Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirai Vimarsanam Oru Kalai!
Thirai Vimarsanam Oru Kalai!
Thirai Vimarsanam Oru Kalai!
Ebook159 pages54 minutes

Thirai Vimarsanam Oru Kalai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘படைப்பதனால் என் பெயர் இறைவன்’ என்கிற வரி, திரையில் இருக்கும் இயக்கம், எடிட்டிங்-திரைக்கதை- பாடல்-இசை போன்ற எல்லாத் துறையினருக்கும் பொருந்தும்.

'அவன்' படைப்பை வளர்ப்பதோ வளரவிடாமலிருப்பதோ விமர்சனத்தின் கையில். என்னைப்பொறுத்தவரை விமர்சனம் என்பது படம் பார்க்காதவர்களுக்கு பார்த்த மாதிரியும் பார்த்தவர்களுக்கு மறுமுறை பார்த்த மாதிரியும் இருக்கவேண்டும்.

Languageதமிழ்
Release dateDec 16, 2023
ISBN6580130210292
Thirai Vimarsanam Oru Kalai!

Read more from Saptharishi La.Sa.Ra.

Related authors

Related to Thirai Vimarsanam Oru Kalai!

Related ebooks

Reviews for Thirai Vimarsanam Oru Kalai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirai Vimarsanam Oru Kalai! - Saptharishi La.Sa.Ra.

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    திரை விமர்சனம் ஒரு கலை!

    Thirai Vimarsanam Oru Kalai!

    Author:

    சப்தரிஷி லா.ச.ரா.

    Saptharishi La.Sa.Ra.

    For more books

    https://www.pustaka.co.in/home/author/saptharishi-la-sa-ra

    பொருளடக்கம்

    முன்னுரை

    நண்பா நண்பா!

    கார்கி

    விடுதலை பாகம் 1

    விடுதலை விமர்சனம் இறுதிப்பகுதி

    தர்பார்

    அண்ணாத்தே

    கனா

    பொன்னியின் செல்வன் 2

    பொன்மகள் வந்தாள் பொருள் (9) கோடி தந்தாள்…

    தடம்

    கதாநாயகுடு!

    விஸ்வாசம்

    WAR நெஜமாவே சரியான தலைப்பு

    பேட்ட

    அசுரன்

    சீதா ராமம்

    ராக்கெட்ரி நம்பி விளைவு விமர்சனம்

    AGANDA

    ROARING ROCKING REVERBERATING R.R.R

    மெஹந்தி சர்க்கஸ்

    கண்ணே கலைமானே!

    நவராத்திரி

    83 (3D) MANYMORE HAPPY RETURNS KAPIL

    ஜெய்பீம்

    சர்கார்

    தேவ்

    பக்கிரி

    காந்தாரா

    PUSHPA... PART 1

    எனிமி

    ஆன்ட்டி இந்தியன்

    மாநாடு

    கர்ணன்

    சமர்ப்பணம்

    திரை விஷயங்கள்

    அறிந்த அம்மாவுக்கும்,

    திரைபற்றிய அபார ஞாபகத்திற்கு

    என் தங்கை காயத்ரிக்கும்,

    திரையின் எல்லா நுணுக்கங்களுக்காக

    என் அண்ணன் ஜெயராமனுக்கும்...

    முன்னுரை

    கமல் சொன்னார் மற்றய மாநிலங்களை விட கேரள சினிமா நன்றாயிருப்பதைக் காட்டிலும் கவனமாயிருப்பதற்குக் காரணம் அவர்களது விமர்சனம்தான். அவர்களது விமர்சனம் மிகமிகச் சிறியது. முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியே வருபவர் கையை ஏதோ தூவுவதுபோல உதறி உதட்டைப் பிதுக்கி ‘ப்ச்சு’ என்று சொல்லிவிட்டால் அதுக்கப்புறம் அந்தப்படத்திற்கு ஆயுசு கம்மிதான்.

