Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Organic Ilakkiyam
Organic Ilakkiyam
Organic Ilakkiyam
Ebook229 pages1 hour

Organic Ilakkiyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'ஆர்கானிக் இலக்கியம்'-சிறுகதைத் தொகுதியில் 28 சிறுகதைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை நையாண்டி சிறுகதைகள். கேலிகிண்டல் குறும்பு கறுப்பு நகைச்சுவை மூலம் பல சமூக பிரச்சனைகளுக்கு மணி கட்டியுள்ளார் ஆர்னிகா. இதுமாதிரியான சிறுகதைகள் தமிழில் மிக அரிது. படித்து சிரித்து சிந்தியுங்கள்.

Languageதமிழ்
Release dateNov 19, 2022
ISBN6580111009243
Organic Ilakkiyam

Read more from Arnika Nasser

Related to Organic Ilakkiyam

Related ebooks

Reviews for Organic Ilakkiyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Organic Ilakkiyam - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    ஆர்கானிக் இலக்கியம்

    சிறுகதைத் தொகுப்பு

    Organic Ilakkiyam

    Sirukadhai Thoguppu

    Author :

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. உப்புமூட்டா

    2. ஆர்கானிக் இலக்கியம்

    3. மணிமண்டபம்

    4. உப்புமா

    5. புரோட்டா மாஸ்டர்

    6. ஊஷி பூஷி

    7. அன்பறிவாளன்

    8. அணில் கட்டுப்பாடு வாரியம்

    9. ஓம் கரீம் உலகக் கோப்பை

    10. பூமர் அங்கிள்

    11. ஐம்பது வாக்கியங்கள்

    12. எழுத்து அரசியல்

    13. நவீன குத்தூசி கணேசன்

    14. உலகின் மோசமான வசவு வார்த்தை

    15. நொடிகள்

    16. உணவுச் சுற்றுலா

    17. தொலைக்காட்சி கொத்தடிமைகள்

    18. புரிந்துணர்வு ஒப்பந்தம்

    19. ரெய்டு விருந்து

    20. கடல் தவளை

    21. மதுப்ரியர்

    22. நான் மாரியப்பன்

    23. மிஸ்டர் பிச்சைக்காரர்

    24. சமைக்கத் தெரிந்தவன்

    25. வசந்த காலநதி

    26. கைலாசா

    27. பெட்ரோல் லோன்

    28. தலைகீழ் சரித்திரம்

    1. உப்புமூட்டா

    விடியற்காலை மணி ஆறு,

    ஸ்ரீவித்யா இரண்டாவது படுக்கையறைக்கு போனாள், நள்ளிரவு ஒரு மணி வரை விடியோகேம் விளையாடிவிட்டு குப்புறப் படுத்திருந்தான் ஹரிகிருஷ்ணா.

    ஹரிகிருஷ்ணாவுக்கு வயது 12, ஏழாம் வகுப்பு படிப்பவன். படிப்பைத் தவிர மீதி அனைத்திலும் உலகஈடுபாடு கொண்டவன்.

    செல்வவிநாயகம்-ஸ்ரீவித்யா தம்பதிக்கு பிறந்த ஒரே மகன். சதுரங்கம் விளையாடுவான். புல்லாங்குழல் நன்கு வாசிப்பான்.

    எந்திரிடா ஹரி… மணி ஆறாச்சு!

    சற்றே அசைந்து கொடுத்தான்.

    அம்மாக்காரி மீண்டும் மீண்டும் எழுப்ப டாபர்மேன் போல வள்ளென விழுந்தான். ஏன் உயிர வாங்ற? மணி ஆறுதானே ஆச்சு?

    புட்டத்தை பிடித்து கிள்ளினாள். எந்திரி எந்திரி!

    இன்னும் அரைமணி நேரம் தூங்க விடு!

    முடியாது… எந்திரிச்சு காலைக்கடன்களை முடி… குளி…

    அட சட்! எழுந்தமர்ந்தான் ஹரிகிருஷ்ணா.உன்னை மாதிரி தொண தொணப்பை எங்கப்பா எப்டி கல்யாணம் பண்ணினார்?

