Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

‘Gopu’win Sirapana Kathaigal Collection 4
‘Gopu’win Sirapana Kathaigal Collection 4
‘Gopu’win Sirapana Kathaigal Collection 4
Ebook193 pages58 minutes

‘Gopu’win Sirapana Kathaigal Collection 4

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருச்சியில் இயங்கி வரும், பொதுத்துறையின் 'மஹாரத்னா' நிறுவனமாகிய B.H.E.L. (BHARAT HEAVY ELECTRICALS LIMITED) இல் நிதித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள V. Gopalakrishnan ஆகிய இவர், 'வை. கோபாலகிருஷ்ணன்'என்றும், 'கோபு' என்றும், 'VGK' என்றும் எழுத்துலகில் அறியப்பட்டுள்ளார்.

2005-இல் இவர் 'தாயுமானவள்' என்ற தலைப்பினில் எழுதிய முதல் சிறுகதை, தினமலர் நிறுவனர் அமரர் T.V.R. நினைவுச் சிறுகதைப் போட்டியில் பரிசுக்குத்தேர்வாகி, தினமலர்-வாரமலரில் வெளியாகி, இவரை எழுத்துலகுக்கு அடையாளம் காட்டியுள்ளது.

அதன்பிறகு இதுவரை தமிழில் நூற்றுக்கணக்கான சிறுகதைகள் எழுதியுள்ளார். 2005 முதல் 2010 வரை இவரின் பல படைப்புகள் தமிழின், பல பிரபல வார / மாத இதழ்களில் அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளன.

02.01.2011 முதல் தனக்கென்று ஓர் தனி வலைத்தளத்தினை [ gopu1949.blogspot.in ] ஏற்படுத்திக்கொண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 800 க்கும் மேற்பட்ட பதிவுகள் கொடுத்து சாதனை புரிந்துள்ளார்.

இவரின் வலைத்தளப் பதிவுகளையும், அவைகளுக்கு பிற வாசகர்கள் கொடுத்துள்ள பின்னூட்டங்களின் எண்ணிக்கைகளையும், அவை ஒவ்வொன்றுக்கும் இவர் பொறுமையாகக் கொடுத்துள்ள விரிவான பதில்களையும் பார்த்தாலே, இவரின் வாசகர் வட்டம் மிகப் பெரியது என்பதை நம்மால் நன்கு உணர முடிகிறது.

2014-ம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, பெரும் பொருட்செலவில், இவர் தனியொரு மனிதனாக முயன்று, தன் வலைத்தளத்தினில், தொடர்ச்சியாக நாற்பது வாரங்களுக்கு, மிகவும் வெற்றிகரமாக நடத்திக்காட்டியுள்ள 'சிறுகதை விமர்சனப் போட்டிகள்' http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html வலையுலக எழுத்தாளர்களிடையே இன்றும் மிகவும் புகழ்ந்து பாராட்டிப் பேசப்பட்டு வரும் மாபெரும் சரித்திர சாதனையாகும் என்பதில் ஐயமில்லை.

இது வரை இவர் மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். இவரின் இந்த மூன்று நூல்களுமே, வெவ்வேறு மிகச்சிறந்த இலக்கிய அமைப்புகளால், தேர்வு செய்யப்பட்டு, இவருக்குப் பொன்னாடை, பொற்கிழி, பரிசுகள், விருதுகள் என அளித்து கெளரவிக்கப் பட்டுள்ளன. http://gopu1949.blogspot.in/2011/07/4.html

மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளருமான இவரின் தமிழ் ஆக்கங்களில் பலவும் கன்னடம், ஹிந்தி போன்ற வேற்று மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, பிற மாநிலங்களிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகைகளிலும் இடம் பெற்றுள்ளன என்பது மகிழ்ச்சியளிக்கும் செய்திகளாகும்.