    இப்போதெல்லாம் அந்த முன்று மணிநேரம் கூட பார்க்க வேண்டியதில்லை. ‘படம் ஆரம்பித்த இருபது நிமிடங்கள் போர்’ என்று முதல் இருட்டிலிருந்தே குறுஞ்செய்தி. வெளியுலகிற்குப்போய் படம் பார்க்கலாம் என்றிருந்தவர்களின் நாடி விழுந்திவிடுகிறது.

    நான் என் சிறுவயதிலிருந்தே இப்படி விமர்சிப்பவன் அல்லன். யாராவது ஒரு படம் நன்றகா இல்லை என்று சொன்னால் நான் சொல்வது அதை நான் பார்த்து விட்டுத்தான் சொல்கிறேன்.

    எல்லா அம்சங்களிலும் எல்லாபடங்களும் சிறந்த விளங்குவதில்லை. ஒருபடம் எடுத்து முடிப்பதற்குள் படம் சம்பந்ததாரர்கள் செத்து சுண்ணாம்பாய் போகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களின் நேர்மையான உழைப்பை அதில் கொட்டுகிறர்கள்.

    நாம் அவர்களைப்பற்றியோ அவற்றைப் பற்றியோ சற்றும் யோசிப்பதில்லை.

    எம்.ஜி.ஆர் தன் படங்களின் வெற்றியும் வசூலும் மூன்றாம் ரிலீஸ் நான்காம் ரிலீஸ் பெண்ட்டில் ஓடும்போது அங்கு முறுக்கு விற்பவரும் சைக்கிள்ஸ்டாண்டில் டோக்கன் போடுபவர் வரை சென்று அவர்களையும் வாழவைக்க வேண்டும் என விரும்பினார்.

    எப்பேற்பட்ட மனம்... பொன்மனம்.

    கேள்வி: வெற்றிப்படம் எடுப்பது எப்படி என்கிற ரகசியத்தை சொல்லுங்களேன்?

    கே. பாலச்சந்தர்: அந்த ரகசியம் தெரிந்திருந்தால் எனது படங்களில் தோல்வியைத் தவிர்த்திருப்பேனே. ஒரு வெற்றிப்படத்திற்கு கொடுக்கப்படும் அதே கடுமையான உழைப்பையேதான் எல்லா படக்குழுவும் போடுகிறது. ரிலீசுக்குப்பிறகுதான் வெற்றியா தோல்வியா என்றே தெரியவரும், அது உங்கள் கையில்தான் இருக்கிறது.

    ‘விமர்சகன் என்பவன் ஓடக்கற்றுக் கொடுக்கும் கால்கள் இல்லாதவன்’ என்ற ஒரு பழமொழி உண்டு.

    அதுவும் தற்சமய வாட்ஸ் அப் முகநூல், இன்ஸ்டா போன்ற சமூகவலைத்தளங்களில் ‘விமர்சன அநியாயம்’ நடக்கிறது. ஒரு படத்தின் இயக்குநரையோ படத்தின் நாயகனையோ வேறு எந்தவகையில் பிடிக்காவிட்டால் கண்மூடித்தனமாய் சம்பந்தமேயில்லாமல் இரக்கமே இல்லாமல் பிய்த்துப்போட்டு - குதறிப்போட்டு சிதற அடித்துவிடுகிறார்கள்.

    விமர்சனம் என்பது குறைகளே சொல்லக்கூடாது என்பதல்ல. இதில் உள்ள எனது எல்லா படங்களையும் படித்துப்பாருங்கள். எனக்கு அந்தப் படத்தில் என்ன பிடித்திருக்கிறது என்பதை சொல்லி இருப்பேன். இந்தப்படத்தை பாருங்கள் - பார்க்காதீர்கள்பற்றி ஒரு வரிகூட சொல்லியிருக்கமாட்டேன். படத்தின் குறைகளை இயக்குநரிடம் கேள்வியாய் கேட்டிருப்பேன்.

    நான் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான்.

    விமர்சியுங்கள். கழுவி ஊற்றாதீர்கள்.

    திரைவிமர்சனம் ஒரு கலை கண்ணியம் காக்கலாம். கலை பயிலலாம் கற்ற கலையால் மற்றகலையை மதிக்கலாம்.