    செல்வவிநாயகம் அறைக்குள் பிரவேசித்தான். படிச்சு முடிக்கும் வரைக்கும் அம்மா தொணதொணப்பு. வேலைக்கு போனதும் மேலதிகாரி தொணதொணப்பு. கல்யாணம் பண்ணின பின்னாடி பொண்டாட்டி தொணதொணப்பு. எல்லா தொணதொணப்புகளையும் சகிக்ற திலகமா ஆண்கள் இருந்தால்தான்டா குடும்ப சாகரத்தில் குப்பை கொட்ட முடியும். நீ எந்திரிக்கலன்னா உன் அம்மாக்காரி என்னை கழுவிகழுவி ஊத்துவா!

    எழுந்தமர்ந்தான் ஹரிகிருஷ்ணா.

    டூத்பிரஷில் சிறிதளவு பேஸ்ட்டை பிதுக்கி கொண்டு வந்து நீட்டினாள் ஸ்ரீவித்யா.

    நீயே பல் தேய்ச்சு விட்ரு! பிடுங்கி பல் தேய்த்தான். குளியலறைக்குள் புகுந்து எல்லாவற்றையும் உருட்டினான்.

    கதவை திறந்து கொண்டு தலையை மட்டும் நீட்டி சோப் குடும்மா!

    தடபுடவென ஓடி சோப்பை எடுத்துவந்து நீட்டினாள் அம்மா.

    துண்டு யார் குடுப்பா?

    மகனை முறைத்தாள். சோம்பேறி பயபுள்ள. அப்பனோட ஜெராக்ஸ் காப்பி! பூத்துவாலையை தந்தாள்.

    கர்ணகடூரமாக கத்தியபடி குளித்தான் ஹரிகிருஷ்ணா.

    குளித்துவிட்டு வந்த மகனுக்கு காபி கொடுத்தாள் ஸ்ரீவித்யா. குடித்தான்.

    சீருடைக்கு மாறினான். வகுப்பு அட்டவணையை பார்த்து புத்தகப் பையில் புத்தகங்களையும் நோட்டுகளையும் அடுக்கினான்.

    டைனிங் டேபிளிலில் அமர்ந்தான்.

    நான்கு இட்லிகளும் தேங்காய் சட்னியும் கொண்டு வந்து வைத்தாள். நாலஞ்சு சட்னிகள் செய்யக்கூடாதா? எப்ப பார் தேங்கா சட்னியா?

    இது ஸ்ரீவித்யா மெஸ் இல்லைடா… வீடு. இதை செய்றதே பெருசு. ஏட்டிக்கு போட்டி பேசாம சாப்டுட்டு ஸ்கூலுக்கு கிளம்பு!

    சாப்பிட்டு கை கழுவினான். வாய் கொப்பளித்தான்.

    மணி 7.30.

    அம்மா! என்னை உன் ஸ்கூட்டில கூட்டிட்டு போய் ஸ்கூல்ல விடு!

    நேத்து கொட்டை இல்லாத பேரீச்சம் பழம் சாப்ட்டல்ல?

    ஆமா… நல்லா இருந்தது!

    நேத்து நடமாடும் காயலான்கடைகாரன்கிட்ட என் ஸ்கூட்டிய பத்து கிலோ பேரீச்சம் பழத்துக்கு வித்தேன். நாலுமாசம் வச்சு தின்கலாம்!

    அப்பா… நீயாவது உன் பஜாஜ் பல்ஸர்ல என்னை கொண்டு போய் விடேன்!

    எம்எஸ் பாஸ்கர் போல தன் வாயை வைத்தான் செல்வவிநாயகம். மகனே! பெட்ரோல் விலை இன்னைக்கி நிலவரப்படி ஒருலிட்டர் 999.95பைசா. பெட்ரோல் பங்க்காரன்கிட்ட நாப்பது ரூபாய்க்கு பெட்ரோல் தாடான்னு கேட்டேன். ஸ்பூன்ல தரவான்னு பங்க்காரன் கேட்டான். கொடுடா வண்டி மேல தெளிச்சிட்டு தீ வைச்சிடுரேன். இன்ஷுரன்ஸ் எதாவது கிளய்ம் ஆகும்ன்னேன். வண்டியை எரிக்றதுன்னா பங்க்ல எரிக்காதிங்க. ஊருக்கு ஒதுக்குப்புறமா எங்காவது கொண்டு போய் எரிங்கன்னான் பங்க்காரன்!