சிறு கதைகள், கவிதைகள், கட்டுரைகள், வெளிநாட்டுப் பயணங்கள், வாழ்க்கையின் சொந்த அனுபவங்கள், ஆன்மிகம், நாடகங்கள், நகைச்சுவை, பிறரின் நூல் அறிமுகங்கள், தந்திரக் கணக்குகள், கைவேலைத் திறமைகள், ஓவியம் என அனைத்திலும் கலக்கி வரும் இவர் இருமுறை தேசிய விருது பெற்றுள்ளதுடன், அகில இந்திய அளவிலும், உலகளவிலும் நடைபெற்றுள்ள சில போட்டிகளிலும் கலந்துகொண்டு நிறைய பரிசுகளும் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவரின் படைப்புகளில் பலவற்றை மின்னூல் வடிவில் கொண்டுவர இருப்பதில், நம் 'புஸ்தகா மின்னூல் நிறுவனம்' மிகவும் பெருமை கொள்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580117902042
‘Gopu’win Sirapana Kathaigal Collection 4

Read more from V. Gopalakrishnan

Related to ‘Gopu’win Sirapana Kathaigal Collection 4

Related ebooks

Reviews for ‘Gopu’win Sirapana Kathaigal Collection 4

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ‘Gopu’win Sirapana Kathaigal Collection 4 - V. Gopalakrishnan

    http://www.pustaka.co.in

    'கோபு' வின் சிறப்பான கதைகள்

    தொகுதி 4

    ‘Gopu’vin Sirapana Kathaigal

    Collection 4

    Author:

    வை. கோபாலகிருஷ்ணன்

    V. Gopalakrishnan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/v-gopalakrishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு...

    2. மறக்க மனம் கூடுதில்லையே!

    3. அழைப்பு

    4. வ டி கா ல்

    5. உண்மை சற்றே வெண்மை

    6. ஆப்பிள் கன்னங்களும்......அபூர்வ எண்ணங்களும்.

    7. அமுதைப் பொழியும் நிலவே......

    8. மூ க் கு த் தி

    9. முதிர்ந்த பார்வை

    10. மலரே..... குறிஞ்சி மலரே!

    1. எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு...

    நேற்றுடன் அறுபது வயது முடிந்து இன்று முதல் மூத்த குடிமகன் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளேன். என்னுடைய உடல் எடை மிகவும் அதிகம் என்பது எனக்கே நன்றாகத் தெரியும். என்ன செய்வது; சூதுவாது இல்லாதவன் நான். யாரையும் வருத்தப்பட வைக்க மாட்டேன். நானும் என் உடம்பை எதற்கும் வருத்திக்கொள்ள மாட்டேன். ரொம்பவும் மசமசப்பான பேர்வழி நான் என்று என் காது படவே என் மனைவி முதல் மாமனார் மாமியார் வரை எல்லோருமே சொல்லி வந்தது எனக்கும் தெரியாதது அல்ல.

    நான் அதிகமாக வாரி வளைத்து சாப்பிடக்கூடியவனும் கிடையாது. காய்கறிகளில் பலவற்றைப் பிடிக்காது என்று தவிர்த்து விடுபவன். திரும்பத் திரும்ப சாம்பார் சாதம், குழம்பு சாதம், ரஸம் சாதம், மோர் சாதம் என்று கை நனைத்து பிசைந்து சாப்பிட சோம்பலாகி விடுகிறது எனக்கு.

    கையில் ஒட்டாத டிபன் அயிட்டங்களான காரசாரமான அடை, முறுகலான தோசை, பூப்போன்ற மிருதுவான இட்லி, பூரி மஸால், ஒட்டலுடன் கூடிய காரசாரமான குழம்புமா(வு) உப்புமா, மோர்மிளகாய் போட்டு, நிறைய எண்ணெயைத் தாராளமாக விட்டுச் செய்த அல்வாத்துண்டு போன்ற மோர்களி, சேவைநாழியில் கையால் பிழிந்த சேவை (இடியாப்பம்) முதலியன என்றால் ஒரு பிடி பிடித்து விடுவதுண்டு.

    வடை, பஜ்ஜி, உருளைக்கிழங்கு போண்டா, வெங்காய பக்கோடா, சிப்ஸ், தட்டை (எள்ளடை), முறுக்கு என்றால் ஒரு பிரியமும், அவற்றுடன் ஒரு தனி ஆவர்த்தனமும் செய்வது உண்டு. படுக்கை பக்கத்தில் எப்போதும் ஸ்டாக் வைத்துக்கொண்டு, நேரம் காலம் இல்லாமல் இத்தகைய நொறுக்குத் தீனிகளுடன் கரமுராவென்று உரையாடி, உறவாடி வருவேன்.

    உடலின் எடையைக் குறைக்க வேண்டும் என்ற ஆவலில்[டாக்டர் ஒருவரை சந்தித்தேன்.

