82 pages29 minutes

Sorgathukku Kaditham Podu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அனிதாவை உயிருக்கு உயிராய் நேசிக்கும் டாக்டர் ரவி. ஆனால், ரவி திருமணம் செய்து கொள்வதை விரும்பாத ஒரு நபர் செய்யும் அத்துமீறல்கள், கொலைகள். அந்த கொலையில் ரவியை சிக்க வைக்கும் சூட்சமம். ரவியை காப்பாற்ற வரும் அனிதாவின் தோழி டிடெக்ட்டிவ் லதா. அனிதாவும் கொலை செய்யப்பட இந்த கேஸை தீவிரமாக அலசி ஆராயும் லதா.... ரவிக்கு ஏற்பட இருக்கும் இன்னலில் இருந்து தப்பித்தானா?.... லதா இந்த கேஸை தன் சாமர்த்தியத்தால் வென்றாளா?... தொடர்ந்து பயணிப்போம் வாருங்கள்.

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580100607824
Sorgathukku Kaditham Podu

Read more from Devibala

Related to Sorgathukku Kaditham Podu

Related ebooks

Reviews for Sorgathukku Kaditham Podu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sorgathukku Kaditham Podu - Devibala

    https://www.pustaka.co.in

    சொர்க்கத்துக்கு கடிதம் போடு

    Sorgathukku Kaditham Podu

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    ஏர்போர்ட் லவுன்ச், அந்த அதிகாலை வேளையில் நிரம்பி வழிந்தது?

    நேரம் ஐந்தரை மணி.

    ஆறு மணி ப்ளைட்டுக்கான பரபரப்பு.

    வெளியே சோடிய ஈரம் இன்னும் காயாத விடியலில், கார் வந்து நிற்க, அதிலிருந்து முதலில் இறங்கினார் டி.எஸ்.பி. ராம். தொடர்ந்து பிரசன்னாவும், லதாவும்.

    அந்த டிசம்பர் குளிருக்கு ராம் கொஞ்சம் பயந்திருப்பது, அவர் அணிந்த தடித்த உல்லன் கோட் மூலம் தெரிந்தது.

    பிரசன்னா, வழக்கம் போல மெலிதான ஜிப்பா.... மார்பு முடியைத் தாலாட்டும் ஐஸ் காற்று...

    பெட்டிகளை சேகரித்துக் கொண்டு, காரை அனுப்பினார் ராம்… லவுன்சுக்கு வந்து விட்டார்கள்.

    நீங்க ரெண்டு பேரும் இருங்க பிரசன்னா, நான் ஃபர்மாலிட்டீஸ் முடிச்சிட்டு வந்திறேன் ராம் அகன்றார்.

    சற்று தொலைவில் தெரிந்த கேன்டீனை நோக்கி நடந்தார்கள் இருவரும்.

    ஆவி பறக்கும் காபி கைக்கு வந்ததும், ஒரு சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்ட பிரசன்னா,

    ம்... சொல்லு லதா!

    வவ்வே... என்னத்தைச் சொல்றது? உங்களைக் கொலை செய்யலாமான்னு தோணுது பாஸ்

    ஒனக்கு இன்னும் கோவம் தீரலை!

    கஞ்சப் பிசினாறி பாஸ் நீங்க, ரெண்டு பேர் போகும்போது, நா ஒருத்தி வந்தா, என்ன தட்டுக்கெட்டு போயிரும்?

    "நானே, ராம் கூப்டதாலதான் போறேன். ஸ்காட்லாண்ட் யார்டுக்கு அவரைத்தான் போலீஸ் டிபார்ட்மென்ட் அனுப்புது. நான் ப்ரைவேட்டா, அவர் செலவுல போறேன்.

    எத்தனை நாளைக்கு?

    சரியாக முப்பது நாள்தான். எவ்ளோ வேலை முடிக்காம வச்சிருக்கேன் தெரியுமா? அரைகுறையா நிக்கற ரெண்டு கேலை நீதான் முடியேன்.

    ராம் வந்தார்.

    என்ன பிரசன்னா, பிரச்னை?

    ஸ்காட்லாண்ட் யார்ட்ல உதட்டுல ஒட்டாத லிப்ஸ்டிக் கிடைக்குமானு கேக்கறா லதா.

    லதா, எரித்து விடுவது போல அவனைப் பார்த்தாள்.

    முதல் அறிவிப்பு ஒலிபெருக்கி மூலம் வழிந்தது.

    லதா அந்த கார்மேகம் கேஸ்ல, நமக்குக் கடைசியா கிடைச்சிருக்கற ஆதாரம் போட்டோ, அப்புறமா நீலவண்ணனோட கோணம், 'கவுண்டர்ஃபீட்'டா இருக்கலாம்னு ஒரு அஸம்ஷன் இருக்கு!

    அய்யோ பாஸ், அதெல்லாம் எனக்குத் தெரியும். புறப்படும் போது நல்ல வார்த்தையா நாலு பேசக் கூடாதா?

    என்ன பேசணும்? ஆங்...... இப்படியா? எனக்கு வீரத்திலகம் இட்டு விடை கொடு தாயே!

    விடை எங்கே? கேன்டீன்ல வடைதான் - அதுவும் நேத்திய வடை - இருக்கு. நான் சப்பிட்டு இருக்கற சிக்லெட்டை எடுத்து உங்க நெத்தில ஒட்டணும்

    அடுத்த அறிவிப்பு பயணிகளை ரன்வேக்கு அழைத்தது.

    வரட்டுமா லதா. ஜாக்ரதை! எந்த கேஸை டீல் பண்ணினாலும், பர்ஸனலா போய் மாட்டிக்காதே. நான் கூட பக்கத்துல இல்லை. அசட்டு தைரியமே வேண்டாம். பீ கேர் ஃபுல் ஆ.....

    வர்றேம்மா! ராம் சிரிக்க,

    செக்யூரிட்டி கேட் தாண்டி, உள்நோக்கி நடக்கத் தொடங்கினார்கள் இருவரும்.

    குறிப்பிட்ட எல்லையில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் லதா.

    படிகளின் உச்சியில் நின்று கையாட்டி விட்டு, காணாமல் போனார் பிரசன்னா.

    படிகள் விடுபட்டு விலக,

    சன்னமான உறுமலுடன் விமானம் நகரத் தொடங்கியது. ரன்வேயில் அது வேகம் பிடித்து, தன் உடம்பை உயர்த்திக் கொள்ள, லதா, வெளியே வந்தாள்.

    'வெறிச்' சென்று இருந்தது.

    ‘ப்பா.... முழுசாக ஒரு மாதம்.... பாஸ் வருவதற்குள் வாழ்க்கையே வெறுத்து விடும்.’

    ஏர்போர்ட்டுக்கு வெளியே வந்தாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1