    இப்ப உன் வண்டி எங்க?

    பார்க்கிங்கில் கவுத்து போட்டு வச்சிருக்கேன்.

    நீ எப்படி வேலைக்கு போவ?

    வொர்க் அட் ஹோம்டா…

    அம்மா?

    அம்பது வயசுக்கு மேற்பட்ட கணவனை இழந்த பெண்களுக்குதான் நகர பேருந்துகளில் இலவச பயணமாம். அம்மா மூணுமாசம் மெடிக்கல் லீவு போட்டிருக்கா!

    நம்ம வீட்டுக்கும் நான் படிக்ற கரோலின் மெட்ரிகுலேஷன் ஸ்கூலுக்கும் அஞ்சுகிலோ மீட்டர் தூரம். என்னால புத்தக மூட்டையை தூக்கிட்டு நடக்க முடியாது!

    ஸ்ரீவித்யா முப்பது நொடிகள் யோசித்து நிலாவினாள். ஏங்க.. கீலா கம்பெனிக்காரன் ‘உப்புமூட்டா’ என்கிற செயலியை அறிமுகப்படுத்தி யிருக்கிறான். அதை டவுன்லோடு பண்ணுங்க அதுக்கு பிறகு உப்புமூட்டை சவாரிக்கு புக் பண்ணுங்க. அவங்க ஒரு ஆள் அனுப்புவாங்க. வர்ற ஆள் நம்ம மகனை உப்புமூட்டை தூக்கிட்டு போய் ஸ்கூல்ல விட்ருவான்…

    எவ்வளவு சார்ஜ் பண்ணுவான்?

    ஒரு காலடிக்கு இரண்டு பைசா. நம்ம வீட்டிலிருந்து ஸ்கூலுக்கு அய்யாயிரம் காலடி இருக்கும். நூறு ரூபா கேட்பான்!

    செல்வவிநாயகம் ப்ளேஸ்டோர் போய் அந்த செயலியை பதிவிறக்கம் செய்தான். செயலியை உயிர்ப்பித்தான்.

    எதிர்முனை கரகரத்தது. உப்புமூட்டா ஹியர். எங்கிருந்து எங்க போகனும்?

    வீட்டு முகவரியையும் பள்ளி முகவரியையும் கூறி ‘புக்’ செய்தான் செல்வவிநாயகம்.

    இரண்டு நிமிடம் கழித்து ஒரு பத்து இலக்க எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. உப்புமூட்டாவுக்கு புக் பண்ணீங்களா?

    ஆமாம்பா!

    நான்தான்சார் உங்க பய்யனை உப்புமூட்டை தூக்கப் போறவன். என் பெயர் சத்யா. என்னுடைய சில கேள்விகளுக்கு நீங்க பதில் சொல்லனும்!

    கேளுப்பா!

    நான் உப்புமூட்டை தூக்கப் போறது ஆணையா பெண்ணையா?

    ஆண்தான்ப்பா!

    வயசென்ன?

    வயசு பனிரெண்டு!

    எடை எவ்வளவு இருப்பான்?

    நாற்பது கிலோ இருப்பான்!

    அவன் வயசுக்கு 35கிலோ எடை இருக்கலாம். அஞ்சு கிலோ கூடுதலா இருக்கான். அவனோட ஸ்கூல் பேக் என்ன வெயிட் இருக்கும்?

    அது ஒரு அஞ்சுகிலோ இருக்கும்!

    மொத்தமா நாப்பத்தியைஞ்சு கிலோ எடையை உப்புமூட்டை தூக்கனும். உங்க பய்யன் தினமும் குளிப்பானா?

    ஏன்ப்பா?

    குளிக்கலேன்னா கப்பு அடிக்கும். மூக்கை பொத்திக்கிட்டு உப்புமூட்டை தூக்கனும்!

    இதெல்லாம் ஒரு விஷயமாப்பா?

    உங்க பய்யனுக்கு காஸ்ட்ரிக் ட்ரிபிள் எதாவது உண்டா?

    ஏன்ப்பா?

    ‘உப்புமூட்டை தூக்கிட்டு போகும்போது குசுகிசு போட்டான்னா? யார் தாங்றது?