    உங்கள் உயரம் மற்றும் வயதுக்கு ஒரு 75 கிலோ வரை இருக்கலாம்.... ஆனால் நீங்க 96 கிலோ எடை உள்ளீர்கள்.... 21 கிலோ எடையைக் குறைக்க வேண்டும் என்று சொன்னார், அந்த டாக்டர்.

    சரி..... அப்படியானால் உடனடியாகக் குறையுங்கோ..... டாக்டர்என்றேன் அப்பாவியாக நானும்.

    நான் குறைப்பதா! நீங்கள் தான் உங்கள் எடையைக்குறைக்க வேண்டும் என்றார் அந்த டாக்டர்.

    என் எடையை நானே குறைப்பதற்கு உங்களுக்கு கன்சல்டிங் ஃபீஸ் நான் தரவேண்டுமா? என என் மனதில் நான் நினைத்துக்கொண்டேன்.

    சரி..... டாக்டர்..... என் எடையை நானே குறைக்க.... நான் என்ன செய்ய வேண்டும் என வினவினேன்.

    தினமும் நாய் ஒன்று துரத்தி வருவதாக நினைத்துக்கொண்டு, எங்கும் நில்லாமல், ஓட்டமும் நடையுமாக தொடர்ச்சியாக 40 நிமிடங்களுக்கு வேகமாக வாக்கிங் செல்ல வேண்டும் என்று உறுதியாகச் சொல்லி, ஏதோ ஒருசில மருந்து மாத்திரைகளும் எழுதிக் கொடுத்து விட்டார்.

    வீட்டை விட்டுச் சென்றால் தெருவில் நாய் துரத்தக்கூடும் என்ற கவலையில் தான், நான் வீட்டை விட்டு வெளியே எங்கும் அதிகமாக நடந்து செல்வது இல்லை. ஒரு கிலோ மீட்டர் தூரம் போகணும் என்றாலும் ஆட்டோவில் தான் போய் வருவேன்.

    அடுக்குமாடி கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள என் வீட்டிலிருந்து புறப்பட்டு லிஃப்ட் மூலம் இறங்கி, தெருவில் சற்று தூரம் நடந்து ஆட்டோவில் ஏறி அமர்வதற்குள் கீழ் மூச்சு மேல் மூச்சு வாங்கி பெருமூச்சு விடும் ஆள் நான். என் உடல்வாகு அப்படி. என் தாத்தா, அப்பா என்று பரம்பரை ஜீன்ஸ் அப்படி. அது புரியாமல் அந்த டாக்டர், என்னைப் போய் நடக்கச் சொல்கிறார். நடக்கற......... காரியமா அது!

    இருந்தாலும் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற ஆசையில் வாக்கிங் செல்ல முடிவெடுத்து இன்று முதன் முதலாக கிளம்பி விட்டேன். ஒரு அரை கிலோ மீட்டர் போவதற்குள் எனக்கு நாக்கு தள்ளிப் போச்சு. அங்கிருந்த ஒரு கடையில் பன்னீர் சோடா ஜில்லென்று ஒன்றுக்கு இரண்டாக வாங்கிக் குடித்து விட்டு, அங்கிருந்த டீக்கடை பெஞ்ச் ஒன்றில் ஒரு கால் மணி நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு, மீண்டும் பல்லைக் கடித்துக் கொண்டு, என் நடை பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டேன், ஒரு நடைப் பிணம் போல.

    மேலும் ஒரு கால் கிலோ மீட்டர் தான் சென்றிருப்பேன். ஒரேயடியாக கால் விண்விண்ணென்று கெஞ்சுகிறது. ஏந்தினாற்போல உட்கார ஒரு இடமும் இல்லை. முட்டிக்கால் சுளிக்கிக் கொண்டது போன்ற ஒரு உணர்வு. சுற்றும் முற்றும் பார்த்தேன். ரோட்டோரமாக சூடாக வடை, பஜ்ஜி போட்டு விற்கும் கைவண்டிக்கடை கண்ணில் பட்டது.

    பையில் எப்போதும் பணம் நிறையவே வைத்திருப்பேன். ஆமை வேகத்தில் நடந்து, அந்தக்கடையை நெருங்கினேன். ஆமவடை வாசனை மூக்கைத் துளைத்தது. ஆறஅமர உட்கார்ந்து ஆமவடை சாப்பிட அவ்விடம் வசதியில்லாதது எனக்குப் பெருங்குறையாக இருந்தது.

