Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nesikka Neramillai
Nesikka Neramillai
Nesikka Neramillai
Ebook110 pages35 minutes

Nesikka Neramillai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் ஒரே அன்பு மகன் மிதுனின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி தரும் வெங்கட்ராமன். அவனின் ஆசைகளில் ஒன்று, அபிநயா என்ற அழகான இளம்பெண். மகனின் விருப்பப்படியே மிதுன் மற்றும் அபிநயாவிற்கு திருமணம் நடத்தி வைக்கிறார். அந்தத் திருமணத்திற்காக, வெங்கட்ராமன் ரிஷிக்கு கொடுத்த விலைகள் என்னென்ன? யார் அந்த ரிஷி? எதற்காக வெங்கட்ராமன் இந்த காரியங்களைச் செய்ய வேண்டும். அதனால் நடக்கும் விபரீதங்கள் என்ன? ரிஷி, மிதுன், அபிநயாவிற்கு நடந்தது என்ன? எதிர்பார்த்திராத பல்வேறு திருப்பங்கள் நிறைந்த பகுதிகளை வாசிப்போம்…

Languageதமிழ்
Release dateSep 13, 2021
ISBN6580100606632
Nesikka Neramillai

Read more from Devibala

Related to Nesikka Neramillai

Related ebooks

Related categories

Reviews for Nesikka Neramillai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nesikka Neramillai - Devibala

    https://www.pustaka.co.in

    நேசிக்க நேரமில்லை

    Nesikka Neramillai

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    உன் குற்றம்

    என் குற்றம்

    நம் குற்றம்

    உன் குற்றம்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    1

    ‘இனி நாளைய நிகழ்ச்சிகள்!’

    பளிச்சென நிமிர்ந்து உட்கார்ந்தான் மிதுன். அந்த நிமிடத்துக்காகவே தினந்தோறும் காத்திருக்கும் மிதுன். இரவு தொலைக்காட்சியில் தமிழ் செய்திகள் முடிந்து போனதும், மிதுன் நிமிர்ந்து உட்காருவான். அறிவிப்புகளைச் சொல்ல அவள் வந்துவிடுவாள். எல்லா நாட்களும் அவள் வரமாட்டாள் என்பதும் அவனுக்குத் தெரியும். இருந்தாலும் ஒரு எதிர்பார்ப்போடு காத்திருப்பான்.

    அவள்... தொலைக்காட்சியில் கடந்த நாற்பது நாட்களாக புதிதாக அமர்த்தப்பட்டிருக்கும் அறிவிப்பாளர்.

    அபிநயா... அபிநயிக்கும் அற்புதமான அரபிக்கடல் விழிகள். ஸட்ராபெரி போட்ட ஒரு கோன் ஐஸ்க்ரீம் ஈகா தியேட்டரில் கிடைக்குமே... அப்படியொரு குளிர்ச்சி அவள் குரலில்... லாமினேஷன் தடவப்பட்ட கன்னங்கள் + முகவாய். சீவி வைத்த ஆப்பிள் செதுக்கலாக மூக்கு... இரண்டாகப் பிரிந்த, அலையும் கூந்தல் தோள்கள் வழியாக மினுமினுக்கும். ஏதோ ஒரு செவி ஆபரணம் காற்றில் நலுங்கும்.

    ‘தேசிய நிகழ்ச்சிகள்’ என்று சொல்லி அவள் காணாமல்போகும் நிமிடங்களில் தேசத்தையே சபித்திருக்கிறான் மிதுன். இதோ இப்போதும் ஏங்க வைத்துவிட்டு போய்விட்டாள்.

    ரிமோட் கண்ட்ரோல் மூலம் டி.வி.யை அணைத்தான். படுக்கையில் புரண்டு படுத்தான். ஒருவாரமாக இந்தப்படுக்கை சலித்துவிட்டது மிதுனுக்கு. அதற்கு முதல்நாள் வரை விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தவன்தான். போனவாரம் புதன்கிழமையா? ஆமாம்!

    வழக்கம்போல, காலை நாலுமணிக்கு கதறிய அலாரத்துக்கு மதிப்பு தந்து எழுந்துவிட்டான். பல் தேய்த்து, முகம் கழுவி, பானைத் தண்ணீரை இரண்டு டம்ளர்கள் குடித்தவன், ஹவுஸ் கோட்டை விலக்கிவிட்டு, ஷார்ட்ஸ், டீ ஷர்ட்டில் குடிபுகுந்தான்.

    வேலு கதவைச் சாத்திக்க!

    வெளியில் வந்து, தன் ‘சட்டக்கை’ உதைத்தான். இருட்டு பூசியிருந்த அந்த பாஷ் ஏரியாவில் ஸ்கூட்டர் அமைதியைக் குலைத்தது. இருபதாவது நிமிடம், சாந்தோம் பகுதி கடற்கரையில் வண்டியை நிறுத்திப்பூட்டினான். ஓடத்தொடங்கினான் வேகமாக. இது அவனது வழக்கமான உடற்பயிற்சி. 12 வயதில் ஆரம்பித்த இந்தப் பழக்கம் இருபத்தெட்டாகியும் தொடர்கிறது. வேர்வை சொட்டச் சொட்ட உழைப்பாளர் சிலை வரை நாலு ரவுண்ட் அடித்துவிட்டுத்திரும்புவான். காற்றிலுள்ள ஓஸோனைப் பருகிவிட்டு நின்ற நிலையில் ஓய்வெடுப்பான்.