    அசிங்கமா பேசாதப்பா!

    ஒரு காலடிக்கு இரண்டு பைசா எங்க கம்பெனி சார்ஜ் பண்ணும். நான் அந்த சார்ஜ்க்கு வர மாட்டேன். நீங்க காலடிக்கு மூணுபைசா தரனும். நூறு ரூபாய்க்கு பதில் நூற்றியைம்பது ரூபா தேவை!

    சார்ஜ் அதிகமா இருக்கேப்பா…

    உங்க பையனை உப்புமூட்டை தூக்ற ஸ்டார்ட்டிங் பாயின்ட்ல எனக்கு நீங்க ஒரு காபியோ டீயே தரனும். இறக்கி விடுற எடத்ல எனக்கு ஒரு குளுக்கோஸ் பாக்கட் தரனும் அல்லது அதற்கான காசை குடுத்திடனும்!

    டூ மச் பா!

    உங்க பய்யனை முதுகுல உப்புமூட்டை தூக்கிட்டு போறப்ப என் சட்டை கசங்கும் வியர்வை நாற்றம் தொற்றும் அழுக்காகும், அதனால எனக்கு ஒரு ரின்சோப் வாங்கித் தரனும்!

    நூத்திஅம்பது ரூபா பணம் ஒரு டீ ஒரு குளுக்கோஸ் பாக்கட் ஒரு ரின் சோப்… அப்றம்?

    உங்க வீட்லயிருந்து ஸ்கூலுக்கு உங்க பையனை உப்புமூட்டை தூக்கிட்டு போய் விட சாதாரணமா நடந்தா 45நிமிஷமாகும் வேகமா நடந்தா 30 நிமிஷமாகும். அந்த முப்பது டூ நாப்பத்தியைஞ்சு நிமிஷத்துக்கும் ஸ்போட்டிபையில் பாட்டு போட்டு விடுவேன். உங்க பையன் உப்புமூட்டை ஜாலியா வந்துகிட்டே பத்து குத்துப்பாட்டு கேட்கலாம். பத்து பாட்டுக்கு நீங்க இருபது ரூபா குடுத்திடனும்!

    அடிசக்கை அடி சக்கை… வேற எதாவது இருக்காப்பா?

    உங்க குண்டு பய்யனை உப்புமூட்டை தூக்கிட்டு போறப்ப எனக்கு ஹார்ட் அட்டாக் கீர்ட் அட்டாக் வந்து செத்துப்போய்ட்டா?

    ஏன்ப்பா அபசகுனமா பேசுற?

    அதனால என் உப்புமூட்டை ட்ரிப்பை மெடிக்கல் இன்ஷுரன்ஸ் பண்ண வேண்டிவரும். நான் ஒரு பார்ம் தரேன். கையெழுத்து போடுங்க. போன் பே மூலம் ஒன் டைம் பிரிமியமாக நீங்க அம்பது ரூபா செலுத்தவேண்டிவரும்!

    "யப்பா.. அவ்வளவுதானே?’

    நான் உப்புமூட்டை தூக்கிட்டு போறப்ப உங்க மகன் என்னை கிச்சுகிச்சு மூட்றதோ கழுத்தை பிடிச்சு தொங்கி ஊஞ்சலாடுறதோ கூடாது. என்னை உங்க மகன் ‘மிஸ்டர் உப்பு மூட்டா சார்’னுதான் கூப்பிடனும். என்னை மாசம் முழுக்க கூட்டிட்டு போய் விட அழைச்சு கொண்டு வந்து விட புக் பண்ணினா பத்து சதவீதம் தள்ளுபடி உண்டு!

    சரிப்பா!

    பத்துநொடி தாமதித்து சாரி சார்.. வேற இடத்துக்கு உப்புமூட்டை தூக்கிட்டு போக புது புக்கிங் ஆய்ருக்கு. பார்ட்டி வயசு பொண்ணு. ‘காதோரம் லோலாக்கு’ பாடிக்கிட்டே தூக்கிட்டு போவேன். ஐடில வேலை பாக்ரா. செட்டாகி லவ்வாய்டுச்சுன்னா கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிவிடுவேன். உங்க புக்கிங் கேன்சல்டு!

