Brindha Private Limited
By Rajesh Kumar
5/5
()
About this ebook
பார்ப்பவர்களை ஒரு நிமிடமாவது ரசிக்க வைக்கும் அழகிய பெண் பிருந்தா. அவளை மூன்று நபர்கள் காதலிக்கிறார்கள்.
அப்போதுதான் அவளிடம் ஒரு குழந்தை இருப்பது தெரிய வருகிறது.
அது யாருடைய குழந்தை ?
காதலிக்கும் அந்த மூன்று பேருக்கும் பதிலைத் தெரிவிக்கும் அந்த நாளில் நடந்த திருப்பங்கள் என்ன?
வாசிக்கலாமா..! ராஜேஷ்குமாரின் எழுத்துச் சாரலில்.
Read more from Rajesh Kumar
Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Vivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsSorgam Rating: 5 out of 5 stars5/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Vendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Thavarukkum Thavarana Thavaru! Rating: 5 out of 5 stars5/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Pirivathillai Rating: 5 out of 5 stars5/5Good Night Krotham! Rating: 5 out of 5 stars5/5Oru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5
Related to Brindha Private Limited
Related ebooks
L Board Murder Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Paadal Paadu Rating: 5 out of 5 stars5/5Vithi Puthithu Rating: 5 out of 5 stars5/5Meendum… Meendum… Rating: 5 out of 5 stars5/5Kuri Rating: 5 out of 5 stars5/5Onpathavathu Thisai! Rating: 0 out of 5 stars0 ratingsAthikalai Nila Rating: 0 out of 5 stars0 ratingsNeethana Nejamthana Rating: 0 out of 5 stars0 ratingsThaduththaal Kooda Tharuven Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Pushpa Rating: 5 out of 5 stars5/5Velvet Kuttrangal Rating: 0 out of 5 stars0 ratingsAthikalai Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsOne + One = Zero Rating: 2 out of 5 stars2/5Inimel Indira… Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Kadavul Rating: 0 out of 5 stars0 ratingsVivek In Tokyo Rating: 0 out of 5 stars0 ratingsAahaya Kottai Rating: 0 out of 5 stars0 ratingsNizhalin Niram Sivappu Rating: 5 out of 5 stars5/5Nisha... Nisha... Odi vaa! Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Maranangal Rating: 4 out of 5 stars4/5Rattham Sinthum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsUdaiyatha Vennila! Rating: 0 out of 5 stars0 ratings7 - vathu Arivu Rating: 0 out of 5 stars0 ratingsAayul Aare Naal Rating: 5 out of 5 stars5/5Sivappai Sila Pulligal and Sivappu kavithai Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Vanakkathukkuriya Kutram Rating: 5 out of 5 stars5/5Puthaithu Vaitha Nila Rating: 0 out of 5 stars0 ratingsKoodave Oru Nizhal Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Brindha Private Limited
1 rating0 reviews
Book preview
Brindha Private Limited - Rajesh Kumar
.
https://www.pustaka.co.in
பிருந்தா பிரைவேட் லிமிடெட்
Brindha Private Limited
Author:
ராஜேஷ்குமார்
Rajesh Kumar
For more books
https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
1
காலை எட்டு மணி.
நகரின் பிரதான வீதிகள் சுறுசுறுப்புக்குத் திரும்பிக் கொண்டிருக்க கிழக்கில் சூரியன் கண்ணைக் கூசினான். ஆகாயம் பூராவும் ராபின் ப்ளூ நீலம் துல்லியமாய்த் தெரிய மேகப் பஞ்சுகள் காணாமல் போயிருந்தன.
காந்திபுர பிருந்தா பிரைவேட் லிமிடெட் பஸ் ஸ்டாப்பின் இரண்டாவது ப்ளாட்பாரத்தில்,
அடைசலோடு வந்து நின்ற அந்த சிட்டி பஸ்ஸிலிருந்து நழுவி ஒரு பூ மாதிரி மெல்ல உதிர்த்தாள் பிருந்தா. சாலையிலிருந்து அவள் ப்ளாட்பாரத்துக்குப் போனபோது, சிட்டி பஸ் நகர ஆரம்பித்தது.
ப்ளாட்பாரத்தில் நடக்க ஆரம்பித்த பிருந்தா பிங்க் நிற சின்ன சைஸ் பூக்கள் நெருக்கியடித்துக் கிடந்த ஆர்கண்டி புடவையில் சுகாசினித்தனமாய்த் தெரிந்தாள். கறுப்பு ரெயின் போக்களாய்த் தெரிந்த புருவங்களுக்குக் கீழே மையோடிய கண்களில் ஏகப்பட்ட வோல்டேஜில் மின்சாரம் நிரம்பியிருந்தது. எடுத்துவிட்ட மாதிரியான நாசிக்குக் கீழே ரோஜா நிற உதடுகள் ஈரப்பட்டிருந்தன. பின்புறம் கிடந்த கனமான பின்னல், நடையின் பாதிப்பால் லேசான அசைவில் இருந்தது.
சாதனா அண்ட் கோவில் ஸ்டெனோவாக இருக்கும் பிருந்தாவை அதிக பட்ச வேலை நேரத்தில் தன்னோடே இருக்கும்படி ஜெனரல் மேனேஜர் ஹரிபிரசாத் பார்த்துக் கொள்வதில் மற்றப் பெண்களுக்கு நிறையவே இவள் மேல் பொறாமை.
ஆபீஸ் வேலையாக ஹரிபிரசாத் வெளியூர் போக நேர்ந்தாலும் கூடவே பிருந்தாவையும் அழைத்துப் போவான். பிருந்தாவும் சாக்குப் போக்குச் சொல்லி மறுத்ததில்லை. எப்போது வரச் சொன்னாலும் எஸ் ஸார்!
என்று சொல்லிப் புன்னகைப்பாள்.
பிருந்தா...
நடந்து கொண்டிருந்த பிருந்தா குரல் கேட்டுத் திரும்ப,
ஐந்தடி இடவெளியில் பிரேமா வந்து கொண்டிருந்தாள். காலையிலிருந்து மாலைவரை நிறைய ‘டியர் சார்' களை டைப்மெஷினில் தட்டும் பிரேமா பூசலான உடம்புக்காரி. கட்டியிருந்த ஷிபான் ஸாரி கொள்ளாமல் வழிந்தாள்.
முகத்தில் புன்னகையை அமர்த்திக் கொண்ட பிருந்தா கேட்டாள். என்ன பிரேமா, இன்னிக்கு நேரத்துலயே வந்துட்டே போலிருக்கு?
இல்லியே. எப்பவும் வர்ற பஸ்லதான் வந்தேன். எந்த சிக்னல்லயும் மாட்டிக்காமே வந்துடுச்சு...
சொல்லியபடியே பிருந்தாவைச் சமீபிக்க இசைந்து நடக்க ஆரம்பித்தார்கள்.
பிருந்தா...
ம்
"நேற்று நாலு மணிக்கே ஜியெம்மும் நீயும் எங்கேயோ