    நண்பா நண்பா!

    அநாதைகளாகிவிட்ட இரு சிறுவர்களை ஒரு பாதிரியார் எடுத்து வளர்க்கிறார். அவர்கள் பெரியவர்களாகி ஆசிரியர்களாகிறார்கள். நல்ல வருமானம், ஓட்டல் சாப்பாடு, ஸ்கூட்டர் சவாரி. சந்திரசேகர் தமிழாசிரியர். சார்லி சரித்திர ஆசிரியர்.

    பேச்சலர்ஸ் அறை. கட்டிலில் படுத்த படுக்கையாக சந்திரசேகர். அவரின் இடுப்புக்குக்கீழே சலனமே கிடையாது. கால்கள் இயங்காது. இனி சந்திரசேகருக்கு மூலதனமே கைகளும் மூளையும்தான். சார்லி, சந்திரசேகரின் உடலை ஈரத்துணியால் துடைக்கிறார். மூத்திரக் குடுவை வைத்து எடுக்கிறார், சமைக்கிறார். சந்திரசேகருக்கு கொடுக்கிறார். ஷேவிங்கூட செய்துவிடுகிறார்.

    அதாவது சார்லியின் வாழ்க்கை சந்திரசேகருக்கு நண்பனுக்கு அர்ப்பணம் ஒரு மனைவியைப் போல, ஒரு அம்மாவைப்போல, ஒரு சிஷ்யனைப்போல. நண்பனுக்குப் பணிவிடை செய்யும் நண்பன். உடம்பு முடியாததால் ஊனமுற்றவராக இருக்கவில்லை. படுத்தபடியே ஆசிரியர் என்பதால் பக்கத்து வீட்டு குட்டி பெண்ணுக்கு டியூஷன் எடுக்கிறார். படுத்தபடியே (வீட்டுக்கு வருபவரிடம்), ஹிண்டுவில் மேட்ரிமோனியலுக்கு நண்பனைப் பற்றி விளம்பரம் கொடுத்து நிறைய பெண்களின் விவரம் சேகரித்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறார். பாதிரியாருக்கு செய்தி அனுப்புகிறார்.

    அந்த அறையில் ஒரு மீன்தொட்டி இருக்கிறது. அது ஓர் உருவகமாகக் காட்டப்படுகிறது. பல சமயங்களில் மறக்காமல் மீனுக்கு உணவு போடச் சொல்கிறார். மீனும் தமிழாசிரியர் போலவே தொட்டியைவிட்டு நகரமுடியாது. அவருக்குக் கட்டில். மீனுக்குத் தொட்டி.

    படுத்த இடத்தில அவருக்குப் பொழுதுபோக்கே அவருடைய வேலைகள்தான். அவருடைய நட்பு மீன். டியூஷனுக்கு வரும் ‘குட்டி’ப் பெண் (‘குட்டி’யில் வரும் ஸ்வேதா) சார்லி தவிர திறந்த வென்டிலேட்டர் வழியே பக்கத்து போர்ஷனில் நடக்கும் அத்தனை விஷயங்களும் காதுவழியே காண்கிறார்.

    சார்லி மறுக்க மறுக்க அவரை வற்புறுத்தி விளம்பரத்தில் தேர்வுசெய்த ஒரு பெண்ணின் வீட்டிற்கு அனுப்புகிறார். திருமணம் செய்துகொள்ள நிபந்தனையாக நண்பன் தன்னுடனேயே இருப்பான் என்று சொல்கிறார் சார்லி. அதை பெண்ணின் தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் அந்தப் பெண் ஒருமுறை சந்திரசேகர் வீட்டிற்கு வந்து நிபந்தனையை ஒப்புக்கொள்கிறார்.

    தான் தனது நண்பனுக்கு பாரமாயிருக்க விரும்பவில்லை. நண்பனின் வாழ்க்கை தனக்காக வீணாகப்போவதை விரும்பவில்லை. நண்பனின் சம்மதத்திற்காக தற்கொலை முயற்சிவரை சென்று சம்மதிக்க வைக்கிறார்.