    இருப்பினும் வீட்டை விட்டுக் கிளம்பி நடந்தே சுமார் முக்கால் கிலோ மீட்டர் தூரம் வந்ததால், உடலுக்கும் உள்ளத்திற்கும் தெம்பு ஏற்பட நாலுவடைகளும், நாலு பஜ்ஜிகளும் மட்டும் சூடாக வாங்கி உள்ளே தள்ளினேன்.

    உணவுக் கட்டுப்பாடு விஷயமாக டாக்டர் எச்சரித்திருந்ததால், சூடாகவும் சுவையாகவும் இருப்பினும் அதற்கு மேல் வாங்கி சாப்பிட என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.

    மீண்டும் தள்ளாடியவாறு என் நடைபயணத்தை மேற்கொண்டேன். அந்த மலையைச் சுற்றியுள்ள 4 வீதிகளில் நான் நடந்தாலே போதும், மொத்தம் 40 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடும், என் நடையின் வேகத்திற்கு.

    பெளர்ணமியன்று இதே மலையை அரை மணி நேரத்தில் 3 சுற்று சுற்றி வருபவர்களும் உண்டு. நான் என்ன செய்வது? அவ்வாறு வேகவேகமாகச் சுற்றி வருபவர்களைப் பார்த்தாலே எனக்கு கால் வலிப்பது போலத் தோன்றும்.

    அந்தக் காலத்தில் மனிதாபிமானம் மிக்கவர்கள், அவரவர் வீடு கட்டும்போது, வாசலில் பெரிய பெரிய திண்ணைகள் திண்டுடன் கட்டி வைப்பார்கள். வழிப்போக்கர்களும், ஊர் விட்டு ஊர் செல்வோரும், ஆங்காங்கே சற்று நேரம் இத்திண்ணைகளில் அமர்ந்து ஓய்வு எடுத்துச் செல்ல வசதியாக இருந்தது.

    ஆனால் நான் நடந்து செல்லும் இந்த நகரத்தின் மலையைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளில், மனிதன் நடந்து செல்வதே மிகவும் கஷ்டமாக உள்ளது. கொஞ்சம் அசந்தால் நம் முழங்கையை ஒரு சைக்கிள்காரர் பெயர்த்துச் சென்று விடுவார். சற்று நம் நடையில் வேகம் காட்டினால் போச்சு - காலின் மேல் ஆட்டோவின் பின் சக்கரத்தை ஏற்றி விடுவார் ஒரு ஆட்டோக்காரர். இவர்களுக்காக சற்றே ஒதுங்கினால் நம் கால், ஆங்காங்கே தெருவில் வெட்டப்பட்டு, மூடப்படாமல் உள்ள சாக்கடைக் குழிக்குள் நம்மை இறக்கிவிடும்.

    இந்த லட்சணத்தில் கால் வீசி வேக வேகமாக நடக்க நான் என்ன ஒட்டடைக்குச்சியோ அல்லது ஓமக்குச்சியோ போல ஒல்லியானவனா என்ன!

    எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு கொஞ்ச தூரம் தான் சென்றிருப்பேன். மெயின் ரோட்டுக்கு குறுக்கே ஒரு சிறிய சந்து. சந்து பொந்துகளுக்கெல்லாம் பஞ்சமில்லாத ஊரு எங்களுடையது. சிறிய அந்த சந்தின் வலது பக்க முதல் வீடு பூட்டப்பட்டிருந்தது. வாசலுக்கு இருபுறமும் இரண்டு மிகச்சிறிய தாழ்வான திண்ணைகள். என்னைப்போல உருவம் உள்ளவர்கள் திண்ணைக்கு ஒருவர் வீதம் மொத்தம் இருவர் மட்டும் மிகவும் கஷ்டப்பட்டு அமரலாம்.

    சந்துக்கு உள்ளடங்கிய திண்ணையில் என் உருவத்தில் முக்கால் வாசியானவரும் சற்றே குள்ளமான கறுப்பான ஒரு பெரியவர், கையில் செய்தித்தாளுடன், அருகே ஒரு கைத்தடியை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். கால் கடுத்துப் போன நான் அவர் அருகில் உள்ள மற்றொரு திண்ணையில் கஷ்டப்பட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1