    செல்வவிநாயகமும் ஸ்ரீவித்யாவும் மயக்கம் போட்டு விழுந்தனர். இடுப்பை நெளித்து நெளித்து குத்தாட்டம் போட்டான் ஹரிகிருஷ்ணா.

    2. ஆர்கானிக் இலக்கியம்

    ‘மகிழம்பூ’ பத்திரிகை அலுவலகம்.

    ஓட்டிவந்த ஒட்டை சைக்கிளை வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தினான் பிரசித்.

    பிரசித்துக்கு வயது நாற்பது. உயரம் 165செமீ. முகத்தில் முககவசம் மாட்டியிருந்தான். இருகைகளிலும் கையுறைகள் அணிந்திருந்தான். இடது தோளில் ஒரு ஜோல்னாப்பையை தொங்கவிட்டிருந்தான்.

    வரவேற்பாளினி நிமிர்ந்தாள். யார் வேணும்?

    நான் ஒரு எழுத்தாளர். பெயர் பிரசித். எடிட்டரை நேரில் சந்தித்து நான்கு சிறுகதைகள் தர வேண்டும்!

    எடிட்டரை பாக்க முடியாது. சப்எடிட்டரிடம் கொடுத்துட்டு போங்க!

    எடிட்டரை பார்க்காமல் போகமாட்டேன்! சோபாவில் அமர்ந்தான் பிரசித். ஆறுமணி நேர காத்திருப்புக்கு பின் வரவேற்பாளினி, எடிட்டர் கூப்பிடுரார்.. போங்க!

    வெற்றிபுன்னகை வெடித்தபடி எடிட்டரின் குளிர்பதன மூட்டப்பட்ட அறைக்குள் பிரவேசித்தான் பிரசித். மாலை வணக்கம்!

    எடிட்டர் கண்களை குறுக்கினார். யார் நீங்க? எதுக்கு என்னை பாக்கனும்னு பிடிவாதம் பண்ணி ஆறுமணி நேரம் உக்காந்திருந்தீங்க!

    நான் வளரும் எழுத்தாளன். நான் எழுதிய நான்கு சிறுகதைகளை நேரடியாக உங்களிடம் கொடுக்க விழைகிறேன்…

    கொரோனா எல்லாம் தலைதெறிக்க ஓடி போயிருச்சே… இன்னும் ஏன் மாஸ்க் மாட்டிருக்கீங்க?

    அதுக்கு தகுந்த காரணம் இருக்கு. இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவித்த உணவுப்பொருட்களை நாம் ‘ஆர்கானிக்’ என்று கூறுவோம் இல்லையா? அது போல நான் எழுதிக் கொண்டு வந்திருக்கும் கதைகள் எல்லாம் ஆர்கானிக் இலக்கியவகையை சேர்ந்தவை!

    இலக்கியத்தில் ஆர்கானிக் இலக்கியமா? அதெப்படி?

    அரிஸ்டாட்டில் இலக்கியத்தை கதை பாடல் மற்றும் நாடகம் என வகை பிரித்தார். இலக்கியத்தில் மாயாஜால யதார்த்தவாதம், சமூக யதார்த்த வாதம், மரபு அறுத்த புரட்சி எழுத்துவகை யதார்த்தவாதம், நவீனத்துவம், பின் நவீனத்துவம், வெளிப்பாடுவாதம், உணர்வுவாதம், காதல்வாதம், பெண்ணீயம், தலித்தியம் போன்ற பலபிரிவுகள் உள்ளன, ஒவ்வொரு பிரிவைச் சார்ந்து எழுத்தாளர்கள் இயங்குகின்றனர். நான் ‘ஆர்கானிக் இலக்கியம்’ என்கிற பிரிவை ஆரம்பித்து வைக்கிறேன்!

    சாரு நிவேதிதா ஜெயமோகன் போல பேசுகிறீர்கள் பிரசித்!

    ஆர்கானிக் இலக்கியம் என்றால் என்ன? அது எப்படி எழுதப்பட வேண்டும் என்பதனை நான் விலாவாரியாக கூறுகிறேன்!

    கூறுங்கள் பிரசித்!

    "எல்லா கெட்டபழக்கவழக்கங்களையும் விட்டொழித்து விரதம் இருந்து நாற்பது

    Enjoying the preview?
    Page 1 of 1