    ஆறு மணிக்கு வீடு... உடற்பயிற்சி... குளியல்... ப்ரேக் பாஸ்ட்... கம்பெனிகளுக்கு டாடியுடன் விஜயம்... மாலை ஆறு மணிக்கு டென்னிஸ் பயிற்சி... நண்பர்களுடன் அரட்டை... இந்தச் சக்கரம் ஓடாமல் தடைபட்டது அந்த புதன்கிழமையில் தான். முதல் இரண்டு ரவுண்டுகள் ஓடும்போது கொஞ்சம் களைப்பாகவே இருந்தது. அதிக வியர்வை விரயமானது. மூன்றாவதில் கண்ணகி சிலையை அடையும்போது இதயத்துடிப்பு, இசை நிகழ்ச்சி ட்ரம்ஸ் போல அதிகமாக அதிர்ந்து, கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. கால்கள் பின்னலிட, யாரோ பிடித்து வேகமாகத் தள்ளிவிட்ட தினுசில், தொபீரென குப்புற விழுந்தான். வாயோரம், நாசித்துவாரங்களில் கனமாக உணர்ந்தான். கண்களை விழித்தபோது, டெட்டால் வாசனை நிஜம் சொன்னது. பக்கத்தில் டாடி!

    எ... என்ன டாடி எனக்கு?

    ஒண்ணுமில்லை மிதுன். களைப்புல விழுந்துட்ட. கொண்டு வந்து சேர்த்தார் நம்ம நண்பர் ஒருவர்!

    அது அவர்களுக்கு சொந்தமான நர்ஸிங்ஹோம்தான். தியேட்டர், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், கோல்ட் ஸ்டோரேஜ் என்று நகரத்தில் முக்கியமான பல சங்கதிகள் அவர்களுக்குச் சொந்தம்.

    மிதுன் மறுபடியும் கண்களை மூடிக்கொண்டான்.

    காலை பதினொரு மணிக்கு அந்த மெடிகல் செமினார் கூடி விவாதித்தது. சீஃப் மெடிக்கல் ஆபீசர் பூதநாதன் கவலையோடு தன் வழுக்கையை தடவிக்கொண்டார்.

    மிஸ்டர் வெங்கட்ராமன்...

    சொல்லுங்க டாக்டர்!

    உங்க பிள்ளை மிதுனுக்கு...

    மிதுனுக்கு என்ன டாக்டர்? தாயை ரெண்டு வயசுல இழந்த அவனை ஒரு புஷ்பம்போல பொதிஞ்சு வெச்சிருக்கேன் டாக்டர். அவனை...

    ப்ளீஸ்! எங்களை பேச விடுங்க வெங்கட்ராமன். நிஜம் கசப்புதான். ஏத்துக்காம முடியுமா? மிதுனுக்கு...

    வெங்கட்ராமன் நாற்காலி நுனிக்கு வந்தார்.

    .... மிதுனுக்கு இதயத்துல ஒரு குண்டூசி முனைஅளவு துவாரம் உண்டாயிருக்கு. ஓட்டத்துல ரத்தம் கசிஞ்சு அன்னிக்கு மயக்கமா விழுந்திருக்கார்!

    டாக்டர் இதுக்கு...?

    எந்த அமெரிக்க டாக்டர் வந்தாலும், விளைவுகளைத் தடுத்து நிறுத்த இயலாது. வேணும்னா தள்ளிப்போடலாம்!

    எதை டாக்டர்?

    ஐயாம் ஸாரி வெங்கட்ராமன். அதை என் வாயால் நான் சொல்லணுமா?

    டாக்டர்?

    ப்ளீஸ். இருக்கற ஒரு வருஷகாலத்துல - அதுவே அதிகபட்சம்தான் - இதமா வச்சுக்க முயற்சிபண்ணுங்க. அந்த இளைஞனுக்கு அதிர்ச்சி வேண்டாம். முடிஞ்சா உண்மையை மறைக்கறது உத்தமம்!

    அவனை...!

    நாளைக்கே டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்!

    வெங்கட்ராமன் வெகுவாகக் குழம்பிப்போனார். சுறுசுறுப்பான மிதுனை எப்படி வீட்டுக்குள் கட்டிப்போடுவது?

    இயலுமா?

    ‘சரி. ஒரு மாதம் சமாளிக்கலாம். அதற்குள் ஏதாவது ஏற்பாடு செய்யலாம்!’

    என்ன டாடீ எனக்கு?

    "அதிகபட்ச அலைச்சல். ஒருநாளைக்கு பதினைஞ்சு மணிநேரம் உழைச்சது சேரலை. கண்டிப்பா

    Enjoying the preview?
    Page 1 of 1