    ஒரு ப்ளாஷ் பேக்… ஆசிரியர்களாகிறார்கள். நல்ல வருமானம். சந்தோஷவாழ்க்கை. ஓட்டல்சாப்பாடு. ஸ்கூட்டர் சவாரி. எதிரே லாரி, ஸ்கூட்டர், லாரி ஸ்கூட்டர். காமரா விபத்துக்குள்ளாகிச் சுழல்கிறது.

    சந்திரசேகர் படுத்த படுக்கை. ஓட்டியவர் சார்லி. பரிகாரமாகவோ, குற்ற உணர்ச்சியிலோ, நட்பிலோ சார்லியின் தொடர்ச்சியான சேவை, உதவி, பணிவிடை...

    குட்டி பெரியவளாகிவிடுவதால் டியூஷனுக்கு வருவதில்லை. சந்திரசேகர் தான் இங்கிருந்தால் நண்பனுக்கு திருமணம் நடக்காது என்றுணர்ந்து சார்லி மாலை வருவதற்கும் முன், பாதிரியார் உதவியுடன் அன்னை இல்லத்தில் சேர்ந்துவிடுகிறார். மீன்தொட்டியில் மீன், உணவு போட ஆள் இல்லாததால் இறக்கிறது. சார்லி அதிர்ச்சி அடைகிறார். சில நாட்கள் கழித்து சந்திரசேகர் இறந்துவிடுகிறார்.

    எல்லாப் பொருள்களையும் விற்றுவிட்டு, ராஜினாமா செய்துவிட்டு சார்லி வெறுப்பில் ஸ்கூட்டரில் ஊரைவிட்டுச் செல்லும் போது வழியில் ஒரு நாய்க்குட்டி சின்னதாய்க் கத்துவதைப் பார்க்கிறார். சுற்றிப் பார்க்கிறார். அது அநாதை. இவரும் அனாதை. கையிலெடுக்கிறார். முகத்துக்கெதிரே வைத்து வாஞ்சையுடன் பாசத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே... நடித்தவர்கள், படத்திற்காக பாடுபட்டவர்கள் பெயர்கள் மேல்... கீழிருந்து மேலாக… சென்றுகொண்டே போகிறது.

    ***

    வாழ்வில் எதை இழந்தவர்களுக்கும் அதோடு வாழ்க்கை முடிந்துபோவதில்லை. எது மேலாவது அது ஒரு நாய்க் குட்டியாகக்கூட இருக்கலாம் மறுபடி ஓர் ஒட்டுதல் வந்தே தீரும் என்ற பாசிட்டிவ் செய்தியோடு படம் முடிகிறது. யதார்த்தமான வசனங்கள்:

    இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? ஏன் பொறக்கணும்? ஏன் சந்தோஷமாயிருக்கணும்? ஏன் எல்லாத்துக்கப்புறம் செத்துப் போகணும்? இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்

    ஏன் அங்கிள் வீடு காலிபண்றீங்க?

    இங்க லாரன்ஸ் இருக்கமாட்டானே. ஊருக்குப் போறேன்.

    அங்கேயும் லாரன்ஸ் அங்கிள் இருக்கமாட்டாரே அங்கிள்?

    சொந்தத்துல பொண்ணு கிடையாதா? சொந்தமே கிடையாது.

    காட்சியமைப்புகளில் இயக்குநரின் புத்திசாலித்தனம். கதை, இயங்கமுடியாத சந்திரசேகரிலிருந்து ஆரம்பிக்கிறது. மனதை உருக்கும் பாகேஸ்வரி ராகத்தில் குட்டிப்பெண் பாடுவது, பின்னணியில் தேஷ் ராக வயலினிசையில் காட்சியை நகர்த்துவது... அடுத்தடுத்த நாட்கள் நகர்வதை உணர்த்துகிறது.

    சந்திரசேகர் (அன்னை இல்லத்தில் சேர்ந்தபின்) இருந்த காலி கட்டிலை சார்லி பார்க்கிறார்.

    Enjoying the preview?
    Page 1 of 1